
Table of Contents
This article is available in the following languages:
கார்டானோ (Cardano)
கார்டானோ என்பது மூன்றாம் தலைமுறையில் பரவலாக்கப்பட்ட ஒரு ப்ரூஃப்-ஆஃப்-ஸ்டேக் பிளாக்செயின் தளமாகும். எத்தீரியத்துடன் மிகவும் ஒத்ததாக இருந்தாலும், கார்டானோ அதன் புதுப்பிப்புகளுக்கான அடிப்படை அலகுகளாக அந்த துறையில் இருக்கும் நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியை நம்பியுள்ளது.OHK, கார்டானோ அறக்கட்டளை மற்றும் EMURGO- ஆகியவை கார்டானோவின் வளர்ச்சிக்கு கூட்டாகப் பொறுப்பில் உள்ளன. IOHK மற்றும் கார்டானோ அறக்கட்டளை ஆகியவை இலாப நோக்கமற்ற நிறுவனங்கள்; EMURGO ஒரு இலாப நோக்கமுள்ள நிறுவனம்.
கார்டானோவை உருவாக்கும் பொறுப்பு IOHKவின்னுடையது, இது ஆய்வுகளை முன்வைக்கவும், அவை அளவிடக்கூடியவை என்பதை உறுதிப்படுத்தவும் அது செயல்படுத்தப்படுவதற்கு முன்பு அவற்றை மதிப்பீடு செய்யவும் உலகம் முழுவதும் பரவியுள்ள கல்வியாளர்களின் குழுவுடன் இயங்குகிறது, கார்டானோ “ADA” எனப்படும் கிரிப்டோகரன்சியில் இயங்குகிறது. இது அடையாள நிர்வாகம் மற்றும் பங்கு கண்டுபிடிப்புக்கான தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.
கூடுதலாக, கார்டானோ, அதன் ப்ரூஃப்-ஆஃப்-ஸ்டேக் அல்காரிதமாக Ouroboro ஐ பயன்படுத்துகிறது – இது பிளாக்குகளை உருவாக்க மற்றும் அதன் பிளாக்செயினில் நிகழும் பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கிறது.
கார்டானோ வரலாறு
கார்டானோவின் வளர்ச்சி 2015 இல் எத்தீரியத்தின் இணை நிறுவனர் சார்லஸ் ஹோஸ்கின்சன் மூலம் தொடங்கியது. இது 2017 இல் செயல்படத் தொடங்கியது. ADA மற்றும் ETH இரண்டும் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் போன்ற ஒரே நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இணைக்கப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட அமைப்பை உருவாக்குவதை இவை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கார்டானோ என்பது எத்தீரியத்தின் நவீனமயமாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பதிப்பாகும், அதே நேரத்தில் எத்தீரியம் இரண்டாம் தலைமுறையாகும். மேலும், அதன் நோக்கம் உலகளவில் வங்கி சேவைகளை வழங்குவதை உள்ளடக்கியது.
கார்டானோவின் முக்கிய பயன்கள் அடையாள மேலாண்மை மற்றும் கண்டறியும் தன்மை. பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல் சேகரிப்பு சம்பந்தப்பட்ட முறைகளை நெறிப்படுத்த அடையாள மேலாண்மை உதவுகிறது. கண்டறியும் தன்மை என்பது ஒரு தயாரிப்பின் உற்பத்தி முறைகளை ஆரம்பம் முதல் முடிக்கப்பட்ட பொருட்கள் வரை கண்டறியவும் மற்றும் போலிப் பொருட்களின் சந்தையை அகற்றவும் பயன்படுகிறது.
கார்டானோவின் டிஜிட்டல் நாணயமான ”ADA”, முதல் கணினி புரோகிராமராக அறியப்பட்டவரும், 19 ஆம் நூற்றாண்டின் கவுண்டஸ் மற்றும் ஆங்கில கணிதவியலாளரான அடா லவ்லேஸின் பெயரால் அழைக்கப்பட்டது.
செயல்பாடுகள், அம்சங்கள், குழு
கார்டனின் நிறுவனர் பிட்ஷேர்ஸ் மற்றும் எத்தீரியம் போன்ற வெற்றிகரமான திட்டங்களுடன் பணிபுரியும் சிறந்த மேம்பாட்டுக் குழுவைக் கொண்டுள்ளார்.
பல அடுக்குகளைப் பயன்படுத்தும் முதல் பிளாக்செயின் இதுவாகும் (அதாவது தீர்வு மற்றும் கணக்கீட்டு அடுக்கு). ADA கிரிப்டோகரன்சி மலிவான மற்றும் விரைவான பரிவர்த்தனைகளை வழங்குகிறது. கார்டானோவின் ஒப்புதல் பொறிமுறையானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உதவிகரமாகவும் நியாயமாகவும் இருக்கிறது.
கார்டானோ தேவைகள்
கார்டானோவின் அல்காரிதமான Ouroboros ஆனது ப்ரூஃப் -ஆஃப்-ஸ்டேக் (PoS) நெறிமுறையை பயன்படுத்தி பிளாக்குகளை மைன் செய்கிறது. இந்த நெறிமுறை, பிளாக் உற்பத்தி செயல்பாட்டின் போது ஆற்றல் செலவினங்களைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைச் செய்ய, பிட்காயினால் பயன்படுத்தப்படும் ப்ரூஃப்-ஆஃப்-வொர்க் (PoW) அல்காரிதம் செயல்பாட்டிற்கு மையமான ஹாஷ் சக்தி அல்லது அதீத கணினி ஆதாரங்களின் தேவையை இது நீக்குகிறது.
கார்டானோவின் PoS அமைப்பில், பிளாக்குகள் உருவாக்கும் ஒரு நோடின் திறனை ஸ்டேக்கிங் வரையறுக்கிறது. ஒரு நோடின் ஸ்டேக் என்பது நீண்ட காலத்திற்கு அது வைத்திருக்கும் ADA வின் அளவிற்கு சமம்.
பணப்புழக்க ஜனநாயகம்
இது நேரடி ஜனநாயகத்திற்கும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கும் இடையில் பயணிக்கிறது:
கார்டானோ அம்சங்கள்:
- மக்கள் தங்கள் கொள்கைகளை நேரடியாகத் தீர்மானிக்கிறார்கள்.
- மக்கள் தங்கள் வாக்களிக்கும் பொறுப்புகளை அவர்களுக்கான கொள்கைகளில் வாக்களிக்கும் ஒரு பிரதிநிதி அல்லது தூதர்களுக்கு மாற்றுகிறார்கள்.
- பிரதிநிதிகள் தாங்களாகவே வாக்களிக்கும் கடமைகளை தங்கள் சார்பாக வாக்களிக்கக்கூடிய மற்றொரு பிரதிநிதிக்கு வழங்கலாம். ஒரு பிரதிநிதி அவருக்கான மற்றொரு பிரதிநிதியை நியமிக்கக்கூடிய இந்தப் பண்பு இடமாற்றம் என்று அழைக்கப்படுகிறது.
- வாக்களிக்கும் வாய்ப்பை பிரதிநிதிக்கு வழங்கிய ஒருவருக்கு, அவர்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்த வாக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்கள் அந்த வாக்கைத் திரும்பப் பெற்று, கொள்கையில் வாக்களிக்கலாம்.
கார்டானோ நன்மைகள்:
- இறுதிக் கொள்கை வகுப்பதில் ஒவ்வொருவரின் கருத்தும் இங்கு பங்கு வகிக்கிறது.
- ஒரு பிரதிநிதியாக ஆக, நீங்கள் ஒரு நபரின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். விலையுயர்ந்த தேர்தல் பிரச்சாரங்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை நீங்கள் செலவிடத் தேவையில்லை.
- நேரடி மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு இடையில் ஊசலாடும் இந்த விருப்பம் சிறுபான்மை குழுக்கள் நியாயமான முறையில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
- இது ஒரு அளவிடக்கூடிய மாதிரியாகும் தங்கள் கொள்கைகளில் வாக்களிக்க நேரம் இல்லாத எவரும் தங்கள் வாக்களிக்கும் பொறுப்புகளை பிரதிநிதியிடம் ஒப்படைக்கலாம்.
கார்டானோ எவ்வாறு வேலை செய்கிறது?
கார்டானோ நெட்வொர்க் ப்ரூஃப்-ஆஃப்-ஸ்டேக் எனப்படும் ஒரு ஒருமித்த பொறிமுறையைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்துகிறது:
- பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க உதவுபவர்கள் வேலிடேட்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
- சரிபார்ப்பவர்கள் “ஸ்டேக்” என்று அழைக்கப்படும் அவர்களின் ADA நாணயங்களில் சிலவற்றை முடக்க வேண்டும்.
- ஒரு வேலிடேட்டர் ஒரு பரிவர்த்தனையைச் சரிபார்த்தவுடன், அவர்கள் கூடுதல் ADA கிரிப்டோகரன்சியை வெகுமதியாகப் பெறுவார்கள்.
- ஸ்டேக் அதிகமாக இருந்தால், வேலிடேட்டர் வெகுமதியை வெல்வதற்கான அதிக வாய்ப்பு உண்டு!
- அவர்கள் பெறும் நாணயங்களின் அளவு அவர்களின் “பங்குகளின்” அளவை அடிப்படையாகக் கொண்டது.
இந்த அமைப்பு திறமையானது மற்றும் குறைந்த மின்சாரம் தேவைப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தது, அதாவது குறைந்த பரிவர்த்தனை கட்டணம்.
மற்ற புரூஃப்-ஆஃப்-ஸ்டேக் நெறிமுறைகள் இது போன்ற ஒரு ரேண்டம் தேர்வை வழங்கவில்லை என கார்டானோ குழு கூறுகிறது. அவர்களின் நிலையான புரூஃப்-ஆஃப்-ஸ்டேக், அனைவரும் வெகுமதியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்கிறது.இது “நேர்மையான பெரும்பான்மை” என்று அழைக்கப்படுகிறது, அதாவது பிளாக்செயினில் கணிசமான பங்கைக் கொண்ட நபர்கள் (உதாரணமாக, நிறைய ADA நாணயங்களைக் கொண்டுள்ளவர்கள்) நெட்வொர்க் பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், நம்பகமானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான காரணமாக இது அமைகிறது.
கார்டானோ எதிர்காலம் மற்றும் வழிமுறைகள்
பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள நபர்கள் பற்றிய பொருத்தமற்ற தகவலை விநியோகிப்பதன் மூலம் தனிப்பட்ட முறையில் செயல்களைச் செய்யும் பிளாக்செயினை கார்டானோ உருவாக்குகிறது.
உங்கள் நண்பருக்கு 100 ADA நாணயங்களை நீங்கள் அனுப்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள நபர்கள் நீங்கள் இருவர் மட்டுமே. வேலிடேட்டர்கள் நிதி பரிமாற்றத்தைச் சரிபார்க்கும்போது, பரிவர்த்தனைக்குத் தொடர்புடைய தகவலை அவர்கள் பராமரிக்க வேண்டும்.
“ஷார்டிங்” எனப்படும் ஒரு நெறிமுறையை நிறுவவும் குழு கருத்தில் கொண்டுள்ளது. அதிகமான நபர்கள் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதால், ஒரு வினாடிக்கு பரிவர்த்தனைகளின் அளவு அதிகரிக்கிறது.
கார்டானோ 2017 இன் பிற்பகுதியில் ஒரு சோதனையை நடத்தியது, இது பிளாக்செயினை ஒரு நொடிக்கு 257 பரிவர்த்தனைகளை செயல்படுத்த அனுமதித்தது. இது பிட்காயின் மற்றும் எத்தீரியத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகம் ஆகும். எத்தீரியம் போலவே, கார்டானாவும் ஒரு புதுமையான ஒப்பந்த தளமாகும். இருப்பினும், கார்டானோ ஒரு அடுக்கு கட்டமைப்பு மூலம் அளவிடுதல் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. இது ஒரு அறிவியல் கோட்பாடு மற்றும் ஆராய்ச்சி-உந்துதல் கருப்பொருளில் இருந்து உருவான முதல் பிளாக்செயின் தளமாகும். இத்தோடு முடிந்துவிடவில்லை ஹாஸ்கெல் புரொகிராமிங் மொழியில் உருவாக்கப்பட்ட முதல் தளங்களில் இதுவும் ஒன்றாகும். டிஜிட்டல் நிதிகளை அனுப்பவும் பெறவும் இதைப் பயன்படுத்தலாம்.
எளிதாக்கப்பட்ட ADA வர்த்தகம்
ADA என்பது WazirX ராப்பிட் லிஸ்டிங் முயற்சியின் ஒரு பகுதியாகும். WazirX இல் ADA உடன் நீங்கள் என்ன செய்யலாம் என்பது இங்கே..
- டெபாசிட்கள் — வேறொரு வேலட்டிலிருந்து உங்கள் WazirX வேலட்டில் ADAவை டெபாசிட் செய்ய முடியாது.
- வர்த்தகம் — நீங்கள் எளிதாக எங்கள் USDT அல்லது BTC சந்தையில் ADAவை வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம்.
- திரும்ப எடுத்தல் —உங்கள் WazirX வாலட்டில் இருந்து ADA வை திரும்ப எடுக்க முடியாது. அதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்யலாம் என்றால், அதை எங்கள் USDT அல்லது BTC சந்தையில் விற்கலாம்.
கார்டானோ வாங்குவது எப்படி?
இந்தியாவில் கார்டானோவை பல எக்ஸ்சேஞ்ஜுகள் வழங்குகின்றன. ADA நாணயங்களை வாங்குவது அல்லது வர்த்தகம் செய்வது BTC, ETH போன்ற கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்வது போன்றது. நீங்கள் விரும்பும் ஒரு வர்த்தகரை முதலில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும், KYC க்குப் பிறகு ஒரு கணக்கை உருவாக்கவும், உங்கள் வேலட்டில் பணத்தை டெபாசிட் செய்து வர்த்தகத்தைத் தொடங்கவும்!
இந்தியாவில் WazirX இலிருந்து கார்டானோவை வாங்கும்போது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள்:
1. ஒரு WazirX கணக்கை உருவாக்குங்கள்
- WazirX இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யவும்
- உங்கள் இமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல்லை சேர்க்கவும்
- WazirX இன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து, நீங்கள் ஒப்புக்கொண்டால் செக்பாக்ஸை டிக் செய்யவும்.

- நீங்கள் முடித்ததும், பதிவு செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் இன்பாக்ஸில் தானாக அனுப்பப்பட்ட சரிபார்ப்பு மின்னஞ்சலைத் திறந்து மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்

- உங்கள் KYC யை சரிபார்க்க, உங்கள் நாட்டை தேர்வு செய்யவும்.

- சரிபார்ப்பு முடிந்தவுடன் உங்கள் கணக்கு செயலாக்கம் பெறும்!
2. பணத்தைச் சேர்க்கவும்
நீங்கள் இரண்டு வழிகளில் பணத்தை (இந்திய ரூபாய்) டெபாசிட் செய்யலாம்:
- UPI/IMPS/NEFT/RTGS மூலம் டெபாசிட் செய்தல். சரிபார்ப்பு நோக்கங்களுக்காக உங்கள் பரிவர்த்தனை விவரங்களை WazirX க்கு சமர்ப்பிக்க வேண்டும்.
- IMPS/NEFT/RTGS மூலமாக டெபாசிட் செய்தல். இந்த விஷயத்தில், மேலே குறிப்பிட்டுள்ள பரிவர்த்தனை விவரங்கள் பகுதியை நீங்கள் தவிர்க்கலாம்.
3. ADA வாங்குதல்
நீங்கள் தேர்ந்தெடுத்த வர்த்தக இணையதளத்தில் எக்ஸ்சேஞ்ஜ் விகிதத்தை சரிபார்க்கவும். எடுத்துக்காட்டாக, இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில், விலைகள்:

- உங்கள் திரையின் கீழ் வலதுபுறத்தில், வாங்க/விற்க விருப்பத்தைக் காண்பீர்கள்
- வாங்க என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் விலையை INR இல் நிரப்பி மற்றும் நீங்கள் வாங்க விரும்பும் ADA அளவை உள்ளிடவும்.
- கடைசி படிநிலையாக “ADA வாங்கு” (“BUY ADA” ) என்பதை கிளிக் செய்யவும்
இதோ! முடிந்தது! இவை அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தவுடன், ADA நாணயங்கள் உங்கள் வேலட்டில் சேர்க்கப்படும்!
WazirX இல் நாங்கள் ADA க்கு பணம் வழங்கக்கூடியவர்களை அழைக்கிறோம். WazirX இல் உங்கள் டோக்கன்களை சந்தைப்படுத்த உங்களை அனுமதிக்கும் தனித்துவமான டெபாசிட் முகவரியை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். இப்போதே இந்தப் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்! WazirX இல் எங்களது USDT மற்றும் BTC சந்தைகளில் கார்டானோவை (ADA) வாங்க, விற்க, வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
