Table of Contents
நம் வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில், நமக்குத் தெரியாத ஒரு போட்டியில் பங்கேற்றதற்காக மில்லியன் கணக்கான டாலர்களை வென்றதாகக் கூறும் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை நாம் அனைவரும் பெற்றுள்ளோம். பொதுவாக, கேள்விக்குரிய மின்னஞ்சல் அல்லது செய்தி ஒரு புரளி என்பதை உடனடியாக அடையாளம் காண முடியும் என்பதால், நாம் அனைவரும் நன்றாகச் சிரித்துவிட்டு சென்று விடுவோம்.
ஆனால் கிரிப்டோகரன்சி என்று வரும்போது நீங்கள் அதே போன்று செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒரு முறையான திட்டத்திலிருந்து கிரிப்டோ மோசடியை எவ்வளவு எளிதாக உங்களால் கண்டுபிடிக்க முடியும்? நீங்கள் அறிய வேண்டியது அனைத்தும் இங்கே.
கிரிப்டோ மோசடிகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றன
ஒவ்வொரு நாள் கடக்கும்போதும், கிரிப்டோகரன்சி அதிக உயரத்திற்கு வளர்ந்து கொண்டேயிருக்கிறது உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் கவனத்தை கிரிப்டோக்கள் தொடர்ந்து பெறுவதால், விரைவாக பணக்காரர் ஆவதற்கு எதையும் செய்ய தயாராக இருக்கும் நபர்கள், ஏமாற்றப்படுவதன் மூலம் எளிதான லாபங்களைப் பெற விரும்பும் மோசடிக்காரர்களுக்கு இலக்காகிவிட்டனர்.
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் நம்பகமான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள் மற்றும் இணையதளத்தின் பெயர் தெரியாத தன்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதன் மூலம் கிரிப்டோ உலகில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் இந்த வாக்குறுதிகள் மிக நன்றாக இருப்பது போல் தோன்றுவதால், தனி நபர்கள் அந்த வலையில் விழுகிறார்கள். இது ஏன் நிகழ்கிறது என்றால் பெரும்பாலான மக்கள் இன்னும் கிரிப்டோகரன்சியைப் பற்றி இன்னும் அறியாமலே இருக்கின்றனர் – அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எது உண்மையானது மற்றும் எது போலியானது என்று சொல்வது கடினம். இதற்கு வலிமை சேர்ப்பது போல், கிரிப்டோகரன்ஸிகள் என்பது அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத தொழில்நுட்ப விஷயம் என்று பலர் நம்புகிறார்கள்.
அதனால்தான், நீங்கள் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்போ அல்லது அதில் முதலீடு செய்வதற்கு முன்போ, கிரிப்டோகரன்சி எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அது ரொக்கம் மற்றும் பிற கட்டண முறைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. நீங்கள் சதி வலையில் விழுந்து உங்களின் மொத்த சேமிப்பையும் இழக்க விரும்பவில்லை என்றால், கிரிப்டோகரன்சி மோசடிகள் கண்டுபிடிக்கவும், போலியான கிரிப்டோ கணக்குகளை அடையாளம் காணவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதோ சில பிரபலமான கிரிப்டோ மோசடிகள் மற்றும் அவற்றை நீங்கள் எப்படிக் கண்டறியலாம்.
ஆள்மாறாட்டகாரர்களின் மோசடிகள் (Imposter Scams)
ஆள்மாறாட்டகார மோசடிகள் பெரும்பாலும் அரசாங்க அதிகாரிகள், கார்ப்பரேஷன்கள் அல்லது நன்கு அறியப்பட்ட நபர்களை போல் போலியாகக் காட்டிக்கொள்கின்றன. தற்போது, கிரிப்டோகரன்சிகள் சுமார் 14% இழப்புகளுக்குப் பொறுப்பாக இருக்கின்றன. இந்த மோசடிகளில் பெரும்பாலானவை (கிட்டத்தட்ட 86%) அரசின் சட்டபூர்வ பணத்தைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. இருப்பினும், கிரிப்டோ தொழில் தொடர்ந்து அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால், இந்த விகிதம் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் நாணய இழப்புகளின் சதவீதம் சந்தேகத்திற்கு இடமின்றி அதிகரிக்கும்.
உண்மையில், FTC தகவல்களின்படி, 2020 முதல் கிரிப்டோ மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, 7000 க்கும் மேற்பட்ட நுகர்வோர் மொத்தமாக $80 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆள்மாறாட்ட மோசடிகள் பெரும்பாலும் பரிசுத்தொகை மோசடிகளுடன் ஜோடி சேர்க்கப்படுகின்றன, இதில் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் தங்களுக்கு செலுத்தப்படும் கிரிப்டோவை இரட்டிப்பாக்கவோ அல்லது அதே அளவோ வழங்க முன் வருகிறார்கள். பல பயனர்கள் மோசடி செய்பவரின் வேலட்டுக்கு கிரிப்டோக்களை அனுப்பியதாகவும், அதை ஒரு பிரபலம் அல்லது செல்வாக்கு மிக்கவருக்கு சொந்தமானது என்று தவறாக நினைத்ததாகவும் தெரிவிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, கடந்த ஆறு மாதங்களில் எலோன் மஸ்க் என்று ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு $2 மில்லியனுக்கும் அதிகமான கிரிப்டோகரன்ஸிகளை அனுப்பியுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்கேம்மர்கள் WazirX இன் ஆதரவு, நிர்வாகம் அல்லது ஊழியர்களைப் போல சமூக ஊடக தளங்கள் மற்றும் டெலிகிராம் குழுக்களில் ஆள்மாறாட்டம் செய்யலாம், மோசடி இணைப்புகளை போஸ்ட் செய்யலாம். இது போன்ற போலி கணக்குகள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக்கிலிருந்து வரும் சலுகைகளை நம்ப வேண்டாம், குறிப்பாக அது போன்ற பலனை அடைவது முடியாது என்று தோன்றினால்.
போலிக் கணக்கைக் கண்டறிவதற்கான சிறந்த வழி, நீங்கள் பெறப் போகும் வருமானத்தை மதிப்பீடு செய்வதே ஆகும். கிரிப்டோ சலுகை உண்மையாக இருப்பதை விட அதிகமாக இருந்தால், அதுதான் உங்களுக்கான அபாய எச்சரிக்கையாகும். அது உண்மையை விட மிக நன்றாக இருக்கும், ஏனெனில் அது உண்மையானதல்ல.
குளோன் இணையதளங்கள் (Clone websites)
மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் மற்றொரு பொதுவான தந்திரம் போலி இணையதளங்கள். கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய அல்லது மைனிங் வாய்ப்புகளை வழங்கும் இணையதளங்களைப் பார்வையிடுகையில் ஏராளமான நபர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர், ஆனால் உண்மையில் அவை போலியானவை. இந்த இணையதளங்கள் பெரும்பாலும் நன்கு வடிவமைக்கப்பட்டவை மற்றும் சட்டபூர்வமான உணர்வைத் தூண்டக்கூடியவை, தனிநபர்கள் தங்கள் கிரிப்டோக்களை விரைவாகவும் தயக்கமின்றியும் மாற்ற இவை அனுமதிக்கிறது.
பொதுவாக, இத்தகைய இணையதளங்கள் பல்வேறு முதலீட்டு அடுக்குகளைக் கொண்டுள்ளன, அதிக முதலீடு செய்தால், அதிக வருமானம் கிடைக்கும். போலி சான்றுகள் மற்றும் கிரிப்டோகரன்சி வாசகங்கள் இணையதளங்களை நம்பகமானதாகக் காட்டப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் நம்பமுடியாத உத்தரவாதமான வருமானத்தைப் பற்றிய பெரிய கூற்றுக்கள் போலியானவை என்பதை பயனர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இணையதளங்கள் உங்கள் பணத்தை அதிகரிக்கும் என்ற எண்ணத்தை கூட உருவாக்கலாம். ஆனால் நீங்கள் பெற்றதாகக் கூறப்படும் லாபத்தைத் திரும்பப் பெற முயற்சிக்கும்போது, இன்னும் அதிகமான கிரிப்டோவை செலுத்துமாறு உங்களிடம் கூறப்படும்- மேலும் இறுதியில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது.நீங்கள் கையாளும் இணையதளம் முறையானதா இல்லையா என்பதைச் சொல்வதற்கு பல அறிகுறிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, URL பாரில் பூட்டு ஐகான் இல்லை என்றால், இந்த தளம் பாதுகாப்பானதாக இல்லை என்பதற்கான குறியீடாகும். பணம் செலுத்தும் போது நீங்கள் ஒரு இணையதளத்தில் இருந்து மற்றொரு இணையதளத்திற்கு மாற்றப்பட்டால் அது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயமாகும். ரீடைரக்ட் இணைப்பு முறையான தளம் போலத் தோன்றலாம்; இருப்பினும், URL ஐ நெருக்கமாக ஆய்வு செய்தால், அந்த போலி URL இல் “o” என்ற எழுத்துக்கு பதிலாக பூஜ்ஜியம் என்ற எண் உள்ளது என்பது தெரிய வரும். இதன் விளைவாக, உங்கள் பிரவுசரில் சரியான URL ஐ உள்ளிட்டு அதை இருமுறை சரிபார்க்கவும்.
காதல் சார்ந்த மோசடிகள் (Romance scams)
காதல் சார்ந்த மோசடிகள் என்பது ஒரு வகையான மோசடி ஆகும், இது ஆன்லைன் டேட்டிங் மூலம் மக்களை கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடிகளில் ஈர்க்கிறது. மோசடிக்காரர்கள் பொதுவாக டேட்டிங் ஆப்-கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், அவர்களின் உறவு உண்மையானது என்று அவர்களை நம்ப வைப்பதற்கும் அவர்கள் ஒரு காதல் ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்டவரின் முழுமையான நம்பிக்கையைப் பெற்ற பிறகு, மோசடி செய்பவர்கள் கிரிப்டோ நிபுணர்களாக தங்களைக் காட்டி, பாதிக்கப்பட்டவருக்கு கிரிப்டோவை அனுப்புவதன் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வற்புறுத்துகிறார்கள். பாதிக்கப்பட்டவர் தன் பங்களிப்பை வழங்கியவுடன், மோசடி செய்பவர் அவர் குறிப்பிட்ட கணக்கில் இருந்து ஒரு சாதாரண லாபத்தை திரும்பப் பெறவும் உதவுகிறார்.
வெற்றிகரமாக பணம் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவரிடம் அதிகப் பணத்தைச் செலவழிக்கச் சொல்கிறார் மற்றும் பாதிக்கப்பட்டவரை “விரைவாக செயல்பட” வலியுறுத்துகிறார். பாதிக்கப்பட்டவர் மீண்டும் பணத்தைத் திரும்ப எடுக்க தயாராகும்போதுதான் சிக்கல்கள் எழத் தொடங்குகின்றன. பணத்தை திரும்பப் பெற முடியாததற்கான பல்வேறு காரணங்களை மோசடி செய்பவர் விளக்குகிறார், பின்னர் பாதிக்கப்பட்டவர் நிதி பரிமாற்றத்தை நிறுத்தும்போது அந்த மெய்நிகர் உறவு முடிவடைகிறது.
FTC இன் கூற்றுப்படி, பலர் தங்கள் காதல் ஆர்வலர் ஒரு பரபரப்பான கிரிப்டோ வாய்ப்பைப் பற்றி விவாதிக்கத் தொடங்கும் வரை, தாம் நீண்ட உறவில் இருக்கப் போகிறோம் என்று தவறாகப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அக்டோபர் 2020 முதல், காதல் மோசடிகளில் இழந்த பணத்தில் சுமார் 20% கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டுள்து இதில் பல புகார்கள் தாங்கள் முதலீடு செய்வதாக நினைத்த நபர்களிடமிருந்து வந்துள்ளன.
காதல் மோசடிக்கு பலியாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். நீங்கள் இணையத்தில் மட்டுமே சந்தித்த ஒருவரின் ஆலோசனையின் அடிப்படையில் பணம் அனுப்பவோ, வர்த்தகம் செய்யவோ அல்லது முதலீடு செய்யவோ கூடாது, மேலும் அந்நியர்களிடம் உங்கள் நிதி நிலைமையைப் பற்றி பேசவே கூடாது. பிரத்தியேக முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, முடிந்தவரை விரைவாகச் செயல்பட உங்களைத் தூண்டும் நபர்களின் வலையில் நீங்கள் விழவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு அழைப்பாளர், காதல் ஆர்வலர், அமைப்பு அல்லது வேறு யாரேனும் ஒருவர் கிரிப்டோகரன்ஸிகளை தங்கள் வேலட்டுகளுக்கு அனுப்புமாறு கோரினால், அது ஒரு மோசடி என்று நீங்கள் உத்தரவாதம் செய்து கொள்ளலாம். மேலும், இணையத்தில் தெரியாதவர்களுக்கு முக்கியமான தகவல்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கவும்.
இறுதி எண்ணங்கள்
ஃபிஷிங் மோசடிகள்,பரிசுத்தொகை மோசடிகள், காதல் மோசடிகள், ரக் புல்கள், பம்ப் மற்றும் டம்ப்ஸ் – நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்;கிரிப்டோ மோசடிகள் எல்லா இடங்களிலும் உள்ளன. நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், நீங்கள் உழைத்து சம்பாதித்த அனைத்தையும் இழக்க நேரிடும்.
கிரிப்டோகரன்சி முதலீடுகளைத் தொடங்குவதற்கு முன், நீங்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், மேலும் நீங்கள் ஏதாவது சரியாக உணரவில்லை அல்லது சரிப்படவில்லை என்றால், உங்கள் உள்ளுணர்வை மட்டும் நம்புங்கள். WazirX, பயனர்களை பணத்தை கிரிப்டோ வேலட்டுக்கு அனுப்புங்கள் என்று ஒருபோதும் கேட்பதில்லை.
WazirX எக்ஸ்சேஞ்ஜைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.