Skip to main content

இந்தியாவில் எத்தீரியம் வாங்குவது எப்படி? (How to buy Ethereum in India?)

By நவம்பர் 16, 2021நவம்பர் 17th, 20214 minute read

2015 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, ஆல்ட்காயினின் முன்னோடியான – எத்தீரியம் கிரிப்டோ உலகில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. நீங்கள் கிரிப்டோ உலகுக்கு தொடக்கநிலையாளராக இருந்தால், எத்தீரியம் என்றால் என்ன, அது ஏன் மிகவும் பிரபலமானது போன்ற கேள்விகள் மிகவும் பொதுவானவை. எது அதை மதிப்பு மிக்கதாக்குகிறது, ஒரு நீண்ட கால முதலீடாக அதன் சாத்தியக்கூறுகள் என்ன? அதை நீங்கள் எப்படி வாங்குவீர்கள்?

எத்தீரியம் என்று வரும்போது சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன, மேலும் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் கிரிப்டோகரன்சி இதுதானா என்றும் முடிவெடுக்க வேண்டும். எத்தீரியம் என்றால் என்ன மற்றும் இந்தியாவில் உள்ள சிலவற்றை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதற்கான தொடக்க வழிகாட்டி இங்கே. 

எத்திரீயம் என்றால் என்ன?

எத்தீரியம் என்பது அதன் கிரிப்டோகரன்சியான, ஈத்தர் (ETH) மற்றும் அதன் புரொகிராம் மொழியான சாலிடிட்டி ஆகியவற்றைக் கொண்ட ஒரு பிளாக்செயின் தளமாகும். 

ஈத்தர் (ETH) என்பது நெட்வொர்க்கை செயல்படுத்தக்கூடிய எரிபொருளாகும். ஒவ்வொரு எத்தீரியம் நெட்வொர்க் பரிவர்த்தனைக்கும், கணிக்கும் சாதனங்களுக்கும் பரிவர்த்தனை கட்டணங்கள் (எரிவாயு கட்டணம் என அழைக்கப்படும்) செலுத்த இது பயன்படுத்தப்படுகிறது. பிட்காயின் போலவே ஈத்தர் என்பதும் ஒரு பியர்-டு-பியர் கிரிப்டோகரன்சியாகும். பரிவர்த்தனைகளுக்கு பணம் செலுத்துவதைத் தவிர, எரிவாயுவை வாங்கவும் ஈத்தர் பயன்படுத்தப்படுகிறது, இது எத்தீரியம் நெட்வொர்க்கில் எந்தவொரு பரிவர்த்தனையையும் கணக்கிடுவதற்கு தேவைப்படுகிறது. ஈத்தரின் சப்ளை பிட்காயின் போன்று வரையறுக்கப்படவில்லை, மேலும் நெட்வொர்க்கைப் பாதுகாக்க தேவையான குறைந்தபட்ச அளவாக பொதுவாகக் கருதப்படும் அதன் விநியோக அட்டவணை எத்தீரியம் சமூகத்தால் அமைக்கப்படுகிறது.

Get WazirX News First

* indicates required

Get WazirX News First

* indicates required

எத்தீரியம் எப்படி வேலை செய்கிறது?

எத்தீரியம், மற்ற கிரிப்டோகரன்சிகளைப் போலவே, பிளாக்செயின் நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டது. பிளாக்செயின் என்பது பரவலாக்கப்பட்ட, விநியோகிக்கப்பட்ட பொது லெட்ஜர் ஆகும், அது அனைத்து பரிவர்த்தனைகளையும் சரிபார்த்து பதிவு செய்கிறது. 

நெட்வொர்க்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கவும் பிளாக்செயின் பரிவர்த்தனைகளில் கிரிப்டோகிராஃபி பயன்படுத்தப்படுகிறது. “மைன்” அல்லது நெட்வொர்க்கில் உள்ள ஒவ்வொரு பரிவர்த்தனையையும் சரிபார்த்து, கணினியின் பிளாக்செயினில் சமீபத்திய தொகுதிகளைச் சேர்க்கும் சிக்கலான கணிதச் சமன்பாடுகளைக் கணக்கிட பயனர்கள் கணினிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சரிபார்ப்பு செயல்முறை ஒருமித்த அல்காரிதம் என்று அழைக்கப்படுகிறது, குறிப்பாக வேலை செய்ததற்கான சான்று உள்ள ஒருமித்த அல்காரிதம். 

பங்கேற்பாளர்களுக்கு ஊக்கத்தொகையாக கிரிப்டோகரன்சி டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் எத்தீரியம் அமைப்பில் ஈத்தர் (ETH)என்று அழைக்கப்படுகின்றன. ஈத்தர் என்பது ஒரு மெய்நிகர் நாணயமாகும், இது நிதி பரிவர்த்தனைகள், முதலீடுகள் மற்றும் மதிப்புள்ள சேமிப்பாக பயன்படுத்தப்படலாம். ஈத்தர், எத்தீரியம் பிளாக்செயின் நெட்வொர்க்கில் வைக்கப்பட்டு பரிமாற்றம் செய்யப்படுகிறது. ETH க்கு வெளியே, இந்த நெட்வொர்க் பல்வேறு இதர சேவைகளையும் வழங்குகிறது.

தகவலை சேமிக்கலாம் மற்றும் பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளை எத்தீரியம் நெட்வொர்க்கில் செயல்படுத்தலாம். ஒரு வணிகம் மட்டுமே தகவலை கட்டுப்படுத்தக்கூடிய Google அல்லது Amazon க்கு சொந்தமான சர்வரை விட எத்தீரியம் பிளாக்செயினில் மென்பொருளை மக்கள் ஹோஸ்ட் செய்ய முடியும். எதையும் ஒழுங்குபடுத்தும் எந்த ஒரு தனி நபர் அதிகாரமும் இல்லாததால், பயனர்கள் அவர்களின் தகவல் மீதான கட்டுப்பாடு மற்றும் பயன்பாட்டிற்கான முழு அணுகலைப் பெற முடியும். 

கிரிப்டோ உலகில் ஸ்மார்ட் கான்ட்ராக்ட்கள் என்று பிரபலமாக அறியப்படும் சுய-செயல்பாட்டு ஒப்பந்தங்கள், ஈத்தர் மற்றும் எத்தீரியம் ஆகியவற்றிற்கான மிகவும் கட்டாயமான பயன்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். பாரம்பரிய ஒப்பந்தங்களைப் போலல்லாமல், இதற்கு வழக்கறிஞர்கள் தேவையில்லை: ஒப்பந்தம் எத்தீரியம்  பிளாக்செயினில் குறியீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் அது சுயமாகச் செயல்பட்டு ஈத்தரை சரியான தரப்பினருக்கு வழங்குகிறது. 

எத்தீரியம் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் NFTகளின் கட்டுமானத் தொகுதிகளாகும் மற்றும் அவை நூற்றுக்கணக்கான நிதித்துறை தயாரிப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலி செயல்முறைகளை தானியங்குமயமாக்கும். பரவலாக்கப்பட்ட பரிமாற்றங்கள் (DEXகள்) மற்றும் தானியங்கு சந்தை தயாரிப்பாளர்கள் (AMM) ஆகியவற்றை ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி உருவாக்க முடியும்.

எவ்வாறு எத்தீரியம் ஒரு நல்ல முதலீடாக ஆகிறது?

எத்தீரியத்தின் செழிப்பான செயல்திறன் பாரம்பரிய மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் இருவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாரம்பரிய முதலீட்டுடன் ஒப்பிடுகையில், எத்தீரியம் பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது:

  • நிலையற்ற தன்மை: இது ஒரு காலத்தில் எதிர்மறையாகக் கருதப்பட்டாலும், புத்திசாலித்தனமான முதலீட்டாளர்கள் சந்தை சுழற்சி முறைகளை அங்கீகரித்துள்ளனர் மற்றும் சந்தை குமிழ்களின் அதிகமான ஆதாயங்களில் இருந்து லாபம் பெறலாம்..
  • பணப்புழக்கம்: வர்த்தக தளங்கள், எக்ஸ்சேஞ்ஜுகள் மற்றும் ஆன்லைன் புரோக்கரேஜ்களின் உலகளாவிய நிறுவலின் காரணமாக, எத்தீரியம் பெரும்பாலும் மிகவும் பணப்புழக்கமுள்ள சொத்துக்களில் ஒன்றாகும். ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணங்களுடன், நீங்கள் அசல் அல்லது இதர கிரிப்டோ சொத்துக்களுக்கு எத்தீரியத்தை வர்த்தகம் செய்யலாம்.
  • குறைந்த பணவீக்க அபாயம்: எத்தீரியத்தின் பரவலாக்கம் மற்றும் அதன் அதிகபட்ச வருடாந்திர வரம்பான 18 மில்லியன் ETH ஆகியவை அசல் பணத்தை விட குறைவான பணவீக்கத்தை உருவாக்குகின்றன. 
  • பரவலாக்கப்பட்ட நிதி: எத்தீரியத்தால் கொண்டு வரப்பட்ட மிகப் பெரிய சாதனையாகக் கூறப்படும், DeFi நிதி உலகில் வேறு எவரும் செய்யாத புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பீட்டளவில் புதிய கருத்தாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக DeFi இன் உலகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது, மேலும் dApps ஐ ஆதரிக்கும் எத்தீரியத்தின் திறன் காரணமாக மிகவும் புதுமையான சுற்றுச்சூழல் முன்னோடியாக அமைந்திருக்கின்றன.

இவை தவிர, எத்தீரியத்தின் நிஜ உலக (தற்போதைய மற்றும் சாத்தியமுள்ள எதிர்காலம்) பயன்பாட்டு நிகழ்வுகளில் சில:

வாக்களிப்பு அமைப்புகள்

எத்தீரியம் வாக்களிப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது வாக்கெடுப்பு முடிவுகள் பொதுவில் வெளியிடப்படுவதால், வாக்கெடுப்பு முறைகேடுகள் அகற்றப்பட்டு வெளிப்படையான மற்றும் நியாயமான ஜனநாயக செயல்முறையை உறுதி செய்கிறது.

வங்கி அமைப்புகள்

எத்தீரியம் அதன் பரவலாக்கப்பட்ட தன்மை காரணமாக வங்கி அமைப்புகளில் மிக விரைவில் ஏற்றுக்கொள்ளப்படலாம், இதன் மூலம் ஹேக்கர்கள் சட்டவிரோத அணுகலைப் பெறுவது கடினமாக இருக்கும். எத்தீரியம் அடிப்படையிலான நெட்வொர்க்கில் பணம் செலுத்தவும் இது அனுமதிக்கிறது. இதனால் வங்கிகள் எதிர்காலத்தில் பணம் அனுப்புவதற்கும் பணம் செலுத்துவதற்கும் எத்தீரியத்தை பரிசீலிக்கலாம்.

ஷிப்பிங்

ஷிப்பிங்கில் எத்தீரியத்தின் பயன்பாடு சரக்குகளை டிராக் செய்ய உதவுகிறது மற்றும் பொருட்களை தவறாக அல்லது போலியாக மாற்றுவதை தடுக்கிறது. எத்தீரியம் ஒரு விநியோகச் சங்கிலியில் பயன்படுத்தப்படும் எந்தவொரு பொருட்களுக்கும் ஆதாரம் மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை வழங்குகிறது.

ஒப்பந்தங்கள்

எத்தீரியம் ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி எந்தத் திருத்தங்களும் இல்லாமல் ஒப்பந்தங்களை வைத்து செயல்படுத்தலாம். எத்தீரியம் ஸ்மார்ட் ஒப்பந்தங்களை நிறுவுவதற்கும், பல்வேறு இடங்களில் உள்ள பங்கேற்பாளர்களைக் கொண்ட, சர்ச்சைகளுக்கு ஆளாகக்கூடிய மற்றும் டிஜிட்டல் ஒப்பந்தங்கள் தேவைப்படும் ஒரு துறையில் ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பதற்கும் ஒரு அமைப்பாகப் பயன்படுத்தப்படலாம்.

முதலீட்டாளர்கள், அதன் விரிவடைந்து வரும் பிரபலத்தன்மை, உயரும் மதிப்பீடு மற்றும் அதை ஏற்றுக்கொள்ளும் எக்ஸ்சேஞ்ஜுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக எத்தீரியத்தை நோக்கி குவிந்து வருகின்றனர். எத்தீரியம் கிரிப்டோ துறையில் அதிக வளர்ச்சி பெறுவதற்கான ஒரு சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளது, இதனால் அது ஒரு சிறந்த முதலீட்டுத் தேர்வாகிறது. 

நீங்கள் மேலும் அறிய வேண்டுமென்றால் எத்திரீயத்தின் நுகர்வோர் பயன்பாடு குறித்து நாங்கள் முன்னரே பதிப்பித்த பிளாகுகள்இங்கு உள்ளன

இருப்பினும், நீங்கள் இந்தியாவில் எத்தீரியத்தில் முதலீடு செய்வதற்கு  முன், ஒரு நிதி ஆலோசகரிடம் அதன் ஆபத்துகளைப் பற்றி விவாதிக்கவும். எத்திரீயத்தின் எதிர்காலத்தை நீங்கள் நம்பினாலும், இந்த சந்தையில் உள்ள தீவிர ஆபத்து மற்றும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, பண இழப்பை உங்களால் தாங்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவில் எத்தீரியம் வாங்குவது எப்படி?

நீங்கள் ஒரு இந்தியராக இருந்து, இந்தியாவில் எத்தீரியத்தை  வாங்க விரும்பினால், INR இணையைக் கையாளும் எக்ஸ்சேஞ்ஜைப் பயன்படுத்த வேண்டும். எத்தீரியம் மற்றும் INR போன்ற கிரிப்டோகரன்ஸிகளை குறைந்த விலையிலும் சிறந்த பாதுகாப்பிலும் வர்த்தகம் செய்வதற்கும் மாற்றுவதற்கும் எளிய, நம்பகமான மற்றும் அருமையான வழிக்கு WazirX ஐப் பார்க்கவும். பின்வரும் படிநிலைகளைப் பின்பற்றி WazirX வழியாக இந்தியாவில் எத்தீரியத்தை வாங்கலாம்:

  1.  WazirX இல் இணையம் அல்லது மொபைல் பயன்பாடு மூலம் பதிவு செய்யவும் அல்லது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் உள்நுழையவும்.
Sign up on WazirX
  1. நீங்கள் குறிப்பிட்ட இமெயில் முகவரிக்கு ஒரு சரிபார்ப்பு இமெயில் அனுப்பப்படும்.
Verification email - WazirX
  1. சரிபார்ப்பு இமெயில் மூலம் கொடுக்கப்பட்ட இணைப்பு சில நிமிடங்களுக்கு மட்டுமே செயலில் இருக்கும், எனவே கூடிய விரைவில் அதைக் கிளிக் செய்வதை உறுதிசெய்யவும்.
Verify your Email - WazirX
  1. இந்த இணைப்பு உங்கள் இமெயில் முகவரியை வெற்றிகரமாக சரிபார்க்கும்
Email Has been verified successfully
  1. அடுத்த படிநிலை பாதுகாப்பை அமைப்பது, எனவே உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
Set up security - WazirX
  1. நீங்கள் பாதுகாப்பை அமைத்த பிறகு, KYC செயல்முறையை பூர்த்தி செய்யலாமா வேண்டாமா என்ற விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும்.
KYC Procedure - WazirX
  1. அதைத் தொடர்ந்து, நீங்கள் நிதி மற்றும் பரிமாற்றங்கள் பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.
Funds and Transfers page - WazirX
  1.  “நிதி” என்பதைத் தேர்வு செய்து பின்னர் “டெபாசிட் INR” என்பதைத் தேர்வு செய்யவும் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யவும்
INR Deposit - WazirX
  1. திரையின் மேல்புறம் உள்ள “எக்ஸ்சேஞ்ஜ்” என்பதைத் தேர்வு செய்யவும்
Crypto Exchange
  1. ETH/INR சந்தையில் உள்ள“வாங்கு” டேப் ஐ தேர்வு செய்யவும்
ETH/INR market - WazirX
  1. நீங்கள் INR இல் செலவிட விரும்பும் தொகை அல்லது நீங்கள் வாங்க விரும்பும் தொகையை உள்ளிடவும்.

பரிவர்த்தனையின் பிரத்தியேகங்களைப் பார்த்து “ETH வாங்கு (Buy ETH)” என்பதைத் தேர்வு செய்யவும்

Buy ETH - WazirX

முடிவுரை

Wஇதன் மூலம், இந்தியாவில் எத்தீரியம்  வாங்குவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நாங்கள் வழங்கியுள்ளோம் என்று நம்புகிறோம். கிரிப்டோகரன்ஸிகளைப் பற்றி மேலும் அறியவும், கிரிப்டோ உலகின் சமீபத்திய செய்திகளைப் பற்றி தெரிந்துகொள்ளவும் நீங்கள் விரும்பினால், எங்கள் ப்ளாக் மூலம் படிக்கவும். எத்தீரியம்  போன்ற கிரிப்டோகரன்சிகள் மிகவும் நிலையற்ற தன்மையுடையவை மற்றும் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளவும். இந்தக் கட்டுரை முதலீட்டு ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் எத்தீரியம் என்ன வழங்குகிறது மற்றும் இந்தியாவில் எத்தீரியத்தை எவ்வாறு வாங்கலாம் என்பதற்கான வழிகாட்டியாக மட்டுமே உள்ளது. எந்தவொரு பணம் சார்ந்த/முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ளுமாறு நாங்கள் மிகவும் பரிந்துரைக்கிறோம்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply