Skip to main content

பல்வேறு வகையான கிரிப்டோ வேலட்டுகள் (Different Kinds of Crypto Wallets)

By ஏப்ரல் 5, 2022ஜூன் 3rd, 20225 minute read
Different Kinds of Crypto Wallets

கிரிப்டோகரன்சி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது, மேலும் அதன் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒரு ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் முறையைப் போலவே கருதப்படுகிறது. உங்கள் கிரிப்டோகரன்சிகளை கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் இருந்து திரும்பப் பெற்று, பங்குச் சந்தையில் பங்குகளை வைத்திருப்பது போல், வெளிப்புற வேலட்டில் வைத்திருக்கலாம்.

கிரிப்டோ பரிவர்த்தனைகளை அடிக்கடி கையாளும் போது, கிரிப்டோ வேலட்டுகளின் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்வதும் ஒரு இன்றியமையாத படிநிலையாகும். சிறந்த கிரிப்டோ வேலட்டுகளைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் கிரிப்டோகரன்சி முதலீடுகளை சேமித்து நிர்வகிப்பதை எளிதாக்குகிறது (சுவாரஸ்யமாகவும் இருக்கலாம்).

இந்தக் கட்டுரையில், கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான கிரிப்டோ வேலட்டுகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஒரு கிரிப்டோ வேலட் என்பது என்ன?

“பல்வேறு வகையான கிரிப்டோ வேலடுட்கள்” பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன், நீங்கள் முதலில் அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, கிரிப்டோகரன்சியை வைத்திருப்பது என்பது வழக்கமான பணத்தை வைத்திருப்பதில் இருந்து வேறுபட்டது. கிரிப்டோகரன்சி என்பது கையாள முடியாத வடிவத்தில் இருக்கக்கூடிய மற்றும் தனித்துவமான முகவரிகளுடன் பிளாக்செயினில் இருக்கும் குறியீடுகளின் தொகுப்பாகும்.

கிரிப்டோகரன்சியின் பரிவர்த்தனைகள் மற்றும் வணிகப் போக்குவரத்தில் உங்களுக்கு உதவ தனிப்பட்ட குறியீடு மற்றும் பொதுக் குறியீடு என இரண்டு குறியீடுகள் உள்ளன. பொதுக்குறீடு பிற பயனர்களுக்கு கிரிப்டோ சொத்துக்களை மாற்றுவதற்கு பயன்படுகிறது, மேலும் அதே நேரத்தில் தனிப்பட்ட குறியீடு அவர்கள் வேலட்டைத் திறக்க பயன்படுத்தப்படுகிறது.

Get WazirX News First

* indicates required

கிரிப்டோ வேலட் என்பது உங்கள் நிதிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படும் வழக்கமான வேலட்டைப் போன்றதாகும். மறுபுறம், வெவ்வேறு கிரிப்டோ வேலட் வகைகள் வழக்கமான வேலட்டுகளை விட அதிக பாதுகாப்பை வழங்குகின்றன. உண்மையில், கிரிப்டோ வேலட்டுகள் அசல் நாணயம் எதையும் வைத்திருக்காது; அவை கிரிப்டோ-சொத்து குறியீடுகளை பாதுகாப்பாக வைத்திருப்பதை மட்டுமே உறுதி செய்கின்றன. நபர்களை நிதியுடன் இணைப்பதற்கும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான தகவல்கள் கிரிப்டோ வேலட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.

கிரிப்டோ வேலட்டில் பொது மற்றும் தனிப்பட்ட குறியீடுகளின் முக்கியத்துவம்

கிரிப்டோ வேலட்டுகளின் வகைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன், கிரிப்டோ வேலட்டுடன் தனிப்பட்ட மற்றும் பொது குறியீடுகள் எவ்வாறு தொடர்புடையவை என்பதைப் பார்ப்போம். நீங்கள் ஒரு கிரிப்டோ வேலட்டை நிறுவும் போது, உங்களுக்கு உங்கள் வேலட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட குறியீடும்  பொதுக்குறியீடும் வழங்கப்படும். உதாரணமாக, உங்கள் மின்னஞ்சலை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரிடமிருந்து மின்னஞ்சலைப் பெற விரும்பினால் அவருக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்குகிறீர்கள்.

இருப்பினும், உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பகிர்வது என்பது உங்கள் மின்னஞ்சல் கணக்கிலிருந்து மின்னஞ்சல்களை அனுப்ப மற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதைக் குறிக்காது. அவ்வாறு செய்ய உங்கள் மின்னஞ்சல் கணக்கின் கடவுச்சொல்லை அவர் அறிந்திருக்க வேண்டும். கிரிப்டோ வேலட்டுகளில் பொதுக்குறியீடும் தனிப்பட்ட குறியீடும் இதேபோலவே பயன்படுத்தப்படுகின்றன.

பொதுக்குறியீடு எவருடனும் பகிரக்கூடிய ஒரு மின்னஞ்சல் முகவரியாக செயல்படுகிறது. உங்கள் வேலட் யாரிடமிருந்தாவது பணத்தை ஏற்கும்போது இது உருவாக்கப்படுகிறது.

தனிப்பட்ட குறியீடு என்பது ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது இது உங்கள் கடவுச்சொல்லைப் போன்றது, இது ஹேக் செய்யப்பட்டு யாருடனும் பகிரப்படக்கூடாது. இந்தத் தனிப்பட்ட குறியீடைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பணத்தைச் செலவிடுகிறீர்கள். உங்கள் தனிப்பட்ட குறியீடை யாராவது அணுக முடிந்தால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது, மேலும் உங்கள் பிட்காயின் டெபாசிட்கள் அனைத்தையும் நீங்கள் இழக்கலாம்.

ஒரு கிரிப்டோ வேலட்டின் அம்சங்கள்

ஒரு கிரிப்டோ வேலட்டின் அம்சங்கள் குறித்த விரைவான கண்ணோட்டம் இங்கே:

  • பயன்படுத்த எளிதானது. நீங்கள் தினசரி பயன்படுத்தும் மற்ற மென்பொருள் அல்லது வேலட்டைப் போலவே இதுவும் வேலை செய்கிறது.
  • மிகவும் பாதுகாப்பானது: உங்கள் தனிப்பட்ட குறியீட்டை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமே முக்கியம்.
  • நிகழ்நேரத்தில் நாடு தாண்டிய பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது: இவை இடைத்தரகர்கள் யாரும் இல்லாமல் தங்கு தடையற்றவை.
  • குறைந்த பரிவர்த்தனை செலவு வழக்கமான வங்கிகளுடன் ஒப்பிடும்போது, பரிவர்த்தனை செலவு கணிசமாகக் குறைவு.
  • பல கிரிப்டோகரன்சிகளின் பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது: இது நாணய மாற்றங்களை எளிதாக்குகிறது.

பல்வேறு வகையான கிரிப்டோ வேலட்டுகள்

இங்கு இரண்டு வகையான கிரிப்டோ வேலட்டுகள் உள்ளன, இவை அவற்றின் சொந்த நன்மை மற்றும் தீமைகளைக் கொண்டுள்ளன அவை:

  • ஹாட் வேலட்
  • கோல்டு வேலட்

ஹாட் வேலட்டுகள் என்பது ஏதோ ஒரு வகையில் இணையத்துடன் இணைக்கப்பட்ட வேலட்டுகள் ஆகும். மறுபுறம், கோல்டு வேலட்டுகள் இணையத்துடன் இணைக்கப்படாத நேரடி வேலட்டுகளாகும்.

கோல்டு வேலட்டுகளை விட ஹாட் வேலட்டுகள் நமக்கு ஏற்றப்படி வைத்துக்கொள்ள கூடியதாகும் ஆனால் குறைவான பாதுகாப்பு கொண்டவையாகும். ஹாட் வேலட்டுகள் டிஜிட்டல் என்பதால், பயணத்தின் போது உங்கள் பணத்தை அணுக இது உங்களை அனுமதிக்கிறது. மறுபுறம், அவை டிஜிட்டல் என்பதால், அது ஏதோ ஒரு வகையில் பாதிப்படையக்கூடும்.

கோல்டு வேலட்டுகள் இணையத்துடன் இணைக்கப்படாததால், அவை பொதுவாக மிகவும் பாதுகாப்பானவை. கோல்டு வேலட்டிலிருந்து பணத்தை இழக்க வேண்டுமென்றால், அதை நேரடியாக எடுக்க வேண்டும். இருப்பினும், இந்த அளவிலான பாதுகாப்பு, பயணத்தின் போது பணத்தை மாற்றுவதை மிகவும் சவாலானதாக மாற்றுகிறது.

கணிசமான பிட்காயின் வைத்திருப்பவர்களுக்கு கோல்டு மற்றும் ஹாட் வேலட்டுகளின் கலவை சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு கோல்டு வேலட் பெரும்பாலான சொத்துக்களை பாதுகாக்கும் அதே நேரத்தில் ஒரு ஹாட் வேலட்  நமது வசதிக்கு ஏற்ற படி வைத்துக்கொள்ள உதவும்.

ஒரு ஹைப்ரிட் உத்தி உங்களுக்கு இரு உலகங்களிலும் சிறந்ததை வழங்க முடியும்: பாதுகாப்பு மற்றும் வசதி. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட வகை ஹாட் அல்லது கோல்டு வேலட்டைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பாதுகாப்பை நீங்கள் தனிப்பயனாக்கலாம்.

ஹாட் மற்றும் கோல்டு வேலட் வகைகளில் வெவ்வேறு வகையான கிரிப்டோ வேலட்டுகள் உள்ளன. இருப்பினும் நம்மிடம் மூன்று முக்கிய வகைகள் உள்ளன:

  • மென்பொருள் வேலட்டுகள்
  • ஹார்டுவேர் வேலட்டுகள்
  • பேப்பர் வேலட்டுகள்

மென்பொருள் வேலட்டுகள்

இவை இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மென்பொருள் வேலட்டுகள் ஹாட் வேலட்டுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. வெப் வேலட்டுகள், டெஸ்க்டாப் வேலட்டுகள் மற்றும் மொபைல் வேலட்டுகள் ஆகியவை மென்பொருள் வேலட்டுகளின் பொதுவான மூன்று வடிவங்களாகும்.

  1. வெப் வேலட்டுகள்: 

வெப் வேலட்டுகளை அணுக வெப் பிரவுசர் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் எந்த சிறப்பு மென்பொருளையும் உங்கள் கணினி அல்லது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை, ஏனெனில் அவற்றை பிரவுசர் மூலம் அணுக முடியும்.

பிரவுசர் அணுகல் என்பது கடவுச்சொல் மற்றும் வெப் பிரவுசர் உள்ள சாதனம் ஆகிய இரண்டும் வைத்திருந்தால் உங்கள் கிரிப்டோவை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் நிர்வகிக்கலாம்.

இருப்பினும், வெப் வேலட்டுடன் கூடிய உங்கள் கிரிப்டோவிற்கான குறியீடை இணையதளம் வழக்கமாக வைத்திருக்கிறது. இதன் காரணமாக உங்கள் கிரிப்டோகரன்சிகளின் மீதான கட்டுப்பாடு உங்களுக்கு சிறிது குறைவாக இருக்கும்.

  1. டெஸ்க்டாப் வேலட்டுகள்:

ஒரு டெஸ்க்டாப் வேலட்டுக்கு உங்கள் கணினியில் ஒரு புரொகிராமை நிறுவ வேண்டியிருக்கும். அடுத்து, உங்கள் குறியீடுகளைச் சேமிக்க புரொகிராமைப் பயன்படுத்தி ஒரு தகவல் கோப்பை உருவாக்குவீர்கள். இறுதியாக, குறியீடுகளுக்கான அணுகலைப் பெற, நீங்கள் ஒரு கடவுச்சொல்லை நிறுவ வேண்டும்.

டெஸ்க்டாப் வேலட்டைப் பயன்படுத்துவதன் நன்மைகளில் ஒன்று, உங்கள் குறியீடுகளின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இருக்கும். இருப்பினும், உங்கள் குறியீடுகளை நீங்கள் சொந்தமாக வைத்திருப்பதால், உங்கள் கணினியில் வைரஸ்கள் மற்றும் மால்வேர் எதுவும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிடாமல் இருப்பதும் முக்கியம்.

நீங்கள் டெஸ்க்டாப் வாலட்டைத் தேர்வுசெய்தால், உங்கள் தகவல் கோப்பிற்கு ஒரு நகலை உருவாக்கி அதை வேறு எங்காவது சேமித்து வைக்க வேண்டும். பின்னர், நீங்கள் உங்கள் கணினியிலிருந்து விலகி இருந்தாலும் அல்லது அது செயலிழந்தாலும் உங்கள் நிதியை உங்களால் அணுக முடியும்.

  1. மொபைல் வேலட்டுகள்:

டெஸ்க்டாப் வேலட்டுகளைப் போலவே மொபைல் வேலட்டுகளும் செயல்படுகின்றன. இதில் முக்கிய வேறுபாடு என்னவென்றால், இந்த வேலட் ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகும்.

நீங்கள் நிதியை வர்த்தகம் செய்ய விரும்பும் போது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதற்கான கூடுதல் சுதந்திரத்தை மொபைல் வேலட்  வழங்குகிறது. கிரிப்டோகரன்சியை வாங்குவதையும் விற்பதையும் எளிதாக்கும் QR குறியீடுகளின் வசதியை அவை உங்களுக்கு வழங்குகின்றன.

மொபைல் வேலட்டுகள் அதிக சுதந்திரத்தை வழங்குகினாலும், அதற்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உங்கள் கிரிப்டோகரன்சியைப் பாதுகாப்பாக வைத்திருக்க மொபைல் வேலட்கள் வைரஸ் இல்லாததாக இருக்க வேண்டும். மேலும், உங்கள் ஃபோனை தொலைத்து விடாமல் அதிக விழிப்புடன் செயல்பட்டால் போதும்.

ஹார்டுவேர் வேலட்டுகள்

ஹார்டுவேர் வேலட்டைப் பயன்படுத்தும்போது உங்கள் குறியீடுகள் மென்பொருளில் சேமிக்கப்படுவதற்குப் பதிலாக உங்கள் சாதனத்திலேயே சேமிக்கப்படும். பெரும்பாலான ஹார்டுவேர் வேலட்டுகள் ஒரு ஃபிளாஷ் டிரைவைப் போலவே செயல்படுகின்றன. ஒரு USB டிரைவ் அவற்றை கணினி அல்லது பிற சாதனத்துடன் இணைக்க முடியும்.

ஹார்டுவேர் வேலட்டின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று இதுவாகும். இது இணையத்துடன் இணைக்கப்படவில்லை என்பதால், கணிசமான பாதுகாப்பு அபாயத்தை இது நீக்குகிறது. உங்கள் சாதனத்தை இழக்க நேரிட்டால், உங்கள் கிரிப்டோவை அணுகுவதற்கு, ஹார்டுவேர் வேலட்டைப் பயன்படுத்தி ஒரு சீடு சொற்றொடரை உருவாக்குகிறீர்கள்.

பரிவர்த்தனைகளை உருவாக்கும் போது உங்கள் தனிப்பட்ட குறியீடு உங்கள் சாதனத்துடனேயே இருக்கும். இந்த கருவி பரிவர்த்தனை / கட்டணத் தகவலைக் கேட்கிறது, பின்னர் தகவலை சரிபார்க்கிறது. எனவே, உங்கள் தனிப்பட்ட குறியீடு இந்த முறையில் சாதனத்தை விட்டு வெளியேறாது.

மென்பொருள் வேலட்டுகளுடன் ஒப்பிடும் போது,  ஹார்டுவேர் வேலட்டுகள் மிகவும் பாதுகாப்பானவை. மற்றும் சந்தேகத்துக்கிடமின்றி அவை விலை அதிகமுள்ளவை. எனவே, கணிசமான அளவு கிரிப்டோகரன்சி உள்ளவர்கள் அல்லது நீண்ட காலத்திற்கு தங்கள் சொத்துக்களை வைத்திருக்கத் திட்டமிடுபவர்களுக்கு அவை அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன.

பேப்பர் வேலட்டுகள்

ஒரு காகித வேலட் என்பது ஒரு  காகிதத்தாளால் செய்யப்பட்ட ஒரு வகை கோல்டு வேலட்டாகும் உங்கள் பிட்காயினைப் பெறுவதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இந்த காகிதத்தில் உள்ளன.

கோல்டு வேலட்டுகள் மிகவும் நம்பகமானவை என்றாலும், காகித வேலட்டின் இயல்பு அதை பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது. உங்கள் காகித வேலட்டை நீங்கள் இழந்தால், உங்கள் பணத்தையும் நீங்கள் இழப்பீர்கள்.

ஒரு காகித வேலட்டின் மற்றொரு குறைபாடு ஒரு பகுதி அளவு பணத்தை அனுப்ப இயலாதது ஆகும். தீர்வுகள் உள்ளன, ஆனால் அவை அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். இந்த குறைபாடுகள் காரணமாக காகித வேலட்டுகள் பொதுவாக விரும்பம் குறைந்தவையாகும்.

முக்கிய குறிப்பு

நீங்கள் பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளைக் கையாளும் போது கிரிப்டோ வேலட்டுகள் முக்கியமான ஒரு பகுதியாகும். ஏனென்றால், அவை பிளாக்செயின் நெட்வொர்க்குகளுக்கு நிதியை மாற்றவும், பெறவும் உதவும் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றாகும். இருப்பினும், ஒவ்வொரு வேலட் வகைக்கும் அதன் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன, எனவே பணத்தை பரிவர்த்தனை செய்வதற்கு முன்பு அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply