
ஒரு கேமில் நுழைந்து நிஜ உலக மதிப்புள்ள மெய்நிகர் சொத்தைப் பெறுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். டிசென்ட்ராலாண்டுக்கு (அதன் மானா நாணயத்துடன்) நன்றி, இது உண்மையில் நடந்து விட்டது.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிசென்ட்ராலாண்ட், 2015 இல் அதன் தொடக்கத்திலிருந்து தற்போது வெகுதூரம் முன்னேறியுள்ளது. பயனர்கள் மெய்நிகர் நிலத்தைப் பெறுவதற்கும், NFT க்களை வாங்குவதற்கும், மேலும் தாங்கள் வாங்கிய நிலத்தில் கேசினோ முதல் ஹோட்டல்கள் வரை எதையும் கட்டுவதற்கும் அனுமதிக்கும் முதல் கேமிங் திட்டம் இதுவாகும். தளத்தில் அவர் வாங்கும் மெய்நிகர் சொத்துக்களின் முழுக் கட்டுப்பாட்டையும் பயனரே வைத்திருப்பதை இது உறுதி செய்கிறது.Get
டிசெண்ட்ராலாண்ட் (மானா) என்றால் உண்மையில் என்ன?
நீங்கள் எப்போதாவது செகண்ட் லைஃப் விளையாடியிருந்தாலோ அல்லது கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்திருந்தாலோ, டிசென்ட்ராலாண்ட் உங்களுக்கு ஆர்வத்தை தரலாம், ஏனெனில் இது இரண்டு கருத்துகளின் கலவையாகும். 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, இயங்குதளம் ஒரு எளிய 2D சோதனையில் இருந்து மாபெரும் 3D பிரபஞ்சமாக வளர்ந்துள்ளது.
டிசென்ட்ராலாண்ட் (மானா) என்பது எத்தீரியம் அடிப்படையிலான ஒரு மெய்நிகர் தளமாகும், இது பயனர்களை அதன் உள்ளடக்கம் மற்றும் பயன்பாடுகளை உருவாக்கி, அனுபவிக்க மற்றும் பணமாக்க அனுமதிக்கிறது. இந்த மெய்நிகர் உலகில் உள்ள பயனர்கள் நிலத்தை வாங்குகிறார்கள், பின்னர் அவர்கள் அவற்றில் சுற்றித் திரியலாம், கட்டிடங்கள் எழுப்பலாம் மற்றும் அதை பணமாக்கலாம்.
டிசென்ட்ராலாண்டின் படைப்பாளிகளான எஸ்டபன் ஆர்டானோ மற்றும் ஏரி மெய்லிச் ஆகியோர் டிஜிட்டல் ரியல் எஸ்டேட் பிளாட்டுகள், பொருள்கள் மற்றும் பிற தனிப்பயனாக்கக்கூடிய சொத்துகளுடன் ஒரு மெய்நிகர் பகுதியை உருவாக்கியுள்ளனர். இவை அனைத்தையும் டிசென்ட்ராலாண்டின் ERC-20 டோக்கனான மானா கொண்டு வாங்க முடியும்.
டிசென்ட்ராலாண்டர்கள், கிரிப்டோகரன்சி அல்லது ஃபியட் பணம் மூலம் பல எக்ஸ்சேன்ஜுகளில் மானாவை வாங்கலாம். ERC-721 நான்-ஃபன்ஜிபிள் டோக்கன்கள், டிசென்ட்ராலாண்டின் தனித்துவமான சொத்துகளான நிலம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை பிரதிபலிக்கின்றன.
இந்தியாவில் மானாவை வாங்குவது எப்படி?
உங்கள் WAZIRX கணக்கில் உள்நுழைந்து, மானாவை வாங்குவதற்கு “எக்ஸ்சேன்ஜ்” விருப்பத்திலிருந்து INR ஐ தேர்ந்தெடுக்கவும். இந்திய ரூபாய்க்கு நிகரான அனைத்து கிரிப்டோகரன்சிகளுக்கும் இது ஒரு ஸ்பாட் மார்க்கெட்டாகும். திரையின் வலது பக்கத்தில், அனைத்து விலை அட்டவணை, ஆர்டர் புக் தகவல் மற்றும் ஆர்டர் உள்ளீட்டு படிவத்தைக் காண்பீர்கள்.
வாங்கும் ஆர்டர் படிவத்தை பூர்த்தி செய்து, “மானா வாங்கு” என்பதைக் கிளிக் செய்யவும். ஆர்டர் நிறைவேற சிறிது காலம் எடுக்கும். ஆர்டரை மாற்றப்பட்டவுடன், நீங்கள் மானா நாணயங்களைப் பெறுவீர்கள்.
#1 WazirX இல் பதிவு செய்யுங்கள்
ஒரு கணக்கை உருவாக்க இங்கு கிளிக் செய்யவும்
#2 கணக்கை உருவாக்க விவரங்களை நிரப்பி தொடங்கவும்
உங்கள் தற்போதைய பயனர் மின்னஞ்சல் ஐடியை நிரப்புவதன் மூலம் தொடங்கவும், எனவே நீங்கள் எந்த சரிபார்ப்பு படிநிலைகளையும் தவற விட மாட்டீர்கள்.
ஆல்பா-நியுமரிக் எழுத்துக்களுடன் ஒரு பாதுகாப்பான
கடவுச்சொல்லை உருவாக்கவும்
#3 மின்னஞ்சல் சரிபார்ப்பு மற்றும் கணக்கு பாதுகாப்பு அமைத்தல்
சேர்க்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்த பிறகு (மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட சரிபார்ப்பு இணைப்பை கிளிக் செய்வதன் மூலம்) கணக்கு உருவாக்கத்தைத் தொடரவும்.
உங்கள் கணக்கின் பாதுகாப்பை நீங்கள் கட்டமைக்க வேண்டும். WazirX கணக்கு பாதுகாப்பிற்கு இரண்டு தேர்வுகளை வழங்குகிறது.
இரண்டில் எந்த ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் உங்களுக்கு விருப்பம் உள்ளது. இருப்பினும், மொபைல் SMS ஐ விட அங்கீகார ஆப் மிகவும் பாதுகாப்பானது, ஏனென்றால் அது தாமதமான வந்தடைதல் மற்றும் சிம் கார்டு ஹேக்கிங் ஆபத்திற்கு உட்பட்டதாகும்.
#4 ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் முதலீட்டுத் தேவைகளின் அடிப்படையில் இந்தியாவை (நாடு) தேர்வு செய்து “இப்போது தவிர்க்கவும்” அல்லது “KYC” ஐ பூர்த்தி செய்யவும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் KYC செயல்முறையை முடிக்கவில்லை என்றால், உங்கள் WazirX கணக்கு மூலம் டெபாசிட் மற்றும் வர்த்தகம் மட்டுமே செய்ய முடியும். இருப்பினும், திரும்பப் பெறவும் மற்றும் P2P வர்த்தகம் செய்யவும், நீங்கள் முதலில் KYC ஐ முடிக்க வேண்டும்.
KYC ஐ முடிக்க நீங்கள் சில விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
- KYC ஆவணங்களில் உள்ளபடி முழுப்பெயர்
- பிறந்த தேதி
- KYC ஆவணங்களில் உள்ளபடி முகவரி
- நடைமுறையை முடிக்க உங்கள் KYC ஆவணங்களின் ஸ்கேன் செய்த நகல் மற்றும் ஒரு செல்ஃபீ.
பிகு: வழக்கமாக 24 இலிருந்து 48 மணி நேரத்திற்குள் உங்கள் கணக்கு சரிபார்க்கப்படும்.
#5 உங்கள் WazirX கணக்கிற்கு நிதியை மாற்றவும்
WazirX வேலட் IMPS, UPI, RTGS மற்றும் NEFT ஐப் பயன்படுத்தி INR இல் டெபாசிட்களை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் குறைந்தபட்சம் ரூ.100 உங்கள் WazirX கணக்கில் டெபாசிட் செய்யலாம், அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.
உங்கள் கணக்கில் INR ஐ டெபாசிட் செய்ய உள்நுழைந்து “நிதி” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். “ரூபாய் INR” என்பதைத் தேர்ந்தெடுத்து, “டெபாசிட்” என்பதைக் கிளிக் செய்யவும். இதற்கு, உங்கள் வங்கிக் கணக்கை உங்கள் WazirX கணக்குடன் இணைக்க வேண்டும்
டிசென்ட்ராலாண்ட்: அடிப்படைகள்
டிசென்ட்ராலாண்ட் என்பது மெய்நிகர் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களை இணைக்கும் ஒரு ஆன்லைன் சூழலாகும். மற்ற ஆன்லைன் கேம்களைப் போலல்லாமல், பங்கேற்பாளர்கள் ஆன்லைன் உலகின் விதிகளை நேரடியாக கையாள முடியும். டோக்கன் வைத்திருப்பவர்கள் DAO மூலம் இன்-கேம் மற்றும் நிறுவன முடிவுகளில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்த செயல்முறை, அனுமதிக்கப்பட்ட தயாரிப்புகள் முதல் DAO கருவூல முதலீடுகள் வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நான்-ஃபன்ஜிபிள் டோக்கன்கள், இன்-கேம் மதிப்பு மிக்க பொருட்களான ஆடை, பொருள்கள் மற்றும் நிலம் போன்ற மெய்நிகர் ரியல் எஸ்டேட்டை குறிக்கின்றன. இந்த டோக்கன்கள் பயனர்களின் கிரிப்டோ வேலட்களில் சேமிக்கப்பட்டு, டிசென்டர்லாண்ட் சந்தையில் உள்ள பிற பயனர்களுக்கு விற்கப்படலாம்.
வர்த்தகப் பொருட்கள் மற்றும் சொத்துக்களைத் தவிர, மற்றவர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய விளையாட்டுகள், செயல்பாடுகள் மற்றும் கலைப்படைப்புகளால் வீரர்கள் தங்கள் பகுதியை அலங்கரிக்கலாம். உங்கள் நிலத்தை பணமாக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தாங்கள் சொல்வதன் மூலம் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பது முற்றிலும் அவர்கள் கையில் உள்ளது.
டிசென்டர்லாண்ட் ஆனது விளம்பரம் மற்றும் உள்ளடக்க பராமரிப்பு உட்பட பரந்த அளவிலான பயன்பாடுகளை வழங்குகிறது. இருப்பினும், NFTகளுடன் தொடங்க விரும்பும் புதிய வீரர்களுக்கு நுழைவதற்கான தடைகள் குறிப்பிடத்தக்கவை. எத்தீரியம் ஆற்றல் கட்டணம் சில அலங்கார பொருட்களின் விலையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குகிறது. நிலத்தின் விலைகள் நூற்றுக்கணக்கான டாலர்களை எட்டக்கூடும், இது சில விளையாட்டு வீரர்களுக்கு தங்கள் உரிமையை அணுக முடியாததாக ஆக்குகிறது.
கிரிப்டோகரன்சி வர்த்தகம் அதிக அளவிலான சந்தை அபாயத்தைக் கொண்டுள்ளது. பட்டியலிடப்பட்ட டோக்கன்கள் தீவிர விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகின்றன என்பதால், அவற்றை வர்த்தகம் செய்வதற்கு முன், முழுமையான இடர் மதிப்பீட்டைச் செய்வதை உறுதிசெய்யவும்.
டிசென்ட்ராலாண்ட் (மானா): எதிர்கால சாத்தியம்
மானாவின் விலை ஆகஸ்ட் 2020 இல் வெறும் $ 0.40 இல் இருந்து நவம்பர் 2021 இல் $ 4 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இன்று, அதன் மொத்த சந்தை மூலதனம் சுமார் $ 650 மில்லியன் ஆகும், இது 31 வது மிகவும் மதிப்புமிக்க கிரிப்டோகரன்சி ஆகும்.
ஃபேஸ்புக் மெட்டாவெர்ஸில் கவனம் செலுத்துவது, மானாவின் சமீபத்திய விலை உயர்வுக்கு ஒரு ஊக்கமாக இருக்கலாம். இது இப்போது பிட்காயினின் விலை மாற்றத்திலிருந்து விடுவித்துக்கொண்டதாக தெரிகிறது மற்றும் பிட்காயின் சரி செய்து கொண்டாலும் கூட இது தொடர்ந்து அணிவகுத்து வருகிறது.
