நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? 5 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் BTC அல்லது ETH இல் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்று? இல்லாவிடில், நீங்கள் அதே தொகையை தங்கம் அல்லது நிஃப்டி பங்குகள் அல்லது நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு சம்பாதித்திருப்பீர்கள் அல்லது இழந்திருப்பீர்கள்? நீங்கள் இதைப் பற்றி ஒரு முறை யோசித்திருந்தால் கூட, நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள் (இல்லையெனில், நீங்கள் இந்தப் பக்கத்தைப் படித்துப் பாருங்கள் – உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது!).
ஒரு வருடம் முன்பு BTC யில் முதலீடு செய்யப்பட்ட ₹10,000, இன்று உங்களுக்கு 287.48% முழு வருவாயைக் கொடுத்திருக்கும் இருப்பினும், நிலையான வைப்புத்தொகையில் அதே ₹ 10,000 உங்களுக்கு அதிகபட்சம் 8-10% வருவாயைக் கொடுத்திருக்கும்!
கிரிப்டோக்கள் ஒரு புதிய சொத்து வகையாக இன்று உருவாகி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள பெருவாரியான மக்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் கிரிப்டோவைச் சேர்ப்பதைக் கருத்தில் கொண்டுள்ளனர். ஹோட்லர்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளனர். இருப்பினும், புதியவர்கள் இதில் இணைவதற்கு முன் நன்கு ஆராய்ந்து செயல்படுவது முக்கியம்
முதலீட்டின் மீதான வருமானம் என்பது ஒரு சொத்தின் செயல்திறனை அளவிட பொதுவாகப் பயன்படுத்தப்படும் அளவீடாக இருந்தாலும் (கிரிப்டோவுக்கு கூட), அவற்றின் கடந்த காலப் பதிவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கடந்தகால ட்ரெண்டுகள் மற்றும் சந்தைகளை ஆய்வு செய்த பின்னரே, ஒரு வருங்கால முதலீட்டாளர் லாபத்தை தீர்மானிக்க முடியும் மற்றும் சாத்தியமான ஆபத்து விளைவுகளின் அடிப்படையில் நன்கு அலசி ஆராய்ந்து முடிவுகளை எடுக்க முடியும்.
காலத்தின் தற்போதைய தேவையைப் புரிந்துகொண்டு, WazirX இல் நாங்கள் ஒரு கிரிப்டோ/பிட்காயின் கடந்த கால செயல்திறன் கால்குலேட்டரைத் தொடங்கியுள்ளோம்
அதை இங்கு இன்றே முயற்சி செய்து பாருங்கள்
கிரிப்டோ மற்றும் பிட்காயின் கடந்த கால செயல்திறன் கால்குலேட்டர் மூலம் நீங்கள்:
- நீங்கள் தேர்ந்தெடுத்த கிரிப்டோவின் கடந்த கால வருவாயைப் பார்க்கலாம்,
- வருமானத்தை தங்கம், நிஃப்டி மற்றும் நிலையான சொத்துகளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்,
- தானாக கணக்கிடப்பட்ட முழுமையான வருமானத்தின் அடிப்படையில் உங்கள் முதலீட்டு முடிவை ஆய்வு செய்யலாம்
கிரிப்டோ மற்றும் பிட்காயின் இன் கடந்த கால செயல்திறன் கால்குலேட்டரை எப்படி பயன்படுத்துவது?
படிநிலை 1: கால்குலேட்டரில், உங்களுக்கான கிரிப்டோவை தேர்வு செய்யுங்கள்.
படிநிலை 2: நீங்கள் செய்திருக்ககூடிய முதலீட்டுத்தொகையை உள்ளிடுங்கள்.
படிநிலை 3: கால அளவை தேர்வு செய்யுங்கள் (கடந்த காலத்தில் நீங்கல் செய்யலாம் என்று எண்ணியிருந்த முதலீட்டுத்தொகையின் கால அளவு).
படிநிலை 4: தங்கம், நிஃப்டி பங்குகள் அல்லது நிலையான வைப்புத்தொகையுடன் ஒப்பிடும்போது கிரிப்டோ சம்பாதித்திருக்ககூடிய வருமானத்தைப் பாருங்கள்
தயவுசெய்து கவனிக்கவும்: கடந்த கால வருவாய் எதிர்கால வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்காது.
முதலீடு ஒரு பெரிய முடிவாகும். ஆம்! உங்கள் கிரிப்டோ பயணத்தை WazirX இல் ₹100 உடன் தொடங்கலாம், ஆனால் எங்கள் முதலீட்டாளர்கள் நன்கு அலசி ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் இந்த கடந்த கால செயல்திறன் கால்குலேட்டர் உங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்
நீங்கள் எங்கள் கிரிப்டோ/பிட்காயின் ROI கால்குலேட்டரையும் முயற்சி செய்து, அடுத்த கட்டமாக உங்கள் எதிர்கால கிரிப்டோ வருமானத்தை மதிப்பீடு செய்யலாம். மகிழ்ச்சியான முதலீடாக இருக்கட்டும்!
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.