Table of Contents
ஒரு புதிய கிரிப்டோகரன்சி முதலீட்டாளராக, நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி இது போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருப்பீர்கள்:
- பிட்காயின் குமிழ் வெடித்து விட்டதா?
- தொடங்குவதற்கு இது மிகவும் தாமதமா? மற்றும்
- எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த முதலீட்டு உலகத்தில் வெற்றிபெற சிறந்த உத்திகள் யாவை?
இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, கிரிப்டோகரன்சி சந்தையின் ஏற்ற இறக்கத்தையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். இருப்பினும், கிரிப்டோகரன்சிகள் தொடர்பான பல செய்திகள் இருந்தாலும், அது ஆதரவாக இருந்தாலும் எதிராக இருந்தாலும் சரி, அழிவிலிருந்து வெகு தொலைவிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் கிரிப்டோகரன்சி முதலீடு செய்வதற்கான பாதை முன்னெப்போதையும் விட மிகவும் நம்பிக்கைக்குரியது.
எனவே, கிரிப்டோ முதலீட்டிற்கான உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் இங்கே உள்ளன. படியுங்கள்!
கிரிப்டோ விதிமுறைகள் மற்றும் சொற்றொடர்களைப் பற்றி நீங்கள் அறிய விரும்பினால், இங்கே ஒரு சிறிய வழிகாட்டி உள்ளது.
கிரிப் முதலீட்டாளர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்
- இழப்பை தாங்க முடியும் என்றால் மட்டும் முதலீடு செய்யுங்கள்
உங்கள் நீண்ட கால நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய, நிலையான வைப்புத்தொகைகள், பரஸ்பர நிதிகள், SIP, கடன் நிதிகள், காப்பீடு மற்றும் அவசரகால நிதிகளில் முதலீடு செய்யுங்கள். இந்த பாதுகாப்பு நிதிக்கு பிறகும் உங்களிடம் பணம் இருந்தால், நீங்கள் நிச்சயமாக கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாம், ஏனெனில் இது நீங்கள் நிதி ரீதியாக பாதிக்கப்படாமல் இருக்கும் போது இந்தப் பணத்தின் இழப்பை உங்களால் தாங்க முடியும்.
- உங்கள் ஆராய்ச்சியை நடத்துங்கள்
நண்பர்கள் அல்லது உறவினர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கண்மூடித்தனமாக முதலீடு செய்வது எளிதானதுதான். இருப்பினும், இது உங்கள் பணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், முதலீடு தோல்வியுற்றால் யாரும் உங்கள் உதவிக்கு உடனடியாக வர மாட்டார்கள். இதன் விளைவாக, கிரிப்டோகரன்சி சந்தையில் எந்தப் பணத்தையும் போடுவதற்கு முன் அதை முழுமையாகப் புரிந்துகொள்வது விரும்பத்தக்கது. முதலில், பிட்காயின், எத்தீரியம், டெதர், பாலிகன் மற்றும் இதர பிரபலமான கிரிப்டோகரன்சிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பின்னர், முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், அவற்றின் பயன்பாட்டு நிகழ்வுகள் மற்றும் சாத்தியக்கூறுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
- உண்மையான மற்றும் நம்பத்தகுந்த எக்ஸ்சேஞ்சை தேர்வு செய்யவும்.
கிரிப்டோகரன்சி எக்ஸ்சேன்சுகள் அடிக்கடி ஹேக் செய்யப்படுகின்றன அல்லது முதலீட்டாளர்களை தவறாக வழி நடத்த பயன்படுகின்றன. எனவே, நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவுடன் கூடிய பெரிய எக்ஸ்சேஞ்சுடன் ஒரு கணக்கைத் திறப்பதையும், ஹேக் செய்யப்பட்டால் உங்களுக்கு காப்பீட்டுத் தொகை இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளுங்கள்.
கிரிப்டோகரன்சி முதலீட்டில் நீங்கள் தீவிரமாக இருந்தால், உங்கள் டிஜிட்டல் வேலட்டை எவ்வாறு வடிவமைப்பது அல்லது உங்கள் நிதியைப் பாதுகாக்க ஒரு பிரபலமான ஹார்ட் வேலட்டை எப்படி வாங்குவது என்பதைக் கற்றுக்கொள்வது நல்லது. பின்னர், உங்கள் நிபுணத்துவத்தை மேம்படுத்த, பணப்புழக்க மைனிங், ஸ்டேக்கிங், பரவலாக்கப்பட்ட பணம் மற்றும் மேலும் பலவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
- மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
மோசடி செய்பவர்கள் முதலீட்டாளர்களின் பணத்தை ஏமாற்றுவதற்கான வழிகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள். போலி ஏர் டிராப்கள், பம்ப் மற்றும் டம்ப் மோசடிகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் இருந்து வரும் செய்திகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். மோசடி செய்பவர்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றுவதற்கு போலி இணையதளங்களையும் பயன்படுத்துகின்றனர்.
உங்கள் தகவலைச் சமர்ப்பிக்கும் முன், அந்த எக்ஸ்சேன்சின் URLஐ மீண்டும் சரிபார்க்கவும். கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற புகழ்பெற்ற தளங்களில் இருந்து எப்போதும் வர்த்தக செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும். மற்ற கிரிப்டோ அபிமானிகள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் இணைவது நன்மை பயக்கும், ஆனால் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் எப்போதும் முதலீடு செய்ய வேண்டாம்.
முதலீடு செய்வதற்கு முன், இந்த உதவிக்குறிப்புகளை மனதில் வைத்து எப்போதும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
புதிய கிரிப்டோ முதலீட்டாளர் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்
கிரிப்டோ வர்த்தகத்தில் உங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, தவறுகள் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், இங்கே, ஒரு புதிய முதலீட்டாளராக நீங்கள் தவிர்க்கக்கூடிய ஐந்து தவறுகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை கீழே சரிபாருங்கள்:
- குறைந்த விலை என்ற அடிப்படையில் மட்டுமே முதலீடு செய்வது
குறைந்த விலை என்பது மட்டும் ஒரு நல்ல டீலை குறிக்காது. இருப்பினும், ஏதோ ஒரு காரணத்திற்காகவே விலைகள் சில நேரங்களில் குறைவாக இருக்கும்! பயனர் எண்ணிக்கை குறையும் நாணயங்களை நன்கு கவனியுங்கள்.
சில சமயங்களில், டெவலப்பர்கள் ஒரு திட்டத்தை கைவிட்டு விடுவார்கள், பின்னர் அதை மேம்படுத்துவது தோல்வியடைந்து, அந்த கிரிப்டோ பாதுகாப்பற்றதாக இருக்கும்.
- மொத்தப்பணத்தையும் மூதலீடு செய்வது
சில ஆலோசகர்கள் உங்கள் லாபத்தை அதிகரிக்க, முடிந்தவரை முதலீடு செய்ய உங்களுக்கு ஆலோசனை வழங்கலாம். ஆனால், ஜாக்கிரதை, நீங்கள் திவாலாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
சிறந்த கிரிப்டோ முதலீட்டு ஆலோசனையானது, உங்கள் முதலீட்டுப் பணத்தை ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டும் – அதாவது, 5% அல்லது 10% – மற்றும் மீதமுள்ள பணத்தை உங்கள் சேமிப்புக் கணக்கில் நீங்கள் வைத்திருக்க வேண்டும், அது உங்கள் அவசரகால பண இருப்பாகச் செயல்படும்.
- கிரிப்டோகரன்சி என்பது “எளிதாக சம்பாதிக்கும் பணம்” என்று நம்புவது.
ஸ்டாக்குகள், பங்குகள் அல்லது வெள்ளி மற்றும் தங்கம் என எந்தவொரு நிதிப் பொருளையும் வர்த்தகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது எளிதானது அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கிரிப்டோகரன்சியும் அதே படகில்தான் பயணம் செய்கிறது.
வேறுவிதமாகக் கூறும் எவரும் உங்களை கிரிப்டோ தவறுகளைச் செய்ய வைத்து உங்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்.
- உங்கள் கிரிப்டோ கடவுச்சொல்லை தொலைத்து விடுவது
உங்கள் கிரிப்டோகரன்சியை ஹார்டுவேர் வேலட்டில் வைத்திருந்தால், உங்கள் கிரிப்டோ கடவுச்சொல்லை தொலைப்பது என்பது ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் அதன் சாவியை வைப்பது போன்றதாகும்.
உங்கள் கடவுச்சொல்லை நீங்கள் தவற விட்டால், உங்கள் கிரிப்டோகரன்சிகள் அனைத்தும் நிரந்தரமாக இழக்கப்படும். கவனமாக இருங்கள்!
- மோசடிகளால் ஏமாறுவது
ஆரம்பத்தில் கவர்ச்சிகரமாக இருக்கும் கிரிப்டோ ஒப்பந்தங்கள் குறித்து விழிப்புடன் இருங்கள். நான்கு பொதுவான கிரிப்டோகரன்சி மோசடிகளை நாங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளோம்:
- கிளவுட் மல்டிபிளையர் மோசடிகள்
மோசடி செய்பவர்கள் எப்போதாவது மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஒரு “முதலீட்டு வாய்ப்பு” என்று தொடர்பு கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட டிஜிட்டல் வேலட்டில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்யும் பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மடங்காக திருப்பித் தருவதாக கூறுகின்றனர்.
நினைவில் கொள்ளுங்கள்: இலவச பண சலுகைகள் எப்போதும் எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டும்.
- பம்ப் மற்றும் டம்ப்
குற்றவாளிகள் மிகச்சிறிய அல்லது அறியப்படாத நாணயங்களின் விலையை விரைவாக உயர்த்தலாம் அல்லது குறைக்கலாம், அதன் மூலம் சில சந்தர்ப்பங்களில் அவற்றின் மதிப்பு உயரலாம்.
குற்றவாளிகள் எந்த நேரத்திலும் அதிக அளவு கிரிப்டோகரன்சியை வைத்திருப்பார்கள் (அனைவருக்கும் கிடைப்பதற்கு முன், பெரும்பாலானவற்றை முன்கூட்டியே ப்ரீ-மைனிங் செய்வதன் மூலம்).
சந்தேகப்படாத வர்த்தகர்கள் லாபத்தில் பங்கேற்க வரும்போது, குற்றவாளிகள் விலை உயரும் வரை காத்திருக்கிறார்கள் பின்னர் தங்கள் நாணயங்கள் அனைத்தையும் விற்று விடுகிறார்கள் , இதனால் விலை சரிந்து விடுகிறது.
அவர்கள் அதை சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்தி அதிக விலைக்கு விற்பதற்கு முன் அவர்கள் விலையை ஏற்றி விடுவார்கள்
- அபாயகரமான வேலட் மென்பொருள்
நன்கு அறியப்பட்ட கிரிப்டோ வேலட்டுகளுடன் மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள்
கூகுள் பிளே அல்லது ஆப் ஸ்டோரில் காணப்படும் சந்தேகத்திர்குரிய அல்லது அறியப்படாத வேலட்டுகள் உங்கள் கிரிப்டோ சொத்துக்களை திருடுவதற்கு மோசமான புரோகிராமை பயன்படுத்தலாம்.
- போலி காயின்கள்
சந்தையில் பல்வேறு கிரிப்டோகரன்சிகள் இருப்பதால் எது உண்மையானது எது போலி என்பதை வேறுபடுத்துவது சாத்தியமில்லை.
நீங்கள் போலி நாணயங்களை வாங்கினால், குற்றவாளிகள் உங்கள் அடையாளத்தை பெற்று விடுவார்கள் மற்றும் சில சமயங்களில் நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தையும் எடுத்துக் கொள்வார்கள்.
யாருடைய வார்த்தையையும் ஏற்க வேண்டாம்; நாணயங்களை வாங்குவதற்கு முன் முடிந்தவரை பல ஆதாரங்களைப் பயன்படுத்தி அவற்றைப் பற்றிய உங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு
கிரிப்டோகரன்சி என்பது நிதி சுதந்திரத்தை அடைவதற்கான ஒரு வழியாகும், மேலும் உலகளாவிய கிரிப்டோ சமூகம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. 2021இல், இந்த உலகம் கிரிப்டோகரன்சியில் $30 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. மறுபுறம், கிரிப்டோ என்பது எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கக்கூடிய அதிக அபாயம் மற்றும் அதிக வெகுமதி தரும் ஒரு கேம் ஆகும்.
உங்கள் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கு, அதன் அடிப்படைகள் குறித்து கற்றுக்கொள்வதும், உருவாகும் ட்ரெண்டுகளுடன் தொடர்ந்து இருப்பதும் முக்கியம். முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணத்தின் மீது சுயாட்சியை வழங்க கிரிப்டோ விரும்புகிறது, ஆனால் அவர்கள் மிகைப்படுத்தல்களின் அடிப்படையில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.