Skip to main content

WazirXஇல் வர்த்தகக் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? (How is trading fee calculated on WazirX?)

By மே 11, 2022ஜூன் 20th, 20222 minute read
WazirX

அன்புள்ள சமூகத்தாரே!

உங்கள் கிரிப்டோ பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் WazirXஇல் நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்பதில் உறுதியாக இருங்கள். மேலும், எங்கள் வழிகாட்டிகளைப் படித்த பிறகும் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் எப்போதும் எங்களை இங்கே தொடர்பு கொள்ளலாம்.

WazirX வழிகாட்டிகள்

வர்த்தகக் கட்டணம் கணக்கீடு

WazirXஇல் இரண்டு வகையான வர்த்தகங்கள் உள்ளன:

  • ஸ்பாட் வர்த்தகம்: காயின் சார்ந்த கட்டண விநியோகத்திற்கு இங்கு செல்லவும்: https://wazirx.com/fees 
  • P2P: கட்டணம் எதுவுமில்லை.

நீங்கள் செலுத்த வேண்டிய வர்த்தகக் கட்டணங்கள் WazirXஇல் நீங்கள் வைத்திருக்கும் WRX தொகையால் தீர்மானிக்கப்படும். நீங்கள் எவ்வளவு அதிகமாக WRX வைத்திருக்கிறீர்களோ, அவ்வளவு குறைவாக உங்கள் வர்த்தக கட்டணம் இருக்கும். வர்த்தகத்தின் போது நீங்கள் வைத்திருக்கும் WRXஇன் அடிப்படையில், உங்கள் வர்த்தக கட்டண விகிதம் பின்வருமாறு தீர்மானிக்கப்படும்:

Get WazirX News First

* indicates required
WRX இருப்புகள்செலுத்த வேண்டிய கட்டணம்
0-10 WRX0.20%
10-200 WRX0.17%
200-1000 WRX0.15%
>1000 WRX0.10%

உதாரணமாக, நீங்கள் WazirXஇல் 250 WRX வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மேலும் USDT சந்தையில் 100 USDT மதிப்புள்ள BTCஐ வாங்குகிறீர்கள். இந்த விஷயத்தில், நீங்கள் இந்த ஆர்டருக்கு 0.15% வர்த்தகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், அதாவது 0.15 USDT.

‘WRXஇல் வர்த்தக கட்டணத்தை செலுத்து’ விருப்பத்தை எவ்வாறு இயக்குவது/முடக்குவது?

படிநிலை 1: கணக்கு அமைப்புகளுக்கு செல்லவும்

மொபைல்:

இணையதளம்:

Graphical user interface, application, Teams

Description automatically generated

படிநிலை 2: கட்டண அமைப்பை கிளிக் செய்யவும்

மொபைல்:

Graphical user interface, application

Description automatically generated

இணையதளம்:

படிநிலை 3: ‘WRX உடன் வர்த்தகக் கட்டணத்தைச் செலுத்து’ என்பதை இயக்க/முடக்க ரேடியோ பொத்தானைக் கிளிக் செய்யவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  1. WRX உடன் வர்த்தகக் கட்டணத்தைச் செலுத்து’ அம்சத்தை இயக்கிய பிறகு, எனது வர்த்தகக் கட்டணங்கள் எவ்வாறு கணக்கிடப்படும்?

நீங்கள் BTC/USDT சந்தையில் வர்த்தகம் செய்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மேலும் இந்த வர்த்தகத்திற்கான மொத்த கட்டணம் 2 USDT மற்றும் 1 WRXஇன் தற்போதைய சந்தை விலை 1 USDT ஆகும். இந்த சூழ்நிலையில், நீங்கள் வர்த்தக கட்டணமாக 2 WRX செலுத்துவீர்கள்.

  1.  WRX உடன் வர்த்தகக் கட்டணத்தைச் செலுத்து” அம்சத்தை இயக்கிய பிறகு, எனது கணக்கில் போதுமான WRX இல்லை; இப்போது என்ன நடக்கும்?

இந்த விஷயத்தில், நீங்கள் வர்த்தகம் செய்யும் சந்தையைப் பொறுத்து INR, USDT அல்லது BTCஇல் கட்டணம் செலுத்துவீர்கள்.

  1. அன்லாக் அட்டவணையின்படி வர்த்தகக் கட்டணத்திற்காக நான் WRXஐ ஒதுக்கியுள்ளேன், நான் இப்போது கூட இந்த அம்சத்தை இயக்க வேண்டுமா?

ஆம், நீங்கள் இந்த விருப்பத்தை இயக்கியிருந்தால் மட்டுமே WRX, கட்டணமாக பயன்படுத்தப்படும்.

உங்களிடம் மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால், கீழே உள்ள கம்மென்ட்ஸ் பிரிவில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். நாங்கள் மகிழ்ச்சியுடன் உதவி செய்வோம்.

இனிமையான வர்த்தகம் அமையட்டும்!

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply