Skip to main content

உலகெங்கிலும் உள்ள கிரிப்டோ நட்பு நாடுகள் கிரிப்டோ விதிமுறைகளை எவ்வாறு அணுகுகின்றன? (How are crypto-friendly nations around the globe approaching Crypto regulations?)

By பிப்ரவரி 21, 2022பிப்ரவரி 23rd, 20225 minute read

குறிப்பு: இந்தவலைப்பதிவுஒருவெளிப்புறபதிவரால்எழுதப்பட்டது. இந்தஇடுகையில்வெளிப்படுத்தப்பட்டபார்வைகள்மற்றும்கருத்துக்கள்ஆசிரியருக்கேசொந்தமானது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கிரிப்டோகரன்சியை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பதில் உடன்படவில்லை, ஏனெனில் அது ஊக முதலீட்டில் இருந்து ஒரு போர்ட்ஃபோலியோவில் பலதரப்பட்ட இருப்பாக மாறுகிறது.

இத்துறை இன்று உலகின் ஒவ்வொரு பகுதியிலும் மிகச்சிறந்த காரணங்களுக்காக வளர்ந்து வருகிறது. இது பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்றாகும், மேலும் சிறந்த நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது. இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இது ஒரு புதிய வடிவமான தனி அதிகாரத்தை வழங்குகிறது, அது கவர்ச்சிகரமானதாகவும் மற்றும் ஆற்றல் மிக்கதாகவும் இருக்கிறது. பல்வேறு இதர காரணங்களுக்காகவும் டிஜிட்டல் சொத்துக்கள் பெருகி வருகின்றன. இது பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாக்கிறது, சிக்கனமானது, மேலும் பணம் செலுத்துவதற்கான பாதுகாப்பான ஒரு வழியாகும். இதைப் பற்றிய இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது சுயமான ஆளுமையுடன் நிர்வகிக்கப்படும் ஒரு தனிப்பட்ட அணுகுமுறையாகும்.

ஒரு நாடு கிரிப்டோகரன்சிக்கு எவ்வளவு நட்பாக இருக்கிறது என்பதைப் பற்றி நான் நினைக்கும் போது, அந்த நாடு அதற்கு எவ்வளவு நட்பாக இருக்கிறது என்பதைப் பார்க்க, கிரிப்டோகரன்சியை எந்த அளவு ஒழுங்குமுறை செய்கிறது மற்றும் வரி விதிக்கிறது என்பதைப் பற்றி நான் யோசிக்கிறேன். இதைக் கருத்தில் கொண்டு, “கிரிப்டோ நட்பு” என்று அழைக்கப்படும் சில நாடுகள் கிரிப்டோ சட்டத்தை எவ்வாறு கையாள்கின்றன என்பதை ஆராய்வோம். 

Get WazirX News First

* indicates required

மால்டா

இந்த சிறிய மத்திய தரைக்கடல் தீவு நாடு எப்போதும் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களால் வரவேற்கும் முகமாக பார்க்கப்படுகிறது. அவர்களின் திறந்த மனப்பான்மை காரணமாக, ஏராளமான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சுகள் மற்றும் பிளாக்செயின் திட்டங்கள் இந்த நாட்டில் தலைமையிடத்தைக் கொண்டுள்ளன.

கிரிப்டோ-மையமாகக் கொண்ட நிறுவனங்களுக்கும் மால்டா மூலோபாய அர்த்தத்தை வழங்குவதற்கு இன்னும் சில காரணங்கள் உள்ளன. மால்டா ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு. மால்டாவில் செயல்படும் கிரிப்டோ திட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எஞ்சிய பகுதி முழுவதும் சுதந்திரமாக செயல்பட முடியும் என்பதை இது குறிக்கிறது.

கிரிப்டோவை ஒழுங்குபடுத்துவதில் இந்த நாட்டின் மென்மையான நிலைப்பாடு மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. 39 உறுப்பு நாடுகளைக் கொண்ட சர்வதேச கொள்கை உருவாக்கும் குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), மால்டா மீதான அதன் அக்கறையில் உரத்த குரல் கொடுத்து வருகிறது. FATF ஒரு தனிப்பட்ட கூட்டத்தைக் கூட்டியது, அதில் 60 பில்லியன் யூரோக்கள் ($ 71.2 பில்லியன்) மால்டாவின் எல்லைகள் வழியாக கிரிப்டோகரன்சியாக கடந்து வந்ததாக எச்சரிக்கை எழுப்பப்பட்டது. இது குற்றவியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை அல்லது அதற்கான குறிப்புகளும் இல்லை. வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான எந்த ஒரு ஒழுங்குமுறை ஆணையமும் இல்லாதது கவலையளிப்பதாக கூறப்பட்டது. 

இந்த சிறிய மத்திய தரைக்கடல் தீவிற்கு மேலும் அதிகரித்த கட்டுப்பாடுகள் வரலாம் அல்லது வராமல் போகலாம். இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்த செல்வந்த கிரிப்டோ முதலீட்டாளர்கள், அதன் 1.5 மில்லியன் யூரோ ($ 1.78 மில்லியன்) குடியுரிமைச் சலுகை மற்றும் கிரிப்டோ மீதான தாராள நிலைப்பாட்டை தொடர்ந்து பரிசீலிப்பார்கள்.

ஸ்விட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து பல விஷயங்களுக்காக புகழ் பெற்றுள்ளது. அதிக தனியுரிமை மற்றும் குறைந்தபட்ச ஆபத்து ஆகியவை நிதி உலகில் நன்கு அறியப்பட்ட சுவிஸ் வங்கி விதிமுறைகளுக்கு ஒத்ததாக உள்ளன. இதன் விளைவாக, கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கும் நாட்டில் தளர்வான சட்டங்களே உள்ளன என்பதில் ஆச்சரியமில்லை.

இருப்பினும், பகுதிகளை மண்டலங்களாகப் பிரிப்பது, எது சாத்தியமுள்ளது மற்றும் எது சாத்தியமற்றது என்பதை கணிசமாக பாதிக்கிறது. 26 மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பிரதேசங்களைக் கொண்ட சுவிட்சர்லாந்தில் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத் தரநிலைகள் மாகாணத்திற்கு மாகாணம் வேறுபடும்.கிரிப்டோகரன்சிக்கு ஒரு சுவிஸ் மாகாணத்தில் வரி விதிக்கப்படலாம் ஆனால் மற்றொன்றில் இல்லாமலிருக்கலாம். ஒவ்வொரு மாகாணமும் எதற்கு வரி விதிக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்க அதன் சொந்த அளவுகோல்களைக் கொண்டிருக்கலாம். ஸுரிச்சில் அசையக்கூடிய தனியார் சொத்திற்கு வரி விலக்கு இருப்பதால், பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகள் நாட்டின் வருமான வரியில் இருந்து விலக்கப்படலாம். மறுபுறம், மைனிங் லாபம் நிலையான வருமான வரிக்கு உட்பட்டது. பெர்ன் இல் விதிகள் மிகவும் கடுமையானவை, மைனிங் மற்றும் வர்த்தகம் ஆகியவை சாதாரண வேலைவாய்ப்புக்கான இழப்பீடாகக் கருதப்படுகின்றன. ஸுரிச்சின் மூலதன ஆதாயங்களுக்கு லூசெர்ன் இல் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன, இது மாகாணக் கொள்கையின்படி சற்று அதிகமாக உள்ளது.

 ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பெரும்பான்மையான நாடுகளில் கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமாக இருந்தாலும், உறுப்பு நாடுகளின் அடிப்படையில் எக்ஸ்சேஞ்ச் நிர்வாகம் மாறுபடும். இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் 0% முதல் 50% வரை, வரிகள் கணிசமாக வேறுபடுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பணமோசடி தடுப்பு உத்தரவுகள் (5AMLD மற்றும் 6AMLD) செயல்படுத்தப்பட்டுள்ளன, இது KYC/CFT தரநிலைகள் மற்றும் நிலையான அறிக்கையிடல் தேவைகளை வலுப்படுத்துகிறது.

ஐரோப்பிய கமிஷன் செப்டம்பர் 2020 இல் மார்க்கெட்ஸ் இன் கிரிப்டோ-அசெட்ஸ் ரெகுலேஷனை (MiCA) முன்மொழிந்தது—இந்த நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் கட்டமைப்பானது கிரிப்டோ தொழில் நடத்தையை தெளிவுபடுத்துகிறது மற்றும் புதிய உரிமத்திற்கான தேவைகளை வழங்குகிறது.

போர்ச்சுகல்

இன்று, நீங்கள் உலகின் சில கிரிப்டோ-நட்பு நாடுகளைத் தேடுகிறீர்களென்றால், அதில் போர்ச்சுகல் முதலிடத்தைப் பெறுவது உறுதி. போர்ச்சுகலில், கிரிப்டோகரன்சி வரி அற்றது, மேலும் பல கிரிப்டோ வர்த்தகர்கள் ஏற்கனவே நாட்டில் தங்கள் இரண்டாவது குடியிருப்பை நிறுவியுள்ளனர். போர்ச்சுகலில், கிரிப்டோகரன்சியில் அதிக ஆர்வம் உள்ளது. ஏப்ரல் 2020 இல், போர்ச்சுகல் டிஜிட்டல் மயமாக்கலை அதிகரிக்க “டிஜிட்டல் இடைநிலை செயல் திட்டத்தை” அறிமுகப்படுத்தியது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த மூலோபாயம் கார்ப்பரேட் புதுமை மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கு உகந்த சூழலை வளர்க்கும். கூடுதலாக, பிளாக்செயின் மற்றும் பிற கள சோதனைகளை எளிதாக்குவதற்கு “தொழில்நுட்பமில்லாத மண்டலங்களை” நிறுவுவதற்கு இந்த செயல் திட்டம் அழைப்பு விடுக்கிறது

கனடா

பொதுவாக, கனடா ஒழுங்குமுறையாளர்கள் கிரிப்டோகரன்சிக்கான ஒரு செயலூக்கமுள்ள அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். பிப்ரவரி 2021 இல், பிட்காயின் எக்ஸ்சேஞ்ச்-வர்த்தக நிதியை (ETF) அங்கீகரிக்கும் முதல் அதிகார வரம்பு இதுவாகும். கூடுதலாக, கனடாவின் செக்யூரிட்டீஸ் நிர்வாகிகள் (CSA) மற்றும் கனடாவின் முதலீட்டு தொழில் ஒழுங்குமுறை அமைப்பு (IIROC) கிரிப்டோகரன்சியின் வர்த்தக தளங்கள் மற்றும் டீலர்கள் கனடாவில் உள்ள மாகாண அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். கூடுதலாக, கனடா கிரிப்டோகரன்சி முதலீட்டு நிறுவனங்களை பணச் சேவை வணிகங்களாக (MSBs) அங்கீகரிக்கிறது மற்றும் அவர்கள் கனடிய நிதி பரிவர்த்தனைகள் மற்றும் அறிக்கைகள் பகுப்பாய்வு மையத்தில் (FINTRAC) பதிவு செய்ய வேண்டும். கனடா மற்ற பொருட்களைப் போலவே கிரிப்டோகரன்ஸிகளுக்கும் வரி விதிக்கிறது.

எஸ்டோனியா

கிரிப்டோகரன்சி உலகில் தனக்கென ஒரு அற்புதமான இடத்தை செதுக்குவதில் எஸ்டோனியா உறுதியாக உள்ளது. கிரிப்டோகரன்சி ஸ்டார்ட்அப்களுக்கான ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும், மேலும் கிரிப்டோகரன்சிகளின் பிரபலம் எஸ்டோனியாவின் டிஜிட்டல் வெற்றிக் கதைகளுடன் நன்கு பொருந்துகிறது. இந்த சந்தை விரிவடைந்து வருகிறது, மேலும் முதலீட்டாளர்கள் பிளாக்செயின் தொழில்நுட்பம் உட்பட எந்தவொரு தீர்விலும் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். எஸ்டோனியாவில், பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு மற்ற கம்பெனி நடவடிக்கைகள் போலவே வரி விதிக்கப்படுகின்றன – விநியோகம் செய்யப்படாத இலாபங்களுக்கு கார்ப்பரேட் வருமான வரி இல்லை. எஸ்டோனியாவின் வங்கித் துறையும் கிரிப்டோவில் அதிக கவனம் செலுத்துகிறது. எடுத்துக்காட்டாக, பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் நிதி நிறுவனங்களில் எஸ்டோனியாவில் உள்ள LHV வங்கியும் ஒன்றாகும். கூடுதலாக, நிறுவனம் சைபர் வாலட் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது, இது பிளாக்செயின் அடிப்படையிலான வேலட் பயனர்களை அசல் யூரோக்களின் டிஜிட்டல் பிரதிநிதித்துவங்களை அனுப்ப உதவுகிறது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு ஃபின்டெக் மையமாக நன்கு அறியப்படுகிறது. சிங்கப்பூரின் மத்திய வங்கியான, சிங்கப்பூர் மானிட்டரி ஆணையம், புதுமைக்கு எந்த பாதகமுமின்றி பணமோசடி மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கிரிப்டோகரன்சி சுற்றுச்சூழல் அமைப்பு கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வாதிடுகிறது. சிங்கப்பூரில் மூலதன ஆதாய வரி கிடையாது. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி பணத்திற்கு வரி விதிக்கப்படாது. இருப்பினும், ஒரு வணிகம் சிங்கப்பூரில் ஒருங்கிணைக்கப்பட்டு கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபட்டால் அல்லது கிரிப்டோ பேமெண்ட்களை ஏற்றுக்கொண்டால், நிறுவனம் வருமான வரி கட்ட வேண்டியிருக்கும்.

ஜெர்மனி

கிரிப்டோகரன்சி வரி விதிப்பில் ஜெர்மனி ஒரு அசாதாரண நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தனிநபர் முதலீடு நாட்டில் விரும்பப்படுகிறது, இது பிட்காயினை கரன்சி, சொத்து அல்லது பங்காகப் பார்க்காமல் தனிப்பட்ட பணமாகப் பார்க்கிறது. பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளை ஜெர்மனியில் ஓராண்டுக்கு மேல் வைத்திருந்தால் வரிவிலக்கு உண்டு. அவற்றை விற்கும்போதோ வாங்கும்போதோ VATக்கு உட்பட்டவை அல்ல.

ஒரு வருடத்திற்குள் பணத்தை ரொக்கமாகவோ அல்லது வேறு கிரிப்டோகரன்சியாகவோ மாற்றினால், அது €600க்கு குறைவாக இருந்தால், அதற்கு வரிவிலக்கு உண்டு.

லக்ஸம்பர்க்

லக்ஸம்பர்க் கிரிப்டோகரன்சியை செல்லுபடியாகும் பரிமாற்ற ஊடகமாக பார்க்கிறது. நாட்டிற்குள் கிரிப்டோகரன்சிகளை கையாள்வதற்கோ பயன்படுத்துவதற்கோ எந்த தடையும் இல்லை. லக்ஸம்பர்க்கில் தெளிவான கிரிப்டோகரன்சி விதிமுறைகள் இல்லை என்றாலும், சட்டத்திற்கு அரசாங்கத்தின் அணுகுமுறை பொதுவாக முற்போக்கானதாக இருக்கிறது.

லக்சம்பேர்க்கில் உள்ள கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சுகள் CSSF ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் பிற நிதி நிறுவனங்களின் அதே சட்டங்களுக்கு இவை இணங்க வேண்டும்.

இன்று, நாடு கிரிப்டோகரன்சி வளர்ச்சியில் தொடர்ந்து இருக்கவும், அவற்றைக் கையாள்வதற்கான மிகவும் பயனுள்ள தந்திரங்களை நிறுவவும் தயாராக உள்ளது.

நெதர்லாந்து

நெதர்லாந்து , கிரிப்டோகரன்ஸிகள் தொடர்பாக தாராள அணுகுமுறையைக் கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இது உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். நெதர்லாந்தில் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் வலுவான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்பதால், தனிநபர்கள் கவலையின்றி அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) தேவைகளை கடைப்பிடிக்கின்றனர்.

நெதர்லாந்தில், கிரிப்டோகரன்சி தி டச்சு நேஷனல் வங்கியால் (DNB) ஒழுங்குமுறைப் படுத்தப்படுகிறது.

இந்தியா

இந்தியாவின் நிலை என்ன?

வெவ்வேறு நாடுகள் கிரிப்டோகரன்சிகளை வெவ்வேறு விதமாக ஒழுங்கு முறைப்படுத்துகின்றன, ஆனால் இந்தியா இதுவரை கிரிப்டோகரன்சிகளை மிகவும் எதிர்க்கும் நாடுகளில் ஒன்றாகவே உள்ளது என்று சொல்வதே நியாயமாக இருக்கும். கிரிப்டோ சட்டத்தில் அரசாங்கம் என்ன முன்மொழியப் போகிறது என்பது பற்றிய ஊடக ஆதாரங்களின்படி, இந்த நிலை பெரிதாக மாற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.RBI அவற்றை தடை செய்ய முயற்சிக்கின்ற அதே வேளையில், கிரிப்டோகரன்சிகள் மீது நாடு ஒரு எச்சரிக்கையான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது, கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகும், மத்திய வங்கியின் அறிவிக்கப்பட்ட நிலை அப்படியே உள்ளது. மறுபுறம், இந்திய அரசாங்கம் க்ரிப்டோகரன்சிகளை கடுமையாக ஒழுங்குபடுத்தும் அதே வேளையில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஆதரிக்கும், இரட்டை நிலப்பாட்டை கடைப்பிடிக்கிறது.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply