Skip to main content

கிரிப்டோவை எவ்வாறு ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் (How Crypto should be Regulated)

By மார்ச் 24, 2022ஏப்ரல் 30th, 20223 minute read

குறிப்பு: இந்த வலைப்பதிவு ஒரு வெளிப்புற பதிவர் மூலம் எழுதப்பட்டது. இந்த போஸ்ட்டில் வெளிப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் மற்றும் கருத்துக்கள் ஆசிரியருக்கு மட்டுமே சொந்தமானது.

கிரிப்டோ எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும்?

இந்தியாவில் உள்ள கிரிப்டோ முதலீட்டாளர்கள் உடனடியாக களத்தில் குதிக்க தயாராக உள்ளனர், ஆனால் சட்டம் இன்னும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது. கிரிப்டோவின் வரிவிதிப்பு முறையானது நாட்டில் கிரிப்டோவின் எதிர்காலத்திற்கு கடுமையானதாகவும் ஊக்கம் குன்ற வைப்பதாகவும் கருதப்படுகிறது. கிரிப்டோவை நிராகரிக்க இந்தியா இவ்வளவு வேகம் காட்ட வேண்டுமா? இதற்கு வேறு வழி உண்டா? இந்தக் கட்டுரையில், பொதுவாக கிரிப்டோவை எவ்வாறு ஒழுங்குமுறைப்படுத்தலாம் என்பதை ஆராய்வோம்..

ஒழுங்குமுறையின் தேவை

முதலில் சட்டமியற்றுபவர்களின் பார்வையில் இருந்து இதைப் பார்ப்போம். அவர்கள் கிரிப்டோவை பணமோசடி மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணை போவது போல் பார்க்கிறார்கள். கிரிப்டோ சந்தையானது ’போலியான பரிந்துரையால் விலை ஏறும்’ திட்டங்கள், போலியான வர்த்தக அளவுகள், மோசடிகள் போன்றவற்றால் பெருமளவில் எளிதில் பாதிக்கப்படுகிறது. சில மோசமான நபர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து சட்ட அமலாக்க முகவர்களிடமிருந்து முற்றிலும் மறைக்கப்பட்ட பரிவர்த்தனைகளை அடையாலமின்றி மேற்கொள்ளலாம். மேலும், நமது பொருளாதாரம் அதிக அளவு கிரிப்டோவைச் சார்ந்து இருந்தால், அது பல நிதி அபாயங்களுக்கு ஆளாகலாம்.

மேலே உள்ள அனைத்து சிக்கல்களும் இருந்தபோதிலும், கிரிப்டோவை நியாயமான முறையில் ஒழுங்குமுறைப்படுத்தும்போது தீங்கை விட நன்மையே அதிகமாக இருக்கும். கிரிப்டோ தொடர்பான தொழில்நுட்பங்கள் நிதி சார்ந்த இடத்தில் மேலும் புதுமைகளுக்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றன. கிரிப்டோவை வரவேற்கும் நாடுகளில் இந்தப் புதுமைகள் நடைபெறுகின்றன. கிரிப்டோவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மக்களை சட்டப்பூர்வ பாதையில் செல்வதைத் தடுக்கும் மற்றும் தெளிவற்ற பகுதிகளை நோக்கி செல்லவும் மற்றும் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான அபாயகரமான வழிகளைத் தேடவும் இடம் கொடுக்கும். 

Get WazirX News First

* indicates required

அதை எவ்வாறு ஒழுங்குமுறைப்படுத்துவது?

கொள்கை உருவாக்கம் மற்றும் விதிமுறைகளை நிறைவேற்றும் போது நான் தனிப்பட்ட முறையில் மிகவும் தகுதியற்றவனாக இருந்தாலும், கருத்தில் கொள்ளக்கூடிய சில உள்ளீடுகளை என்னால் நிச்சயமாக வழங்க முடியும்:

  • கிரிப்டோவில் மக்கள் பரிவர்த்தனை செய்யக்கூடிய வழிமுறைகளின் எண்ணிக்கையை வரம்பிடவும்: நீங்கள் கிரிப்டோவை அணுக வேண்டியது இணைய இணைப்புதான் என்றாலும், அதிகாரிகளுக்கு அடையாளம் தெரியாமல் இருப்பது எப்படி என்பது குறித்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருக்கலாம். இது பெரும்பாலான மக்கள் தங்கள் தேவைகளை எளிதாக்க எக்ஸ்சேன்சுகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ எக்ஸ்சேன்சுகள் மூலம் மட்டுமே கிரிப்டோவைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படலாம். இது பெரும்பாலான கிரிப்டோ வாடிக்கையாளர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவதால், அங்கு அதை எளிதாகக் நெறிமுறைப்படுத்தலாம்.
  • கிரிப்டோவைக் கையாள்வதற்கென்றே தனி உரிமம்: நம்மிடம் வங்கி உரிமம் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) தனித்தனி பதிவுகள் இருப்பது போல, கிரிப்டோவை கையாள்வதற்கு தனியான பதிவு அல்லது தனி உரிமம் கொண்டு வரலாம். இது கிரிப்டோ எக்ஸ்சேன்சுகளை ஒழுங்குபடுத்த அனுமதிக்கிறது.
  • ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்தல்: வங்கித் துறையை ஒழுங்குபடுத்துவதைக் கவனிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நம்மிடம் உள்ளது, பங்குச்சந்தையைக் கவனிக்க இந்தியாவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) உள்ளது, அதேபோல் கிரிப்டோ உலகை நிர்வகிக்க ஒரு தனி அமைப்பு ஏற்படுத்தப்படலாம்.
  • கிரிப்டோ வாடிக்கையாளர்களுக்காக KYC விதிமுறைகளை கட்டாயப்படுத்தலாம்: இந்த ஒழுங்குமுறை அமைப்பு அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கலாம், இது வங்கிகள் பின்பற்றும் KYC விதிமுறைகளுக்கு இணங்க இருக்கலாம். கிரிப்டோ பரிவர்த்தனைகளில் அடையாளம் தெரியாத பிரச்சனை இதனால் தீர்க்கப்படும்.
  • அதிக மதிப்புள்ள சொத்துக்களை வாங்குவதற்கு உயர் அடையாள சரிபார்ப்பு தரநிலைகள் கட்டாயப்படுத்தலாம்: பணமோசடி மூன்று அடிப்படை நிலைகளில் நடைபெறுகிறது: கிரிப்டோ-சொத்து சந்தைப்படுத்தல், லேயரிங் மற்றும் ஒருங்கிணைப்பு. மேலே உள்ள அனைத்து நடவடிக்கைகளும் இருந்தபோதிலும், கிரிப்டோவைப் பயன்படுத்தும் மோசமான நபர்கள் தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் வழிமுறையாக இதைக் கையாள்கிறார்கள். அதிக மதிப்புள்ள சொத்துக்களை உண்மையாக வாங்குவதற்கு அவர்கள் இறுதியில் தங்கள் லாபத்தைப் பயன்படுத்த வேண்டும். எனவே, ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படலாம், அதைத் தாண்டினால் பல அடையாளச் சான்றுகளை வழங்குவது கட்டாயப்படுத்தப்படலாம், அது சரிபார்க்கப்பட்டு கொள்முதல் செயல்முறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறும்.
  • சர்வதேச ஒழுங்குமுறை அமைப்புகளுடனான ஒத்துழைப்பு: பெரிய அளவிலான பணமோசடி என்பது ஒரே ஒரு நாட்டின் புவியியல் எல்லைக்குள் மட்டும் தன்னை மட்டுப்படுத்துவதில்லை. மேலும், எக்ஸ்சேன்சுகள் ஒரு சர்வதேச இருப்பிடத்தைக் கொண்டிருக்கலாம். சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க கிரிப்டோ பரிவர்த்தனைகளை நோக்கமாகக் கொண்ட தகவல் பகிர்வு அமைப்பை ஏற்படுத்துவது விவேகமானதாக இருக்கும். வருவாய் இழப்பு பிரச்சனையைத் தீர்க்க இது வழி வகுக்கும்.
  • கிரிப்டோ-இருப்புக் குவிப்பு: அதன் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, இந்தியா அதிக அளவில் அந்நியச் செலாவணி கையிருப்பைக் குவித்துள்ளது. கிரிப்டோ இருப்புக்களையும் இதே முறையில் வைத்திந்தால் இது ஒருவேளை உதவக்கூடும்.

முடிவுரை

கிரிப்டோ உலகில் விதிமுறைகளைக் கொண்டு வருவது எந்த வகையிலும் எளிமையான அல்லது சுலபமான பணி அல்ல. இருப்பினும், இந்திய இளைஞர்களிடையே கிரிப்டோவின் புகழ் அதிகரித்து வருவதால், முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளை எளிதாக்கும் ஒரு ஒழுங்குமுறை மற்றும் நியாயமான வரிவிதிப்பு கொள்கையை கொண்டு வருவது பயனுள்ளதாக இருக்கும். அரசாங்கத்திற்கான புதிய வரி வருவாய்க்கான பலனாகவும் இது இருக்கலாம்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply