Skip to main content

WazirX இல் ஒரு வங்கிக் கணக்கைச் சேர்த்து இந்திய ரூபாயை டெபாசிட் செய்வது எப்படி (How to Add a Bank Account and Deposit INR on WazirX)

By நவம்பர் 29, 2021ஜனவரி 18th, 20224 minute read

அன்புள்ள சமூகத்தினரே!

உங்கள் கிரிப்டோ பயணத்திற்காக WazirX ஐ நீங்கள் பரிசீலிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். எங்கள் வழிகாட்டிகளைப் படித்த பிறகும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், , நீங்கள் எப்போதும் எங்களை இங்கே தொடர்பு கொள்ளலாம்.

Get WazirX News First

* indicates required

WazirX வழிகாட்டிகள்

  • WazirXஇல் ஒரு கணக்கை துவக்குவது எப்படி?
  • WazirXஇல் KYC வழிமுறைகளை பூர்த்தி செய்வது எப்படி?
  • WazirXஇல் ஒரு வங்கிக்கணக்கைச் சேர்த்து மற்றும் இந்திய ரூபாயை டெபாசிட் செய்வது எப்படி?
  • WazirX இன் குயிக்பை அம்சத்தைப் பயன்படுத்தி கிரிப்டோவை வாங்குவது எப்படி?
  • WazirX இல் கிரிப்டோவை வாங்குவது மற்றும் விற்பது எப்படி? 
  • WazirX இல் கிரிப்டோவை டெபாசிட் செய்வது மற்றும் எடுப்பது எப்படி?
  • WazirX இல் வர்த்தகக் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? 
  • ஒரு ஸ்டாப்-லிமிட் ஆர்டரை எப்படி செயலாக்குவது?
  • WazirX இல் டிரேடிங் ரிபோர்ட்டை எப்படி பதிவிறக்கம் செய்வது?
  • WazirX இல் P2P யை எப்படி பயன்படுத்துவது?
  • WazirX இல் கன்வர்ட் கிரிப்டோ டஸ்ட் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?
  • WazirX ரெஃபரல் அம்சத்தின் நன்மைகள் என்ன?
  • WazirX இன் அதிகாரபூர்வ சேனல்கள் எவை, WazirX இன் உதவியை எப்படி அணுகுவது?

WazirX இல் ஒரு வங்கிக்கணக்கை சேர்ப்பது எப்படி?

உங்கள் WazirX கணக்கை உருவாக்கி, KYC செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் வங்கிக் கணக்கு (IMPS பரிவர்த்தனைகளுக்கு) மற்றும் UPI விவரங்களைச் நீங்கள் சேர்க்கலாம். எந்தவொரு கிரிப்டோ வர்த்தகத்தையும் மேற்கொள்ள, முதலில் உங்கள் வங்கி விவரங்களைச் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். எனினும், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதை நீக்கி புதிய விவரங்களைச் சேர்க்கலாம் (அதிகபட்சம் 5 முறை). ஒரு புதிய கணக்கு சேர்க்கப்படும் போது, சரிபார்ப்பு செயல்முறை மீண்டும் தொடங்கப்படும்.

நீங்கள் பல்வேறு வங்கிக் கணக்குகளையும் UPI ஐடிகளையும் சேர்க்க முடியும். இயல்பிருப்பு வங்கி/UPI கணக்கை உங்கள் விருப்பப்படி (பணம் செலுத்தும் விருப்பங்களிலிருந்து) தேர்ந்தெடுக்கலாம்.

முக்கியமானது: INR பரிவர்த்தனைகளை எளிதாக டெபாசிட் செய்வதற்கும் திரும்ப எடுப்பதற்கும், வங்கிக் கணக்கு மற்றும் UPI ஐடியை நாங்கள் சரிபார்ப்பதன் மூலம், பரிவர்த்தனைகள் வங்கிகளின் செயல்முறையில் தடைபடாமல்/தோல்வி அடையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

WazirX இல் ஒரு வங்கிக் கணக்கை எவ்வாறு சேர்க்கலாம் என்பது இங்கே:

படிநிலை 1

மொபைல்:‘செட்டிங்கிங்ஸ்’ மெனுவில் ‘பேங்கிங் & பேமெண்ட்’ விருப்பத்தைத் தேர்வு செய்யவும் 🏦 ‘ 

இணையதளம்: கீழே உள்ள படத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள ஐகானைக் கிளிக் செய்து, பின்னர் ‘அக்கவுன்ட் செட்டிங்க்ஸ்’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ‘பேமெண்ட் ஆப்ஷன்கள்’ என்பதைக் கிளிக் செய்யவும்

படிநிலை 2 (மொபைல் மற்றும் இணையதளம்): ‘பேங்க் அக்கவுன்ட்’ என்பதற்கு கீழே, ‘ ஆட் அ நியூ பேமென்ட் ஆப்ஷன்’ என்பதை கிளிக் செய்யவும்.

படி நிலை 3 (மொபைல் மற்றும் இணையதளம்): கோரப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.

வங்கி விவரங்களை நீங்கள் சமர்ப்பித்தவுடன், எங்கள் குழுக்கள் அதைச் சரிபார்க்கும்.

WazirX இல் UPI விவரங்களை சேர்ப்பது எப்படி?

படி நி லை1 மொபைல் மற்றும் இணையதள பயனர்களுக்கு மேலே குறிப்பிட்டது போலவே உள்ளது.

படி நிலை 2: ‘UPI’ என்பதன் கீழ், ‘ ஆட் அ நியூ பேமென்ட் ஆப்ஷன்’ என்பதை கிளிக் செய்யவும்.

படி நிலை 3: கோரப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் UPI விவரங்களை சமர்ப்பித்தவுடன், எங்கள் குழுக்கள் அதை சரிபார்க்கும்.

குறிப்பு: 

  • உங்கள் வங்கிக் கணக்கை WazirX கணக்குடன் இணைத்தவுடன் வங்கிக் கணக்கும் UPI சரிபார்ப்பும் தானாகவே செய்யப்படும்.

உங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு மற்றும்/அல்லது UPI ஐடியை மட்டுமே இணைத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். வெற்றிகரமான சரிபார்ப்புக்கு WazirX கணக்கின் பெயரும் வங்கிக் கணக்கின் பெயரும் பொருந்த வேண்டும்

உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

WazirX இல் இந்திய ரூபாயை டெபாசிட் செய்வது எப்படி?

உங்கள் வங்கிக் கணக்கு சரிபார்க்கப்பட்டதும், உங்கள் WazirX வேலட்டில் நிதியை (INR) டெபாசிட் செய்ய தொடங்கலாம். மேலும், உங்கள் WazirX கணக்கில் INR-ஐ நெட் பேங்கிங் மூலம் மட்டுமல்லாமல் உங்கள் Mobikwik வேலட்டிலிருந்தும் சேர்க்கலாம்.

நீங்கள் பின்பற்றக்கூடிய படி நிலைகள் இங்கே:

படிநிலை 1 (மொபைல் மற்றும் இணையதளம்): WazirX செயலியில் ஃபண்ட்ஸ் என்பதை கிளிக் செய்யவும்.

மொபைல்

Web:

படிநிலை 2: ‘INR’ என்பதை தேர்வு செய்யவும்.

மொபைல்:

படிநிலை 3: டெபாசிட் என்பதை கிளிக் செய்யவும்

மொபைல்:

இணையதளம்:

படிநிலை 4: INRஐ டெபாசிட் செய்ய உங்களுக்கு விருப்பமான பயன்முறையைத் தேர்ந்தெடுக்கவும்.- உடனடி டெபாசிட் (நெட்பேங்கிங்) அல்லது உடனடி டெபாசிட் (வேலட் டிரான்ஸ்ஃபர்)

படிநிலை 5: நிதியை டெபாசிட் செய்யவும்!

  • . உடனடி டெபாசிட் (நெட் பேங்கிங்) விருப்பத்தின் மூலம் பணத்தை டெபாசிட் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால்:

○ படிநிலை 1: நீங்கள் டெபாசிட் செய்ய விரும்பும் தொகையை உள்ளிட்டு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

○ படி 2: உங்கள் வங்கியின் நெட் பேங்கிங் உள்நுழைவு பக்கத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள். நெட் பேங்கிங் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். வெற்றிகரமான உள்நுழைவுக்குப் பிறகு, பரிவர்த்தனையை அங்கீகரிப்பதன் மூலம் நீங்கள் தொடரலாம்

  • தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்
  • நெட்பேங்கிங் விருப்பத்தின் மூலம் நிதி பரிமாற்றத்தை ஆதரிக்கும் வங்கி மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். ஆதரிக்கும் வங்கிகளின் பட்டியலை இங்கே காணலாம். இதற்கு மேலும் வங்கிகளைச் சேர்ப்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் உங்களுக்கு இதனை தெரிவிப்போம்.
  • வெற்றிகரமான நிதி பரிமாற்றத்திற்குப் பிறகு, உங்கள் WazirX கணக்கில் டெபாசிட்டை வெற்றிகரமாக வரவு வைக்க 24 மணிநேரம் வரை ஆகலாம். பெரும்பாலான டெபாசிட்கள் மிகக் குறைந்த நேரத்தில் (1 மணிநேரத்தில் கூட) நடக்கும்.
  • உங்கள் Mobikwik வேலட்டில் இருந்து பணத்தை டெபாசிட் செய்ய விரும்பினால், உடனடி டெபாசிட் (வேலட் பரிமாற்றம்) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு:
  • படிநிலை 1: நீங்கள் டெபாசிட் செய்ய விரும்பும் தொகையை உள்ளிட்டு, தொடர்க என்பதை கிளிக் செய்து பணம் செலுத்தவும் என்பதை கிளிக் செய்யவும்
  • படிநிலை 2: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP யை உறுதி செய்யவும்
  • படிநிலை 3: நீங்கள் இப்போது Mobikwik பேமெண்ட் பக்கத்திற்குத் திருப்பி விடப்படுவீர்கள், அங்கு உங்கள் வேலட் இருப்பு தெரியும்.
  • Step 4: பரிவர்த்தனையைத் தொடரவும், உங்கள் டெபாசிட் அதிகபட்சம் 24 மணிநேரத்திற்குள் பிரதிபலிக்கும்.
  • தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்:
  • பரிவர்த்தனையைத் தொடங்குவதற்கு முன் உங்கள் Mobikwik வாலட்டை (UPI/வங்கி கணக்கு/டெபிட் கார்டை மட்டும் பயன்படுத்தி) டாப்-அப் செய்வது முக்கியம். கிரெடிட் கார்டு வழியாக வேலட் டாப்அப் ஆதரிக்கப்படவில்லை

நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

  • உங்கள் INR டெபாசிட் உங்கள் WazirX கணக்கில் பிரதிபலிக்க வழக்கத்தை விட சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். இந்த நிதிகளை நீங்கள் இழக்க மாட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எங்களிடம் ஒரு டிராக் ரெகார்டு உள்ளது: 100% புகாரளிக்கப்பட்ட வழக்குகளில், பயனர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர் (தங்கள் WazirX வேலட் அல்லது வங்கிக் கணக்கில்). WazirX ஒரு டெபாசிட் கட்டணத்தை மட்டும் வசூலிக்கிறது மற்றும் வேறு எதையும் வைத்துக்கொள்வதில்லை.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருந்தால் (7 வேலை நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால்), நீங்கள் எங்களின் அர்ப்பணிப்புள்ள ஆதரவுக் குழுவை நேரடியாக இங்கு தொடர்பு கொள்ளலாம். 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

என்னுடைய WazirX வேலட்டில் நான் ஏன் டெபாசிட் செய்ய முடிவதில்லை?

நீங்கள் நிதியைச் சேர்க்க முடிவதில்லை, ஏனெனில்: 

  • இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண் அல்லது IFSC தவறானது
  • வங்கி விவரங்கள் சரியாக இருந்தாலும் பெயர் பொருந்தவில்லை. இதன் பொருள்: WazirX இல் பதிவுசெய்யப்பட்ட உங்கள் பெயர் மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பெயர் பொருந்தவில்லை.
  • டெபாசிட் செய்ய உங்களின் சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கை நீங்கள் பயன்படுத்தவில்லை.
  • ஆதரிக்கப்படும் ஒரு வங்கியாக உங்கள் வங்கிக்கணக்கு இல்லை.
  • வங்கித் தளத்தில் உள்ளிடப்பட்ட உள்நுழைவு விவரங்கள் சரியாக இல்லை
  • தளம் பராமரிப்பில் உள்ளது. பராமரிப்பு திட்டமிடப்பட்டால், நாங்கள் எங்கள் பயனர்களுக்கு அதை அறிவிப்போம்.

பணம் செலுத்தும் விவரங்கள் (வங்கி கணக்கு மற்றும் UPI) வேறொருவருக்குச் சொந்தமானதாக இருக்க முடியுமா?

இல்லை. வங்கி மற்றும் UPI கணக்கு உங்கள் பெயரில் இருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் கூட்டுக் கணக்கு வைத்திருப்பவராக இருக்கலாம்.

இதற்கு ஒரு டெபாசிட் கட்டணம் உள்ளதா?

ஆம்! உடனடி டெபாசிட்களை எளிதாக்க, நாங்கள் கட்டணச் செயலிகளைப் பயன்படுத்துகிறோம், இதனால் தொகைகள் உடனடியாக வரவு வைக்கப்படும். வெவ்வேறு கட்டண முறைகளுக்கு டெபாசிட் கட்டணம் வேறுபட்டதாக இருக்கும் மற்றும் இது INR டெபாசிட் பக்கத்தில் காட்டப்பட்டிருக்கிறது. டெபாசிட் கட்டணம் அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது.

குறைந்தபட்ச/அதிகபட்ச INR டெபாசிட் வரம்பு உள்ளதா?

ஆம்! ஒரு டெபாசிட் பரிவர்த்தனைக்கு நெட் பேங்கிங் மூலம் குறைந்தபட்சம் ₹100 மற்றும் அதிகபட்சம் ₹4.99 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இருப்பினும், நீங்கள் ஒரு நாளில் பல பரிவர்த்தனைகளை செய்ய முடியும் – அதிகபட்ச வரம்புகள் எதுவும் இல்லை!

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply