Table of Contents
உங்கள் கிரிப்டோ பயணத்தை நீங்கள் இப்போதுதான் துவங்கி இருந்தால், நீங்கள் அனேகமாக மிகவும் அதிக மதிப்புள்ள கிரிப்டோகரன்சியான பிட்காயினோடு மட்டும் நிறுத்திக் கொள்ள நினைப்பீர்கள். பரவலாகக் கிடைக்கிறது என்பதால், பிட்காயின் நுழைவதற்கு அதிகத் தடைகள் இல்லாத, அதிக லாபம் அளிக்கும் முதலீடுதான் என்றாலும், அது அதிக ரிஸ்க் உள்ள ஒன்று. கிரிப்டோ சந்தையின் அதிகமான ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, உங்கள் எல்லா முதலீடுகளையும் ஒரே கரன்சியில் செய்வதை விட, உங்கள் போர்ட்ஃபோலியோ வெவ்வேறு கரன்சிகளைக் கொண்டிருப்பது சரியான யோசனையாக இருக்கும்.
இங்குதான் ஆல்ட்காயின்களின் பங்கு வருகிறது. ஆல்ட்காயின் என்ற சொல் பிட்காயின் அல்லாத எந்த ஒரு கிரிப்டோகரன்சியையும் குறிக்கும். இவற்றின் பெயர் பிட்காயினுக்கு “மாற்று” என்று பொருள்படும். சந்தேகமில்லாமல், பிட்காயின்தான் சந்தையின் தலைமை இடத்தில் இருக்கிறது, சந்தை முதலீட்டாக்கத்திலும் மிகப் பெரிய கிர்ப்டோகரன்சியாக இருக்கிறது. ஆனால் பல ஆல்ட்காயின்கள் பிட்காயினை விட அதிகப் பயன்பாடும், வளர்ச்சிக்கான வாய்ப்பும் கொண்டிருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, பிட்காயினின் விலை 2021 ஜனவரி 1 இல் $32203.64 இலிருந்து 2021 டிசம்பர் 25 இல் $50888.72 க்கு 58.02% உயர்ந்தாலும் , சந்தை முதலீட்டாக்கம் அடிப்படையில் இரண்டாவது மிகப் பெரிய கிரிப்டோகரன்சியான எத்தீரியத்தின் விலை அதே காலகட்டத்தில் $774.90 இலிருந்து $4055.12 க்கு 423.30% உயர்ந்தது. 2021 துவக்கத்தில் $1.837 மட்டுமே இருந்த சொலானா 2021 டிசம்பர் 25 இல் $193.127 என்ற மதிப்பை அடைந்து 10413.2% என்ற பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றது..
2022-இல் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டிய தலைசிறந்த 8 ஆல்ட்காயின்கள்
பிடிசி டாமின்னஸ், அல்லது பிட்காயினின் சந்தை முதலீட்டாக்கத்துக்கும் மற்ற கிரிப்டோகரன்சிகளின் சந்தை முதலீட்டாக்கத்துக்குமான விகிதம் 2021-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இருந்த 70% க்கு அதிகம் என்ற நிலையிலிருந்து ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட 40% ஆக கிட்டத்தட்ட பாதி அளவுக்குக் குறைந்து விட்டது. வெவ்வேறு கரன்சிகளைக் கொண்ட போர்ட்ஃபோலியோவை விரும்புபவர்களுக்கு, ஆல்ட்காயின் தான் சிறந்த தீர்வு என்பது தெளிவாகிறது. 2022-இல் முதலீடு செய்யக் கூடிய சிறந்த மாற்று நாணயங்களைப் பார்ப்போம்.
#1. எத்தீரியம்
மிக வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றும், சந்தை முதலீட்டாக்கத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சியுமான எத்தீரியம் (ETH) 2021-இல் வியக்கத்தக்க விதத்தில் பிட்காயினை விடச் சிறப்பாகச் செயல்பட்டது. இந்தப் போக்கு 2022-இலும் தொடரும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். எத்தீரியத்தின் மதிப்பு உயர்ந்ததற்கு DeFi (டீசென்ட்ரலைஸ்டு ஃபைனான்ஸ்) சந்தையின் உயர்வும் NFTs (நான்-ஃபஞ்ஜிபிள் டோக்கன்ஸ்) பரவலாகப் பிரபலமானதும் அதிக அளவில் காரணமாக அமைந்ததாகக் கூறலாம்.
இதை எழுதும்போது, எத்தீரியம் ஒரு டோக்கனுக்கு $3,130.36 இல் வணிகம் செய்யப்படுகிறது. இதன் சந்தை முதலீட்டாக்கம் $370 பில்லியனுக்கு மேலாக இருக்கிறது. புரூஃப் ஆஃப் ஒர்க் (PoW) இலிருந்து புரூஃப் ஆஃப் ஸ்டேக் (PoS) மாடலாக எத்தீரியம் மாறும்போது 2022-இல் ETH 2.0 இன் வருகை, விலைகளை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது எத்தீரியத்தை $10k என்ற அளவைத் தாண்டி எடுத்துச் செல்லக் கூடும்..
#2. டெதர்
சந்தை முதலீட்டாக்கத்தின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கிரிப்டோகரன்சியான டெதர் டாலருடன் பொருந்தி இருக்கும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு நிலையான நாணயம்; எனவே அதன் மதிப்பு எப்போதுமே $1 ஆக இருக்கும். இதன் மதிப்பு அமெரிக்க டாலருடன் பொருத்தப்பட்டிருப்பதால், டெதர் குறைவான ஏற்ற இறக்கங்களையே கொண்டிருக்கும். அதனால், இது பிட்காயினுக்கு மிகச் சிறந்த மாற்றுகளில் ஒன்றாக அமைகிறது.. டெதர் மிகவும் நிலையான கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாக இருப்பதால் கிரிப்டோ சந்தைகளின் மிக அதிகமான ஏற்ற இறக்கங்களைக் கருதிப் பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது நிச்சயமாக ஒரு சிறந்த முதலீடு.
#3.சொலானா
சந்தேகமில்லால், 2021-இல் சொலானா (SOL) மிக அதிக லாபத்தை அளித்தது. ஆண்டின் துவக்கத்தில் $1 ஆக மட்டுமே இருந்த இதன் மதிப்பு ஆண்டு இறுதியில் $200 ஆக உயர்ந்து இதை 2022-இல் முதலீடு செய்யப்படக் கூடிய மிகச் சிறந்த மாற்று நாணயங்களில் ஒன்றாக ஆக்கி இருக்கிறது. தற்போது சொலானா $136.08 இல் வணிகம் செய்யப்படுகிறது. சந்தை முதலீட்டாக்கத்தின் அடிப்படையில் இது ஏழாவது பெரிய கிரிப்டோகரன்சி ஆகும்.சொலானாவின் வெற்றிக்கு ‘புரூஃப் ஆஃப் ஸ்டேக்’ தொழில்நுட்பம் சொலானாவின் ‘புரூஃப் ஆஃப் ஹிஸ்டரி’ உடன் இணைந்த இதன் தனித்தன்மை வாய்ந்த பிளாக்செயின் தொழில்நுட்பமே முக்கியமான காரணம் என்று கூறலாம். இது சொலானாவுக்கான பரிவர்த்தனகளை விரைவானதாகவும், விலை குறைந்ததாகவும் ஆக்கி, இதை எத்தீரியத்துடன் நேரடியாகப் போட்டி போடக் கூடிய நிலையில் வைக்கிறது. coinpriceforecast.com இன் கணிப்புகளின்படி, சொலானாவின் விலை 2022 இறுதியில் $300 ஐத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#4. கார்டானோ
கார்டானோ (ADA) தற்போது ஐந்தாவது மிகப் பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கிறது. இது $1.50 க்கு வணிகம் செய்யப்படுகிறது. இது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றும் ஆகும். 2021 துவக்கத்தில் $0.177 என்ற மதிப்பை மட்டுமே கொண்டிருந்த கார்டானோ 2021டிசம்பர் 2021-இல் 689.26% உயர்ந்து $1.397 என்ற மதிப்பைப் பெற்றது. 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கார்டானோ புரூஃப் ஆஃப் ஸ்டேக் தளத்தைக் கொண்டது. இதன் கிரிப்டோகரன்சி ADA என்று அழைக்கப்படுகிறது கணிப்புகளின்படி,,கார்டானோவின் விலை 2022-இன் துவக்கத்தில் $2 என்று துவங்கி ஆண்டு இறுதியில் $4 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#5. லைட்காயின்
லைட்காயின் சந்தை முதலீட்டாக்கத்தின் அடிப்படையில் முதல் 10 கிர்ப்டோக்களில் ஒன்று அல்ல என்றாலும், அது கணிசமான அளவுக்கு முதலீட்டாளர்களை ஈர்த்த ஒரு மதிப்புள்ள நாணயம் ஆகும். இதன் கிர்ப்டோ நெட்வொர்க் பிட்காயினை விட நான்கு மடங்கு வேகமாக பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தக் கூடியது என்று நிரூபிக்கப்பட்டிருப்பதால், பெரும் தொகையில் பணம் அனுப்ப விரும்புபவர்களுக்கு ஒரு மிகச் சிறந்த மாற்றாக லைட்காயின் விளங்குகிறது. லைட்காயின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, அதன் சந்தை முதலீட்டாக்கமும் அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். தற்போது லைட்காயின் $140.59 க்கு வணிகம் செய்யப்படுகிறது, $9,763,022,000 என்ற சந்தை முதலீட்டாக்கத்தைக் கொண்டிருக்கிறது. Coinpriceforecast.com இன் கணிப்பின்படி, 2022 ஆம் ஆண்டு இறுதியில் லைட்காயின் $200 க்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
#6. அவலான்ஷ்
2021 இல் அவலான்ஷை (AVAX) வாங்கிய முதலீட்டாளர்களுக்குப் பெரிய அதிர்ஷ்டம் அடித்தது. ஆண்டின் துவக்கத்தில் டோக்கனுக்கு $3.207 என்ற மதிப்பைக் கொண்டிருந்த AVAX, 2021 டிசம்பரில் டோக்கனுக்கு $103.60 என்ற மதிப்பை அடைந்து 3130.43% வளர்ச்சியை அளித்திருந்தது. ஒரு ஆண்டில் 34 மடங்கு லாபத்தை அளித்த அவலான்ஷ், 2022-இல் மேலும் உயரும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன் விலை $200 என்ற அளவைத் தாண்டக் கூடும். 2022-இல் அடுத்ததாகப் பெரும் வளர்ச்சி அடையக் கூடிய கிரிப்டோகரன்சியை நீங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருந்தால், 2021 துவக்கத்தில் அதிகம் அறியப்படாமல் இருந்து தற்போது $20 பில்லியனுக்கும் அதிகமான சந்தை முதலீட்டாக்கத்துடன் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு கிரிப்டோகரன்சியாக வளர்ந்திருக்கும் அவலான்ஷை தேர்ந்தெடுங்கள். அவலான்ஷன் விலை இப்போது$84.98 என்ற அளவில் இருக்கிறது.
#7. ரிப்பிள்
ஓரளவுக்கு குறைவான ரிஸ்க் உள்ள, அதிக லாபங்களைக் கொடுக்கும் வாய்ப்புள்ள ஒரு முதலீட்டைத் தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான விடை ரிப்பிள் (XRP). ரிப்பிள் பிளாக்செயின் அடிப்படையிலான டிஜிடல் பணச் செலுத்தல் நெட்வொர்க் மற்றும் புரோடகால். XRP அதன் நேடிவ் கிரிப்டோகரன்சி. தற்போது சந்தை முதலீட்டாக்ககத்தின் அடிப்படையில் 8-ஆவது மிகப் பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கும் ரிப்பிள் 2022-இல் முதலீடு செய்வதற்கான மிகச் சிறந்த ஆல்ட்காயின்களில் ஒன்றாகும். 2021 துவக்கத்தில் $0.221 என்ற நிலையிலிருந்து 270% க்கு மேல் உயர்ந்து இதை எழுதும்போது, ரிப்பிள் $0.7444 இல் வணிகம் செய்யப்படுகிறது, நிபுணர்களின் கணிப்பின்படி, ரிப்பிளின் விலை 2022-இல் $3 க்கும் $5 க்கும் இடையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#8. போல்காடாட்
சந்தை முதலீட்டாக்கத்தின் அடிப்படையில் 10-ஆவது மிகப் பெரிய ஓப்பன்-சோர்ஸ் பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகரன்சியான இது டிஸ்டிரிபியூடட் கம்ப்யூடிங்கை அனுமதிக்கிறது. இதன் நேடிவ் டோக்கன் டாட். தற்போது போல்காடாட் $24.78 என்ற மதிப்பைப் பெற்றிருக்கிறது. இதன் சந்தை முதலீட்டாக்கம் 24 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம். போல்காடாட் ஒரு பயனுள்ள முதலீடு என்று கருதப்படுவதற்கான காரணங்களில் ஒன்று இதனால் எந்த விதமான தகவல் அல்லது சொத்தை பிளாக்செயின்களுக்கிடையே மாற்ற இது வகை செய்கிறது என்பதாகும். இதைத் தவிர அதிக அளவு மற்றும் விரைவான மாற்றம் செய்தல்கள் போல்காடாட்டின் செயல்பாட்டுக்கு வலு சேர்க்கின்றன. 2022 இறுதியில். டாட் இன் விலை $50 என்ற மதிப்புக்கு மேல் ஏறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
WazirX மூலம் இன்றே துவங்குங்கள்
அடுத்த பெரிய கிரிப்டோகரன்சியை எங்கே வாங்குவது என்று பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகம் நம்பப்படும் இந்தியாவின் முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் ஆன WazirX க்குப் பிறகு நீங்கள் வேறு எதையும் தேட வேண்டியதில்லை. அதிவேக KYC நடைமுறைகள், அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இன்னும் பலவற்றுடன் WazirX இந்தியாவின் மிக வேகமாக வளரும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் ஆக விளங்குகிறது. உங்கள் பயணத்தைத் துவங்க இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.