Skip to main content

10 LGBTQ+ NFT கலைஞர்கள் பெருமிதம் நிறைந்த மாதத்திலும் மற்றும் அதற்கு பின்னரும் ஆதரிப்பார்கள்

By ஆகஸ்ட் 1, 20224 minute read
10 LGBTQ+ NFT Artists To Support In Pride Month And Beyond

பெருமிதம் நிறைந்த மாதம் நிறைவடைய போகிறது; NFT தொழில் எதையும் விட்டு வைக்கவில்லை மற்றும் அது LGBTQ+ சமூகத்தின் மகத்தான ஆதரவாளராக வெளிப்பட்டிருக்கிறது

ஆனால், கேள்வி என்னவென்றால்: LGBTQ+ NFT கலைஞர்களை ஆதரிக்க, நாம் உண்மையிலேயே பெருமிதம் நிறைந்த மாதத்திற்காக காத்திருக்க வேண்டுமா? அவர்கள் அனைவரையும் நாம் வருடம் முழுவதும் ஆதரிக்க வேண்டாமா? இது பெருமிதம் நிறைந்த மாதம் என்பதால், நீங்கள் ஆதரிக்கக்கூடிய சில LGBTQ+ NFT கலைஞர்களின் பட்டியலை நாங்கள் சேகரித்துள்ளோம். அதை நாம் பார்க்கலாம்

NFT தொழில்துறை மற்றும் LGBTQ+ சமூகம்

LGBTQ+ சமூகம் உட்பட அனைத்துப் பின்னணியைச் சேர்ந்த கலைஞர்களும் உள்ளடக்கிய சூழலை வழங்கும் அதன் ஆற்றலுக்காக NFT தொழிற்துறை பாராட்டுகளைப் பெற்றுள்ளது இருந்தபோதிலும், LGBTQ+ NFT கலைஞர்கள் துரதிர்ஷ்டவசமாக இந்தத் துறையில் குறைவாகப் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். இந்தத் தொழில்துறையானது செல்வாக்கு உள்ளவர்களுக்கு இடையே உதவது போன்று இருக்கும் தற்போதைய பிம்பத்தை அகற்றுவதற்கு நிச்சயமாக நீண்ட தூரம் செல்ல வேண்டும். தற்போதைய LGBTQ+ கலைஞர்களை ஆதரிப்பதற்கும் மற்றும் இதல் புதியவர்களுக்கு இடமளிப்பதற்கும் முழு NFT சமூகமும் பொறுப்பாகும்.

எனவே, இந்த விஷயத்தை தொடங்குவதற்கு, நீங்கள் ஆதரிக்கக்கூடிய பெருமிதம் நிறைந்த மாதத்தின் 10 LGBTQ+ NFT கலைஞர்கள் யார் என்று பார்ப்போம்.

Get WazirX News First

* indicates required
  1. சாம் ஆகஸ்ட் Ng – தேபலூன்ஸ்

தேபலூன்ஸ் என்றும் அழைக்கப்படும் டிஜிட்டல் கருத்தியல் கலைஞர் சாம் ஆகஸ்ட் Ng, பைனரி அல்லாதவர் என்று அடையாளம் காட்டிக்கொள்கிறார். லண்டனை இருப்பிடமாகக் கொண்ட இந்தக் கலைஞர், வெப்3இல் நியோ-எக்ஸ்பிரஷனிசத்தை மீண்டும் உருவாக்க, கிளிட்ஸ் ஆர்ட்ஸ், 3D மற்றும் பிரகாசமான வண்ணங்களை பயன்படுத்துகிறார்.

மெட்டாவெர்ஸில் மிகப்பெரிய பெருமைக்குரிய அணிவகுப்பான, குவீர் ஃப்ரென்ஸ், தேபலூன்ஸால் இணைந்து நிறுவப்பட்டது. மார்ச் 2022இல் வெளியிடப்பட்ட சேகரிப்பில் உள்ள 10,000 வினோதமான தவளைகள், NFT சமூகத்தில் சேர்க்கப்படுவதையும் பன்முகத்தன்மையையும் ஊக்குவிப்பதாக இருந்தது.

2. ஸாக் கிரெவிட்– வினோதங்களின் அருங்காட்சியம்

ஸாக் கிரெவிட் LGBTQ+ குழுக்களின் நீண்ட கால ஆதரவாளர் ஆவார். அவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் பல்வேறு வகையான தொடர்புடைய பிரச்சினைகளுக்காக வேலை செய்து, ஆதரவளித்து, பணம் திரட்டி வருகிறார். அவரது கலை அவரது உண்மையான அனுபவங்களை பிரதிபலிக்கிறது-பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும்-மற்றும் ஓரின சேர்க்கையாளர்களின் மீதான அவரது அன்பையும் பிரதிபலிக்கிறது.

ஜோசப் மைடாவின் வழிகாட்டுதலின் கீழ், கிரெவிட் நியூயார்க் நகரில் உள்ள ஸ்கூல் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஃபோட்டோ மற்றும் வீடியோவில் பேராசிரியராக உள்ளார். அவர் தனது மாணவர்கள் செயல் உணர்வு, சாகச உணர்வு, சமூகம் மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை உருவாக்க விரும்புகிறார்.

3. டாலியா ரோசா அப்ரூ

டாலியா ரோசா அப்ரூ 2D மற்றும் 3D கலை மற்றும் வடிவமைப்புகள் மற்றும் பிராண்ட் அடையாளங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கிராஃபிக் டிசைனர் மற்றும் டிஜிட்டல் கலைஞர் ஆவார்.. அவர் ஒரு மூன்றாம் பாலின-லத்தீன் ஓவியர் மற்றும் ரூனிக் குளோரி NFT திட்டத்தின் கலை இயக்குனர் ஆவார். இவர் சமூகத்தால் இயக்கப்படும் ஒரு ஆன்லைன் வீடியோ கேம் திட்டமான ஃபாரஸ்ட் ஹார்ட் ப்ராஜெக்ட்டை உருவாக்கியவர் மற்றும் நிறுவனர் ஆவார்.

4. டயானா சின்கிளேர் – ஹெர் ஸ்டோரி DAO

நியூ ஜெர்சி நியூயார்க்கை சேர்ந்தவரான, டயானா சின்க்ளேர் ஒரு பிளாக் குவீர் புகைப்படக் கலைஞர் மற்றும் ஓவியர் ஆவார், அவர் அடையாளத்தை ஆராய்வதிலும் வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார். NFT துறையில் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதில் டயானா ஒரு சிறந்த முன்னோடியாவார். அவரது கொள்கை அவரது கலை வாழ்க்கையுடன் இணைந்து வளர்ந்து உலகை பாதித்துள்ளது.

அவர் தனது கலைப்படைப்பில் வினோதம், மூன்றாம் பாலினம் மற்றும் கருப்பினத்தவரின் வாழ்வை சேர்க்க முயற்சி செய்தார் அல்லது அந்தப் பிரச்சினைகளுக்கு ஆதரவளிக்கும் பிற முயற்சிகளைத் தொடங்கினார், ஏனெனில் அவர் அந்தக் காரணங்களுக்கு உறுதியான ஆதரவாளராக இருக்கிறார். சமீபத்தில், அவர் @herstorydaoவை இணைந்து நிறுவினார், இது மெட்டாவெர்ஸில் குறைவான பிரதிநிதித்துவம் உள்ள குரல்களின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், வளர்ப்பது மற்றும் கொண்டாடும் ஒரு DAO ஆகும்.

5. டாக்டர் பிரிட்னி ஜோன்ஸ் – குவீர் ஃப்ரெண்ட்ஸ் NFT

 குவீர் ஃப்ரெண்ட்ஸ் NFT திட்டம் டாக்டர் பிரிட்னி ஜோன்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது, நிர்வகிக்கப்பட்டது மற்றும் இணைந்து நிறுவப்பட்டது. ஜோன்ஸ் ஒரு இருபாலின கடல் உயிரியலாளர் ஆவார், அவர் விளையாட்டிலும் ஆர்வமுள்ளவர் மற்றும் டால்பின்களின் உரையாடல் பற்றிய ஆய்வில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் முன்பு இளம் பெண்களுக்கு அறிவியல் மற்றும் ஸ்டீம் (STEAM) (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம்) பணிகளை டிஜிட்டல் கலை மூலம் கற்றுக் கொடுத்தார்.

6. பாபிகேண்டில்ஸ் – கிரிப்டோகேண்டில்ஸ்

பாபி கேண்டில்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸை இருப்பிடமாகக் கொண்ட ஒரு ஓரின சேர்க்கையாளர், படம் வரைபவர் மற்றும் அனிமேட்டர் ஆவார். அவர் கிரிப்டோகேண்டில்ஸ் சேகரிப்பை ஓபன்சீ இல் சமீபத்தில் வெளியிட்டார் பல்வேறு அழகான அவதார்களில் மொத்தம் 103 மெழுகுவர்த்திகள் சேகரிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

7. ஜெஸ்ஸி சொலெயில்

ஜெஸ்ஸி சொலெயில் ஒரு 2D மற்றும் 3D ஓவியர் ஆவார், அவர் கிரிப்டோவில் 17 தனித்துவமான NFTக்களை விற்றுள்ளார். ஜெஸ்ஸி அவர்கள் செய்வதை “டிஜிட்டல் சிகிச்சை” என்று அழைக்கிறார். அவர்கள் NFT சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டதால், அவர்கள் நமக்காக என்ன எண்ணம் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

8. ஸ்டேசி ஏ பூலர் – அக்லி பெர்ட்ஸ் & பெட்டிஸ்

ஸ்டேசி ஏ பூலர்  லாஸ் ஏஞ்சல்ஸை இருப்பிடமாகக் கொண்ட ஒரு ஃபேஷன் புகைப்படக் கலைஞர் மற்றும் NFT கலைஞர் ஆவார், அவர் தனது வேலையை “நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும், நட்பாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும்” உள்ளது என்று விவரிக்கிறார் அவர் அக்லி NFTக்களை நிறுவினார், அதில் அக்லி பெட்டிஸ் மற்றும் அக்லி பெர்ட்ஸ் ஆகியவை உள்ளன அவரது தனிப்பட்ட அனுபவங்களில், ஆண்களும் பெண்களும் அவர் ஆடை அணிவது பிடிக்கவில்லை என்று அவருக்கு தெரிவித்தது இந்தச் சேகரிப்புக்கு அவருக்கு உத்வேகமாக அமைந்தது.

இந்த தொடரில் உள்ள ஒவ்வொரு NFTயும் ஸ்டேசியால் டிஜிட்டல் முறையில் கையால் வரையப்பட்டது. இந்த திட்டத்தின் விவரணை கூறுவது

“இந்த NFT சேகரிப்பு மாடல் பன்முகத்தன்மை மற்றும் LGTBQ+ உரிமைகள் மற்றும் ஃபேஷன் துறையில் வெளிப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.”

9. கேத்தரீனா (கேட் தி கர்ஸ்டு) – அஜெண்டாdao

கேத்தரீனா “கேட் தி கர்ஸ்டு” ஜெசெக் என்பவர், 23 வயதான நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு மூன்றாம் பாலினர் ஆவார். கேத்தரினா ஒரு விஷுவல் ஓவியர் ஆவார், அவர் பழைய கேத்தோட் ரே தொலைக்காட்சிகள் மற்றும் சமகால மற்றும் வரலாற்று டிஜிட்டல் கலை கருவிகளைப் பயன்படுத்தி எதிர்காலத்திற்கான நேர்மறையான, பழய நினைவுகள் நிறைந்த அழகியலை உருவாக்குகிறார்.

10. வன்ஷிகா தியானி – தி தேசி டல்ஹான் கிளப்

வன்ஷிகா தியானி ஒரு ஆசிய, இருபாலின, நரம்பியல் பாதிப்பு கொண்ட ஓவியர் ஆவார். தெற்காசியாவில் நடைபெறும் குழந்தை திருமணங்கள், வரதட்சணைக் கொலைகள், கவுரவக் கொலைகள் மற்றும் பெண் சிசுக்கொலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த, அவர் தேசி டுல்ஹன் கிளப் NFT சேகரிப்பை நிறுவினார்.

13 வயதில் திருமணம் செய்யப்பட்ட தனது பாட்டியை நினைவுகூரும் விதமாக அவர் இந்த முயற்சியைத் தொடங்கினார். கூடுதலாக, இந்த “தேசி டுல்ஹன்ஸ்” தொடரில் தெற்காசியாவில் பெண்கள் எப்படி பேசாமல் அடக்கப்படுகிறார்கள் என்பதைக் குறிக்க உருவங்கள் உதடுகள் இல்லாமல் இருக்கின்றன. இதற்கு நேர்மாறாக, கண்கள் “முகப்பு விளக்குகளில் மான்” போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளன, இது “பயமுறுத்தும் மற்றும் நிச்சயமற்ற” தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

தியானியின் கூற்றுப்படி, இந்தத் தொகுப்பு, யுனிசெஃப் உடன் தானாக முன்வந்து சேர்ந்து தெற்காசியாவில் பெண்களை மேம்படுத்தவும், அதிகாரமளிக்கவும், கல்வி கற்பிப்பது போன்ற செயல்களை செய்யும் தனிநபர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கியத்துவம்

இந்தக் கட்டுரை ஒரு சில  NFT கலைஞர்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறது, மேலும் உலகம் முழுவதும் பல அற்புதமான கலைஞர்கள் உள்ளனர். கூடுதலாக, இந்தப் பெருமிதம் நிறைந்த மாதத்திலும் அதற்குப் பின்னரும் பல்வேறு LGBTQ+ NFT கலைஞர்களை நீங்கள் ஆதரிக்கலாம். எனவே எதற்காகவும் காத்திருக்காதீர்கள்; உடனே சென்று உங்கள் அன்பையும் ஆதரவையும் காட்டுங்கள்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.
Harshita Shrivastava

Harshita Shrivastava is an Associate Content Writer with WazirX. She did her graduation in E-Commerce and loved the concept of Digital Marketing. With a brief knowledge of SEO and Content Writing, she knows how to win her content game!

Leave a Reply