ஆப்பிள், கூகுள், டெஸ்லா, சாம்சங், ஃபேஸ்புக் போன்ற மேலும் பல நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள், கிரிப்டோகரன்ஸிகளை தங்கள் திட்டங்களில் சேர்த்துள்ளதை நாம் பார்த்தோம். 23 ஜூன் 2021 நிலவரப்படி, உலகளாவிய கிரிப்டோ சந்தை மூலதனம் மற்றும் அளவு $ 1.3T ஆகும். கிரிப்டோகரன்சி சந்தை இந்தியாவிலும் பிரபலமாகியுள்ளது, சுமார் 10 மில்லியன் இந்தியர்கள் கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த டிஜிட்டல் நாணயங்கள் பலருக்கு நீண்ட கால மதிப்புள்ள சேமிப்பாக மாறியுள்ளது. புதிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் கிரிப்டோகரன்சியை எப்படி வாங்குவது என்று யோசிக்கிறார்கள். கிரிப்டோகரன்ஸிகள் எதிர்கால விதிமுறையாக இருக்கும் என்று நம்பும் மற்றும் அவர்களின் செயல்பாட்டில் அதிக வருவாயைப் பெற விரும்பும் மக்களுக்கு, உங்கள் நிதி இலாகாவில் நீங்கள் சேர்க்கக்கூடிய பன்னிரண்டு கிரிப்டோகரன்ஸிகள் இங்கே.
- பிட்காயின் (BTC)
பிட்காயின், கிரிப்டோகரன்சி சந்தையில் முதலாவதான இது, 2008 இல் உருவாக்கப்பட்டது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இது மிக முக்கியமான கிரிப்டோகரன்சி ஆகும். பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் நாணயத்தை ஒரு பயனரிடமிருந்து மற்றொரு பயனருக்கு பியர்-டு-பியர் பிட்காயின் நெட்வொர்க் வழியாக அனுப்பலாம். பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த கிரிப்டோகரன்சி விலையேற்றம் மற்றும் வீழ்ச்சியைக் கண்டிருந்தாலும் கூட சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது. அதிக பணப்புழக்கம் கொண்ட பிட்காயின், சந்தை நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் இருக்கும் வரை வர்த்தகர்களுக்கு பயனளிக்கும்.
WazirX மூலம் இந்தியாவில் பிட்காயின் வாங்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள் .
- எத்தீரியம் (ETH)
எத்தீரியத்தின் பன்முகப்படுத்தப்பட்ட மென்பொருள் தளம் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பயன்பாடுகளை வடிவமைக்க மூன்றாம் தரப்பு தலையீடு இல்லாமல் செயல்பட அனுமதிக்கிறது. எத்தீரியம் நான் -ஃபஞ்ஜிபிள் டோக்கன்கள் மற்றும் ஆரம்ப நாணய சலுகைகளை உருவாக்குவதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எத்தீரியத்தின் முன்னணி டெவலப்பரான விட்டாலிக் புடெரின் 2013 இல் ஒன்றிணைந்து தொடங்கினார். இது அவரை கிரிப்டோகரன்சி சந்தையில் இளவயது கோடீஸ்வரராக ஆக்கியது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில், பிட்காயினுக்குப் பிறகு, எத்தீரியம் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சி ஆகும்.
- லைட்காயின் (LTC)
லைட்காயின் 2011 இல் தொடங்கப்பட்டது. இது பிட்காயினுக்குப் பிறகு சந்தையில் இருந்த முதல் கிரிப்டோகரன்ஸிகளில் ஒன்றாகும். பெரும்பாலும் பிட்காயின் தங்கம் என்றால் இது வெள்ளி என்று குறிப்பிடப்படுகிறது, இது ஒரு MIT பட்டதாரி மற்றும் முன்னாள் பொறியாளருமான சார்லி லீ உருவாக்கியது. லைட்காயின் பல வழிகளில் பிட்காயினை ஒத்திருந்தாலும் இது வேகமான பரிவர்த்தனை உறுதிப்படுத்தல் நேரத்தை வழங்கும் பிளாக் ஜெனரேஷன் வீதத்தைக் கொண்டுள்ளது. லிட்காயினை ஒரு பணம் செலுத்தும் முறையாக ஏற்றுக்கொள்ளும் வணிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- கார்டானோ (ADA)
சார்லஸ் ஹோஸ்கின்சன் ஸ்மார்ட் ஒப்பந்தங்களுக்காக எத்தீரியத்தின் ஒத்த வழிமுறையில் ஒரு கிரிப்டோகரன்சி நெட்வொர்க்கை உருவாக்கினார். எத்தீரியத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர் எத்திரீயத்தை விட்டு வெளியே வந்து கார்டானோவை உருவாக்கினார். 2017 இல் துவக்கப்பட்ட, ADA ஒரு லாப நோக்கமற்ற டிஜிட்டல் கரன்சியாகும், இது ஓரோபோரோஸ் எனும் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
- போல்காடாட் (DOT)
எத்தீரியத்தின் மற்றொரு இணை நிறுவனரான, கேவின் வூட், ராபர்ட் ஹேபர்மியர் மற்றும் பீட்டர் சாபனுடன் இணைந்து போல்காடாட் ஐ உருவாக்கினார். அவர்கள் போல்காடாட் நெட்வொர்க் வழியாக, பன்முகப்படுத்தப்பட்ட செயலிகள், பயன்பாடுகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்கி இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். கூடுதலாக, அவர்களின் வலைத்தளம் இறுதி பயனர் கட்டுப்பாட்டிற்கான தகவல் மற்றும் அடையாள பாதுகாப்பை உறுதி செய்கிறது.
- Ripplரிப்பிள் (XRP)
2012 இல் தொடங்கப்பட்ட, ரிப்பிள் ஒரு கிரிப்டோகரன்சி, கட்டண பரிமாற்ற அமைப்பு மற்றும் ரிப்பிள்நெட் எனப்படும் ஒரு நெட்வொர்க் ஆகும். இது டிஜிட்டல் கட்டணங்களுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் அவை உலகளாவிய கட்டணங்களை உறுதி செய்வதற்கான வேகமான மற்றும் திறமையான வழியை உறுதியாக அளிக்கின்றன. XRP யின் பிற பயன்பாடுகளுக்கு மூன்றாம் தரப்பு உருவாக்கங்களையும் அவர்கள் அனுமதிக்கிறார்கள். நீங்கள் மேலும் தெரிந்து கொள்ளவும், ரிப்பிள் இல் முதலீடு செய்யவும் விரும்பினால் ரிப்பிள் ஐ எப்படி வாங்குவது என்பதை இந்த வலைப்பதிவில் படிக்கலாம்.
- யூனிஸ்வாப் (UNI)
ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மூலம், யூனிஸ்வாப்பின்புரோட்டோகால் எத்தீரியம் பிளாக்செயினில் கிரிப்டோகரன்ஸிகளுக்கு இடையே தானியங்கி பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. மேலும், அதன் டெவலப்பர்கள், தேவையற்ற இடைத்தரகர்களின் தலையீடு இல்லாத மேம்பட்ட பயனர் கட்டுப்பாட்டிற்கு உறுதியளிக்கின்றனர்.
- டோஜ்காயின் (DOGE)
பில்லி மார்கஸ் மற்றும் ஜாக்சன் பால்மர் ஆகிய மென்பொருள் புரொகிராமர்கள், கிரிப்டோகரன்சி ஊகங்களை கேலி செய்ய விரும்பினர். இவ்வாறு, அவர்கள் இந்த மீம் கிரிப்டோகரன்சியை உருவாக்கினர். இது நையாண்டி நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டாலும், இந்த டோக்கன் ஒரு தகுதியான முதலீடாக இருக்கலாம். மேலும் இந்த வலைப்பதிவில் நீங்கள் டோஜ்காயின் என்றால் என்ன, இந்தியாவில் டோஜ்காயினை எப்படி வாங்குவது என்பது குறித்து படிக்கலாம்
- பினான்ஸ் காயின் (BNB)
பினான்ஸ் காயின் எத்தீரியம் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது இந்த BNB டோக்கன் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமான பினான்ஸால் தொடங்கப்பட்டது. பினான்ஸ் ஸ்மார்ட் செயினில் பினான்ஸ் எக்ஸ்சேஞ்ச் இல் கட்டணம் செலுத்த அல்லது எரிபொருளுக்கு தள்ளுபடி டோக்கனாக இதைப் பயன்படுத்தலாம்..
- வாஸிர் எக்ஸ் காயின் (WRX)
WazirX இன் பயன்பாட்டு டோக்கன் WRX என்று அழைக்கப்படுகிறது 1 பில்லியன் WRX டோக்கன்களின் புழக்கத்திற்கு, பினான்ஸ் செயின் (பினான்ஸின் பிளாக்செயின்) பயன்படுத்தப்படுகிறது. WazirX நாணயங்களை வாங்குவதன் மூலம், பயனர்கள் WazirX ஐ உருவாக்க தொடர்ந்து உதவலாம் மற்றும் வெகுமதிகளையும் பெறலாம். கூடுதலாக, WRX நாணயத்தின் ஆரம்ப பயனர்களை கட்டண குறைப்பு மற்றும் அதிக சலுகைகள் போன்ற ஊக்கத்தொகைகளை அனுமதிக்கிறது.
- பிட்காயின் கேஷ் (BCH)
ஆல்ட்காயின் வரலாற்றில் பிட்காயின் கேஷ் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.;பிட்காயினின் அசல் சங்கிலியில் பிளவு ஏற்பட்டதால்BCH ஆகஸ்ட் 2017 இல் தனது வாழ்க்கையை தொடங்கியது. பிட்காயின் நெட்வொர்க் அதன் பிளாக் அளவில் 1 மெகாபைட் (MB) வரம்பைக் கொண்டிருப்பதால், அதன் அளவை 1 MB யிலிருந்து 8 MB யாக அதிகரிக்க BCH ஹார்ட்-ஃபோர்க் செயல்படுத்தப்பட்டது, இது பிளாக்குகளுக்குள் அதிக பரிவர்த்தனைகளை நடத்த அனுமதிக்கும். மேலும் இது பரிவர்த்தனை வேகத்தை அதிகரிக்கும்.
- ஸ்டெல்லார் (XLM)
Sரிப்பிள் புரோட்டோகாலின் டெவலப்பராக இருந்த ஜெட் மெக்கலேப் என்பவரால் ஸ்டெல்லார் நிறுவப்பட்டது. இது ஒரு திறந்த பிளாக்செயின் நெட்வொர்க் ஆகும், இது பெரிய பரிவர்த்தனைகளுக்கு நிதி நிறுவனங்களை இணைப்பதன் மூலம் நிறுவன தீர்வுகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் எந்த கரன்சிகளுக்கும் இடையே கிராஸ் பார்டர் பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. ஸ்டெல்லாரின் கரன்சி லுமென்ஸ் (XLM) என்று அழைக்கப்படுகிறது.
நீங்கள் ஏன் WazirX ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்?
WazirX என்பது இந்தியாவில் உள்ள ஒரு கிர்ப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜ் ஆகும், இது பிட்காயின், எத்தீரியம், ரிப்பிள், லைட்காயின், போன்ற பல கிரிப்டோ சொத்துக்களை வாங்கவும், விற்கவும் மற்றும் வர்த்தகம் செய்யவும் உங்களை அனுமதிக்கிறது. இந்த தளத்தை எங்கள் இணையதளம், Google Play Store, Apple App Store, Windows, மற்றும் Mac OS ஆகியவற்றிலிருந்து அணுக முடியும். WazirX மிகவும் பாதுகாப்பானது, அதிவேக KYC, மின்னல் வேக பரிவர்த்தனைகள், எளிய மற்றும் நடைமுறை சார்ந்த வடிவமைப்பு, சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே நீங்கள் ஒரு புதிய முதலீட்டாளரோ அல்லது தொழில்முறை வர்த்தகரோ என்றால், WazirX உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது!
இந்தியாவில் கிரிப்டோகரன்சியை வாங்குவது அல்லது இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வது எப்படி என்பதை WazirX இன் வலைப்பதிவுகள் மூலம் கற்றுக்கொள்ளலாம் .