WazirX P2P (பியர் டு பியர்) முதலீட்டாளர்கள் தங்கள் அசல் பணத்தை கிரிப்டோவிற்கு (மற்றும் நேர்மாறாகவும்) உடனடியாக மாற்ற உதவுகிறது. இது பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமானதாகவும் இருக்கும் அதே வேளையில் முற்றிலும் இலவசமாகும் மற்றும் 24×7 கிடைக்கும்!! WazirX P2Pஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய, எங்கள் வலைப்பதிவைப் இங்கு படிக்கவும்.
எங்கள் பயனர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள் இங்கே உள்ளன. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், இந்தப் பதிவு அவை அனைத்தையும் நீக்கும் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி 1: WazirX P2Pஇல் ஏன் USDT மட்டும் உள்ளது?
USDT ஒரு ஸ்டேபிள் காயின். பரிவர்த்தனைகளை எளிமையாக்கவும், அதிக பணப்புழக்கத்தை உறுதிப்படுத்தவும், USDT மட்டுமே ஆதரிக்கப்படுகிறது.
கேள்வி 2: WazirX P2Pஐ யார் பயன்படுத்தலாம்?
இந்திய KYC உள்ள பயனர்கள் WazirXஇல் P2P அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
கேள்வி 3: விற்பனையாளரின் வங்கி விவரங்களை என்னால் பார்க்க முடியவில்லை, மேலும் 10 நிமிடங்களில் வர்த்தகம் தானாகவே ரத்து செய்யப்படுகிறது. என்ன செய்ய வேண்டும்?
இங்கே, நீங்கள் முதலில் பணம் செலுத்தும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், உங்கள் வர்த்தகம் முடிந்த பின் “ஆம், நான் பணம் செலுத்துகிறேன்” விருப்பத்தை கிளிக் செய்யவும். “ஆம், நான் பணம் செலுத்துகிறேன்” என்பதைக் கிளிக் செய்த பிறகுதான் விற்பனையாளரின் வங்கி விவரங்கள் உங்களுக்கு தெரியும். இந்த விவரங்களின் அடிப்படையில் நீங்கள் பணம் செலுத்துவதைத் தொடரலாம்.
கேள்வி 4: விவரங்கள் தவறாக இருக்கிறது/தோல்வி/வங்கி சிக்கல்/நெட்வொர்க் பிரச்சனை போன்ற காரணங்களால் விற்பனையாளரின் வங்கிக் கணக்கிற்கு என்னால் பணத்தை மாற்ற முடியவில்லை.
ஆர்டரை ரத்து செய்து அபராதத்தைத் தள்ளுபடி செய்ய சாட் மூலம் எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ள வேண்டும். உண்மையான தோல்வியைச் சரிபார்க்க ஸ்கிரீன் ஷாட்கள்/ஆதாரங்களைப் பகிருமாறு ஆதரவுக் குழு உங்களிடம் கேட்கும். மாற்றாக, வர்த்தகம் தானாக ரத்து செய்யப்பட்டவுடன் (குறிப்பிட்ட நேரம் முடிந்த பிறகு) நீங்கள் ஒரு அபராத்துக்கான மின்னஞ்சலைப் பெறுவீர்கள். இந்த மின்னஞ்சலுக்கு தகுந்த ஆதாரத்துடன் நீங்கள் பதிலளிக்கலாம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், எங்கள் குழு அபராதத்தை திருப்பி அளிக்கும்.
கேள்வி 5: நீங்கள் பணம் செலுத்திய பிறகு, ‘நான் பணம் செலுத்தி விட்டேன்’ என்பதைக் கிளிக் செய்ய மறந்துவிட்டால் என்ன செய்வது?
‘சிக்கலை எழுப்புக’ விருப்பத்தை கிளிக் செய்ய உங்களுக்கு 10 நிமிடங்கள் அவகாசம் இருக்கும். நீங்கள் ஒரு சிக்கலை எழுப்பியதும், எங்கள் சிக்கல் தீர்ப்புக் குழுவிடமிருந்து பணம் செலுத்திய ஆதாரம் கோரிய மின்னஞ்சலை நீங்கள் உடனடியாகப் பெறுவீர்கள். பின்னர், அடுத்த 15 நிமிடங்களுக்குள், மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, சாட் மூலம் எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்பு கொள்ளவும். சிக்கல் தீர்க்கும் குழு நீங்கள் பணம் செலுத்திய சான்றிதழை மற்ற விவரங்களுடன் மதிப்பாய்வு செய்து, உங்கள் சிக்கலின் இறுதி முடிவை அளிக்கும். சிக்கல் தீர்க்கும் குழுவின் முடிவே இறுதியானது மற்றும் கட்டுப்படக்கூடியது, மேலும் மாற்ற முடியாதது.
தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்: ஒரு சிக்கலை மதிப்பாய்வு செய்யும் போது முழுமையான துல்லியத்தை உறுதிப்படுத்தும் ஏமாற்ற முடியாத பல சோதனை செயல்முறைகள் எங்களிடம் உள்ளன.
கேள்வி 6: WazirX P2Pஇல் பரிவர்த்தனை தோல்வியுற்றல் – வாங்குபவர் வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக வர்த்தகத்தை ரத்து செய்யும் போது (நிதிகளின்) மீட்பு எவ்வாறு செயல்படுகிறது?
வாங்குபவர் பணம் செலுத்திய பின், பரிவர்த்தனையை ரத்து செய்யும்போது, வாங்குபவரின் பணம் செலுத்திய விவரங்களை விற்பனையாளருடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம், மேலும் வாங்குபவரிடம் பணத்தைத் திரும்பச் செலுத்தும்படி கேட்டுக்கொள்வோம். வாங்குபவர் தங்கள் நிதியைத் திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய, நாங்கள் விற்பனையாளரின் நிதி மற்றும்/அல்லது கணக்கைப் முடக்கி, பணம் செலுத்திய ஆதாரத்துடன் கூடிய அனைத்துத் தகவல்களையும் கொண்ட மின்னஞ்சலை அனுப்புவோம். 24 மணிநேரத்திற்கு ஒருமுறை விற்பனையாளருக்கு மொத்தம் 3 நினைவூட்டல்களை நாங்கள் அனுப்புவோம். 3வது மற்றும் இறுதி நினைவூட்டலுக்குப் பிறகு, நாங்கள் நிதி மீட்புப் பணியைத் தொடர்கிறோம், இதற்கு 13 வணிக நாட்கள் வரை ஆகும் (இருப்பினும், நிதி இருந்தால் மட்டுமே இது செயல்படும்).
கேள்வி 7: பணம் செலுத்திய பிறகும், எனது வர்த்தகம் சிக்கல் தீர்வு பிரிவுக்கு மாற்றப்படுகிறது; என்ன செய்வது?
பல்வேறு காரணங்களுக்காக உங்கள் வர்த்தகம் சிக்கல் தீர்வு பிரிவுக்கு நகர்த்தப்படலாம். இந்த விஷயத்தில், பணம் செலுத்திய சான்றுடன் சாட் மூலம் எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் நிதி பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் மட்டும் உறுதியாக இருங்கள்.
கேள்வி 8: நான் ஒரு விற்பனையாளர்/வாங்குபவர், மேலும் அறியப்படாத வாங்குபவர்கள்/விற்பனையாளர்களுடன் தானாகவே பொருத்தப்படுவதை நான் விரும்பவில்லை. என்ன செய்வது?
உங்கள் கிரிப்டோவை குறிப்பாக ஒருவருடன் வர்த்தகம் செய்ய விரும்பினால், முதல் படிநிலையிலேயே அவர்களின் XIDஐ சேர்க்கலாம். XID ஒரு பயனர் பெயர் போல் செயல்படுகிறது! இதன் மூலம், வாங்குபவர்/விற்பவர் உங்கள் விருப்பத்திற்கிணங்க இருப்பார், மேலும் அந்த குறிப்பிட்ட பரிவர்த்தனையின் போது நீங்கள் வேறு யாருடனும் பொருத்தப்பட மாட்டீர்கள்.
கேள்வி 9: நான் ஒரு நாளில் செய்யக்கூடிய P2P பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை/மதிப்பில் ஏதாவது தினசரி வரம்பு உள்ளதா?
இல்லை! WazirXஇல் ஒரு நாளில் எத்தனை P2P பரிவர்த்தனை வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும், உங்கள் வங்கியில் சில வரம்புகள் இருக்கலாம், அதை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
கேள்வி 10: நான் ஒரு வாங்குபவர். பணம் செலுத்திய பிறகு, எனது பரிவர்த்தனை ‘செயலாக்கத்தில்’ சிக்கியுள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்? பணம் கழிக்கப்பட்டதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.
நீங்கள் பணம் செலுத்தியிய பிறகும், பேமெண்ட் நிலை ‘செயலாக்கம்’ என்பதைக் காட்டும் சந்தர்ப்பங்களில், நீங்கள் WazirXஇல் ‘ஆம், நான் பணம் செலுத்திவிட்டேன்’ என்பதைக் கிளிக் செய்து பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை (செயலாக்கம்) இணைத்து, விற்பனையாளர் பணம் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் வரை காத்திருக்கவும். விற்பனையாளர் பணம் பெற்றதும், பரிவர்த்தனை செயல்படுத்தப்படும். பேமெண்ட் ரத்து செய்யப்பட்டால், சாட் மூலம் எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம், மேலும் உங்களுக்கான ஆர்டரை நாங்கள் ரத்து செய்வோம், மேலும் உண்மையிலேயே இது ஒரு பிழை என்பதால் அபராதத்தையும் திரும்ப செலுத்துவோம்.
சரியான கண்ணோட்டத்தைப் பெற, WazirXஇன் P2Pஇன் இந்த வீடியோவைப் பார்க்கவும்
கேள்வி 11: WazirXஆல் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
தெரியாத சகாக்களை நம்புவது கடினம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் நிதி பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும், முழு பரிவர்த்தனையையும் பாதுகாக்கவும் WazirX ஒரு எஸ்க்ரோ அமைப்பைக் கொண்டுள்ளது, இதனால் எந்த தரப்பினரும் மற்றவரை ஏமாற்ற முடியாது. நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால் – நீங்கள் பணம் பெற்றதை உறுதி செய்யும் வரை WazirX உங்கள் USDTஐ வாங்குபவருக்கு வெளியிடாது, மேலும் நீங்கள் வாங்குபவராக இருந்தால் – நீங்கள் விற்பனையாளருக்கு பணம் செலுத்தும் போது விற்பனையாளரின் USDTஐ WazirX வைத்திருக்கும். WazirXஇல் வர்த்தகம் செய்வதற்கு ஒவ்வொரு பயனரின் KYC விவரங்களையும் நாங்கள் சரிபார்க்கிறோம். எங்கள் எக்ஸ்சேன்ஜில் நிகழும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
கேள்வி 12: பெறப்பட்ட USDT கொடுக்கப்பட்ட ஆர்டரின் மதிப்பை விட குறைவாக உள்ளது. ஏன் இப்படி நடக்கிறது?
ஆர்டர் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும்போது, உங்கள் கணக்கில் உறுதிசெய்யப்பட்ட USDTஐ தானாகப் பெறுவீர்கள். ஏதேனும் கழிக்கப்பட்டிருந்தால், அவை அபராதங்கள் அல்லது நிலுவையில் உள்ள வர்த்தகக் கட்டணங்களாக இருக்கலாம். இந்த கழித்தல்களைப் பற்றி மேலும் அறிய வர்த்தக அறிக்கையில் உள்ள லெட்ஜரை நீங்கள் பார்க்கலாம்.
நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்
உங்கள் பரிவர்த்தனைகள் ரத்து செய்யப்படாமலோ அல்லது நிராகரிக்கப்படாமலோ இருப்பதை உறுதிசெய்ய, இந்தக் குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள்:
- ஒரு வாங்குபவராக:
- பொருந்திய விற்பனையாளருக்கு மட்டுமே பணம் செலுத்துவதை உறுதிசெய்யவும். உங்கள் வர்த்தகம் பொருந்தியவுடன் வேறு எந்த விற்பனையாளருக்கும் பணம் செலுத்த வேண்டாம்.
- செலுத்த வேண்டிய தொகையை முழுத்தொகையாக ஆக்க வேண்டாம். இதன் பொருள் நீங்கள் 1198.20 செலுத்த வேண்டும் என்றால், தயவு செய்து 1198.20 என்ற சரியான தொகையைச் செலுத்தவும் (1199 அல்லது 1200 அல்ல).
- நீங்கள் உங்கள் சொந்தக் கணக்கிலிருந்து மட்டுமே பணம் செலுத்த வேண்டும், வேறு எந்த (எ.கா: குடும்பம்/நண்பர்கள்) கணக்குகளிலிருந்தும் பணம் செலுத்தக்கூடாது, ஏனெனில் இது செல்லுபடியற்றதாகக் கருதப்படும். இந்தச் சூழலில் பணம் செலுத்துவது தடைப்பட்டால், இதற்கான மீட்பு மூன்றாம் தரப்பு பேமெண்ட்டாக இருக்கும், P2P யாக அல்ல. மேலும், மூன்றாம் தரப்பு கணக்கிலிருந்து பணம் செலுத்தப்பட்டால், வர்த்தகம் எப்போதும் விற்பனையாளருக்குச் சாதகமாகவே தீர்க்கப்படும். WazirX P2Pஇல் மூன்றாம் தரப்பு பணம் செலுத்துவது அனுமதிக்கப்படவில்லை, மேலும் உங்கள் கணக்கு இந்த தளத்தில் தடை செய்யப்படலாம்.
- நீங்கள் பணம் செலுத்தியதும், ஆப்பில் அதை உறுதிப்படுத்துவதை உறுதி செய்யவும். இங்கே, பணம் செலுத்திய சான்றினைப் பதிவேற்றும் போது, UTR (தனிப்பட்ட பரிவர்த்தனை குறிப்பு) எண் தெரிவதை உறுதிப்படுத்தவும்.
- திரையில் உள்ள வழிமுறைகளை சரியாகப் படிக்கவும். எடுத்துக்காட்டாக, ‘பகுதி ஆர்டர் பொருத்தம்’ விஷயத்தில், குறிப்பிட்ட தொகை மட்டும் சரியான தரப்பினருக்கு செலுத்தப்படுவதை உறுதிசெய்யவும்.
- உங்கள் P2P பேமெண்ட் தோல்வியுற்றால், உடனடியாக மீண்டும் பணம் செலுத்த முயற்சிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறோம். அதற்குப் பதிலாக, பணம் செலுத்துவதில் தோல்வியைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட் மூலம் எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளலாம். வர்த்தகத்தை ரத்து செய்ய எங்கள் குழு உங்களுக்கு உதவும், மேலும் இது ஒரு பிழை என்பதால் அபராதத்தையும் திருப்பியளிக்கும். இது ரத்து செய்யப்பட்டவுடன், நீங்கள் புதிதாக ஆர்டர் செய்யலாம்.
- ஒரு விற்பனையாளராக:
- பணம் பெறப்படும் போது, பணம் பெறப்பட்டதை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும். அவ்வாறு செய்யப்படாவிட்டால், சிக்கல் தீர்வுக் குழு உரிய நடவடிக்கை எடுக்கும்.
- மூன்றாம் தரப்பினரிடமிருந்து (வாங்குபவரைத் தவிர வேறொருவரிடமிருந்து) நீங்கள் பணம் பெற்றிருந்தால், வர்த்தகத்தை உறுதி செய்ய வேண்டாம் மேலும் சாட் மூலம் எங்களைத் தொடர்புகொள்ள வேண்டாம்.
- காத்திருப்பு நேரம் கீழ்க்கண்டவாறு:
- வர்த்தகம் பொருந்தியவுடன், ஒரு வாங்குபவராக, நீங்கள் பரிவர்த்தனையைத் தொடரவும் மற்றும் அதற்கு பணம் செலுத்தவும் விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு 10 நிமிடங்கள் உள்ளன.
- கட்டணத்தைச் செலுத்தி அதை உறுதிப்படுத்த, உங்களுக்கு (வாங்குபவருக்கு) 60 நிமிடங்கள் கிடைக்கும்.
- விற்பனையாளர் பணம் பெற்றதில் இருந்து 2 மணி நேரத்திற்குள் பணம் பெற்றதை உறுதிப்படுத்த வேண்டும். அவர் அவ்வாறு செய்யத் தவறினால், சிக்கல் தீர்வு பிரிவுக்கு பரிவர்த்தனை தானாகவே மாற்றப்படும்.
- பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 24-48 மணி நேரத்திற்குள் சிக்கல் தீர்க்கப்படும். இருப்பினும், குறிப்பிட்ட வங்கி காரணங்களால் ஏதேனும் பிரச்சனையில் சிக்கியிருந்தால், தீர்வுக்கு 3-5 வங்கி நாட்கள் வரை ஆகலாம்.
இந்தக் காலக்கெடு முடிந்தவுடன் நீங்கள் எங்கள் ஆதரவுக் குழுக்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- சம்பந்தப்பட்ட அபராதங்கள்:
- நீங்கள் பணம் செலுத்துவதை உறுதிசெய்து, அதைச் செய்யத் தவறியிருந்தால் மற்றும் பரிவர்த்தனையை ரத்து செய்யாமல் இருந்தால், நீங்கள் 10 USDT அல்லது பரிவர்த்தனை மதிப்பில் 1.2%, இவற்றில் எது அதிகமோ அதை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
- நீங்கள் பணம் செலுத்தாமல், செலுத்தியுள்ளீர்கள் என்று உறுதிப்படுத்தினால், 20 USDT அல்லது பரிவர்த்தனை மதிப்பில் 2.4%, இவற்றில் எது அதிகமோ அதை அபராதமாக செலுத்த வேண்டும்.
உண்மையான சூழ்நிலைகளில், அபராதத்தை திருப்பிப் பெற முடியும். இங்கே எங்கள் ஆதரவு குழு தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும்.
- நீங்கள் ஆதரவு புகார்களை வைக்கும்போது அல்லது சாட் மூலம் எங்களை அணுகும்போது, உங்கள் பிரச்சனையை விரிவாக விவரிக்க முயற்சிக்கவும். சரியான ஸ்கிரீன் ஷாட்களை வழங்குவது விரைவான தீர்வுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதில்களும் குறிப்புகளும் உங்கள் P2P பயணத்திற்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்களிடம் இன்னும் ஏதேனும் கேள்விகள் இருந்தால், கீழே உள்ள கருத்துகள் பகுதியில் அவற்றைச் சேர்க்க தயங்க வேண்டாம்.
இனிமையான வர்த்தகம் அமையட்டும்!
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.