
INR பரிவர்த்தனைகளின் சுமூகமான டெபாசிட்கள் மற்றும் திரும்பப் பெறுவதற்கு வசதியாக, வங்கிக் கணக்கு மற்றும் UPI ஐடியை நாங்கள் சரிபார்க்கிறோம். இதனால் பரிவர்த்தனைகள் வங்கி முடிவில் சிக்காமல்/தோல்வி அடையாது.
உங்கள் வங்கி மற்றும் UPI விவரங்களை சேர்க்க கீழ் கானும் படிகளை பின்பற்றவும்:
1. WazirX கணக்கு செட்டிங்ஸ்ஐ அழுத்தவும்.
2. பின்பு, அதில் வங்கி மற்றும் கட்டணம் விருப்பங்கலுக்கு செல்லவும்.
3. இங்கு Alias பெட்டியில் உங்கள் கட்டண விருப்பத்தை எளிதில் நியாபகம் கொள்ள ஒரு பெயரை தரவும்.
4. பின் உங்கள் வங்கி கணக்கு எண், பெயர் மற்றும் IFSC விவரங்களை சரியாக அதற்கான பெட்டியில் சேர்க்கவும்.
5. நீங்கள் UPI ஐடி சேர்க்க விரும்பினால் உங்கள் UPI செயலியில் கானும் ஐடியை சரியாக சேர்க்கவும்.
உங்கள் வங்கிக் கணக்கை WazirX கணக்குடன் இணைத்தவுடன் வங்கிக் கணக்கு மற்றும் UPI சரிபார்ப்பு தானாகவே செய்யப்படும். சரிபார்த்து நிலை புதுப்பிக்கப்பட்டவுடன் மின்னஞ்சல் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
உங்கள் வங்கிக் கணக்கு/UPI சரிபார்க்கப்படாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே உள்ளது:
- இங்கு இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண் அல்லது IFSC முற்றிலும் தவறானது.
- WazirX இல் உள்ள பெயரும் வங்கிக் கணக்கில் உள்ள பெயரும் பொருந்தவில்லை.
பிளாட்ஃபார்மில் பணம் எடுப்பதற்கு வங்கி சரிபார்ப்பு கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளவும், வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகுதான் திரும்பப் பெறும் விருப்பங்கள் இயக்கப்படும்.
