Table of Contents
பாலிகன் (மேட்டிக்), இந்தியாவில் உருவான பாலிகன் நெட்வொர்க்கின் கிரிப்டோகரன்சியாகும், இது சிறந்த கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாகும், மேலும் இந்தியாவில் WazirX போன்ற நம்பகமான எக்ஸ்சேன்ஜுகளில் INR இல் இதை எளிதாக வாங்கலாம் . பாலிகன் கிரிப்டோகரன்சியின் விலை மற்றும் அடிப்படைகளை எப்படி அறிவது என்று உங்களுக்கு சொல்வதற்கு முன், முதலில் அந்த கிரிப்டோவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பாலிகன் கிரிப்டோ என்றால் என்ன?
மேட்டிக் நெட்வொர்க் என முன்னர் அறியப்பட்ட, பாலிகன் என்பது லேயர்-2 பிளாக்செயின் புரோட்டோகால் ஆகும், இது ஒன்றுக்கொன்று இடைமுகப்பாக பிளாக்செயின் நெட்வொர்க்குகளின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை வழங்குகிறது. இதன் இயங்குதளம் பாலிகன் ஆகும், மேலும் கிரிப்டோகரன்சி டிக்கர் இன்னும் மேட்டிக் ஆகவே உள்ளது என்பதை நினைவில் கொள்க!
எத்தீரியம் அதன் நெட்வொர்க்கில் ஹோஸ்ட் செய்யப்பட்ட திட்டங்களுக்கு வழங்கும் பாதுகாப்பு, இயங்குதன்மை மற்றும் பணப்புழக்கத்தை உறுதிப்படுத்தும் அதே வேளையில், ஆல்ட் செயின்களின் சிறப்பியல்புகளான இண்டர்செயின் அளவிடுதல் மற்றும் பொருந்தக்கூடிய தன்மையை பாலிகன் எளிதாக்குகிறது. குறைந்த ஆற்றல் கட்டணம் மற்றும் அதிக பரிவர்த்தனை செயல்திறன் ஆகியவற்றை டெவலப்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதன் தளத்தில் வழங்குவதன் காரணமாக குறுகிய காலத்திற்குள் இது மிகவும் பிரபலமாகிவிட்டது.
இந்த இயங்குதளத்தின் சொந்த டோக்கன் பாலிகன் (மேட்டிக்) கிரிப்டோகரன்சி ஆகும், மேலும் இது கிரிப்டோகரன்சி அட்டவணையில் 14வது இடத்தில் உள்ளது. டோக்கனின் அதிகபட்ச விநியோகம் 10 பில்லியன் ஆகும், இதில் 67% ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது. இன்றைக்கு (29 டிசம்பர் 2021) இந்திய ரூபாயில் பாலிகன் கிரிப்டோவின் விலை சுமார் ₹204.607. சுற்றுச்சூழலின் பின்னணியில் உள்ள ஆதாரமாக இருப்பதைத் தவிர, பாலிகனின் கிரிப்டோ – மேட்டிக் – பாலிகன் நெட்வொர்க்கைப் பாதுகாக்க PoS (புரூஃப் ஆஃப் ஸ்டேக்) ஒருமித்த பொறிமுறையின் கீழ் டோக்கன்களை ஸ்டேக்கிங் செய்வதற்குப் பயன்படுத்தலாம். பாலிகன் கிரிப்டோகரன்சியின் தற்போதைய சந்தை மூலதனம் $18.09 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
இது எப்படி வேலை செய்கிறது?
’எத்தீரியத்தின் பிளாக்செயின்களின் இணையம்’, பாலிகன், மேட்டிக் சைட்செயினைப் பயன்படுத்தி பிளாக் டெவலப்பர்கள், படைப்பாளிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் அமைப்பு மூலம் எத்தீரியம் நெட்வொர்க்கின் அளவிடுதல் சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாலிகன் என்பது மற்ற நெட்வொர்க்குகளை காட்டிலும் குறைந்த விலை மற்றும் விரைவு விருப்பமாகும். எத்தீரியத்தின் சராசரி பிளாக் உருவாக்கும் நேரமான 12 வினாடிகளுக்கு எதிராக அதன் சைட்-செயின் சில நொடிகளுக்குள் புதிய தொகுதிகளை உருவாக்கி தீர்த்து வைக்கும். நெட்வொர்க்கின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிப்பதற்காக ஏற்கனவே இரண்டு மேம்படுத்தல்கள் தயாராகி வருகின்றன – முதலாவது ஒரு தனிப்பட்ட வர்த்தகத்தில் ஏராளமான ஆஃப்-செயின் பரிமாற்றங்களை விநியோகிக்க உதவுவது, இரண்டாவது, எத்தீரியம் நெட்வொர்க்கில் பரிவர்த்தனைகளை விரைவுபடுத்துவது.
இது 2017 இல் டெவலப்பர்களான ஜெயந்தி கனனி, சந்தீப் நெயில்வால், அனுராக் அர்ஜுன் மற்றும் மிஹைலோ பிஜெலிக் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேட்டிக், பின்னர், மேக்கர் (MKR) மற்றும் டிசென்ட்ராலாண்ட் (மானா) போன்ற திட்டங்களுக்குச் சென்றது. பினான்ஸ் மற்றும் காயின்பேஸ் போன்ற தளங்களில் பணிபுரியும் போது, அவர்கள் போதுமான நிதியுதவியைப் பெற்றனர். 2021 ஆம் ஆண்டில், பாலிகன் நெட்வொர்க்கில் AAVE இன் அறிமுகமானது, அளவிடுதலுக்கான தீர்வாக அதன் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்தியது.
பாலிகன் கிரிப்டோவை வாங்குவதற்கு ஒரு கிரிப்டோகரன்சி எக்ஸ்சேன்ஜை தேர்ந்தெடுப்பது எப்படி?
பாலிகன் கிரிப்டோவை இந்தியாவில் பல முறைகள் மூலம் INR இல் வாங்கலாம். மிகவும் பிரபலமான முறையானது நல்ல நம்பகமான கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ் அல்லது பியர்-டு-பியர் லெண்டிங் தளங்கள் வழியே வாங்குவது. கிரிப்டோ எக்ஸ்சேன்ஜுகள் சுயமாக ஒழுங்குபடுத்தப்பட்டு ஆண்டு முழுவதும் 24×7 செயல்படும் என்ற வேறுபாட்டை தவிர கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ் என்பது பங்குச் சந்தைக்கு மிகவும் ஒத்த ஒரு மெய்நிகர் எக்ஸ்சேன்ஜாகும்.
கிரிப்டோ பரிமாற்றத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, சில குறிப்புகளை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்:
- முதலாவதாக, கிரிப்டோ எக்ஸ்சேன்ஜின் பயன்பாடு அல்லது வலைத்தளத்தின் பயனர் இடைமுகம் பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும்.
- அடுத்து அந்த எக்ஸ்சேன்ஜ் மேட்டிக்-INR வர்த்தக ஜோடியை ஆதரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
- அந்த தளத்தில் வர்த்தக கட்டணம் குறைவாக இருக்க வேண்டும். உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்ய பல்வேறு தளங்களின் வர்த்தக கட்டணங்களை எளிதாக ஒப்பிடலாம்.
- எக்ஸ்சேன்ஜுகள் மூலம் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்யும்போது சமரசம் செய்யக்கூடாத மற்றொரு காரணி பாதுகாப்பு. அந்த எக்ஸ்சேன்ஜில் KYC புரோட்டோகால் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
WazirX என்பது கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்வதற்கான இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான தளமாகும். இது உங்களுக்கு சிறந்த பாதுகாப்பு அம்சங்கள், அதிவேக KYC ஒப்புதல்கள் மற்றும் மின்னல் வேக பரிவர்த்தனைகளை வழங்குகிறது. அற்புதமான பயனர் அனுபவத்தை வழங்குவதற்காக திறமையாக உருவாக்கப்பட்ட இதன் ஆப் மூலமும் எந்த நேரத்திலும் இயங்குதளத்தை அணுகலாம்.
கிரிப்டோ எக்ஸ்சேன்ஜின் தேர்வு தவிர, உங்கள் கிரிப்டோகரன்சிகளை சேமிப்பதற்கான கிரிப்டோ வேலட்டை வழங்குவதும் மற்றொரு கூடுதல் தேவையாகும். நீங்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட ஆஃப்லைன் (ஹார்ட்வேர்) வேலட்டைப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் கிரிப்டோகரன்சிகளைச் சேமிப்பதற்காக WazirX கிரிப்டோ வேலட்டைத் தேர்வு செய்யலாம்.
WazirX இல் பாலிகன் கிரிப்டோவை வாங்குவது எப்படி?
WazirX இல் பாலிகன் கிரிப்டோகரன்சியை வாங்க இந்த எளிய டுடோரியலைப் பின்பற்றவும்:
#1 WazirX ஆப்பை அமைத்தல்:
- பிளேஸ்டோருக்குச் சென்று WazirX ஆப்பை பதிவிறக்கவும் . ஆப்பைத் திறந்து, திரையின் மேல் இடது மூலையில் உள்ள சுயவிவர அமைப்புகள் ஐகானைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து பதிவுசெய்தல் விருப்பத்தை கிளிக் செய்யவும்
- உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து, “Wazirx இன் சேவை விதிமுறைகளை நான் ஏற்கிறேன்” என்ற அறிவிப்புக்கு அடுத்துள்ள செக்பாக்ஸில் கிளிக் செய்யவும். (இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அவற்றைப் படித்த பிறகு). உங்களிடம் ஏதேனும் பரிந்துரை குறியீடுகள் இருந்தால், அதையும் சேர்க்க மறக்காதீர்கள்.
- WazirX பயன்பாட்டில் பதிவு செய்ய உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததும் சரிபார்ப்பு விண்டோவைக் காண்பீர்கள். முதலில் உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்க வேண்டும்.
- சரிபார்ப்பு மின்னஞ்சலுக்கு உங்கள் இன்பாக்ஸைச் பார்க்கவும். உங்கள் மின்னஞ்சலைத் திறந்து மின்னஞ்சலை சரிபார்க்க இரு காரணி மின்னஞ்சல் பொத்தானை கிளிக் செய்யவும்.
- உங்கள் மின்னஞ்சல் சரிபார்க்கப்பட்டதும், ‘மின்னஞ்சல் சரிபார்க்கப்பட்டது’ திரையைப் பார்ப்பீர்கள். தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் மின்னஞ்சல் சரிபார்க்கப்பட்டதும், அடுத்த கட்டமாக உங்கள் மொபைல் எண்ணை SMS மற்றும் மின்னஞ்சல் வழியாக மொபைலில் பெறப்பட்ட OTP மூலம் சரிபார்க்க வேண்டும். உங்கள் எண்ணை நீங்கள் வெற்றிகரமாகச் சரிபார்த்தவுடன், இது போன்ற ஒரு திரையைப் பெறுவீர்கள்.
9. அடுத்து, கூடுதல் பாதுகாப்பிற்காக இரு காரணி அங்கீகாரத்தை அமைக்கவும். அதற்கு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் OTP மற்றும் இரு காரணி அங்கீகாரத்தை அமைப்பதற்கான உங்கள் கோரிக்கையைச் சரிபார்க்கும் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். ‘2FA கோரிக்கையை அங்கீகரிக்கவும்’ ஐகானை கிளிக் செய்யவும்.
10. உங்கள் 2-காரணி முகப்புத் திரை அங்கீகாரக் கோரிக்கை சரிபார்க்கப்பட்டதும், இது போன்ற ஒரு திரையைப் பெறுவீர்கள்.
11. உங்கள் WazirX வர்த்தக ஆப்பை அமைத்துவிட்டீர்கள்! அடுத்து, இது போன்ற வரவேற்புத் திரையைப் பார்ப்பீர்கள். ‘KYC ஐ பூர்த்தி செய்’ டேபை கிளிக் செய்யவும்
12. அடுத்து, KYC தேவைகளை பூர்த்தி செய்ய, உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி, போன்ற தேவையான அனைத்து தனிப்பட்ட விவரங்களையும் பூர்த்தி செய்து, PAN விவரங்கள் மற்றும் அதன் மெய்நிகர் நகல், ஆதார் விவரங்கள் மற்றும் அதன் மெய்நிகர் நகல், ஆதார் விவரங்கள் மற்றும் அதன் மெய்நிகர் நகல் மற்றும் உங்களின் புகைப்படம் (ஒரு செல்ஃபி) ஆகியவற்றை சேர்த்து, ‘சரிபார்ப்பிற்காக சமர்ப்பிக்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
13. நீங்கள் KYC படிவத்தை பூர்த்தி செய்தபின் நீங்கள் இது போன்ற ஒரு திரையைப் பெறுவீர்கள்.
14. உங்கள் KYC வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரிவிக்கும் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
15. உங்கள் KYC விவரங்களைச் சரிபார்த்தவுடன், கீழே இணைக்கப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டைப் போன்று ஆப்பில் உங்கள் முகப்புத் திரை தோன்றும். இது ஒரு முறை செயல்முறை ஆகும். பயன்பாட்டைத் தொடங்குவதற்கு மிகக் குறைந்த நேரமே ஆகும்.
#2 ஆப்பில் நிதியை டெபாசிட் செய்தல்:
16. விருப்பமான கட்டண முறைகளைப் பயன்படுத்தி WazirX ஆப்பில் நீங்கள் நிதிகளை டெபாசிட் செய்யலாம் மற்றும் ஆப்பில் வர்த்தகத்தைத் தொடங்கலாம்
#3 பாலிகன் கிரிப்டோகரன்சியை வாங்குதல்:
17. INR இல் சமீபத்திய பாலிகன் விலையைக் கண்டறிய, ஆப்பில் திரையின் அடிப்பகுதியில் உள்ள விரைவாக வாங்குதல் விருப்பத்தைக் கிளிக் செய்யவும். அடுத்து மேட்டிக் நாணயத்தைக் கிளிக் செய்யவும்.
18. பயன்பாட்டில் நீங்கள் பாலிகன் கிரிப்டோவை வாங்க விரும்பும் தொகையை INR இல் உள்ளிட்டு, உங்கள் பரிவர்த்தனையைத் தொடங்க ‘மேட்டிக் நெட்வொர்க் வாங்குதலைப் பார்க்கவும்’ விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
WazirX பயன்பாட்டை அமைப்பது ஒரு முறை செயல்முறை ஆகும். நீங்கள் சமூகத்தில் உறுப்பினரானவுடன், கிரிப்டோகரன்சிகளை வாங்குதல் மற்றும் விற்பதன் மூலம் எளிதாகப் பயணிக்க உதவும் சிறந்த வர்த்தக அம்சங்களை தெரிந்து கொள்வீர்கள்.
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.