Skip to main content

இந்தியாவில் ஏப்காயின் வாங்குவது எப்படி (How to Buy ApeCoin in India)

By மே 9, 2022ஜூன் 20th, 20225 minute read
How to buy Ape coin in india

மீம் காயின்கள் மற்றும் NFTக்கள் இன்று கிரிப்டோ உலகில் மிகவும் பிரபலமான இரண்டு தலைப்புகளாகும். போர்டு ஏப் யாட் கிளப் (BAYC) இன்று உலகெங்கிலும் உள்ள மிக முக்கியமான NFT சேகரிப்புகளில் ஒன்றாகும். இது ஏப்ரல் 2021இல் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த புகழ்பெற்ற வெப்3 திட்டத்தின் பின்னணியில் உள்ள குழு, மியூடண்ட் ஏப் யாட் கிளப் (MAYC) உட்பட மிகவும் மதிப்புமிக்க NFT சேகரிப்புகளில் சிலவற்றை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளது.

போர்டு ஏப் யாட் கிளப்பின் பெரும் புகழ் காரணமாக, அதன் ஆளுகை டோக்கனான, ஏப்காயின், மார்ச் 2022இல் தொடங்கப்பட்டதிலிருந்து, $3.37 பில்லியன் சந்தை மூலதனத்துடன், மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாக உள்ளது. இது மியூடண்ட் ஏப் யாட் கிளப் (MAYC) மற்றும் பிற NFT சேகரிப்புகள் உட்பட BAYC சுற்றுச்சூழல் அமைப்புடன் தொடர்புடைய அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்கிறது. ஏப்காயின் APE DAOஇன் நிர்வாகத்திற்கு தூண்டுகோலாக இருக்கிறது – DAO ஆனது BAYC/ஏப்காயின் சுற்றுச்சூழல் அமைப்பின் விவகாரங்களைக் கவனிப்பதற்காக குறிப்பாக உருவாக்கப்பட்டது.

BAYC மற்றும் MAYCஐ பொறுத்த வரையில், இரண்டுமே NFT உலகில் தங்கள் கவர்ச்சிகரமான குரங்கு கார்ட்டூன்களுக்கு அப்பாற்பட்டு, தனித்துவமான அம்சங்களை வழங்குவதன் மூலம், இப்போது பலரால் முதன்மையான NFT திட்டங்களாகக் கருதப்படுகின்றன. பிரிஸ் ஹில்டன், ஸ்னூப் டோக், ஜிம்மி ஃபால்லன் போன்ற பல பிரபலங்கள், BAYCஇன் பெரும் ரசிகர்களாகவும், போர்டு ஏப் NFTகளை சொந்தமாக வைத்திருப்பவர்களாகவும் உள்ளனர்.

BAYCஐ உருவாக்கிய யுகா லேப்ஸ், சமீபத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் லார்வா லேப்ஸிடமிருந்து இரண்டு பிரபலமான NFT திட்டங்களான மீபிட்ஸ் மற்றும் கிரிப்டோபங்க்ஸை வாங்கியது. யுகா லேப்ஸ் BAYCஇன் வெற்றிக்கு ஒரு உந்து சக்தியாக உள்ளது, மேலும் கிரிப்டோ உலகின் மிகவும் பிரபலமான இரண்டு கருத்துருக்களான NFTக்கள் மற்றும் மீம் காயின்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். காயின்பேஸ் அதன் மூன்று பகுதி திரைப்படத் தொடரான தி டிஜென் டிரையாலஜியை டுகா லேப்ஸ் உடன் இணைந்து BAYC மற்றும் MAYC ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டு வருகிறது.

Get WazirX News First

* indicates required

ஏப்காயின் என்றால் என்ன?

ஏப்காயின் என்பது போர்டு ஏப் யாட் கிளப் சமூகத்தின் நிர்வாகம் மற்றும் பயன்பாட்டு டோக்கன் ஆகும். எளிமையான சொற்களில் சொல்வதென்றால், ஏப்காயின், ஏப் சுற்றுச்சூழல் அமைப்பைச் செயல்படுத்துகிறது. ஏப்காயின் என்பது ஒரு ERC-20 டோக்கன் வகையாகும். இது எத்தீரியம் பிளாக் செயினை அடிப்படையாகக் கொண்ட நீங்களே-கட்டமைக்கும் ஒரு வகை கிரிப்டோகரன்சியை உருவாக்குகிறது.

ஏப் கிரிப்டோ மார்ச் 2022இல் யுகா லேப்ஸின் டெவலப்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போர்டு ஏப் யாட் கிளப் (BAYC), மியூடண்ட் ஏப் யாட் கிளப் (MAYC), மற்றும் தொடர்புடைய அனைத்து NFT சேகரிப்புகளில் உள்ள அனைத்து முதலீட்டாளர்களும் மார்ச் 18 அன்று ஏர் டிராப் மூலம் ஏப்காயினைப் (APE) பெற்றனர். “கலாச்சாரம், கேமிங் மற்றும் வர்த்தகத்திற்கான டோக்கனான ஏப்காயினை ($APE) அறிமுகப்படுத்துதல், வெப்3 இன் முன்னணியில் பரவலாக்கப்பட்ட சமூக கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுகிறது” என்று ஏப்காயினின் டிவிட்டர் ஹேண்டில் தெரிவிக்கிறது.

போர்டு ஏப் யாட் கிளப் பிராண்டின் பெரும் புகழ் காரணமாக, இந்த ஏர் டிராப் NFT சமூகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். ஏப்காயின், ஏப்காயின் DAOஆல் தொடங்கப்பட்டது. இது அனைத்து APE ஹோல்டர்களையும் கொண்ட புதிய ஆளும் குழுவாகும். டோக்கன் வைத்திருப்பவர்கள் வாக்களிக்கக்கூடிய சமூக முன்மொழிவுகளைச் சேகரிப்பதே இதன் நோக்கமாகும். ஏப்காயினின் விநியோகம் 1 பில்லியனாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஏப் அறக்கட்டளை தினசரி DAO நிர்வாகம், முன்மொழிவு மேலாண்மை மற்றும் “DAO சமூகத்தின் யோசனைகள் யதார்த்தமாக மாறுவதற்குத் தேவையான ஆதரவைக் கொண்டிருப்பதை உறுதிசெய்யும் பிற பணிகளை” கையாளுகிறது. இது ஏப்காயின் DAOஇன் சட்ட அடித்தளமாக செயல்படுகிறது. ஏப்காயின் DAOஇன் குழு உறுப்பினர்கள் சில வகையான முன்மொழிவுகளைக் கவனிப்பதற்குப் பொறுப்பாவார்கள். இந்த குழுவில் 5 உயர்நிலை கிரிப்டோ நிபுணர்கள் உள்ளனர்:

 • ரெட்டிட்டின் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஒஹானியன்
 • FTXஇன் வென்ச்சர் மற்றும் கேமிங் பிரிவின் தலைவர் அமி வு
 • சவுண்ட் வென்ச்சர்சின் மரியா பஜ்வா
 • அனிமோகா பிராண்டின் யட் சியூ
 • ஹாரிஸன் லேப்ஸ்ஸின் டீன் ஸ்டீன்பெக்

குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 மாதங்கள் ஆகும், மேலும் அவர்கள் எதிர்கால போர்டு உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர்.

ஏப்காயின் எப்படி வேலை செய்கிறது?

ஏப்காயின் DAO என்பது ஒரு பரவலாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பாகும் (DAO), இதில் அனைத்து APE டோக்கன் வைத்திருப்பவர்களும் ஆளுமை செயல்பாடுகளில் வாக்களிக்கலாம். ஏப் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஆளுகை விதிகளை நிறுவவும், திட்டங்கள் மற்றும் கூட்டாண்மைகளைத் தேர்ந்தெடுக்கவும் மற்றும் பலவற்றிற்கும் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. DAO உறுப்பினர்கள் முன்மொழிவுகளில் வாக்களித்த பிறகு, APE அறக்கட்டளை, சமூகம் தலைமையிலான நிர்வாக முடிவுகளை மேற்கொள்ளும். ஏப்காயின் அதன் பிளாக்செயினில் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க ஒரு ப்ரூஃப்-ஆஃப்-வொர்க் (PoW) ஒருமித்த பொறிமுறையைப் பயன்படுத்துகிறது.

ஏப்காயின் DAOக்கு ஏப் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான தொடர்ச்சியான அணுகலை வழங்க டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. அனைத்து ஏப்காயினின் 62% ஏப் சுற்றுச்சூழல் நிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இது ஏப்காயின் DAO உறுப்பினர்கள் வாக்களிக்கக்கூடிய சமூகம் சார்ந்த அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கும். ஏப்காயின் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பிரத்தியேக கேம்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலையும் ஏப்காயின் வழங்குகிறது.

ஏப்காயின், அனிமோகா பிராண்டுகளால் உருவாக்கப்பட்ட விளையாடி சம்பாதிக்கும் மொபைல் கேம் ஆன பென்ஜி பனானாஸில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வெகுமதியாகப் பயன்படுத்தப்படுகிறது. பென்ஜி பனானாஸ் ஒரு உறுப்பினர் அனுமதிச்சீட்டை (‘பென்ஜி பாஸ்’) வழங்குகிறது, இது ஒரு NFT ஆகும், இது பென்ஜி பனானாஸை விளையாடும் போது அதன் உரிமையாளர்கள் சிறப்பு டோக்கன்களைப் பெற அனுமதிக்கிறது மற்றும் அந்த டோக்கன்களை ஏப்காயினுக்கு மாற்றிக்கொள்ளலாம். காலப்போக்கில் ஏப்காயின் அதிக பயன்பாட்டு நிகழ்வுகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஏப்காயின்கள் வாங்குவது எப்படி?

கீழே பட்டியலிடப்பட்டுள்ள இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இந்தியாவின் மிகவும் நம்பகமான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேன்ஜான WazirX வழியாக இந்தியாவில் ஏப்காயினை வாங்கலாம்:

#1 WazirXஇல் பதிவு செய்யுங்கள்

முதலில், இங்கே கிளிக் செய்வதன் மூலம் WazirXஇல் கணக்கை உருவாக்கவும் அல்லது எங்கள் கிரிப்டோ வர்த்தக பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

Sign Up on WazirX

#2 தேவையான விவரங்களை நிரப்பவும்

உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் பாதுகாப்பான கடவுச்சொல்லை தேர்வு செய்யவும்.

Put in your email address and choose a secure password.

#3 மின்னஞ்சல் சரிபார்ப்பு மற்றும் கணக்கு பாதுகாப்பு அமைப்பு

அடுத்து, உங்கள் இன்பாக்ஸில் நீங்கள் பெற்ற சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்கவும். அதைத் தொடர்ந்து, கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி உங்கள் கணக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு விருப்பங்கள் உள்ளன – அங்கீகரிப்பு பயன்பாடு மற்றும் மொபைல் SMS.

SMS பெறுவதில் தாமதம் அல்லது சிம் கார்டு ஹேக்கிங் அபாயம் இருப்பதால், அங்கீகரிப்பு பயன்பாடு மொபைல் SMSஐ விட பாதுகாப்பானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Email Verification and Account Security Setup

#4 உங்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்து KYCஐ முடிக்கவும்

உங்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்த பிறகு, KYC செயல்முறையை முடிக்கவும். உங்கள் KYCஐ பூர்த்தி செய்யாமல், WazirX பயன்பாட்டில் நீங்கள் பியர்-டு-பியர் வர்த்தகம் செய்யவோ அல்லது பணத்தை திரும்பப் பெறவோ முடியாது. உங்கள் KYCஐ முடிக்க, நீங்கள் பின்வரும் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:

 • உங்கள் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அடையாளச் சான்றுகளில் உள்ளது போல் உங்கள் முழுப் பெயர்
 • உங்கள் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அடையாளச் சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் பிறந்த தேதி
 • உங்கள் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அடையாளச் சான்றுகளில் உள்ளது போல் உங்கள் முகவரி
 • அந்த ஆவணத்தின் ஒரு ஸ்கேன் செய்த நகல்
 • இந்த நடைமுறையை பூர்த்தி செய்ய உங்களின் ஒரு செல்ஃபீ

உங்கள் கணக்கை உருவாக்கி முடித்துவிட்டீர்கள்! 24 முதல் 48 மணி நேரத்திற்குள், கணக்கு வழக்கமாக சரிபார்க்கப்படும்.

#5 உங்கள் WazirX கணக்கிற்கு நிதியை மாற்றுங்கள்

உங்கள் WazirX கணக்குடன் உங்கள் வங்கிக் கணக்கை இணைத்த பிறகு, உங்கள் WazirX வேலட்டில் பணத்தை டெபாசிட் செய்யலாம். IMPS, UPI, RTGS மற்றும் NEFT ஆகியவற்றைப் பயன்படுத்தி INRஇல் டெபாசிட்களை இயங்குதளம் ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் குறைந்தபட்சம் ரூ.100 கொண்டு உங்கள் WazirX கணக்கை துவங்கலாம், அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

நிதியை டெபாசிட் செய்ய, உங்கள் WazirX கணக்கில் உள்நுழைந்து கீழே உள்ள படத்தில் காணப்படுவது போல் “நிதி” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் “ரூபாய் (INR)” என்பதைத் தேர்ந்தெடுத்து, “டெபாசிட்” என்பதைக் கிளிக் செய்யவும்.

#6 WazirXஇல் ஏப்காயினை வாங்கவும்

WazirX மூலம் INRஐ பயன்படுத்தி ஏப்காயினை நீங்கள் வாங்கலாம். இங்கு APEஇலிருந்து INRக்கான மாற்று விகிதத்தை சரிபார்க்கவும். இப்போது, உங்கள் WazirX கணக்கில் உள்நுழைந்து, “எக்ஸ்சேன்ஜ்” விருப்பத்திலிருந்து INRஐ தேர்ந்தெடுக்கவும். திரையின் வலது பக்கத்தில், அனைத்து விலை விளக்கப்படங்கள், ஆர்டர் புத்தகத் தரவு மற்றும் ஆர்டர் உள்ளீட்டு படிவத்தைக் காண்பீர்கள்.

வாங்கும் ஆர்டர் படிவத்தை நிரப்பும் முன், இந்தியாவில் ஏப்காயின் கிரிப்டோ விலையைப் பார்க்கவும். “ஏப்காயின் வாங்கு” என்பதைக் கிளிக் செய்யவும். கீழே உள்ள படத்தில் BTC ஆர்டருக்குக் காட்டப்பட்டுள்ள படிவத்தைப் போலவே இருக்க வேண்டும்.

ஆர்டர் நிறைவேறுவதற்கு சிறிது காலம் எடுக்கும். ஆனால் ஆர்டர் செயல்படுத்தப்பட்டவுடன், உங்கள் WazirX வேலட்டில் நீங்கள் வாங்கிய ஏப்காயின் நாணயங்களைப் பெறுவீர்கள்.

Buy ApeCoin on WazirX

ஏப்காயினின் எதிர்காலம்

ஏப்காயின் டோக்கனின் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் ஏப்DAOவில் உறுப்பினர் என்பதைத் தவிர, ஏப்காயின் தற்போது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. இருப்பினும், டோக்கன் வைத்திருப்பவர்களுக்கான பயன்பாடுகள் எப்படி இருக்கும், குறிப்பாக அதன் கீழுள்ள NFTக்களுடன் இணைந்தால், என்பதை அதன் எதிர்கால வரைபடம் வெளிப்படுத்துகிறது.

ஏப்காயின் DAO, அதன் சமூகத்தால் நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் ஒரு முழுமையான, ஆன்-செயின் மேடையில் முன்மொழிவு மற்றும் வாக்களிக்கும் வழிமுறைகளை படிப்படியாக ஒருங்கிணைக்கும். DAO இதை கீழ்க்கண்டவாறு நிறைவேற்றலாம்:

 • நிறுவனத்தின் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்குப் பதிலாக நிர்வாக, திட்ட மேலாண்மை மற்றும் மிதமான பணிகளைக் கையாள DAO உறுப்பினர்களை பணியமர்த்துதல்
 • ஒரு சமூக வழிகாட்டல் குழுவை அமைத்தல்
 • ஆன்-செயின் வாக்களிப்பை செயல்படுத்துதல்
 • DAOவின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வருடாந்திர வாக்களிப்பு (ஆரம்ப வாரியம் 6 மாத குறுகிய காலத்திற்கு நடைமுறையில் உள்ளது)

கிரிப்டோ உலகில் ஏப்காயின் தற்போது 27வது இடத்தில் உள்ளது. இதை எழுதும் நேரத்தில் ஏப் கிரிப்டோவின் விலை $19.67ஆக இருந்தாலும், 2022ஆம் ஆண்டின் இறுதியில் ஏப்காயின் $50-$60ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, APEயிலிருந்து INRக்கான மாற்று விகிதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்காயினின் பின்னணியில் உள்ள குழு ஏப் கிரிப்டோவின் பயன்பாட்டு நிகழ்வுகளை அதிகரிப்பதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. APEஇன் மிகைப்படுத்தல் காரணமாக, அது தொடங்கப்பட்டதிலிருந்து 1,305%க்கு மேல் உயர்ந்துள்ளது. நீண்ட காலத்திற்கு கூட, ஏப்காயின் BAYCஇன் பெரும் புகழ் காரணமாக லாபம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BAYC சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சியுடன் ஏப் கிரிப்டோவுக்கான தேவை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply