கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் குறித்த ஒரு ஆக்கபூர்வமான கண்ணோட்டம் இப்போது அதிகாரபூர்வமாக தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது, இந்தியா இறுதியாக கிரிப்டோ துறையைச் சட்டரீதியானதாக ஆக்கும் பாதையில் உள்ளது. அரசாங்கத்தின் இந்த முற்போக்கான நிலை இந்தத் தொழிலைப் பெருமளவுக்கு அங்கீகரிக்கப்பட்டதாக ஆக்கி இருக்கிறது. தடை செய்வது பற்றி அரசாங்கம் இனியும் நிச்சயமாகச் சிந்திக்கப்போவதில்லை!
கிரிப்டோ மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் வகையின் கீழ் வருகிறது என்பதையும் அது ஒரு தனிச் சொத்து வகை என்பதையும் நம் நிதியமைச்சர் சுட்டிக் காட்டி இருக்கிறார். கிரிப்டோ ஒரு நாணயம் அல்ல என்ற அவருடைய கூற்றை நாம் ஆதரிக்கிறோம். மாறாக, ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படப் போகும் ஒரு டிஜிட்டல் நாணயமும் வர இருக்கிறது. பிளாக் செயினால் இயக்கப்படும் ஒரு டிஜிட்டல் கரன்சியை இந்தியா விரைவிலேயே அறிமுகப்படுத்தப் போகிறது என்பது ஒரு அற்புதமான செய்தி. இந்த நடவடிக்கை கிரிப்டோ ஏற்றுக் கொள்ளப்பட வழி வகுத்து, புதுமைகளைப் புகுத்துவதிலும், வெப் 3.0 க்கான மாற்றங்களைச் செய்வதிலும் இந்தியாவை முன்னோக்கிக் கொண்டு செல்லும்.
இந்தியாவில் உள்ள கிரிப்டோ முதலீட்டாளர்களில் பெரும்பாலோர் இதுவரை தங்கள் கிரிப்டோ தொடர்பான வருமானத்தைத் தங்கள் வருமான வரிக் கணக்குகளில் தாங்களாகவே தெரிவித்து வருகிறார்கள். இப்போது பிரிவுகள் 115BBH (மெய்நிகர் சொத்துக்களிலிருந்து வரும் வருமானத்தின் மீதான வரி) மற்றும் 194S (மெய்நிகர் டிஜிட்டல் சொத்து மாற்றத்துக்கான தொகை) இவை அறிமுகப்படுத்தப்பட்டதால், வரிவிதிப்பு மற்றும் அரசு அங்கீகாரம் இவை பற்றிய கிடைத்திருக்கிறது. எளிதாகச் சொன்னால்:
- பிரிவு 115BBH: நிதியாண்டு (FY) 2022-23 இலிருந்து, கிரிப்டோ, NFT போன்ற மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் பரிமாற்றத்திலிருந்து வரும் எந்த வருமானத்தின் மீதும் (விற்பனைத் தொகையிலிருந்து, வாங்கிய விலையைக் கழித்த தொகை) 30% விகிதத்தில் வரி விதிக்கப்படும்.
- Section 194S: ஜூலை 1, 2022 இலிருந்து ஒரு மெய்நிகர் சொத்து மாற்றத்துக்கான விலையை (ரொக்கமாகவோ, பொருளாகவோ) செலுத்தப் பொறுப்புள்ள எந்த ஒரு நபரும் (வாங்குபவர்) 1% வரியைப் பிடித்தம் செய்து, இந்த வரியை அரசாங்கத்திடம் வைப்பு செய்ய வேண்டும் (நிபந்தனைகளுக்கு உட்பட்டு). இந்த விதியைச் செயலாக்கம் செய்யும் முறைகளைப் பற்றிய கூடுதல் தெளிவு இன்னும் பெறப்படவில்லை.
- பிரிவு 56: மேலே உள்ளவை தவிர, பரிசுகளாகப் பெறப்பட்ட மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் தெரிவிக்கப்பட்டு ‘மற்ற ஆதாரங்களிலிருந்து வருமானம்’ என்ற தலைப்பில் வரிவிதிப்புக்காக அளிக்கப்பட வேண்டும் (பரிசு பெறுபவரால்).
இது சட்டத்துக்கு உள்ளவாறே சுருக்கமாகப் பொருள் கொள்வதுதான் என்றாலும், அரசாங்கத்திடமிருந்து கூடுதல் தெளிவுகள் விரைவிலேயே எதிர்பார்க்கப்படுகின்றன. இதற்கிடையே, இந்த நிகழ்வுகளுக்கு கிரிப்டோ சந்தைகள் சாதகமாக எதிர்வினை ஆற்றி இருக்கின்றன.வாங்குதல் சந்தையில் கணிசமான உயர்வு ஏற்பட்டிருக்கிறது.
இதைத் தவிர, 2022 க்கான இந்த பட்ஜெட் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முயல்வதாக நிதி அமைச்சர் சுட்டிக் காட்டி இருக்கிறார். அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கும் தொழில் என்ற முறையில், வேலை வாய்ப்புகளை வழங்கவும், 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்குக்குப் பங்களிப்பு வழங்கவும் கிரிப்டோ துறைக்கு மிகப் பொரும் வல்லமை இருக்கிறது என்று நாம் நம்பிக்கையுடன் கூறலாம். நம் GDP கிரிப்டோவினால் பெரிதும் பயன்பெறலாம்!
நாம் கருதிப் பார்க்க வேண்டிய இன்னொரு விஷயம், நிச்சயமற்ற தன்மைகளால் சற்றே ஒதுங்கி இருந்த பெரும்பாலான மக்கள், குறிப்பாக கார்ப்பரேட்கள் இனிமேல் கிரிப்டோவில் பங்கு பெற முடியும். ஐயமின்றி, குறுகிய காலத்தில் சந்தையில் சில சரிவுகளை எதிர்பார்க்கலாம். ஆனால், கவலைப்படுவதற்கு எதுவுமில்லை, ஏனெனில், இனி பல பண்பட்ட, தீவிர முதலீட்டாளர்கள் உள்ளே வருவதை நாம் பார்க்கலாம்.
மேலும், பல வங்கிகளும், நிதிக் கூட்டாளிகளும் WazirX போன்ற எக்ஸ்சேஞ்ச்களை ஆதரிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
பட்ஜெட் அறிவிப்பு இந்தத் துறையை அங்கீகரித்த நிலையில், உருவாகி வரும் இந்த சொத்து வகைக்கு சட்டரீதியான செயல்படுத்தலுக்கு நாம் காத்திருக்கிறோம். இது ஒரு ஆரம்பம்தான், முடிவு நிலை அல்ல. இதிலிருந்து, இன்னும் பல ஆக்கபூர்வமான நிகழ்வுகளுக்கு வாய்ப்பு இருக்கிறது, அவை வரவிருக்கின்றன. நிகழ்வுகள் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருப்போம். உங்களுக்குக் கேள்விகள் இருந்தால், நம் உதவிக் குழுவை இங்கே அணுகலாம்.
வாழ்த்துக்கள் சமூகத்தினரே, இந்த வெற்றிக்காக!
எப்போதும் எங்கள் பக்கம் நின்றதற்கு உங்களுக்கு நன்றி. உங்கள் தொடர்ந்த ஆதரவை எதிர்நோக்குகிறோம் #IndiaWantsCrypto 🇮🇳
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.