Table of Contents
குறிப்பு: இந்த வலைப்பதிவு ஒரு வெளிப்புற பிளாகர் எழுதியது. இந்த போஸ்டில் வெளிப்படுத்தப்பட்ட கண்ணோட்டங்கள் மற்றும் கருத்துக்கள் ஆசிரியருக்கு மட்டுமே சொந்தமானது.
பல ஆண்டுகளாக, கிரிப்டோ துறையானது உலகின் வேகமாக வளர்ந்து வரும் டொமைன்களில் ஒன்றாகும். இப்போது சுமார் 2000 கிரிப்டோகரன்ஸிகள் கிடைக்கின்றன, பல மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் அற்புதமான யோசனைகளால் ஆதரிக்கப்படுகின்றன. ஆயினும்கூட, இந்தச் சொத்துக்களைக் கையாளுவதில் மையப்படுத்தப்பட்ட தளங்கள் அடிக்கடி அணுகக்கூடிய ஒன்றாகும்.
இந்தச் சூழ்நிலையின் விளைவாக, பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ஜுகளின் (DEX) தளங்களில் வளர்ச்சிகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ஜுகள் (DEXes) பிரபலமடைந்து வருகின்றன, ஏனெனில் அவை மையப்படுத்தப்பட்ட எக்ஸ்சேஞ்ஜுகளை (CEXes) விட சிறந்த பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குகின்றன. யூனிஸ்வாப் என்பது இதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாகும்.
ஆனால் பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ஜுகளை நன்கு புரிந்து கொள்ள, நாம் பரவலாக்கம் என்றால் உண்மையில் என்ன என்பதிலிருந்து தொடங்க வேண்டும்.
பரவலாக்கம் (Decentralization) என்றால் என்ன?
ஆதாரம்: P2P Foundation
இந்த நாட்களில் நாம் பரவலாக்கம் குறித்து அதிகம் கேள்விப்படுகிறோம். ஆனால் அதன் உண்மையான பொருள் என்ன? மேலே உள்ள படங்கள் மூன்று வெவ்வேறு வகையான நெட்வொர்க் கட்டமைப்பு குறித்து சொல்கிறது படங்களில் உள்ள நெட்வொர்க்குகள் சமூக உறவுகள், கணினி நெட்வொர்க்குகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் போன்ற எந்தவொரு நிஜ-உலக நெட்வொர்க்கையும் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு நோடும் (பியர் என்றும் அழைக்கப்படுகிறது) தன்னுள் அடங்கிய அமைப்பாகும் (எ.கா., சமூகத்தில் ஒரு நபர், கணினி நெட்வொர்க்குகளில் உள்ள ஒரு கணினி, உயிரியல் அமைப்புகளில் உள்ள ஒரு செல்). ஒவ்வொரு இணைப்பும் இரண்டு நோடுகளுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கிறது. உதாரணமாக, சமூகத்தில், நண்பர்களாக இருக்கும் இரண்டு நபர்களிடையே உறவு உள்ளது. கணினி நெட்வொர்க்குகளில் ஒருவருக்கொருவர் நேரடியாக தொடர்பு கொள்ளும் இரண்டு நோடுகளுக்கு இடையே ஒரு இணைப்பு ஏற்படுகிறது.
இடதுபுறத்தில் உள்ள படம் முற்றிலும் மையப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பைக் காட்டுகிறது. அனைத்து நோடுகளும் நடுவில் உள்ள ஒரு நோடு வழியாக ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, CEX களில், அனைத்து பரிவர்த்தனைகளும் எக்ஸ்சேஞ்ஜுகளால் நிர்வகிக்கப்படும் மத்திய சர்வர்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.
நடுவில் உள்ள படத்தில் ஒரு ஹைப்ரிட் அமைப்பு சித்தரிக்கப்பட்டுள்ளது. மையமாக செயல்படும் அமைப்பில் ஏராளமான நோடுகள் உள்ளன. நோடுகளின் இடையே நடக்கும் தகவல் தொடர்புகள் இந்த மையத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும் இத்தகைய அணுகுமுறைகள் ஆர்டர் பொருத்தம் மற்றும் பணப்புழக்க விநியோகத்திற்காக சமீபத்திய DEX களால் (உதாரணமாக, 0x மற்றும் KyberNetwork) பயன்படுத்தப்படுகின்றன. 0x இல், எடுத்துக்காட்டாக, ஆர்டர் பொருத்தம் , மையங்களாகச் செயல்படும் கட்டுப்படுத்தப்பட்ட ரிலேயர்களின் வழியாகச் செல்ல வேண்டும். இதற்கிடையில், KyberNetwork இருப்புகள் பணப்புழக்க மையங்களாக செயல்படுகின்றன.
வலதுபுறத்தில் உள்ள படம் முற்றிலும் பரவலாக்கப்பட்ட ஒரு அமைப்பைக் காட்டுகிறது. ஒவ்வொரு நோடும் சிறிய எண்ணிக்கையிலான பிற நோடுகளுடன் இணைக்கப்பட்டு நெட்வொர்க்கில் சம உறுப்பினராகச் செயல்படுகிறது. இடதுபுறத்தில் உள்ள படத்தில் இருப்பதை போன்ற மையப்படுத்தப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லை, அல்லது நடுவில் உள்ள படத்தைப் போல மையங்களும் இல்லை. ஆர்டர் பொருத்தம், பரிவர்த்தனை தீர்வு மற்றும் இதுபோன்ற பல இலக்குகள் கொண்ட அனைத்து செயல்பாடுகளையும் DEXகள் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.
DEX (டிசென்ட்ரலைஸ்டு எக்ஸ்சேஞ்ஜ்) என்றால் என்ன, அது எவ்வாறு வேறுபட்டது?
மிக அடிப்படையான பொருளில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ஜானது புதிய வகையான ஜோடி-பொருத்த சேவையை வழங்குகிறது, நிதிகளை நிர்வகிக்க ஒரு இடைத்தரகர் அமைப்பு தேவையில்லாமல் வர்த்தகர்கள், ஆர்டர்கள் மற்றும் கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது.
சுயமாக செயல்படும் ஸ்மார்ட் ஒப்பந்தங்களைச் சார்ந்திருப்பதால், இந்தப் பரவலாக்கப்பட்ட டைனமிக் அமைப்பு, மையப்படுத்தப்பட்ட கிரிப்டோ எக்ஸ்சேஞ்ஜுகளில் வழங்கப்படுவதை விட கணிசமாக மலிவு விலையில் விரைவான வர்த்தகத்தை செயல்படுத்துகிறது.
மையப்படுத்தப்பட்ட எக்ஸ்சேஞ்ஜ்கள் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பின்னர் IOU (( “I owe you” )”நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்”என்பதைக் குறிக்கிறது மற்றும் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினருக்கு செலுத்த வேண்டிய கடனை ஒப்புக் கொள்ளும் முறைசாரா ஆவணத்தைக் குறிக்கிறது) வழங்குகிறது, இதனை எக்ஸ்சேஞ்ஜில் சுதந்திரமாக பரிமாறிக்கொள்ள முடியும். ஒரு வாடிக்கையாளர் திரும்பப் பெறக் கோரும் போது, இந்த IOUகள் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு பயனாளியான உரிமையாளருக்கு வழங்கப்படும்.
கூடுதலாக, மையப்படுத்தப்பட்ட கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜுகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கிரிப்டோ சொத்துக்களை வைத்திருக்கின்றன, இதில் வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரும் இருக்கலாம், மேலும் அவை நிதிகளை அணுக தேவையான தனிப்பட்ட குறியீடுகளை தங்கள்வசம் வைத்திருக்கின்றன.
ஒருவர் ஏன் பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ஜை பயன்படுத்த வேண்டும்?
ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு, தங்கள் தனிப்பட்ட குறியீடுகளை தாமே வைத்திருக்கும் திறன், தனியுரிமை உணர்வுள்ள பயனர்களுக்கு அவர்களின் கிரிப்டோ சொத்துக்களின் மீது முழுக் கட்டுப்பாட்டை வைத்திருக்க ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. மையப்படுத்தப்பட்ட எக்ஸ்சேஞ்ஜ் மாதிரியில், ஒரு நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட குறியீடுகளை பராமரிக்கிறது மற்றும் வர்த்தகத்தை செயல்படுத்துகிறது. மறுபுறம், ஒரு பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ஜில் பயனர்களே தங்கள் தனிப்பட்ட குறியீடுகள் மற்றும் பணத்தின் மீது கட்டுப்பாட்டைப் பராமரிக்கும் அதே வேளையில், விநியோகிக்கப்பட்ட லெட்ஜரில் கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யவும் அனுமதிக்கிறது.
இரண்டாவதாக, மையப்படுத்தப்பட்ட எக்ஸ்சேஞ்ஜுகளைப் போலன்றி, பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ஜுகளின் கட்டணம் கணிசமாகக் குறைவாகவும், பல சந்தர்ப்பங்களில் பூஜ்ஜியமாகவும் இருக்கும். ஆட்டோமேட்டட் மார்க்கெட் மேக்கர்ஸ் (AMM) எனப்படும் ஒரு கண்டுபிடிப்பு மூலம், பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ஜுகள் செலவுகளை வெகுவாக குறைக்க முடியும்.
பாரம்பரிய ஆர்டர் புத்தகத்திற்கு பதில் பணப்புழக்க அமைப்புக்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்புகள் AMM ஐ பயன்படுத்தும்போது, ஒரு வர்த்தக ஜோடியின் இரு கிரிப்டோ சொத்துக்களுக்கும் நிதி முன்னதாகவே செலுத்தப்படுகிறது பணப்புழக்கம் பயனர்களின் நெட்வொர்க்கால் வழங்கப்படுகிறது, அவர்கள் பங்கேற்கும் பணப்புழக்கத்தின் சதவீதத்தைப் பொறுத்து வர்த்தகக் கட்டணங்கள் மூலம் தங்கள் வைப்புகளில் வருமானத்தைப் பெற முடியும்.
இன்று, ஒவ்வொரு மையப்படுத்தப்பட்ட எக்ஸ்சேஞ்ஜும் ஒரு கிரிப்டோ பாதுகாப்பு சேவையாக செயல்படுகிறது. இதன் பொருள் அவர்கள் பயனர்களின் கிரிப்டோ சொத்துக்களை கையாளுகிறார்கள், மேலும் பெரிய அளவிலான கிரிப்டோகரன்சி ஒரே இடத்தில் சேமிக்கப்படுவதால், மையப்படுத்தப்பட்ட எக்ஸ்சேஞ்ஜுகள் தாக்குதல்களுக்கு ஆளாக கூடும். பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ஜுகள் நிதிகள் ஏதும் வைத்திருக்காததால், அத்தகைய தாக்குதல்களுக்கு அவை ஏற்ற இலக்குகள் அல்ல.
இந்த சொத்து DEX மூலம் முழு பயனர் தளத்திலும் விநியோகிக்கப்படுகிறது, இது தாக்குதல்களை மிகவும் விலையுயர்ந்ததாகவும், குறைந்த பலன் அளிக்கக்கூடியதாகவும் மற்றும் மிகவும் கடினமானதாகவும் ஆக்குகிறது. தனிப்பட்ட பயனர்கள் நிதியை முழுவதுமாக நிர்வகிப்பதாலும், ஒரு இடைத்தரகர் இல்லாததாலும், பெரும்பாலான DEX கள் குறைவான எதிர்தரப்பு அபாயத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது, ஏனெனில் நிதிகள் முழுவதுமாக தனிப்பட்ட பயனர்களுக்கு சொந்தமானது, அதனால் தனிப்பட்ட கிரிப்டோ வர்த்தகர்களுக்கு முழுமையான சுதந்திரம் மற்றும் அதிகாரத்தை வழங்குகிறது.
பரவலாக்கப்பட்ட பரிவர்த்தனைகள் பல புதுமையான நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அவை சில குறைபாடுகளையும் கொண்டுள்ளன.
கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜுகள் உலகளாவிய கிரிப்டோகரன்சி சந்தைக்கான பணப்புழக்கத்தின் இன்றியமையாத ஆதாரமாகும், இவை தினசரி வர்த்தக நடவடிக்கைகளில் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை ஆதரிக்கிறது. நீங்கள் கடந்த காலத்தில் கிரிப்டோகரன்ஸிகளை வாங்கியிருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி WazirX மற்றும் Binance போன்ற எக்ஸ்சேஞ்ஜுகள் மூலம் அதைச் செய்திருப்பீர்கள்.
கூடுதலாக, பயிற்சியற்றவர்களுக்கு DEX மிகவும் சிக்கலானதாகத் தோன்றலாம். மேலும், ஒரு பயனர் தனது தனிப்பட்ட குறியீடுகள் மற்றும் நிதிகளை சரியாக நிர்வகிக்க வேண்டும், இது பல பயனர்களுக்கு நேரம் மற்றும் செலவை குறைப்பதாக இருக்க வேண்டும். எனவே, DEX கள் என்று வரும்போது அதில் நுழைவதற்கு அறிவு சார்ந்த தடை இருப்பதாகக் கருதலாம்.
இருப்பினும், கிரிப்டோ தொழிற்துறையானது அதன் தொடர் கண்டுபிடிப்புகளுக்காக அறியப்படுகிறது, விரைவில், எங்கோ ஒரு தெரியாத/தெரிந்த ஸ்டார்ட்-அப் மூலம் ஒரு பயனர் நட்பு தளம் உருவாகலாம்.
இப்போது, பரவலாக்கம் என்பதை ஒரு முக்கிய கொள்கையாக கொண்ட ஒரு புதிய தலைமுறை எக்ஸ்சேஞ்ஜுகள் கிரிப்டோ உலகில் பிரபலமடைந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஈவன் ஸ்கொயர் மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி கூட சமீபத்தில் தனது சமூக ஊடகப் பக்கத்தை பின்தொடரும் 5.6 மில்லியன் மக்களிடம் தாம் ஒரு பரவலாக்கப்பட்ட கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜுக்காக (BTC) செயலாற்றிக்கொண்டிருப்பதாகக் கூறினார்.
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.