Table of Contents
இந்தக் காலத்திலும், நாட்களிலும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நீங்கள் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. சமீபத்திய கிரிப்டோ ஏற்றம் 2020 இல் தொடங்கியபோதும், தொற்றுநோய் உலகளாவிய பொருளாதாரங்களை பின்னுக்குத் தள்ளிய போதும், இந்தப் போக்கு இன்னும் வலுவாக உள்ளது மேலும் ஒரு வருடத்திற்கு பின்னரும் நன்கு வளர்ந்து வருகிறது. எதிர்மறையான பத்திரிகைகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள அரசாங்க விதிமுறைகளினால் பொது மக்கள் பெரும்பாலும் கிரிப்டோகரன்சிகளைப் பற்றி சந்தேகம் கொண்டிருந்தாலும், அவர்கள் இப்போது மீண்டும் அதனருகே வருகிறார்கள். கிரிப்டோகரன்சிகள் என்பது தொழில்நுட்ப வல்லுநர்களால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய அல்லது ஆர்வலர்களால் மட்டுமே நடைமுறைப்படுத்தக்கூடியது என்ற கருத்து இப்போது இல்லை. கிரிப்டோ-மேனியா என்பது எல்லா இடங்களிலும் உள்ளது, சமூக ஊடகங்கள் முதல் உங்கள் வேலை, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வரை, மற்றும் இடைப்பட்ட எல்லா இடங்களிலும் உள்ளது.
உண்மையில், கிரிப்டோகரன்சிகள் 2021 இல் மிகவும் பிரபலமான முதலீட்டுத் தேர்வாகத் தொடங்கப்பட்டதில் இருந்து இப்போது நீண்ட தூரம் வந்துள்ளன. கிரிப்டோ சந்தைகள், இயல்பாகவே, குறுகிய காலத்தில் குறைந்த பட்ச ஆபத்து மற்றும் நம்பமுடியாத வெகுமதிகளை வழங்குகின்றன. நீங்கள் தற்போதுள்ள மையப்படுத்தப்பட்ட நிதிச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளைப் பார்த்தால், கிரிப்டோகரன்சிகள் வழங்கும் நிதிச் சுதந்திரம் மற்றும் பிற நன்மைகள் நிகரற்றவையாகும். இத்தகைய இலாபகரமான கருப்பொருளுடன், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தனிநபர்கள் பல்வேறு வகையான கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர், இது மிகவும் பிரபலமான பிட்காயினில் தொடங்கி, எத்தீரியம், டோஜ்காயின்கார்டானோ, மற்றும்இதர ஆல்ட்காயின்கள் வரை.
சந்தை மூலதனம் மற்றும் விலை செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கிரிப்டோ சந்தையில் பிட்காயின் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் அதே வேளையில், ஏராளமான ஆல்ட்காயின்களும் சிறப்பாகச் செயல்பட்டன. இந்த நாட்களில், ரிப்பிள் (XRP)என்பது கிரிப்டோ சந்தைகளில் மிகவும் பிரபலமான நிகழ்வாகும்.இந்தியாவில் ரிப்பிளை எப்படி வாங்கலாம் என்பது உட்பட, ரிப்பிளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
ரிப்பிள் என்றால் என்ன (XRP)?
அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கி வளர்த்த, XRP என்பது நிகழ்நேர மொத்த தீர்வு அமைப்பு, நாணய பரிமாற்றம் மற்றும் பணம் செலுத்தும் நெட்வொர்க் ஆகும். ரிப்பிள் மற்றும் XRP என்ற சொற்கள் அடிக்கடி ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன, உண்மையில், ரிப்பிள் என்பது XRP யின் அடிப்படையிலான நிறுவனத்தின் பெயர் மற்றும் நெட்வொர்க் ஆகும். மாறாக, XRP என்பது ரிப்பிள் லேப்ஸின் தயாரிப்புகளுக்கான சொந்த கிரிப்டோகரன்சி ஆகும்.
முக்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட உலகளாவிய கட்டண நெட்வொர்க்காக ரிப்பிள் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது, மேலும் வெவ்வேறு நாணயங்களுக்கு இடையே 3-5 வினாடிகளுக்கு மேல் நீடிக்காத உடனடி தீர்வுகளை அனுமதிக்க ரிப்பிளின் தயாரிப்புகளில் XRP பயன்படுத்தப்படுகிறது. பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க பிளாக்செயின் மைனிங்கைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ரிப்பிள் நெட்வொர்க் ஒரு தனித்துவமான விநியோகிக்கப்பட்ட ஒருமித்த முறையைப் பயன்படுத்துகிறது, இதில் பங்குபெறும் நோடுகள் பரிவர்த்தனையின் செல்லுபடியை சரிபார்க்க ஒரு வாக்கெடுப்பை நடத்துகின்றன. இதுவே ரிப்பிளுக்கு மத்திய அதிகாரம் எதுவும் தேவையில்லாமல் உடனடி உறுதிப்படுத்தல்களைச் செயல்படுத்த உதவுகிறது.
இதன் விளைவாக, XRP ஆனது பரவலாக்கப்பட்டதாக உள்ளது மற்றும் வேகம் மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் அதன் போட்டியாளர்களில் பலரை விட சிறப்பாக செயல்படுகிறது. மேலும், XRP பரிவர்த்தனைகள் வேலைக்கான ஆதாரம் எதுவும் இல்லாமல் விரைவாக தீர்க்கப்படலாம், இது மைனிங்குக்கான ஆற்றலைச் சேமிக்கிறது. XRP ஒருமித்த அமைப்பு குறைந்தபட்ச ஆற்றலை மட்டுமே பயன்படுத்துகிறது, இது அதிக ஆற்றலைப் பயன்படுத்தும் பிட்காயினை விட சுற்றுச்சூழலை நன்கு தக்க வைக்கக்கூடியது. உலகளவில் 150 க்கும் மேற்பட்ட வேலிடேட்டர்களைக் கொண்ட பரவலாக்கப்பட்ட நெட்வொர்க்கால் இயக்கப்படுகிறது, XRP அதிக அளவில் அளவிடக்கூடியது மற்றும் ஒரு வினாடிக்கு 1,500 பரிவர்த்தனைகளை 24 மணிநேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் கையாள முடியும், மேலும் விசா கட்டண நெட்வொர்க்கைப் போன்ற அதே செயல்திறனுக்கு ஈடு கொடுக்கும்.
இந்தக் காலகட்டத்தில், XRP ஆனது சந்தை மூலதனத்தின் மூலம் ஆறாவது பெரிய கிரிப்டோகரன்சி ஆகும் மற்றும் $1.14இல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் ரிப்பிளின் விலை ₹88.9997. இந்தியாவில் கிரிப்டோகரன்சியின் வருகையினால், வான்னாபே முதலீட்டாளர்கள் தேர்வு செய்ய ஏராளமான கிரிப்டோ எக்ஸ்சேஞ்ஜுகள் உள்ளன. ரிப்பிளை ஆன்லைனில் வாங்குவதற்கான சிறந்த தளத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், WazirX உங்களுக்கான சிறந்த தேர்வாகும்.
இந்தியாவில் ரிப்பிள் வாங்குவதற்கு WazirX ஏன் சிறந்தது?
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான கிரிப்டோ எக்ஸ்சேஞ்ஜுகளில் ஒன்றான WazirX பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. சிறந்த பாதுகாப்பு, விரைவான KYC நடைமுறைகள் மற்றும் விரைவான பரிவர்த்தனைகள், பல தளங்களில் அணுகல், எளிமையான மற்றும் எளிதில் வழிகாட்டக்கூடிய இடைமுகம், அது மட்டுமன்றி கிரிப்டோ தான் எதிர்காலம் என்பதில் நம்பிக்கை கொண்ட பிளாக்செயின் விசுவாசிகளின் குழுவால் இந்தத் தளம் உருவாக்கப்பட்டது. WazirX என்பது இந்தியாவில் ரிப்பிள் வாங்குவதற்கு மட்டும் சிறந்ததல்ல – இது பிட்காயின், எத்தீரியம், பாலிகான் (முன்பு Matic Network) போன்ற பல முக்கிய கிரிப்டோகரன்சிகளுக்கான சிறந்த தளமும் ஆகும்.
இது தவிர, இந்தத் தளம் WRX டோக்கன் எனப்படும் அதன் சொந்த பயன்பாட்டு டோக்கனையும் கொண்டுள்ளது. WRX டோக்கனின் முதன்மை நோக்கம் WazirX சமூகம் இந்தத் தளத்தை உருவாக்க உதவுவதில் ஈடுபடுத்தவும், அவர்களின் பங்களிப்புகளுக்கு வெகுமதி அளிப்பதுவுமாகும்.இந்தியாவில் ரிப்பிள் வாங்குவதுஎப்படி என்று இப்போது பார்ப்போம்.
WazirX மூலம் ஆன்லைனில் ரிப்பிள் வாங்குங்கள்
WazirX மூலம் ஆன்லைனில் ரிப்பிள் வாங்க, நீங்கள் முதலில் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை என்றால், கீழே உள்ள படிநிலைகளைப் பின்பற்றவும்.
- ஒரு கணக்கை உருவாக்கவும்
- Google Play Store அல்லது App Store இலிருந்து WazirX ஆப்பை பதிவிறக்கவும் அல்லது WazirX இணையதளத்திற்குச் செல்லவும்.
- உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை நிரப்பி தளத்தில் பதிவு செய்யவும்.
- அடுத்து, உங்கள் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்கவும்
- உங்கள் கணக்கை பாதுகாக்கவும்
- ஏதாவதொரு அங்கீகரிப்பு ஆப்பைப் பயன்படுத்தி அல்லது மொபைல் SMS மூலம் உங்கள் கணக்கைப் பாதுகாக்கலாம். இந்தச் செயல்முறையைத் தவிர்க்க உங்களுக்கு தேர்வு உள்ளது, ஆனால் உங்கள் சொந்த பாதுகாப்பிற்காக 2-காரணி அங்கீகாரத்துடன் உங்கள் கணக்கைப் பாதுகாக்க பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.
- KYC யை சரிபார்த்தல்
- அடுத்த படிநிலை KYC சரிபார்ப்பு ஆகும், இது கிரிப்டோ வர்த்தகத்திற்கான இன்றியமையாத படிநிலையாகும். WazirX உங்கள் KYC ஐ விரைவாகச் செயல்படுத்தும் உயர்தர அடையாளச் சரிபார்ப்பு அமைப்புகளை வழங்குகிறது, இதன் மூலம் தடையற்ற வர்த்தக அனுபவத்திற்காக உங்கள் ஆன்போர்டிங் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
- நிதியை டெபாசிட் செய்யவும்:
- அடுத்த கட்டம் உங்கள் நிதியை தளத்தில் டெபாசிட் செய்வது. உங்கள் நிதியை நீங்கள் INR மூலமாகவோ அல்லது கிரிப்டோகரன்சி மூலமாகவோ டெபாசிட் செய்யலாம்.
- INR நிதியை டெபாசிட் செய்ய, கணக்கு எண், வங்கி பெயர், IFSC குறியீடு மற்றும் பிற தொடர்புடைய விவரங்களைச் சமர்ப்பிக்கவும். UPI, IMPS, NEFT மற்றும் RTGS போன்ற பல்வேறு கட்டண முறைகள் மூலம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து INR நிதியை உங்கள் WazirX கணக்கில் எளிதாக டெபாசிட் செய்யலாம்.
- கிரிப்டோகரன்சி நிதிகளை உங்கள் வேலட்டிலிருந்து (அல்லது பிற எக்ஸ்சேஞ்ஜுகளில் இருந்தும்) டெபாசிட் செய்வது மிகவும் எளிமையான செயலாகும், மேலும் இதற்கு கூடுதல் கட்டணம் ஏதுமில்லை. இதற்கு முதலில் உங்கள் WazirX வேலட்டுக்குச் சென்று உங்கள் டெபாசிட் முகவரியைப் பெறுங்கள். பின்னர், உங்கள் கிரிப்டோகரன்சிகளை பரிவர்த்தனை செய்ய, உங்கள் மற்ற வேலட்டின் ‘முகவரி அனுப்பு’ பிரிவில் இந்த முகவரியைப் பகிரவும்.
- XRP வாங்குங்கள்
- உங்கள் WazirX வேலட்டில் பணத்தை டெபாசிட் செய்தவுடன், நீங்கள் தொடரலாம். WazirX எக்ஸ்சேஞ்ஜுக்கு சென்று இந்தியாவில் தற்போதைய ரிப்பிள் விலையைப்பார்க்க “XRP/INR” என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
- “வாங்க” மற்றும் “விற்க” என்று காட்டப்படும் கட்டத்தில், நீங்கள் வாங்க விரும்பும் XRP இன் INR தொகையை உள்ளிட்டு, “வாங்க” பொத்தானைக் கிளிக் செய்து, ஆர்டரைச் செயல்படுத்தியதும் XRP உங்கள் வேலட்டுக்கு மாற்றப்படும் வரை காத்திருக்கவும்.
அதிக தொந்தரவு இல்லாமல் ஆன்லைனில் ரிப்பிள் வாங்குவது இப்படித்தான். WazirX, குறித்து மேலும் அறிய இங்குகிளிக் செய்யவும்.
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.