கிரிப்டோவின் மீதான TDS குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

By ஜூலை 7, 2022ஜூலை 28th, 20222 minute read
FAQs on TDS on Crypto

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, கிரிப்டோ வர்த்தகங்கள் இனி 1% TDS பிடித்தம் செய்யப்படும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த விதிகள், ஜூலை 1, 2022 00:00 மணி IST முதல் அமலுக்கு வந்துள்ளன. WazirXஇல் உள்ள நாங்கள் இந்த திட்டத்தை ஆதரிக்கும் வகையில் எங்கள் கணினிகளை மேம்படுத்தியுள்ளோம். இந்த ஏற்பாடுகள் உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பதைப் பற்றி மேலும் படிக்கவும் மற்றும் WazirXஆல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் இங்கே அறியலாம்.

மேலும் அறிய இந்த காணொளியைப் பார்க்கவும்:

உங்களின் பல கேள்விகளுக்கு இது பதிலளிக்கும் அதே வேளையில், புதிய TDS விதிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகள் இங்கே:

கேள்வி 1: கிரிப்டோவை WazirX மூலம் வாங்கும்போது அல்லது விற்கும்போது TDS ஆக வரியை யார் பிடித்தம் செய்வார்கள்?

WazirX தேவையானவற்றை செய்யும்!

ஒருவர் எக்ஸ்சேஞ்ச் வழியாக கிரிப்டோவை வாங்கும்போது (P2P பரிவர்த்தனைகளில் கூட) அந்த எக்ஸ்சேன்ச் 194S பிரிவின் கீழ் வரி பிடித்தம் செய்யலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெளிவுபடுத்தியுள்ளது. அதை எளிமையாக சொன்னால்; வாங்குபவராகவோ அல்லது விற்பவராகவோ தொழில்நுட்ப ரீதியாக, நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. தேவையானவற்றை WazirX செய்யும்.

Get WazirX News First

* indicates required

கேள்வி 2: கிரிப்டோ மீதான வரி எந்த விகிதத்தில் பிடித்தம் செய்யப்படும்?

இந்த கேள்விக்கு பதிலளிக்க ஒரு எளிய அட்டவணை இங்கே:

​​

கேள்வி 3: யாருக்கு 5% TDS பொருந்தும், ஏன்?

வருமான வரிச் சட்டம், 1961இன் பிரிவு 206ABஇன் படி, கடந்த 2 ஆண்டுகளில் உங்கள் வருமான வரிக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த இரண்டு முந்தைய ஆண்டுகளில் TDS தொகை ₹50,000 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், கிரிப்டோ தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு செலுத்த வேண்டிய வரி 5% TDS ஆகப் பிடித்தம் செய்யப்படும். 

கேள்வி 4: எனது வர்த்தகத்தின் மீதான வரி பிடித்தம் செய்யப்பட்டதை WazirXஇல் நான் எங்கே காணலாம்?

WazirXஇல், ஆர்டர் விவரங்கள் பக்கத்தில் TDS ஆக பிடித்தம் செய்யப்பட்ட வரியைச் சரிபார்க்கலாம். கூடுதலாக, உங்கள் வர்த்தக அறிக்கை 48 மணிநேரத்திற்குப் பிறகு TDS விவரங்களைக் காண்பிக்கும். 

கேள்வி 5: ஏதேனும் அரசாங்க இணையதளத்தில் TDS விவரங்களை நான் சரிபார்க்க முடியுமா?

உங்கள் படிவம் 26ASஇல் (வரித் துறையால் வழங்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட வருடாந்திர வரி அறிக்கையானது, சம்பளம் வழங்குமிடத்து வரி பிடித்தம் செய்யப்பட்ட வரியின் விவரங்களைக் காட்டும்) வரியின் விவரங்களைத் துறை புதுப்பிக்கும்போது நீங்கள் காணலாம். 

கேள்வி 6: மற்ற TDSகளைப் போல கிரிப்டோ TDSஐ நான் திரும்பப்பெற முடியுமா?

ஆம்! அந்த தொடர்புடைய நிதியாண்டிற்கான ITRஐ நீங்கள் தாக்கல் செய்யும் போது, கிரிப்டோ வர்த்தகங்களில் TDS ஆக பிடித்தம் செய்யப்பட்ட வரியை நீங்கள் திரும்பப்பெற கோரலாம்.

கேள்வி 7: நான் நஷ்டம் அடைந்தாலும் வரி பிடித்தம் செய்யப்படுமா?

ஆம்! நீங்கள் லாபம் அல்லது நஷ்டம் அடைந்தாலும், வாங்கும் அல்லது விற்கப்படும் ஒவ்வொரு கிரிப்டோவிற்கும் TDS ஆக வரி பிடித்தம் செய்யப்படும்

கேள்வி 8: நான் வெளிநாட்டு எக்ஸ்சேன்சுகள், P2P தளங்கள் மற்றும் DEX களில் வர்த்தகம் செய்தாலும் TDS செலுத்த வேண்டுமா?

ஆம்! TDS பிடித்தம் செய்யாத சர்வதேச எக்ஸ்சேன்சுகளில் பரிவர்த்தனை செய்யும் பயனர்கள் தாங்களாகவே வரி செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், நாட்டின் தற்போதைய வரிச் சட்டங்களுக்கு நீங்கள் இணங்காதவர்களாக ஆவீர்கள்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply