Table of Contents
பிட்காயின், எத்தீரியம், டீத்தர் போன்ற பல கிரிப்டோகரன்ஸிகள், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்வு மற்றும் தாழ்வுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தாலும், நீண்ட காலமாக கண்காணிப்பட்டு வந்த இந்தியாவில் தோன்றிய கிரிப்டோகரன்சியான, மேடிக் கிரிப்டோவில் பெரும் புகழைப் பெற்றுள்ளது. பல முதலீட்டாளர்கள் அதில் ஆர்வமுடன் இதனைக் கவனிக்கிறார்கள்.
முதன் முதலில் 2017–ஆம் ஆண்டில் மேடிக் நெட்வொர்க் (இப்போது பாலிகன்) என்ற பெயரில் தொடங்கப்பட்டது, இது எத்தீரியம் பிளாக்செயின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தளமாகும், இந்தத் தளத்தில் பரவலாக்கப்பட்ட பிற செயலிகளை உருவாக்கி மற்றும் மேம்படுத்த முடியும்.
இது லேயர் 2 ஸ்கேலிங் முறையாகும், இது பிளாஸ்மா ஃபிரேம்வொர்க் மற்றும் PoS (ப்ரூஃப் ஆஃப் ஸ்டேக்) வேலிடேட்டர்களைப் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யும் போது, ஆஃப்-செயின் கணக்கீட்டிற்கு சைடு செயின்களைப் பயன்படுத்தி ஸ்கேலைப் பெறுகின்றது.
அதை நன்கு புரிந்துகொள்ள, அதன் சில அடிப்படைகளையும் அது எவ்வாறு இயங்குகிறது என்பதையும் பார்ப்போம்.
மேடிக் என்றால் என்ன?
இப்போது பாலிகன் என அழைக்கப்படும் மேடிக், பாலிகன் நெட்வொர்க்கின் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு எத்தீரியம் டோக்கன் ஆகும், இது எத்தீரியம் அடிப்படையிலான மல்டிசெயின் ஸ்கேலிங் முறையாகும். மேடிக் நெட்வொர்க் என்பது எத்தீரியம் பிளாக்செயின் மற்றும் பிற இணக்கமான நெட்வொர்க்குகளுக்கு இடையேயான இயங்குதளத்தை மேம்படுத்துவதற்கான இறுதிக் கட்டமைப்பாகும், மேலும் சமீபகாலத்தில் அதன் நடைமுறை கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளது.
நிறுவனத்தின் விலை கணிப்புகளின்படி, மேடிக் டோக்கன்கள் 2028 ஆம் ஆண்டுக்குள் $9.41-ஐ எட்டக்கூடும். பிப்ரவரி முதல், இந்த நெட்வொர்க் NFT (நான் – ஃபன்ஜிபிள் டோக்கன்கள்), கேமிங் மற்றும் DeFi (பரவலாக்கப்பட்ட நிதி) ஆகியவற்றில் அதன் அதிகரித்த பயன்பாடு காரணமாக அதன் சந்தை மூலதனத்தில் பத்து மடங்கு அதிகரிப்பைக் கண்டுள்ளது.
மேடிக் (பாலிகன்) டோக்கன் என்றால் என்ன?
அதன் மாற்றுக்களான எத்தீரியம் மற்றும் பிட்காயின் போலல்லாமல், மேடிக் நாணயம் அல்லது பாலிகன் நெருக்கடி காரணமாக ஏற்படும் அதிக பரிவர்த்தனை செலவுகளால் பாதிக்கப்படவில்லை. இது ஒரு ஓபன்- சோர்ஸ் தொழில்நுட்பமாகும், இது டெவலப்பர்களுக்கு ஒரு தனித்துவமான நெட்வொர்க்கை உருவாக்கத் தேவையான கருவிகளை வழங்குகிறது அல்லது ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் எத்தீரியத்தின் நெட்வொர்க்கால் வழங்கப்பட்ட பாதுகாப்பைப் பயன்படுத்தி சைட் செயின்களைப் பாதுகாக்கிறது.
மே மாதத்தின் கடைசி வாரத்தில், மேடிக்-கின் சந்தை மூலதனம் $10 பில்லியனை தாண்டியது மற்றும் தற்போது உலகின் முதல் 25 கிரிப்டோ டோக்கன்களில் ஒன்றாக உள்ளது, இதன் முழுமையான சந்தை மூலதனம் $ 11 பில்லியன் என்று Coinmarketcap கூறுகிறது .மேடிக் கரன்சி இந்த மார்ச் மாதத்தில் காயின்பேஸ்-ல் வர்த்தகம் செய்யத் தொடங்கியது மற்றும் எத்தீரியம் டெவலப்பர்கள் தங்கள் சொந்த பயன்பாடுகளை எத்தீரியம் பிளாக் செயினில் மிகவும் மலிவாகவும் விரைவாகவும் உருவாக்கக்கூடிய ஒரு தளத்தை வழங்குவதால் விலைமதிப்பற்ற நெட்வொர்க்காக மாறியுள்ளது.
மேடிக்: தோற்றம்
Source: MATIC Founders / Coin Bureau
பாலிகனின் இந்த சொந்த கரன்சி மூன்று இந்திய மென்பொருள் பொறியாளர்களால் நிறுவப்பட்டது – அனுராக் அர்ஜுன், ஜெயந்தி கனனி மற்றும் சந்தீப் நெயில்வால். இந்த ஸ்டார்ட்அப் மும்பையில் உள்ளது.
இன்று எத்தீரியம் எதிர்கொள்ளும் சில பெரிய சவால்களைத் தீர்க்கவும் பதிலளிக்கவும் இது உருவாக்கப்பட்டது – அதாவது, அதிக கட்டணம், ஒரு நொடிக்கு குறைந்த பரிவர்த்தனைகள் (TPS) மற்றும் மோசமான பயனர் அனுபவம். அதன் இரு அடுக்கு ஸ்கேலபிலிட்டி தளம் எத்தீரியம் பிளாக் செயினுக்கு இணக்கமான மல்டி-செயின் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆரம்பத்தில், இந்தத் திட்டம் மேடிக் நெட்வொர்க்காகத் தொடங்கப்பட்டது, ஆனால் அதன் செல்வாக்கும், நோக்கமும் விரிவடைந்தபோது, பாலிகனாக மறுபெயரிடப்பட்டது. இது பணமதிப்பு மற்றும் தகவலை சுதந்திரமாக பரிமாறிக்கொள்ளக்கூடிய பல்வேறு பிளாக்செயின்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே உலகளவில் முதல் 15 கிரிப்டோகரன்ஸிகளில் தனது இடத்தைப் பிடித்திருந்தாலும், பிட்காயின் மற்றும் எத்தீரியத்திற்குப் பிறகு 3–வது பெரிய கிரிப்டோ திட்டமாக மாற்றுவதற்கு மேடிக் நிறுவனர்களுக்கு பெரிய லட்சியங்கள் உள்ளன.மேடிக் இன் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன, அவற்றில், அதைச் சுற்றி வளர்ந்து வரும் பரபரப்பு, மார்க் கியூபனின் முதலீடு மற்றும் Google BigQuery யின் அறிவிப்பு ஆகியன அடங்கும்.
இந்தியாவில் மேடிக்(பாலிகன்) வாங்குவது எப்படி?
காயின்பேஸ் மற்றும் பினான்ஸ் ஆகியவை மேடிக் நெட்வொர்க்கை (இப்போது பாலிகன் என்று அழைக்கப்படுகிறது) ஆதரிகின்றன. இந்த இரண்டு அடுக்கு ஸ்கேலிங் முறை பல பிளாக்செயின்களில் ஸ்கேலாபிலிட்டி சிக்கல்களைக் கையாள்வதன் மூலம் கிரிப்டோகரன்சி ஏற்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
WazirX, மேடிக்-கை ஆதரிக்கிறது
மேடிக் (பாலிகன்) வர்த்தகம் WazirX-இல் கிடைக்கிறது, WazirX இந்தியாவின் மிக நம்பகமான பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்களில் ஒன்றாகும், இது சிறந்த தர பாதுகாப்பு, சூப்பர்ஃபாஸ்ட் KYC, மின்னல் வேக பரிவர்த்தனைகள், அனைத்து தளங்களிலும் திறமையான மற்றும் நேரடியான வடிவமைப்பு ஆகியவற்றுடன் கிடைக்கிறது
மேடிக் ஏன் ஈர்ப்பைப் பெறுகிறது?
DeFi (பரவலாக்கப்பட்ட நிதி, NFTக்கள், DAOக்கள் (பரவலாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புகள்) மற்றும் DApps (பரவலாக்கப்பட்ட பயன்பாடுகள்) போன்ற கிரிப்டோகரன்ஸிகளில் முக்கிய பகுதிகளில் மேடிக் ஈடுபட்டுள்ளது.
Source: LunarCrush
மேடிக்கின் அதிகரித்த பயன்பாடு கிரிப்டோ சந்தையில் முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த உணர்வை உயர்த்துவதாகத் தெரிகிறது. அனைத்து சமூக ஊடகத் தளங்களிலும் மேடிக்கின் ஆதிக்கம் மார்ச் முதல் ஏப்ரல் வரை 636% அதிகரித்துள்ளது, அதாவது முதலீட்டாளர்கள் முன் எப்போதையும் விட, இந்த கரன்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்று லூனார்கிரஷ் கூறியுள்ளது.
இந்தியாவின் கோவிட் நிவாரண நிதிக்கு விட்டாலிக் புடெரினின் அளித்த நன்கொடை மேடிக் சில தெரிவுநிலையைப் பெற உதவியது, அதன் டோக்கனின் மதிப்பிற்கு உண்மையில் ஒரு நிகழ்வு மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. மாறாக, மேக்கர் மற்றும் யுனிஸ்வாப் போன்ற உலகளாவிய DeFi பயன்பாடுகளின் பெரிய எழுச்சி காரணமாக வளர்ச்சி அதிகமாக நிகழ்கிறது.
மேடிக்கின் தீர்வு பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளுக்கு உதவவும், பயனர்களை விரைவாகவும் திறமையாகவும் பெறவும் உதவுகிறது. விளையாட்டுகள், சந்தைகள் மற்றும் பல்வேறு பயன்பாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
கூடுதலாக, அதன் வேலை மற்றும் பயன்பாட்டின் அதிகரிப்பு நிஜ உலகப் பயன்பாடு மற்றும் விரிவாக்கப்பட்ட பார்வை ஆகியவற்றுடன் இணைந்து கிரிப்டோகரன்சிக்கு ஒரு அதிவேக விளைவை உருவாக்கியுள்ளது.
மேடிக்: எதிர்கால சாத்தியம்
இதுவரையிலான மேடிக்கின் வரம்பற்ற வளர்ச்சிக்கு எத்தீரியம் நெட்வொர்க்கின் புகழ் மற்றும் அதன் பயன்பாட்டில் திடீர் உயர்வு ஓரளவு காரணமாக இருந்து வந்துள்ளது. இதன் நெட்வொர்க்கில் வேகமான மற்றும் மலிவான பரிவர்த்தனைக்கான தெரிவு கிடைப்பது மேடிக்கிற்கு ஒரு பெரிய விற்பனை சாதகமாகும் மற்றும் இது அதன் விலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பொதுவன கருத்தையும் மற்றும் பரபரப்பையும் உருவாக்குகிறது.
மேடிக் 2020-2021 இல் 10,000% உயர்ந்துள்ளது மற்றும் செப்டம்பர் 2021 நிலவரப்படி $1.15-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் இறுதியில் இது மேலும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
கிரிப்டோ சுற்றுச்சூழலில் மேட்டிக்கின் அற்புதமான வெற்றி, புதுமையான யோசனைகள் மற்றும் நிஜ உலக தீர்வுகள் கொண்ட கிரிப்டோகரன்சியின் சிறந்த அடித்தளங்கள், மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், டெவலப்பர்கள் என்பன போன்றவை முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்பதை காட்டுகிறது
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.