Skip to main content

WazirX P2Pயை எப்படி பயன்படுத்துவது? – கேள்விகளுக்கான பதில்கள்! (How to use WazirX P2P? – Questions answered!)

By மார்ச் 8, 2022ஏப்ரல் 5th, 20224 minute read
WazirX

அன்புள்ள சமூகத்தாரே!

உங்கள் கிரிப்டோ பயணத்திற்காக நீங்கள் WazirX ஐப் பரிசீலிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் வழிகாட்டியைப் படித்த பிறகும், உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் எப்போதும் எங்களை இங்கே தொடர்பு கொள்ளலாம்.

Get WazirX News First

* indicates required

WazirX வழிகாட்டி

WazirX P2P என்றால் என்ன?

WazirX P2P (பியர் டு பியர்) என்பது முதலீட்டாளர்கள் தங்கள் ஃபியட்டை(அசல் பணம்) உடனடியாக கிரிப்டோவாக (மற்றும் நேர்மாறாகவும்) மாற்ற உதவும் ஒரு தளமாகும். எளிமையான வார்த்தைகளில், தளத்தில் உள்ள USDT ஐ INRக்கு அல்லது அதற்கு நேர்மாறாக வர்த்தகம் செய்ய விரும்பும் மற்றொரு வாங்குபவருடன் /விற்பனையாளருடன் நீங்கள் இணையாவீர்கள். இங்கே, மாற்றுகள், அனைவருக்கும் மலிவானவை, வேகமானவை மற்றும் எளிமையானவை! வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும், பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதற்காக WazirX ஒரு எஸ்க்ரோவாக (நடுநிலையாளராக) செயல்படுகிறது. இது 24×7 கிடைக்கக்கூடிய, மற்றும் முற்றிலும் சட்டப்பூர்வமான ஒரு இலவச தளம் மற்றும் பாதுகாப்பானதும் கூட. 

நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள் இங்கே:

  • இந்திய KYC கொண்டிருப்பவர்கள் மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும்.
  • நீங்கள் WazirX P2P மூலம் மட்டுமே USDT வாங்க முடியும். அதாவது நீங்கள் முதலில் P2P வழியாக USDTஐ வாங்க வேண்டும், பின்னர் WazirX இல் மற்ற கிரிப்டோக்களை வாங்க USDTஐ பயன்படுத்த வேண்டும்.
  • நீங்கள் ஃபியட்டை(அசல் பணம்) உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்ற விரும்பினால் (கிரிப்டோ முதலீடுகளை பணமாக்குதல்), நீங்கள் முதலில் உங்கள் கிரிப்டோக்களை USDTக்கு மாற்றாக விற்க வேண்டும், பின்னர் அந்த USDTஐ P2P மூலம் INRக்கு விற்க வேண்டும்.

WazirX P2P யை பயன்படுத்துவது எப்படி?

படிநிலை 1:

மொபைல்: WazirX ஆப்பில், ’எக்ஸ்சேன்ஜ்’ டேப்பில் ‘P2P’யைத் தேர்வு செய்யவும்.

டெஸ்க்டாப்: மேல் பக்கத்தில் உள்ள ‘P2P’யை தேர்வு செய்யவும்.

படிநிலை 2:

மொபைல்: ’P2P உடன் INR வாங்கு’ என்பதை கிளிக் செய்யவும்

படிநிலை 3 (மொபைல் மற்றும் டெஸ்க்டாப்):

வாங்கும் ஆர்டர்களுக்கு: நீங்கள் USDTஐ வாங்க விரும்பும் INR விலையைச் சேர்க்கவும். விரும்பிய எண்ணிக்கையிலான USDT டோக்கன்களை சேர்த்து, ‘வாங்கு’ என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு

  • குறைந்த பட்ச வாங்கும் தொகை 14.5 USDTக்கு மேல் இருக்க வேண்டும்.
  • ‘விருப்பமான விற்பனையாளரை சேர் (விருப்பத்தேர்வு)’ அல்லது ‘விருப்பமான வாங்குபவரை சேர் (விருப்பத்தேர்வு)’ டேபைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் விரும்பும் நபரின் XIDஐ சேர்த்து, உங்களுக்கு விருப்பமான நபருக்கு INR அல்லது கிரிப்டோவை மாற்றலாம். இருப்பினும், XIDஐ சேர்ப்பது என்பது முற்றிலும் விருப்பத்தேர்வாகும்.
  • ‘வாங்கு’ பொத்தானைக் கிளிக் செய்தவுடன், பேமெண்ட் முறையைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். பின்னணியில், WazirX உங்களை விற்பனையாளர்களுடன் தானாகவே இணைக்கும் (விருப்பமான XID சேர்க்கப்படாத சந்தர்ப்பங்களில்)

படிநிலை 4 (மொபைல் மற்றும் டெஸ்க்டாப்): விருப்பமான பேமெண்ட் முறையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் UPI அல்லது IMPS மூலம் பணம் செலுத்தலாம்

தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்:

இந்தப் படிநிலையில், விற்பனையாளர் எதைத் தேர்ந்தெடுத்தார் என்பதைப் பொறுத்து, பேமெண்ட் விருப்பம் காட்டப்படும். WazirX இல், IMPS இணைப்பு கட்டாயமாகும். இருப்பினும், UPIஐ இணைப்பது விருப்பத்தேர்விற்குரியது. அதாவது, விற்பனையாளர் தனது UPI ஐடியை அவரது WazirX கணக்கில் இணைத்திருந்தால் மட்டுமே UPI விருப்பத்தேர்வு கிடைக்கும்.

தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்:

  • வாங்கும் ஆர்டர்களை பொறுத்தவரையில், உங்கள் ஆர்டருக்கு பணம் செலுத்துவதை உறுதிசெய்தால், பேமெண்ட்டை முடிக்க நீங்கள் கூடுதல் 60 நிமிடங்களைப் பெறுவீர்கள்.
  • இருப்பினும், “ஆம், நான் செலுத்துகிறேன்” என்பதை கிளிக் செய்த பிறகு பணம் செலுத்தாமல் இருந்தால், அதற்கு அபராதம் விதிக்கப்படும்: குறைந்தபட்ச அபராதம் 10 USDT அல்லது வர்த்தக மதிப்பில் 1.2% (எது அதிகமோ அது).
  • தவறான உறுதிப்படுத்தல்கள் உங்கள் கணக்கை முடக்குவதற்கு வழி வகுக்கும்.

படிநிலை 5 (மொபைல் மற்றும் டெஸ்க்டாப்): ’ஆம் நான் பணம் செலுத்துகிறேன்’ என்பதைக் கிளிக் செய்யவும்

படிநிலை 6 (மொபைல் மற்றும் டெஸ்க்டாப்): திரையில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் (விற்பனையாளரின் வங்கி/UPI விவரங்கள்) பேமெண்ட்டை முடிக்கவும். பணம் செலுத்தியதும், நீங்கள் பேமெண்ட் ஆதாரத்தைப் பதிவேற்ற வேண்டும், பின்னர் தேர்வுப்பெட்டியையும் மற்றும்  ‘நான் பணம் செலுத்தி விட்டேன்’ என்பதையும் கிளிக் செய்யவும்.

தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்:

  • நீங்கள் பணம் செலுத்தியதை உறுதிப்படுத்தியவுடன், அதைப் பெற்றுக்கொண்டதை விற்பனையாளர் உறுதிப்படுத்த வேண்டும்.
  • விற்பனையாளர் பணம் பெற்றதை உறுதிசெய்த பிறகு, உங்கள் ஆர்டர் முடிந்ததாகக் குறிக்கப்படும், மேலும் நீங்கள் வாங்கிய USDT உங்கள் ‘நிதிகளில்’பிரதிபலிக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஏன் WazirX P2P USDT மட்டும் கொண்டிருக்கிறது?

USDT ஒரு நிலையான நாணயம். பரிவர்த்தனைகளை எளிமையாக வைத்திருக்கவும், அதிக பணப்புழக்கத்தை உறுதிப்படுத்தவும், USDT மட்டும் ஆதரிக்கப்படுகிறது.

WazirX எடுத்திருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

தெரியாத பியர்களை நம்புவது கடினம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். உங்கள் நிதி பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, WazirX ஆனது முழு பரிவர்த்தனையையும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ஒரு எஸ்க்ரோ (நடுநிலை) அமைப்பைக் கொண்டுள்ளது, இதனால் எந்த தரப்பினரும் மற்றவரை ஏமாற்ற முடியாது. நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால் – நீங்கள் பணம் பெற்றுக்கொண்டதை உறுதிசெய்யும் வரை WazirX உங்கள் USDTஐ வாங்குபவருக்கு வெளியிடாது, மேலும் நீங்கள் வாங்குபவராக இருந்தால் – விற்பனையாளருக்கு நீங்கள் பணம் செலுத்தும் போது WazirX விற்பனையாளரின் USDTயை வைத்திருக்கும். WazirX இல் வர்த்தகம் செய்வதற்கு ஒவ்வொரு பயனரின் KYC விவரங்களையும் நாங்கள் சரி பார்க்கிறோம். எங்கள் எக்ஸ்சேன்ஜில் நிகழும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் பதிவும் பராமரிக்கப்படுகிறது.

’நான் பணம் செலுத்தி விட்டேன்’ என்பதை கிளிக் செய்ய நீங்கள் மறந்து விட்டால் என்ன செய்வது?

‘ரெயிஸ் டிஸ்பியூட்’ (சிக்கலை வெளிபடுத்தல்) விருப்பத்தை கிளிக் செய்ய உங்களுக்கு 30 நிமிடங்கள் இருக்கும். நீங்கள் ஒரு சிக்கலை  வெளிப்படுத்தியதும், எங்கள் சிக்கல் தீர்க்கும் குழுவிடமிருந்து பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தைக் கோரும் மின்னஞ்சலை நீங்கள் உடனடியாகப் பெறுவீர்கள். தயவு செய்து இந்த மின்னஞ்சலுக்கு 15 நிமிடங்களுக்குள் பதிலளிக்கவும். சிக்கல் தீர்க்கும் குழு உங்கள் பேமெண்ட் ஆதாரத்தை மற்ற விவரங்களுடன் மதிப்பாய்வு செய்து உங்கள் சிக்கலின் இறுதி முடிவை எடுக்கும். சிக்கல் தீர்க்கும் குழுவின் முடிவே இறுதியானது, கட்டுப்படுத்தக்கூடியது, மற்றும் மாற்ற இயலாதது.

தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்: ஒரு சிக்கலை மதிப்பாய்வு செய்யும் போது முழுமையான துல்லியத்தை உறுதிப்படுத்தும் பல கட்ட சோதனைகள் கொண்ட, தவறுகள் இல்லாத செயல்முறை எங்களிடம் உள்ளது.

வாங்குபவர் வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக வர்த்தகத்தை ரத்து செய்யும்போது- WazirX P2P இல் பரிவர்த்தனை தோல்வியுற்றால் (நிதிகள்) மீட்டெடுத்தல் எவ்வாறு செயல்படுகிறது –

வாங்குபவர் பணம் செலுத்திய பின், பரிவர்த்தனையை ரத்து செய்தால், வாங்குபவரின் பேமெண்ட் விவரங்களை விற்பனையாளருடன் பகிர்ந்துகொண்டு, வாங்குபவருக்கு பணத்தைத் திரும்பச் செலுத்தும்படி கேட்டுக்கொள்வோம். வாங்குபவர் தனது நிதியைத் திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய, விற்பனையாளரின் நிதி மற்றும்/அல்லது கணக்கை நாங்கள் முடக்கி, பேமெண்ட் ஆதாரத்துடன் அனைத்துத் தகவல்களையும் கொண்ட ஒரு மின்னஞ்சலை அனுப்புவோம். விற்பனையாளருக்கு மொத்தம் 3 நினைவூட்டல்களை அனுப்புகிறோம், ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒன்று. 3வது மற்றும் இறுதி நினைவூட்டலுக்குப் பிறகு, நாங்கள் நிதி மீட்புப் பணியை மேற்கொள்கிறோம், இதற்கு 13 வணிக நாட்கள் வரை ஆகும் (இருப்பினும், நிதி இருந்தால் மட்டுமே இது செயல்படும்).

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply