Skip to main content

ஒரு கிரிப்டோ போர்ட்ஃபோலியோவை அமைப்பது எப்படி? (How to Build a Crypto Portfolio?)

By அக்டோபர் 7, 2021நவம்பர் 12th, 20214 minute read

குறிப்பு: இந்த வலைப்பதிவு ஒரு வெளிப்புற பிளாகர் எழுதியது. இந்த போஸ்டில் வெளிப்படுத்தப்பட்ட நோக்கு நிலைகள் மற்றும் கருத்துக்கள் ஆசிரியருக்கு மட்டுமே சொந்தமானது.

வெறும் சில டாலர்களில் விலை இருந்தபோது பிட்காயின் மீது பந்தயம் கட்டியவர்கள் கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டியுள்ளனர். சந்தை மூலதனத்தின் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த செயல்திறன் வாய்ந்த சொத்தாகும், இதன் விளைவாக, பல புதிய முதலீட்டாளர்கள் சரியான நேரத்தில் தங்கள் சதோஷிகளை வைத்திருந்ததனால் மில்லியனர்களாக மாறினார்கள் மற்றும் பலர் பில்லியனர்கள் ஆனார்கள்.

கிரிப்டோகரன்சி சந்தை தொடர்ந்து விரிவடைந்து மற்றும் வாங்குவோர் விகிதம் மிக உயர்ந்த நிலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் அடுத்த பெரிய கிரிப்டோகரன்சியை தேடுகிறார்கள், இது ‘சந்திரன்’ என்று உருவகப்படுத்தும் உச்சிக்கு தங்கள் போர்ட்ஃபோலியோவை கொண்டு செல்கிறார்கள் எஞ்சியிருக்கும் ஒரே பிரச்சினை, எதிர்காலத்தில் வரப்போகும் ஒரு கிரிப்டோகரன்சியை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்பதுதான்?

அடிப்படைகள்

வாங்கும் விலை சிக்கலானது

அடுத்த பெரிய விஷயத்தைத் தேடும் போது, டோக்கன் செலவை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த மூலதனம் கொண்ட சாதாரண பிட்காயின் முதலீட்டாளருக்கு , குறைந்த விலை கிரிப்டோகரன்ஸிகள் சிறந்த முதலீடாக இருக்கலாம்.

Get WazirX News First

* indicates required

இன்றைய விலையில் $ 5,000 முதலீடு செய்தால் பிட்காயினின் ஒரு சிறிய பகுதி அல்லது ஒரு டாலருக்குக் குறைவான மதிப்புள்ள ஆயிரக்கணக்கான நாணயங்களை மட்டுமே வாங்கக்கூடும். குறைந்த விலை நாணயங்கள் போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தலுக்கான சிறந்த வழிமுறைகளை வழங்குகின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

உரிமை கொள்வதற்கான சாத்தியங்கள்

2017 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில், ரிப்பிள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இந்த ஆண்டு XRP வெற்றி பெற்றிருந்தாலும், முன்னரே கணிக்கக்கூடிய கிரிப்டோகரன்சி சந்தைக்கு வெளியே இதை பயன்படுத்துவதற்கு இன்னும் நிறைய உறுதியளிக்க வேண்டும். ரிப்பிள் இன் தீர்வு முறையின் அடிப்படை தொழில்நுட்பம் மத்திய வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்கு இது செயல்படும் என்று உருதியளிகிறது.

இதையே பாலிகனுக்கும் சொல்லலாம். கிரிப்டோகரன்சி தொழில் முழுவதும் உரிமை கொள்வதன் மிகுதியைக் இந்தியத் திட்டம் காண முடிகிறது எத்தீரியத்தின் சில முக்கிய குறைபாடுகளான அதன் செயல்திறன், மோசமான பயனர் அனுபவம் (வேகம் மற்றும் தாமதமான பரிவர்த்தனைகள்) மற்றும் சமூகக் கட்டுப்பாடு இல்லாதது ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்க ஒரு புதிய சைட் செயின் அணுகுமுறையைப் பாலிகன் பயன்படுத்துகிறது. அதன் காரணமாக, போட்டியாளர்கள் குறைவாக இருப்பதால் அது அதிக பரபரப்பைப் பெறுகிறது.

போட்டியை விட ஒரு நன்மையைக் கொண்ட ஒரு கிரிப்டோகரன்சியைக் கண்டுபிடிப்பது (இதனால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்பு அதிகம்) ஒரு புத்திசாலித்தனமான முதலீடாக மாறலாம்.

கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு காரணி இருப்பு ஆகும்.

பெரும்பாலான கிரிப்டோகரன்ஸிகளின் அதிகபட்ச இருப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். மூலதனத்தை எட்டிய பிறகு மேலும் டோக்கன்கள் உருவாக்கப்படாது, இது பொதுவாக மைனிங் பயன்படுத்தி செய்யப்படுகிறது.

தேவை நிலையானதாக இருந்து வழங்கல் தடைப்பட்டு இருந்தால் விலை உயர வாய்ப்புள்ளது. நீங்கள் எந்த கிரிப்டோகரன்சியையும் வாங்குவதற்கு முன், முழு இருப்பையும் தற்போதைய சுழற்சியையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

விலை மற்றும் அளவு

கிரிப்டோகரன்சி வர்த்தக தகவலுக்கான ஆன்லைன் ஆதாரங்கள் தயாராகக் கிடைக்கின்றன. எதிர்காலத்தில், அதிகரிக்கும் விலை மற்றும் அதிகமான பரிவர்த்தனை அளவுகளுடன் கூடிய டிஜிட்டல் நாணயங்கள் அதிக ஈர்ப்பைக் கொண்டிருக்கும்.

ஒரு மேல்நோக்கிய டிரெண்ட் தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், அதிக முதலீட்டாளர்களின் கவனத்தை , டிஜிட்டல் நாணயங்கள் ஈர்க்கிறது என்பதை காட்டுகிறது .

நீங்களே ஆய்வு செய்வது (DYOR)

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதை நீங்கள் பரிசீலனை செய்யலாம். இதுபோன்று இருந்தால், உங்கள் பணம் அனைத்தையும் ஒரே திட்டத்தில் போடுவதை விட உங்கள் டோக்கன் போர்ட்ஃபோலியோவை நீங்கள் பல்வகைப்படுத்த வேண்டும். உங்கள் போர்ட்ஃபோலியோ நன்கு சமநிலையில் இருப்பதை உறுதி செய்ய, உங்கள் டோக்கன்களைத் எவ்வாறு தேர்ந்தெடுப்பீர்கள்? மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய கருத்துக்கள் இதோ:

டோக்கனின் பிரபலத்தன்மை

நீங்கள் கிரிப்டோவுக்கு புதியவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், சந்தேகத்திற்கு இடமின்றி பிட்காயின் மற்றும் ஈதர் போன்ற சில நன்கு அறியப்பட்ட டோக்கன்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை நிதி ரீதியாக மிகவும் வெற்றிகரமான நாணயங்களாகும் மற்றும் கிட்டத்தட்ட எந்த கிரிப்டோ முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவிலும் இவற்றைக் காணலாம். இந்த டோக்கன்கள் பொதுவாக பிரபலமாக உள்ளன, ஏனெனில் அவை பொதுவாக பழைய, “பாதுகாப்பான” முதலீடாக உள்ள அதிக நம்பகமான டோக்கன்களாகும்.

இவை, உங்கள் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஆனால் அவை மட்டுமே இருக்கக்கூடாது. ஒரு பிட்காயின் அல்லது ஈதர் ஆகியவற்றின் நீண்டகால புகழ் உலகளாவிய தலைப்புச் செய்திகளை உருவாக்கலாம் என்றாலும், சந்தையில் அதிகமாக அறியப்படாத ஆனால் வருவாய் தரும் ஆல்ட்காயின்கள் ஏராளமாக உள்ளன. அதிகம் அறியப்படாத சில நாணயங்களைக் கண்டுபிடித்து உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்தவும் மற்றும் உங்கள் முதலீடுகளை எல்லா வகையிலும் பாதுகாக்கவும் கிரிப்டோ தொடர்பான ஃபோரம்களைப் பார்வையிடவும்.

சாத்தியமான அடிப்படை பயன்பாட்டு பலன் கொண்ட டோக்கன்கள்

சாத்தியமான அடிப்படை பயன்பாட்டு பலன் கொண்ட கிரிப்டோகரன்ஸி டோக்கன் வகைகளை உங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்ப்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எடுத்துக்காட்டாக, சில கிரிப்டோகரன்ஸிகள் பிளாக்செயின் அடிப்படையிலான முன்முயற்சிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன, அவை காலப்போக்கில் ஈர்ப்பைப் பெறும் என்று கணிக்கப்படுகிறது, அவற்றின் மதிப்பு காலப்போக்கில் உயரக்கூடும் என்று தெரிகிறது. ஒவ்வொரு திட்டமும் வெற்றிபெறாது என்றாலும், அவைகளின் தாய் திட்டங்களின் வாக்குறுதியின் அடிப்படையில் ஒரு சில டோக்கன்களை வாங்குவது ஒரு நல்ல முடிவு.

புதிய அல்லது சாத்தியமான பிளாக்செயின் முயற்சிகளைப் பற்றி அறிய கிரிப்டோ தொடர்பான பத்திரிகைகள் மற்றும் வலைப்பதிவுகள் பொதுவாக பயனுள்ள இடங்களாகும்.

கடந்த கால சந்தை செயல்திறன்

எந்தவொரு கிரிப்டோகரன்சியை வாங்குவதற்கும் முன், அதன் முந்தைய சந்தை செயல்திறனை ஆய்வு செய்வது அவசியம். ஏனென்றால் இந்த தகவல் காலப்போக்கில் அவற்றின் மதிப்பு உயரும் திறனை நிரூபிக்கிறது. பிட்காயின் போன்ற சில டோக்கன்கள் சந்தையில் உயர்வும் தாழ்வும் இருப்பதைக் கண்டறிந்துள்ளன, இதன் விளைவாக, தற்போதைய சந்தை இழப்புகளிலிருந்து அவை நிச்சயமாக மீண்டு வரலாம். ஒரு டோக்கனின் வரலாறு அது தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உச்சத்தை அடைந்து பின்னர் பெறுமளவில் வீழ்ச்சியடைந்தது என்றால், அது பெரும்பாலும் செயற்கையாக உயர்த்தப்பட்ட ஒரு செயல்பாடு ஆகும், எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.

இது ஒரு கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதி அல்ல என்றாலும், ஒரு நாணயத்தை வாங்குவதற்கு முன் அதன் கடந்த கால சந்தை வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

சமூக தீர்ப்பு

ஒரு தனிநபராக நீங்கள் முதலீடு செய்வதற்கான கிரிப்டோக்களை நீங்கள் ஓரளவே புரிந்து கொண்டாலும், சமூகம் அவ்வாறு இல்லை. மாறாக, இணையத்தில் கிரிப்டோ முதலீடு பற்றிய தகவல்கள் நிரம்பியுள்ளன, அதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

என்ன டோக்கன்கள் விவாதிக்கப்படுகின்றன என்பதைப் பார்க்க கிரிப்டோகரன்சி ஃபோரம்கள், டெலிகிராம் குழுக்கள் மற்றும் சமூக ஊடக பிரொஃபைல்கள் ஆகியவற்றுக்குச் செல்லவும். ஒரு குறிப்பிட்ட கரன்சியில் முதலீடு செய்வது பற்றி நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் கம்யூனிட்டியிடம் ஆலோசனை கேட்கலாம், நீங்கள் எப்போதும் ஒரு பதிலைப் பெறுவீர்கள். எப்படியிருந்தாலும், கிரிப்டோகரன்சி என்பது சமூகத்தை பற்றியது, எனவே அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இருப்பினும், உங்கள் கிரிப்டோகரன்ஸிகளைப் போலவே, நீங்கள் எங்கிருந்து உங்கள் தகவல்களைச் சேகரிக்கிறீர்கள் என்பதைச் சரிபார்ப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோர் இதை தொடங்குவதற்கு சிறந்தவர்களாக இருப்பார்கள், ஆனால் ஒருவரும் எப்போதும் சரியாக கணிக்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முடிவுரை

ஒரு முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது என்பது எப்போதும் எளிதானதல்ல, குறிப்பாக அது கிரிப்டோகரன்ஸிகளைப் போன்ற சிக்கலான ஒன்றாக இருக்கும்போது. அதிர்ஷ்டவசமாக, இதை வழிநடத்துவதற்கும் சிறந்த டோக்கன்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் சில உத்திகள் உள்ளன. முதலீடு செய்ய கிரிப்டோக்களைத் தேர்ந்தெடுக்கும்போது, சமீபத்திய ஆண்டுகளில் புகழ் முதல் வெற்றி வரை உள்ள காரணிகள் அனைத்தையும் மனதில் கொள்ளுங்கள்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply