
Table of Contents
வணக்கம் சமூகத்தினரே!
Update புதுப்பிப்பு விவரங்கள்: டிரேடிங் வியூ விளக்கப்படம் இப்போது Android மற்றும் iOS பயன்பாடுகளில் நேரலையில் உள்ளது. எங்கள் பயனர்கள் அதை விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இது அதிகம் கோரப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும்.
நமதுபயனர்களுக்கு டிரேடிங் வியூ அம்சம் எப்படி உதவப்போகிறது?
சாதாரண/வழக்கமான பயனர்களுக்கு: இது நம் இயல்புநிலை வரி விளக்கப்படத்திற்கு எளிமை மற்றும் தெளிவைத் தருகிறது மற்றும் நிகழ்நேரத்தில் மேம்படுத்துகிறது.
தொழில்முறை வர்த்தகர்களுக்கு: நீங்கள் விளக்கப்படத்தில் கோடுகளை வரையலாம். இது தவிர, உங்கள் அடுத்த வர்த்தக நகர்வைத் தீர்மானிக்க உதவும் பல்வேறு வகையான விளக்கப்படங்கள் உள்ளன.
Android
iOS
இந்த நவீன தீர்வுக்கான பெருமை சில தனித்துவமான தீர்வுகளைக் கொண்டு வந்த எங்கள் இணையதள மற்றும் மொபைல் குழுக்களையே சாரும். இது பல விவாதங்கள் மற்றும் ஆய்வுகளை எடுத்தது, இதன் காரணமாக ஒட்டுமொத்த ஆப்பின் அளவை வெற்றிகரமாக குறைக்க முடிந்தது, மேலும் இது வர்த்தக பார்வை விளக்கப்படங்களுக்கான லோடிங் நேரத்தை சிறந்த ஒன்றாக மாற்றியுள்ளது.
எந்த நேரத்திலும் பேக் எண்டில் இருந்து அனைத்து பயனர்களுக்கும் டிரேடிங் வியூ விளக்கப்படங்களை புதுப்பிக்கும் வசதியும் இதில் உள்ளது. மொபைலுக்கும் இணையதளத்துக்கும் இடையிலான அற்புதமான கூட்டு செயல்பாட்டுக்கு இது நிச்சயமாக ஒரு எடுத்துக்காட்டாகும்.
டிரேடிங் வியூ அம்சத்தை எப்படி கண்டுபிடிப்பது?
இந்த அம்சத்தை நீங்கள் 3 படி நிலைகளில் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்!
படிநிலை 1: உங்கள் WaxirX ஆப்பில் ‘எக்ஸ்சேஞ்ஜ்’ என்பதைத் தேர்வு செய்யுங்கள்
படிநிலை 2: நீங்கள் பார்க்க விரும்பும் டிரேடிங் வியூவுக்கான கிரிப்டோவை கிளிக் செய்யுங்கள்
படிநிலை 3: கீழே உள்ள படத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள ஐகானை முதலில் கிளிக் செய்வதன் மூலம் விளக்கப்பட வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
அவ்வளவுதான்! உங்கள் அடுத்த படிநிலைகளை நீங்கள் தீர்மானிக்க, விளக்கப்படங்கள் உங்களுக்கு விருப்பமான பாணியில் கிடைக்கின்றன!. மகிழ்ச்சியான வர்த்தகம் அமையட்டும்!
