2021 ஆண்டின் சிறப்பம்சங்கள் மற்றும் கண்ணோட்டங்கள்: ஒரு கிரிப்டோ ஆண்டு (Highlights and Observations From 2021: The Year Of Crypto)

By டிசம்பர் 22, 2021மார்ச் 17th, 20222 minute read

வணக்கம் சமூகத்தினரே!

2021 ஒரு அற்புதமான ஆண்டு! கூகுளில் உலகளவில் பங்குகளை எப்படி வாங்குவது எனும் தேடலை விட பிட்காயினை எப்படி வாங்குவது என்ற தேடல்கள் அதிகமாக இருந்த ஆண்டு மற்றும் NFT கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிய ஆண்டு. பல நாடுகள் கிரிப்டோ விதிமுறைகள் அல்லது CBDC களை நோக்கிச் செயல்படும் ஆண்டாகவும் இது இருந்தது.

WazirX ஆனது 2021 ஆம் ஆண்டில் $43 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வர்த்தகத்தை கண்டது – இந்தியாவிலேயே அதிகபட்சம் – 2020 ஆம் ஆண்டிலிருந்து 1735% வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பதை இந்த அறிக்கையின் மூலம், பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பயனர்கள் சைன் அப் செய்வதில் அபரிமிதமான வளர்ச்சியை நாங்கள் அடைந்தோம் மற்றும் 10 மில்லியன் பயனர்கள் எனும் அடிப்படைக் கட்டமைப்பை அடைந்தோம்.

எங்கள் பயனர்களிடையே பெருகிவரும் ஆர்வத்தை அளவிட, நாங்கள் ஒரு பயனர் கருத்துக்கணிப்பை நடத்தினோம், அத்துடன் எங்கள் தளத்தில் உள்ள தகவல் வடிவங்களையும் ஆய்வு செய்தோம். கண்ணோட்டம் சுவாரஸ்யமாக இருந்தது, ’2021 ஆண்டின் சிறப்பம்சங்கள் மற்றும் கண்ணோட்டங்கள்: கிரிப்டோ ஆண்டு’ என்ற எங்கள் அறிக்கையில் அதைப் பகிர்ந்துள்ளோம்:

  • கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 51% பேர் முதலில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கிரிப்டோ அடிப்படையிலான பரிந்துரைகள் மூலம் உள் நுழைவதை ஒப்புக்கொண்டனர்
  • பிட்காயின் (BTC), டெதர் (USDT), ஷிபா இனு (SHIB), டோஜ்காயின் (DOGE), WazirX டோக்கன் (WRX) மற்றும் மேட்டிக் (MATIC) ஆகியவை எக்ஸ்சேஞ்சில் அதிகம் வர்த்தகம் செய்யப்பட்ட கிரிப்டோ ஆகும்.
  • பதிலளித்தவர்களில் 44% பேர் அவர்களின் ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகுப்பில் கிரிப்டோ 10% வரை உள்ளதாகப் பகிர்ந்து கொண்டனர்.
  • பெண்கள் பிட்காயினில் அதிகம் வர்த்தகம் செய்தனர், அதேசமயம் ஆண்கள் ஷிபா இனுவில் அதிகம் வர்த்தகம் செய்தனர்
  • பதிலளித்தவர்களில் 54% பேர் கிரிப்டோ உலகில் ஒரு வேலையைப் பெறுவதில் ஆர்வமாக இருப்பதாகப் பகிர்ந்து கொண்டனர்.
  • அதிலும், தொழில்முனைவோர், நிதி மற்றும் வணிக மேம்பாடு ஆகியவை அவர்களின் சிறந்த தொழில் தேர்வுகளாக இருந்தன.
  • WazirX பயனர்களில் 82% பேர் தங்களின் கிரிப்டோ முதலீடுகளில் லாபம் ஈட்டியுள்ளனர் (நவம்பர் 30, 2021 வரை)

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கிரிப்டோவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில், 35 வயதுக்குட்பட்ட WazirX பயனர்களில் 66% பேர் இடமாற்றத்தை செய்துள்ளனர். புதிய பெண் பயனர்களின் எண்ணிக்கையின் வளர்ச்சி 1009% ஆக அதிகரித்துள்ளது, அதேபோல் ஆண்கள் சைன் அப் செய்தலின்அதிகரிப்பு 829% வளர்ச்சியைக் கண்டுள்ளது. வயது மற்றும் பாலினம் தவிர, பெருநகரங்கள் மற்றும் டயர்-I நகரங்களுக்கு அப்பால் இருந்தும் பங்கேற்பதில் கிரிப்டோ ஒரு நல்ல போக்கைக் கண்டது. குவஹாத்தி, கர்னால், பரேலி போன்ற சிறிய நகரங்களில் இருந்து பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் 700% அதிகரிப்பு உள்ளது, இதன் மூலம் கிராமப்புற மற்றும் பாதி நகர்ப்புற பகுதிகளில் இருந்து ஆர்வம் அதிகரித்து வருகிறது.

வர்த்தக வாய்ப்புகளைத் தாண்டி, WazirX NFT மார்க்கெட்பிளேஸ், 962 கிரியேட்டர்களுக்காக 12,600 NFTகளை உருவாக்கியுள்ளது. 2021ல் இதுவரை 262,896 WRX (~₹ 2.4 கோடிகள்) மதிப்புள்ள 5267 எண்ணிக்கைக்கு மேல் விற்பனை செய்துள்ளது. சிறப்பாக விற்பனையாகும் NFT க்களில் தி Mvmnt கலெக்‌ஷன்ஸ், கிரிப்டோ கராடி கலெக்‌ஷன்ஸ், கிரிப்டோ மாங்க்ஸ் & மெட்டாவாசி கலெக்‌ஷன்- அபிஷேப்ஸ், யாஷ் ஷைட் – சைபர் மிதிக்ஸ், மிலன்ஜார்ட்- சைபர்ஸ்கல் ஃபோர்ஸ் கலெக்‌ஷன்ஸ் ஆகியவை அடங்கும்.

கிரிப்டோவை ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் இந்தியா வளர்ந்து வருகிறது. எத்தீரியம், சொலானா, கார்டானோ மற்றும் லேயர் 2 தீர்வுகள் போன்ற பிரபலமான ஆல்ட்காயின்களின் பயன்பாடுகளில் புதுமைகளை எதிர்பார்க்கும் சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கூடுதலாக, மெட்டாவெர்ஸ் செயலிகள் முக்கியமான ஒன்றாக மாறுவதால், DeFi, NFTகள், GameFi ஆகியவற்றில் பயன்பாடுகளின் வரவை WazirX எதிர்பார்க்கிறது, அங்கு பயனர்கள் தங்கள் தகவலைச் சொந்தமாக வைத்திருக்கலாம் மற்றும் மெய்நிகர் பொருளாதாரத்தில் சம்பாதிக்கலாம். வளர்ச்சித் திறனை ஒரு நாஸ்காம் அறிக்கையும் எதிரொலிக்கிறது, அது இந்தியாவில் கிரிப்டோ சந்தை 2 மடங்கு வேகமாக வளரும் என்றும், 2030க்குள் 800,000+ வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளது என்றும் கூறுகிறது.மேலும் தகவலுடன் கூடிய முழு அறிக்கையை பார்க்க இங்கு செல்க.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply