Table of Contents
DeFi ஸ்பேஸில்யூனிஸ்வாப் என்பது பெரிய வர்த்தக அளவைக் கொண்ட நன்கு அறியப்பட்ட தளமாகும். பிரபலமாக இருந்தாலும், கிரிப்டோ உலகில் உள்ள மக்கள், யூனிஸ்வாப் பயனர்களுக்கு நெறிமுறையின் வளர்ச்சித் திசையைப் பற்றி அதிகம் கூறவில்லை என்ற தகவலினால் ஏமாற்றமடைந்துள்ளனர். இருப்பினும், சுஷிஸ்வாப் என்பது யூனிஸ்வாப்பின் பிரிவினால் உருவானதே, இது அதன் சொந்த கிரிப்டோ SUSHI உரிமையாளர்களை நெட்வொர்க் நிர்வாகத்தில் பங்கேற்க அனுமதிக்கிறது.
$4.5 பில்லியன்னுக்கும் அதிகமான TVL உடன், சுஷிஸ்வாப் DeFi உலகில் முன்னணி AMMகளில் (தானியங்கி சந்தை உருவாக்குநர்கள்) ஒன்றாகத் திகழுகிறது. இந்தப் பதிவில், இந்தியாவில் SUSHIஐ வாங்குவதற்கு முன்பு சுஷிஸ்வாப் குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தையும், அத்துடன் சுஷிஸ்வாப் உடைய விலை விவரங்கள் பற்றியும் உங்களுக்கு விளக்குகிறோம்.
சுஷிஸ்வாப் பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்
சுஷிஸ்வாப் என்பது 2020ஆம் ஆண்டில் செஃப் நோமி என்ற புனைப்பெயர் கொண்ட ஒருவரால் நிறுவப்பட்டது. சுஷிஸ்வாப் உருவாக்கத்தில் சுஷிஸ்வாப் மற்றும் oxமக்கி என்ற புனைப்பெயர் கொண்ட இரண்டு இணை நிறுவனர்களும் ஈடுபட்டிருன்தனர், இதில் 0xமக்கி என்று அறியப்படுபவர் ஜஸ்ட் மக்கி என்றும் அழைக்கப்படுகிறார். அவர்கள் மூவரைப் பற்றியோ அல்லது யூனிஸ்வாப்பில் இருந்து விலகுவதற்குப் பின்னால் உள்ள காரணங்களைப் பற்றியோ மிகக் குறைவாகவே அறியப்பட்டாலும், அவர்கள்தான் சுஷிஸ்வாப் உடைய திட்ட மேம்பாடு மற்றும் வணிகச் செயல்பாடுகளைக் கையாள்வதுடன், தளத்தின் குறியீட்டின் பொறுப்பிலும் உள்ளனர்.
சுஷிஸ்வாப் அதன் DEX- அல்லது பரவலாக்கப்பட்ட பரிமாற்ற நெறிமுறைக்கு தானியங்கு சந்தை உருவாக்க (AMM) மாதிரியை கடைப்பிடிக்கிறது. எனவே, இந்த தளத்தில் ஆர்டர் புத்தகம் இல்லை; ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மூலம் கிரிப்டோக்கள் வாங்கவும் விற்கவும் படுகின்றன, மேலும் விலைகள் அல்காரிதம் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.
சுஷிஸ்வாப், முதன்மையாக யூனிஸ்வாப் உடைய அடிப்படைக் குறியீட்டின் படியே உருவாக்கப்பட்டிருந்தாலும், இரண்டிற்கும் இடையே சில முக்கிய வித்தியாசங்கள் உள்ளன. அதாவது, சுஷிஸ்வாப் பூல்களில் உள்ள அனைத்து பணப்புழக்க வழங்குநர்களுக்கும் SUSHI டோக்கன்கள் வெகுமதியாக வழங்கப்படுகின்றன, இது நிர்வாக டோக்கனாக இரட்டிப்பாகும். இது மட்டுமல்லாமல், SUSHI கிரிப்டோதாரர்கள் தளத்தில் பணப்புழக்கத்தை வழங்குவதை நிறுத்திய பின்னரும் தொடர்ந்து வெகுமதியைப் பெறலாம்.
சுஷிஸ்வாப் எப்படி இயங்குகிறது?
சுஷிஸ்வாப், பலவிதமான கிரிப்டோகரன்சிகளை வாங்கவும் விற்கவும் பயனர்களுக்கு உதவ பல்வேறு பணப்புழக்க பூல்களைப் பயன்படுத்துகிறது; உதாரணமாக, சுஷிஸ்வாப்பில் USDT/ETH பூல் உள்ளது, இது USDT மற்றும் ETH காயின்களின் சம மதிப்புகளைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. LPகள் அல்லது பணப்புழக்க வழங்குநர்கள் இரண்டு (அல்லது அதற்கு மேற்பட்ட) கிரிப்டோ சொத்துக்களை ஸ்மார்ட் ஒப்பந்தம் மூலம் லாக் செய்யப்படுவதன் மூலம் இந்தப் பூல்களுக்கு பங்களிக்கலாம்.
வாங்குபவர்கள் தங்கள் கிரிப்டோவை ஒரு குறிப்பிட்ட பணப்புழக்க பூலில் சேமித்து வைக்கப்பட்ட கிரிப்டோவிற்கு மாற்றிக்கொள்ளலாம். ஸ்மார்ட் ஒப்பந்தங்களானது வாங்குபவர் வர்த்தகம் செய்ய விரும்பும் டோக்கன்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குத் தேவையான டோக்கன்களுக்குச் சமமான தொகையை திருப்பி அனுப்புகின்றன, இவ்வாறு செய்வதன் மூலம் பணப்புழக்கக் பூலில் கிரிப்டோ டோக்கன்களின் சமநிலையும் தொடர்ந்து பராமரிக்கப் படுகின்றன.
பணப்புழக்க வழங்குநர்கள் தாங்கள் டெபாசிட் செய்தத் தொகைக்கு வெகுமதியாக சுஷிஸ்வாப் தளம் பெறும் கட்டணத்தில் ஒரு பகுதியைப் பெறுகின்றனர். மேலும், சுஷிபார் என்பது சுஷிஸ்வாப்பில் உள்ள ஒரு செயலியாகும், இது xSUSHI டோக்கனைப் பெறுவதற்கு பயனர்கள் தங்கள் SUSHIஐ பங்காக பெற அனுமதிக்கிறது, இது பரிமாற்றம் மூலம் திரட்டப்பட்ட அனைத்து வர்த்தகக் கட்டணங்களுக்கும் 0.05% வெகுமதியைப் பெற அனுமதிக்கிறது.
சுஷிஸ்வாப் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அடிப்படையான விஷயங்களை இப்போது நாம் அறிந்திருக்கிறோம், SUSHI உடைய விலை விவரங்களையும், இந்தியாவில் அதை வாங்கும் செயல்முறை குறித்தும் தெரிந்துகொள்வதற்கு முன், SUSHIஐ ஏன் வாங்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
SUSHIஐ ஏன் வாங்க வேண்டும்?
சுஷிஸ்வாப் உடைய பூர்வீக SUSHI கிரிப்டோ என்பது ERC-20 காயின் ஆகும், மேலும் இது மொத்தம் 250 மில்லியன் டோக்கன்களைக் கொண்டுள்ளது. நவம்பர் 2021 நிலவரப்படி, புதிய SUSHI காயின்கள் ஒரு பிளாக்கிற்கு 100 டோக்கன்கள் என்ற நிலையான விகிதத்தில் அச்சிடப்பட்டன. இதன் புழக்கத்தில் உள்ள விநியோகம் முழு விநியோகத்தின் 50%ஐ எட்டியது, தற்போது சுமார் 127 மில்லியன் காயின்கள் புழக்கத்தில் உள்ளன.
SUSHI கிரிப்டோ பல்வேறு காரணங்களுக்காக பயனுள்ளதாக இருக்கிறது. தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு, சுஷிஸ்வாப் நெட்வொர்க்கை நிர்வகிப்பதிலும் இயக்குவதிலும் இது ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. SUSHIஐ வாங்கும் பயனர்கள் தள நிர்வாகத்தில் பங்கேற்கலாம், மேலும் அதன் மேம்பாடு பற்றி விவாதிக்கும் முன்மொழிவுகளிலும் வாக்களிக்கலாம். உண்மையில் சொல்லப்போனால், சுஷிஸ்வாப்பில் உள்ள எவரும் SIP அல்லது சுஷிஸ்வாப் மேம்பாட்டுக்கான முன்மொழிவைச் சமர்ப்பிக்கலாம், அந்த முன்மொழிவுக்கு SUSHIஐ வைத்திருப்பவர்கள் பிறகு வாக்களிக்கலாம்.
இறுதியாக, SUSHI வைத்திருப்பவர்கள் இந்த காயின்களை xSUSHI பூலில் ஸ்டேக் செய்வதன் மூலம் தள கட்டணத்தில் ஒரு பகுதியைப் பெறலாம். எனவே அடிப்படையில், சுஷிஸ்வாப் சமூகத்தினர் தளத்தை சொந்தமாக வைத்துள்ளனர், மேலும் SUSHI காயின்களை வைத்திருப்பதன் மூலமும், நெறிமுறையை அதன்படி இயக்குவதற்கு உதவுவதன் மூலமும் எதிர்கால வளர்ச்சி குறித்த விஷயங்களில் உண்மையான கருத்தைத் தெரிவிக்கும் உரிமையையும் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் SUSHIஐ எப்படி வாங்குவது?
WazirX ஏற்கனவே சிறந்த கிரிப்டோ பரிமாற்ற தளத்தில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. SUSHI என்பது WazirX வழங்கும் பல ஆல்ட்காயின்களில் ஒன்றாகும்; எனவே கீழே பட்டியலிடப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, WazirX மூலம் நீங்கள் SUSHIஐ இந்தியாவில் வாங்கலாம் :
- WazirXஇல் பதிவு செய்யவும்
இதன் ஆரம்பமாக, இங்கே கிளிக் செய்வதன் மூலம் WazirXஇல் கணக்குத் திறக்கலாம்.
- தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்யவும்
உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு, பாதுகாப்பான கடவுச்சொல்லைத் தேர்வு செய்யவும்.
- மின்னஞ்சல் சரிபார்ப்பு மற்றும் கணக்குப் பாதுகாப்பு அமைப்பு
சேர்க்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்த பிறகு கணக்கு திறப்பதைத் தொடரவும், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் கணக்கு திறப்பதைத் தொடரவும். அடுத்து, உங்கள் கணக்கின் பாதுகாப்பை உறுதிசெய்ய, கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கிற வகையில் WazirX உங்களுக்கு இரண்டு விருப்பங்களை வழங்கும். ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் போது, தாமதமான வருகை அல்லது SIM கார்டு ஹேக்கிங் ஆபத்து என்பதால், மொபைல் SMSஐ விட அங்கீகரிப்பு செயலி பாதுகாப்பானது என்பதை நினைவில் கொள்ளவும்.
- உங்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்து KYCஐ நிறைவு செய்யவும்
நீங்கள் நாட்டைத் தேர்வு செய்ததும், KYC செயல்முறையை நிறைவு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் KYCஐ நிறைவு செய்யாமல், நீங்கள் பியர்-டு-பியர் வர்த்தகம் செய்யவோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறவோ முடியாது.
KYCஐ நிறைவு செய்ய, நீங்கள் பின்வரும் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
- உங்கள் முழுப் பெயர், உங்கள் ஆதார் அட்டை அல்லது அதற்கு இணையான ஆவணத்தில் உள்ளவாறு இருக்க வேண்டும்,
- உங்கள் பிறந்த தேதி, உங்கள் ஆதார் அட்டை அல்லது அதற்கு இணையான ஆவணத்தில் உள்ளவாறு இருக்க வேண்டும்,
- உங்கள் முகவரி, உங்கள் ஆதார் அட்டை அல்லது அதற்கு இணையான ஆவணத்தில் உள்ளவாறு இருக்க வேண்டும்,
- ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்,
- இறுதியாக, செயல்முறையை நிறைவு செய்ய ஒரு செல்ஃபி.
உங்கள் கணக்கு இப்பொது திறக்கப்பட்டுவிட்டது! வழக்கமாக 24 முதல் 48 மணி நேரத்திற்குள், கணக்கு சரிபார்க்கப்படும்.
- இப்போது உங்கள் WazirX கணக்கில் பணத்தைப் பரிமாற்றம் செய்யவும்
உங்கள் WazirX கணக்குடன் உங்கள் வங்கிக் கணக்கை இணைத்த பிறகு, உங்கள் WazirX வாலட்டில் பணத்தை டெபாசிட் செய்யலாம். IMPS, UPI, RTGS, மற்றும் NEFTஐ பயன்படுத்தி தளத்தில் INRஇல் டெபாசிட் செய்யலாம். உங்கள் WazirX கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.100 டெபாசிட் செய்யலாம், அதிகபட்ச வரம்பு என்று எதுவும் இல்லை.
பணத்தை டெபாசிட் செய்ய, உங்கள் WazirX கணக்கில் உள்நுழைந்து, கீழே உள்ள படத்தில் காண்பது போல் “நிதிகள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் “ரூபாய் (INR)” என்பதைத் தேர்ந்தெடுத்து, “டெபாசிட்” என்பதைக் கிளிக் செய்யவும்.
- இந்தியாவில் SUSHI கிரிப்டோவின் விலையை சரிபார்த்த பிறகு WazirXஇல் SUSHIஐ வாங்கவும்
WazirX மூலம் SUSHIஐ ரூபாயில் வாங்கலாம். உங்கள் WazirX கணக்கில் உள்நுழைந்து “பரிமாற்றம்” என்ற விருப்பத்திலிருந்து INR என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய ரூபாய்க்கு நிகரான அனைத்து கிரிப்டோக்களின் ஸ்பாட் சந்தைக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். திரையின் வலது பக்கத்தில், அனைத்து விலை விளக்கப்படங்கள், ஆர்டர் புத்தகத் தகவல் மற்றும் ஆர்டர் உள்ளீட்டு படிவத்தைக் காண்பீர்கள்.
வாங்குவதற்கான ஆர்டர் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன் இந்தியாவில் தற்போதைய SUSHI கிரிப்டோ விலையை பார்த்துவிட்டு “SUSHIஐ வாங்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும். கீழே உள்ள படத்தில் BTC ஆர்டருக்குக் காட்டப்பட்டுள்ள படிவத்தைப் போலவே அந்தப் படிவம் இருக்க வேண்டும்.
ஆர்டரை செயல்படுத்த சிறிது நேரம் எடுக்கும். ஆனால் ஆர்டர் செயல்படுத்தப்பட்டவுடன், நீங்கள் வாங்கிய SUSHI காயின்களை உங்கள் WazirX வாலட்டில் பெறுவீர்கள்.
சுஷிஸ்வாப் உடைய எதிர்காலம் எப்படி இருக்கு?
2020ஆம் ஆண்டு சமீபத்தில் சந்தையில் நுழைந்த போதிலும், சுஷிஸ்வாப் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே கிட்டத்தட்ட $545 மில்லியன் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மார்ச் 13, 2021 அன்று சுஷிஸ்வாப்பின் விலை அதுவரை இல்லாத அளவுக்கு $23.38 எட்டியது. 2021ஆம் ஆண்டின் இறுதியில் காயின், ஏற்றத்தில் முடிவடையாதபோதிலும், கிரிப்டோவின் எதிர்காலம் குறித்து வல்லுநர்கள் சாதகமான மனநிலையைக் கொண்டுள்ளனர்.
அல்காரிதம் அடிப்படையில் முன்னறிவிப்பு செய்யும் தளமான வாலெட் இன்வெஸ்டரின் படி, ஜனவரி 2023 தொடக்கத்தில் Sushi உடைய விலை $8.4 ஆகவும், இன்னும் ஐந்து ஆண்டுகளில் $25ஐ நெருங்கும் என்று கூறுகிறது. மறுபுறம், டிஜிட்டல் காயின் ஆனது 2022ஆம் ஆண்டில் சுஷிஸ்வாப் விலை சராசரியாக $6 ஆகவும், 2025இல் $10 ஆகவும், பின்னர் 2029க்குள் $18.18 ஆகவும் உயரக்கூடும் என்று அறிவுறுத்துகிறது.
யூனிஸ்வாப் உடைய பிரிவு என்றாலும், சுஷிஸ்வாப் ஆனது சமூக நிர்வாகத்திற்கான ஒரு பெரிய நோக்கத்துடன் AMM மாடலில் புதிய அம்சங்களைக் கொண்டு வருகிறது. சுஷி சமூகத்தின் உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட ஷோயு எனப்படும் NFT தளத்தின் சமீபத்திய சேர்க்கையுடன்- சுஷிஸ்வாப் புதுமை மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கான அதன் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. சுஷிஸ்வாப் போன்ற தளங்களில், DeFi உடைய எதிர்காலம் மிகவும் பிரகாசமாகத் தெரிகிறது.
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.