
Table of Contents
This article is available in the following languages:
வணக்கம் சமூகத்தாரே! 🙏
மான்செஸ்டர் சிட்டி ஃபேன் டோக்கன் WazirX-இல் பட்டியலிடப்பட்டுள்ளது. நீங்கள் USDT சந்தையில் சிட்டி-ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.
CITY/USDT வர்த்தகம் WazirX-இல் நேரலையில் உள்ளது! இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
சிட்டி டெபாசிட் செய்தல் மற்றும் திரும்ப எடுத்தல் பற்றி?
மான்செஸ்டர் சிட்டி ஃபேன் டோக்கன் என்பது எங்களின் விரைவில் பட்டியலிடுதல் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும். எனவே, பினான்ஸ் வழியாக WazirX-இல் அதன் டெபாசிட்களை இயக்குவதன் மூலம் சிட்டி வர்த்தகத்தை நாம் தொடங்கலாம்.
அதனால் உங்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?
- டெபாசிட்கள் — நீங்கள் பினான்ஸ் வேலட்டில் இருந்து WazirX-க்கு சிட்டி-ஐ டெபாசிட் செய்யலாம்.
- வர்த்தகம் — நீங்கள் எங்கள் USDT சந்தையில் சிட்டி-ஐ வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் சிட்டி-ஐ வாங்கும்போது, அது உங்கள் “நிதிகளில்” தோன்றும்
- திரும்ப எடுத்தல் — பட்டியலிடப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் நீங்கள் சிட்டி-ஐ திரும்ப எடுக்க முடியும்.
சிட்டி பற்றி
மான்செஸ்டர் சிட்டி ஃபேன் டோக்கன் என்பது Socios.com -இன் ஃபேன் டோக்கன் ஆகும் – இது சிலிஸ் (CHZ) பிளாக்செயினில் கட்டமைக்கப்பட்ட ஒரு செயலியாகும். சோசியோஸ் வேறு பல கால்பந்து கிளப்புகளுக்கான ஃபேன் டோக்கன்களை உருவாக்கியுள்ளது, அவற்றில் மிகவும் பிரபலமானவை (PSG), மற்றும் UFC மற்றும் கார் பந்தயத்திற்கான ஃபேன் டோக்கன்களாகும். ஃபேன் டோக்கன்கள், அவற்றை வைத்திருப்பவர்களை முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவும், VIP வெகுமதிகளைத் திறக்கவும் மற்றும் பிரத்தியேக விளம்பரங்கள், விளையாட்டுகள் மற்றும் சிறப்பு அங்கீகாரம் ஆகியவற்றை அணுகவும் அனுமதிப்பதன் மூலம் அவர்களை கிளப்பின் நிர்வாகத்தில் பங்கு பெற வைக்கின்றன. ஜனவரி 2020 இல் PSG அறிமுகத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப் மார்ச் 2021 இல் சிட்டி-ஐ அறிமுகப்படுத்த முடிவு செய்தது. அதன் வெற்றி கிளப்பிற்கு தளத்தில் கிடைக்கும் வெற்றி மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பொறுத்ததாகும்.
- வர்த்தகம் செய்யப்படும் விலை (இதைப் பதிவிடும் நேரத்தில்): $5.68 USD
- உலகளாவிய சந்தை மூலதன மதிப்பு (இதைப் பதிவிடும் நேரத்தில்): $19,924,137 USD
- உலகளாவிய வர்த்தக அளவு (இதைப் பதிவிடும் நேரத்தில் நேரத்தில்): $9,748,205 USD
- புழக்கத்தில் உள்ள சப்ளை: 3,508,140.00 சிட்டி
- மொத்த சப்ளை: 20,000,000 சிட்டி
உங்கள் நண்பர்களுடன் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
இனிமையான வர்த்தகம் அமையட்டும்! 🚀
அபாயம் குறித்த எச்சரிக்கை: கிரிப்டோ வர்த்தகம் அதிக சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. புதிதாக பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் பெரும்பாலும் அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், அவற்றை வர்த்தகம் செய்யும் போது போதுமான அபாய மதிப்பீட்டை மேற்கொள்வதை உறுதிசெய்யவும். WazirX அதிக மதிப்புள்ள நாணயங்களைத் தேர்ந்தெடுக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும், ஆனால் உங்கள் வர்த்தக இழப்புகளுக்குப் பொறுப்பேற்காது
