கிரிப்டோ மற்றும் பிட்காயின் ROI கால்குலேட்டர் (Crypto & Bitcoin ROI Calculator)

By நவம்பர் 2, 2021நவம்பர் 12th, 20212 minute read
रिप्टो और बिटकॉइन ROI कैलकुलेटर (Crypto & Bitcoin ROI Calculator)

ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், முதலீட்டின் மீதான வருமானம் (ROI) முக்கிய கவனம் கொண்டதாகும். ROI என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு முதலீடுகளின் முன்னரே கணிக்கப்பட்ட லாபத்தை மதிப்பிடுவதற்கான ஒரு நிலையான அளவீடு ஆகும். இந்த அளவீடு பங்குகள், ஊழியர்கள், கிரிப்டோ அல்லது செம்மறியாட்டு பண்ணை போன்ற எதையும் மதிப்பீடு செய்ய பயன்படுகிறது. அடிப்படையில், ஆதாயங்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் கொண்ட எதற்கும் மற்றும் எல்லாவற்றிற்கும் ஒரு ROI ஒதுக்கப்பட்டிருக்கலாம்

அத்தகைய முதலீட்டின் வருமானத்தை மதிப்பிட்ட பின்னரே ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவை எடுக்க முடியும். 

Get WazirX News First

* indicates required

சாத்தியமான வருவாயைக் கணக்கிட முதலீட்டாளர்கள் பல்வகை நுட்பங்களைப் பயன்படுத்தலாம். பல்வேறு தளங்கள் மற்றும் கால்குலேட்டர்கள் அதை மதிப்பிடுவதற்கான நுட்பங்களை வழங்குகின்றன. பாரம்பரிய முதலீடுகளை மதிப்பீடு செய்வதற்கு அதிக வழிகள் இருந்தாலும், கிரிப்டோ சந்தை அதை இன்னும் அடையவில்லை. பிட்காயின், எத்தீரியம் மற்றும் பிற கிரிப்டோக்கள் போன்ற டிஜிட்டல் சொத்துக்களுக்கான தேவை எல்லா நேரத்திலும் மிக அதிகமாக உள்ளது, மேலும் நன்கு ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது மிக முக்கியம்.

WazirX இல் நாங்கள் எப்போதும் முதலீடு செய்வதற்கு முன்பு முழுமையான ஆராய்ச்சியை வலியுறுத்துகிறோம். எங்கள் முதலீட்டாளர்களுக்கும் கிரிப்டோ சமூகத்திற்கும் உதவ, நாங்கள் எங்கள் கிரிப்டோ/பிட்காயின் ROI கால்குலேட்டரை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இங்கு முயற்சி செய்யுங்கள்!

கிரிப்டோ மற்றும் பிட்காயின் ROI கால்குலேட்டர் மூலம் நீங்கள்:

  • முதலீட்டின் தொடர் நிகழ்வு (மாதாந்திர அல்லது மொத்த தொகை) அடிப்படையில் உங்கள் கிரிப்டோ முதலீட்டின் வருவாயைக் கணக்கிடுங்கள்,
  • பல்வேறு கால அளவுகளுக்கான வருவாயைக் கணக்கிடுங்கள்,
  • சாத்தியமான பணவீக்கத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்,
  • உங்களுக்கு பிடித்த கிரிப்டோவின் கடந்தகால செயல்திறனை மதிப்பீடு செய்து, சிறந்த முதலீட்டு விலைய நிர்ணயிக்கவும்,
  • நிகழ்வுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள்.

கிரிப்டோ மற்றும் பிட்காயின் ROI கால்குலேட்டரை எப்படி பயன்படுத்துவது?

அந்த செயல்முறையை நாங்கள் எவ்வளவு எளிதாக்க முடியுமோ அவ்வளவு எளிதாக சொல்கிறோம்

படிநிலை 1:கால்குலேட்டரில், முதலில் முதலீட்டின் தொடர் நிகழ்வை – மாதாந்திரம் அல்லது மொத்த தொகையாக தேர்வு செய்யவும்

படிநிலை 2: முதலீட்டு தொகையை உள்ளிடவும்

படிநிலை 3: எதிர்பார்க்கும் வருமான விகிதத்தைச் சேர்க்கவும். உங்கள் விருப்பமான கிரிப்டோவின் கடந்த காலச் செயல்திறனை இங்கே சரிபார்க்கலாம்.

படிநிலை 4: முதலீட்டு காலத்தை தேர்ந்தெடுக்கவும் 

படிநிலை 5: எதிர்பார்க்கும் பணவீக்க விகிதத்தை சேர்க்கவும் (தேவைப்பட்டால்) 6% இயல்புநிலை விகிதம் தானாகப் பயன்படுத்தப்படுகிறது.

படிநிலை 6: அவ்வளவுதான்! உங்கள் முதலீட்டுத் தொகை மற்றும் சம்பாதிக்கக்கூடிய மதிப்பு உங்களுக்கு முன்னால் தெரியும்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, உங்கள் கிரிப்டோ முதலீட்டின் சாத்தியமான லாபம்/இழப்பை மதிப்பிடுவதற்கு, முதலீட்டின் மீதான வருமானம் (ROI) ஒரு பிரபலமான செயல்முறையாகும். உங்கள் ஆய்வுக்கு இந்த ROI கால்குலேட்டர் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். அதை புத்திசாலித்தனமாகச் செய்து, இன்றே உங்கள் கிரிப்டோ பயணத்தைத் தொடங்குங்கள்!

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply