Skip to main content

இந்தியாவில் டெதர் (USDT) காயினை எப்படி வாங்குவது (How to Buy Tether (USDT) Coin in India)

By ஏப்ரல் 21, 2022மே 28th, 20224 minute read
how to buy tether (usdt) coin in India

டெதர் (USDT) என்பது ஒரு ஸ்டேபிள்காயின், இதன் டோக்கன்கள் புழக்கத்தில் உள்ள சம எண்ணிக்கையிலான அமெரிக்க டாலர்களால் ஆதரிக்கப்படுகின்றன, இதன் விலை  $1.00 ஆக உள்ளது. டெதர் டோக்கன்கள், கிரிப்டோ சந்தை பிட்ஃபிநெக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டு USDT என்ற குறியீட்டின் கீழ் வர்த்தகம் செய்யப்படுகின்றன, இவை டெதர் நெட்வொர்க்கின் சொந்த டோக்கன்களாகும்.

அடிப்படையில், ஸ்டேபிள்காயின்கள் என்பது ஒரு வகையான கிரிப்டோகரன்சி ஆகும், இது இணை ஈடு மூலம் அல்லது குறிப்புச் சொத்து அல்லது அதன் டெரிவேட்டிவ்களை வாங்கும் மற்றும் விற்கும் வழிமுறை அமைப்புகளின் மூலம் விலை நிலைத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றை US டாலர் போன்ற நாணயத்துடனோ அல்லது தங்கம் போன்ற ஒரு பண்டத்தின் விலையுடனோ இணைக்கலாம். ஸ்டேபிள்காயின்கள் பெரும்பாலும்  டாலர், யூரோ அல்லது ஜப்பானிய யென் போன்ற அசல் பாரம்பரிய நாணயங்களைப் போலவே அதற்கென நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் பராமரிக்கப்படும். ஊக முதலீடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக இவற்றை பரிமாற்ற வழிமுறையாகவும் செல்வத்தைச் சேமிப்பதற்கான ஒரு வழிமுறையாகவும் பயன்படுத்தலாம்.

கிரிப்டோ தொடர்பாக அதிக அளவு ஆபத்து இருப்பதன் காரணமாக, பல நிறுவனங்கள் டிஜிட்டல் நாணய சந்தைகளில் வணிகம் செய்வதைத் தவிர்க்கின்றன. இந்த இடத்தில்தான் ஸ்டேபிள்காயின்கள் நுழைகின்றன. கிரிப்டோகரன்சியை அதிக ஆபத்துள்ள முதலீடாக பார்ப்பது மட்டுமல்லாமல மதிப்பினைக் கொண்டதாகச் செயல்பட அனுமதிப்பதன் மூலம், கிரிப்டோ துறையின் நிலையில்லாத தீவிர சிக்கல்களை அகற்ற ஸ்டேபிள்காயின்கள் முயற்சி செய்கின்றன.  கொந்தளிப்பு நிறைந்த கிரிப்டோகரன்சி சந்தையில், பணப்புழக்கத்தை ஏற்படுத்த பணமாகவும்  பிட்காயின், ஸ்டேபிள்காயின்கள் போன்ற கிரிப்டோகரன்சியாகும் அடிக்கடி மாற்றுவது கடினமாக இருக்கும்.

டெதர் என்பது US டாலருடன் இணைக்கப்பட்ட பல்வேறு ஸ்டேபிள்காயின்களில் மிகவும் பிரபலமானது. கிரிப்டோகரன்சி வர்த்தகர்கள் கிரிப்டோகரன்சிகளை வாங்கும் போது US டாலருக்குப் பதிலாக டெதரை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். கிரிப்டோ சந்தை மகிவும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் காலங்களில் மிகவும் நிலையாக இருக்கும் சொத்தில் முதலீட்டுக்கான அடைக்கலம் தேடுவதற்கான வாய்ப்பை இது திறம்பட வழங்குகிறது. டெதரின்’ விலை பொதுவாக $1க்கு சமமாக இருக்கும், ஏனெனில் இது டாலருடன் தொடர்புடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. மதிப்பில் மாறுபடும் மற்ற கிரிப்டோகரன்சிகளைப் போலல்லாமல், டெதரின் விலை பொதுவாக மாறாமல் இருக்கும்.

Get WazirX News First

* indicates required

இவற்றின் விகிதம் 1:1 என்ற அளவில் இருந்தபோதிலும், ஸ்டேபிள்காயின்களின் விலை சிறிய ஏற்ற இறக்கங்களை சந்திக்கக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது. அப்படி இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில், ஸ்டேபிள்காயின் விலையில் உள்ள மாறுபாடு சுமார் 1 முதல் 3 சென்ட் வரை மட்டுமே இருக்கும். இது பெரும்பாலும் பணப்புழக்கம், விநியோகம் மற்றும் தேவை ஆகியவற்றில் உள்ள ஏற்ற இறக்கங்களாலேயே இருக்கும், இவை பரிவர்த்தனை அளவு, சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் வர்த்தக அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேற்கூறியவை பாதிக்கப்படும்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில், USDT சந்தை மூலதனத்தின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கிரிப்டோகரன்சி ஆகும், இதன் மதிப்பு  $82.7 பில்லியனை விட  அதிகமாகும். 

டெதர் நம்பகமான முதலீடா?

கடந்த காலங்களில் இவற்றைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்தாலும், டெதர் ஒப்பீட்டளவில் நிலையான கிரிப்டோகரன்சியாக உள்ளது. இது பல ஆண்டுகளாக பல போட்டியாளர்களை எதிர்கொண்டாலும், டெதர் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்டேபிள்காயினாக உள்ளது. இது பல நன்மைகளை வழங்குகிறது, அதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், நாம் ஏற்கனவே பார்த்தது போல, இது மற்ற கிரிப்டோகரன்சிகளின் தீவிர ஏற்ற இறக்கத்தைத் தவிர்க்க முதலீட்டாளர்களுக்கு உதவியாக இருக்கிறது. மதிப்பை USDTக்கு மாற்றுவதன் மூலம், வர்த்தகர்கள் கிரிப்டோகரன்சிகளின் விலையில் ஏற்படும் திடீர் வீழ்ச்சிக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்கலாம்.

டெதர் போன்ற ஸ்டேபிள்காயின்கள் டெதருக்கு நிகராக எந்த கிரிப்டோகரன்சியையும் மாற்றுவதை எளிமையாகவும் விரைவாகவும் ஆக்கியுள்ளன, அதேசமயம் கிரிப்டோகரன்சியை பணமாக மாற்றுவதற்கு நாட்கள் எடுக்கும் மற்றும் பரிவர்த்தனைக்கான கட்டண செலவுகளும் ஏற்படும். இது பரிமாற்ற தளங்களுக்கு பணப்புழக்கத்தையும் முதலீட்டாளர்களுக்கு செலவில்லாத வெளியேறும் வியூகங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் முதலீடுகளின் நெகிழ்வுத்தன்மையையும் நிலைத்தன்மையையும் அதிகரிக்கிறது. கிரிப்டோக்களை எளிதாக வாங்குவதில் டெதர் சிறந்தது, ஏனெனில் பெரும்பாலான மக்கள் பிட்காயின் அல்லது எத்தீரியத்தை அதன் நிலையற்ற தன்மையின் காரணமாக நம்புவதைத் தவிர்க்க விரும்புகிறார்கள்.

கடந்த காலத்தில் டெதர்  $1க்கு கீழே சரிந்து பிறகு  $1க்கு மேல் உயர்ந்த போதிலும் டெதரால் அதன் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது, ஏனெனில் அது அசல் பணத்துடன் தொடர்புடையதாக உள்ளது, மேலும் டெதரின் இருப்புகளால் இது முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. இந்த காரணிகள் அனைத்தும் நிச்சயமாக டெதரை ஒரு தகுதியான முதலீடாக ஆக்குகின்றன. 

இந்தியாவில் INR கொடுத்து USDT வாங்குவது எப்படி?

இந்தியாவில்  INR மூலம் USDTஐ வாங்குவது எப்படி என்று நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் முன்னணி கிரிப்டோகரன்சி சந்தையாகத் திகழும் WazirX ஐ தவிர வேறு எதையும் பார்வையிட வேண்டாம். USDTஐ INR ஆக மாற்றும் விகிதங்களைக் கொண்டு, WazirX உங்களுக்கு சில எளிய படிநிலைகள் மூலமாகவே இந்தியாவில் USDTஐ வாங்க அனுமதிக்கிறது. 

WazirX மூலம்  இந்தியாவில் USDTஐ வாங்க , பயனர்கள் முதலில் தங்களை WazirXஇல் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். KYC செயல்முறைகள் நிறைவடைந்ததும், பயனர்கள் பணத்தை டெபாசிட் செய்யத் தொடங்கலாம், மேலும்  INR கொடுத்து USDTஐ வாங்கலாம்

WazirX மூலம்  இந்தியாவில் USDTஐ வாங்குவது என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல் இதோ இங்கே.

படிநிலை 1: உங்களுக்கான கணக்கு ஒன்றைத் திறக்கவும்

  • இணையதளம் மூலமாகவோ அல்லது செயலியைப் பதிவிறக்கம் செய்தோ WazirXஇல் பதிவு செய்யவும். 
  • உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு கடவுச்சொல்லை அமைக்கவும்.
  • சேவை விதிமுறைகளைப் பார்வையிட்டு, தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து, இறுதியாக பதிவு செய்க என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். 
Create your account

படிநிலை 2: உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும் 

நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு சரிபார்ப்பு மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்படும். சரிபார்ப்பில், கீழே காட்டப்பட்டுள்ளபடி செய்தி ஒன்றைப் பெறுவீர்கள். 

Verify your email

படிநிலை 3: பாதுகாப்பு வழிமுறைகளை அமைத்திடவும்

அடுத்து, நீங்கள் பாதுகாப்பு அமைப்புகள் என்ற பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். பாதுகாப்பு நோக்கங்களுக்காக, Google அங்கீகரிப்பு செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் கணக்குடன் இணைத்து 2-காரணி அங்கீகாரத்தை (2FA) இயக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

Set up security measures

படிநிலை 4: KYC சரிபார்ப்பு

முதலில், KYC சரிபார்ப்பை நிறைவு செய்ய வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் நாட்டைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு உங்கள் KYCஐ சரிபார்த்து, அந்தச் செயல்முறையை நிறைவு செய்யவும். 

KYC Verification

படிநிலை 5: உங்கள் தொகையை டெபாசிட் செய்யவும்

  • INRஐ டெபாசிட் செய்தல்

INR தொகையை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து UPI/IMPS/NEFT/RTGS வழியாக உங்கள் WazirX கணக்கில் டெபாசிட் செய்யலாம். வங்கியின் பெயர், கணக்கு எண், IFSC குறியீடு உள்ளிட்ட உங்கள் விவரங்களை உள்ளிட்டால் போதும்.

  • கிரிப்டோகரன்சியை டெபாசிட் செய்தல்

கிரிப்டோகரன்சிகளை உங்கள் வாலட் அல்லது பிற வாலட்களில் இருந்து உங்கள் WazirX கணக்கிற்கு பரிமாற்றம் செய்யலாம். முதலில் உங்கள் WazirX வாலட்டில் இருந்து உங்கள் டெபாசிட் முகவரியைப் பெறுங்கள். பின்னர், உங்கள் கிரிப்டோகரன்சியை பரிமாற்றம் செய்வதற்கு, இந்த முகவரியை உங்கள் மற்றொரு வாலட்டின் ‘முகவரியை அனுப்புக’ என்ற பகுதியில் பகிரவும்.

படிநிலை 6: INR கொடுத்து USDTஐ வாங்கவும்

சமீபத்திய USDT/INR விலைகளைப் பார்க்க WazirX செயலி அல்லது இணையதளத்தில் உள்நுழைந்து, USDT/INR விலை டிக்கரைக் கிளிக் செய்யவும். 

Buy USDT with INR

கீழே நகர்த்துகையில், வாங்க/விற்க என்ற பட்டனைப் பார்ப்பீர்கள். அடுத்து, நீங்கள் USDTஐ வாங்க விரும்பும் தொகையை INRஇல் உள்ளிடவும். உங்கள் WazirX கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட உங்கள் INR இருப்பு நீங்கள் உள்ளிட்ட இந்தத் தொகையை விட அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருக்க வேண்டும். 

Graphical user interface, text, applicationDescription automatically generated

USDTஐ வாங்குக என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆர்டர் செயல்படுத்தப்பட்டதும், நீங்கள் வாங்கிய USDT உங்கள் WazirX வாலட்டில் சேர்க்கப்படும். 

இவ்வாறுதான், ஒரு சில எளிய படிநிலைகளில் இந்தியாவில் INR கொடுத்து USDTஐ வாங்கலாம்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply