Skip to main content

கிரிப்டோவின் மீதான TDS எளிதாக்கப்பட்டது

By ஜூன் 24, 2022ஆகஸ்ட் 10th, 20223 minute read
TDS on Crypto Simplified

2022ஆம் ஆண்டின் நிதி மசோதா, 194S எனப்படும் புதிய பிரிவை வருமான வரிச் சட்டம் 1961இல், அறிமுகப்படுத்தியது, இதில் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளை (VDA) மாற்றுவதற்கு செலுத்தப்படும் எந்தவொரு தொகைக்கும் 1% TDS விதிக்கப்பட்டது எளிமையாகச் சொன்னால், நீங்கள் ஏதேனும் கிரிப்டோவை வாங்கும்போது (கிரிப்டோ ஒரு VDA ஆகக் கருதப்படுகிறது), நீங்கள் (அல்லது இந்தப் பரிவர்த்தனையை செய்யும் எக்ஸ்சேஞ்ச்) TDS ஆகப் பரிவர்த்தனை மதிப்பில் 1% பிடித்தம் செய்ய வேண்டும். இந்த பிடித்தம் செய்யப்பட்ட வரி அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டும்.

நாம் விவரங்களுக்குச் செல்வதற்கு முன், உங்களுக்கான ஒரு நல்ல செய்தி: ஒருவர் எக்ஸ்சேஞ்ச் வழியாக கிரிப்டோவை வாங்கும்போது (P2P பரிவர்த்தனைகளில் கூட) அந்த எக்ஸ்சேன்ச் 194S பிரிவின் கீழ் வரி பிடித்தம் செய்யலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெளிவுபடுத்தியுள்ளது. 

அதை எளிமையாக சொன்னால்; வாங்குபவராகவோ அல்லது விற்பவராகவோ தொழில்நுட்ப ரீதியாக, நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. தேவையானவற்றை WazirX செய்யும். இருப்பினும், செயல்முறை எளிதாக இருக்க உங்கள் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. WazirXஇல் உள்ள நாங்கள் இந்த செயல்முறையை ஆதரிக்க எங்கள் கணினிகளை மேம்படுத்துகிறோம், மேலும் உங்களுக்குி விவரங்களை தெரியப்படுத்துவோம்

இந்த விதிகளை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள, சில விளக்கங்கள் எடுத்துக்காட்டுகளுடன் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • TDS விதிகள் ஜூலை 1 2022இலிருந்து பயன்பாட்டுக்கு வரும். இந்த விதிகள் ஜூலை 1, 2022க்கு முன் செயல்படுத்தப்படும் எந்த வர்த்தகத்தையும் பாதிக்காது. இந்த விதிகளின்படி, ஒரு கிரிப்டோ சொத்து INR அல்லது மற்றொரு கிரிப்டோ சொத்துக்கு மாற்றப்படும் போது, ஒவ்வொரு வர்த்தகத்திலும் TDS கழிக்கப்படும்.

தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்: ஜூலை 1, 2022க்கு முன் நீங்கள் ஆர்டர் செய்திருந்தாலும், வர்த்தகம் ஜூலை 1, 2022 அல்லது அதற்குப் பிறகு நடந்தாலும், இந்த TDS விதிகள் பொருந்தும்.

  • INRஐ பயன்படுத்தி கிரிப்டோ வாங்கும் போது வாங்குபவரிடமிருந்து TDS எதுவும் கழிக்கப்படாது, அதே நேரத்தில் கிரிப்டோ சொத்தை விற்பவர் TDS செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், ஒரு கிரிப்டோ சொத்தை மற்றொரு கிரிப்டோ சொத்தை செலுத்தி வாங்கும்போது, அதாவது ஒரு கிரிப்டோ சொத்து மூலம் மற்றொரு கிரிப்டோ சொத்தை வர்த்தகம் செய்யும் போது, இரு தரப்பிலும் TDS செலுத்த வேண்டியிருக்கும். 
  • பொருந்தக்கூடிய இடங்களில், பெறக்கூடிய INR அல்லது கிரிப்டோ தொகையில் இருந்து 1% TDS கழிக்கப்படும். இருப்பினும், வருமான வரிச் சட்டம், 1961இன் பிரிவு 206AB இன் படி, பயனர் கடந்த 2 ஆண்டுகளாக தங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை மற்றும் இந்த இரண்டு முந்தைய ஆண்டுகளில் TDS தொகை ₹50,000 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், கழிக்கப்படும் TDS (கிரிப்டோ தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு) 5% ஆக இருக்கும் எளிமையாக இருப்பதற்காக, இந்த வலைப்பதிவின் மீதமுள்ளவற்றில், TDS விகிதம் 1% ஆக நாங்கள் பயன்படுத்துகிறோம்.
  • பிடித்தம் செய்யப்பட்ட TDSஐ வருமான வரித்துறைக்கு INR வடிவில் செலுத்த வேண்டும். இதற்கு, கிரிப்டோ வடிவத்தில் பிடித்தம் செய்யப்பட்ட எந்த TDSஐயும் INR ஆக மாற்ற வேண்டும். கிரிப்டோவிலிருந்து கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்கு, எளிதாக மாற்றுவதற்கும் விலைச்சரிவைக் குறைப்பதற்கும் விலை குறிப்பிடப்பட்ட (அல்லது முதன்மை) கிரிப்டோ சொத்தில் இரு தரப்பிலும் TDS கழிக்கப்படும். WazirX சந்தைகளில் 4 விலை குறிப்பிடப்பட்ட சொத்துக்கள் உள்ளன- INR, USDT, BTC மற்றும் WRX. எடுத்துக்காட்டாக, பின்வரும் சந்தைகளில்: MATIC-BTC, ETH-BTC மற்றும் ADA-BTC, BTC என்பது விலை குறிப்பிடப்பட்ட கிரிப்டோ சொத்தாகும், எனவே இந்த சந்தைகளில் வாங்குபவர் மற்றும் விற்பவர் வர்த்தகத்தில் TDS, BTCஇல் கழிக்கப்படும்.
  • எடுத்துக்காட்டுகள்:
  • INR சந்தைகள்: 1 BTC 100 INRக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. BTC விற்பவர் 99 INR பெறுவார் (1% TDS பிடித்தம் போக). BTC வாங்குபவர் 1 BTC பெறுவார் ( TDS பிடித்தம் இல்லை).
  • கிரிப்டோ – கிரிப்டோ சந்தைகள்: 1 BTC , 10 ETH க்கு விற்கப்படுகிறது. BTC விற்பவர் 1.01 BTC செலுத்தி 10 ETH பெறுவார் (1% TDS சேர்க்கைக்கு பின்னர்). BTC வாங்குபவர் 0.99 BTC பெறுவார் (1% TDS பிடித்தம் போக).
  • P2P வர்த்தகத்தில். USDT விற்பனை ஆர்டர் வைக்கப்படும் முன்பு 1% TDS கழிக்கப்படும் P2P USDT வாங்குபவர் TDS எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
  • எடுத்துக்காட்டுகள்:
  • விற்பனையாளர் 100 USDTக்கு விற்பனை செய்வதற்கான ஆர்டரை வைக்கிறார். 1% TDS பிடித்தத்திற்கு பிறகு, 99 USDTக்கு விற்பனை ஆர்டர் வைக்கப்படும். வாங்குபவர் 99 USDT செலுத்துவார், மேலும் அதற்கான INR வாங்குபவரால் விற்பனையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
  • மொத்த 99 USDT வெற்றிகரமாக விற்கப்படாவிட்டால், 1% TDS ஆனது விற்கப்பட்ட தொகையின் விகிதத்தில் மட்டுமே கழிக்கப்படும், மேலும் TDSக்காகப் பிடித்தம் செய்யப்பட்ட 1 USDTயை ஆர்டர் ரத்து செய்த பிறகு விற்பனையாளருக்குத் திருப்பி அனுப்பப்படும்.
  • எக்ஸ்சேன்ஜால் விதிக்கப்படும் GST/கட்டணங்களைத் தவிர்த்து, செலுத்த வேண்டிய ‘நிகர’ தொகையில் TDS கணக்கிடப்படும். 
  • கிரிப்டோவில் வசூலிக்கப்பட்ட எந்த TDSம் அவ்வப்போது INR ஆக மாற்றப்படும், மேலும் பெறப்பட்ட INR மதிப்பு அந்தந்த வர்த்தகங்களுக்கு எதிராக புதுப்பிக்கப்படும்.
  • விஷயங்களை மிகவும் வெளிப்படையானதாக மாற்ற, பிடித்தம் செய்யப்பட்ட TDS , வர்த்தகம் செயல்படுத்தப்பட்ட உடனேயே ஆர்டர் விவரங்கள் பக்கத்தில் குறிப்பிடப்படும். ஏதேனும் கிரிப்டோ சொத்தின் வடிவில் TDS கழிக்கப்படும் சந்தர்ப்பங்களில், TDS பிடித்திற்கு நிகரான INRஇன் மதிப்பை 48 மணிநேரத்திற்குப் பிறகு வர்த்தக அறிக்கையில் காணலாம்.
  • WazirXஇல் தரகர் தளம் மூலம் நடத்தப்படும் வர்த்தகங்களுக்கு தரகர் TDSஐ கழித்துக் கொண்டால், மேலும் இது WazirX உடன் பொருத்தமான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தைக் கொண்டிருந்தால், அதற்கு TDS பொருந்தாது.

தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்: செயல்பாட்டின் நிலைத்தன்மை மற்றும் எளிமைக்காக, கிரிப்டோ வர்த்தகத்தில் வரியைக் கழிப்பதற்கான மேலே விவரிக்கப்பட்ட அணுகுமுறை இந்த நிதியாண்டில் அவர்களின் வர்த்தக அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும்.

சுருக்கம்

TDS செயல்முறையைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியிருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் பயணத்தைத் தடையற்றதாக மாற்ற, நாங்கள் அதிக வாசிப்பு மற்றும் கற்றல் பொருட்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், கீழே உள்ள கருத்துகள் பிரிவில் அவற்றை குறிப்பிடுங்கள்.

நீங்கள் எப்பொழுதும் செய்வது போல் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.

இனிமையான வர்த்தகம் அமையட்டும்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply