Skip to main content

கிரிப்டோகரன்சியை பணமாக மாற்றுவது எப்படி? (How To Convert Your Cryptocurrency Into Cash?)

By ஏப்ரல் 26, 2022மே 27th, 20223 minute read
How to convert your cryptocurrency into cash - WazirX

கிரிப்டோகரன்சியானது முதலீட்டாளர்கள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்கள் மத்தியில் அசல் பணத்திற்கு ஒரு பிரபலமான மாற்றீடாக உபயோகிக்க பெருமளவு ஆர்வத்தைக் கவர்ந்துள்ளது. இருப்பினும், பிளாக்செயின் அடிப்படையிலான டிஜிட்டல் கரன்சிகளின் கருத்தாக்கம் ஒரு சவாலான சிக்கலைக் கொண்டுள்ளது. ஆனால் அசல் பணத்தை போல இந்தக் கரன்சியை செலவிடுவது கடினமாக இருக்கலாம். ஆனால் மக்கள் தங்கள் அன்றாட நிதிக்காக பிட்காயின் மற்றும் எத்தீரியம் போன்ற கிரிப்டோகரன்சிகளை மிகவும் முக்கிய வழிகளில் பயன்படுத்த உதவும் வழிகள் விரைவில் வர உள்ளன. கிரிப்டோ உலகத்தில் உள்ள கேள்விகளில் ஒன்று என்னவென்றால், 2022இல் கிரிப்டோவை பணமாக மாற்றுவது எப்படி என்பதுதான்?

டிஜிட்டல் கரன்சிகள் மிகவும் மாறக்கூடியவை, இவற்றின் மதிப்புகள் வியத்தகு அளவில் ஏற்ற இறக்கமாக இருக்கும். டிஜிட்டல் கரன்சிகளைச் சுற்றி நிலவும் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, ஆபத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாத முதலீட்டாளர் தங்கள் டிஜிட்டல் பணத்தை அசல் பணமாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கலாம். இருப்பினும், கிரிப்டோவை பணமாக மாற்றுவதற்கான அனைத்து வழிகளின் மூலம் கிடைக்கும் ஆதாயங்களுக்கு வரி விதிக்கப்படும். இந்தக் கட்டுரையில், 2022 ஆம் ஆண்டில் கிரிப்டோவை பணமாக மாற்றுவது எப்படி என்பது குறித்த உங்கள் கேள்விக்கு நாங்கள் பதிலளிப்போம்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சியை பணமாக மாற்றுவது எப்படி என்பது குறித்த வழிகாட்டுதல்

கிரிப்டோகரன்சி சந்தை தளம் மூலமாக மாற்றலாம்

இந்தியாவில் கிரிப்டோவை பணமாக மாற்றுவது எப்படி என்பது குறித்த எங்கள் வழிகாட்டுதலில் உள்ள முதல் வழி WazirX போன்ற கிரிப்டோகரன்சி சந்தை தளங்கள் மூலம் மாற்றுவதாகும். அதன் பிறகு, நீங்கள் சந்தை தளம் அல்லது ஒரு தரகர் மூலம் எந்தக் கிரிப்டோகரன்சியையும் பணமாக மாற்றலாம். இது வெளிநாட்டு விமான நிலையங்களில் உள்ள நாணய மாற்று முறையைப் போலவேயாகும். 

  • WazirX போன்ற சந்தையில் உங்கள் கிரிப்டோகரன்சியை டெபாசிட் செய்ய வேண்டும்.
  • பின்னர் நீங்கள் விரும்பிய கரன்சியில் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். 
  • சிறிது நேரம் கழித்து உங்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும்.

இந்த முறை பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, ஆனால் சில நேரங்களில் உங்கள் கணக்கிற்கு பணம் வந்து சேருவதற்கு 4-6 நாட்கள் ஆகும். மேலும், கிரிப்டோகரன்சி சந்தைகள் ஒரு பரிவர்த்தனை கட்டணத்தை வசூலிக்கின்றன, இது ஒவ்வொரு சந்தை தளத்திற்கு பொறுத்தும் மாறுபடும்.

Get WazirX News First

* indicates required

பியர்-டூ-பியர் நெட்வொர்க் மூலமாக மாற்றலாம்

இந்தியாவில் கிரிப்டோவை பணமாக மாற்றுவது எப்படி என்பது பற்றிய எங்கள் வழிகாட்டுதலில் அடுத்தது, பியர்-டு-பியர் தளம் மூலம் மாற்றுவது பற்றி பார்க்கலாம். உங்கள் கிரிப்டோகரன்சிகளை விற்பனை செய்வதன் மூலம் பணமாக மாற்ற, பியர்-டூ-பியர் தளத்தைப் பயன்படுத்தலாம். இந்த முறை உங்களுக்கு விரைவாகவும், எவரும் அறியாத வகையில் பணத்தைத் திரும்பப் பெறும் வசதியை வழங்குகிறது. இந்த முறையில் உள்ள பிற நன்மைகள் மூன்றாம் தரப்பு சந்தை தளத்தை விட குறைந்த கட்டணம் மற்றும் சிறந்த பரிமாற்று விகிதத்தி்ற்கான சாத்தியம் ஆகியவை அடங்கும். 

  • முதலில், நீங்கள் பியர்-டூ-பியர் சந்தை தளத்தில் பதிவு செய்து, வாங்குபவரின் இருப்பிடத்தைத் தேட வேண்டும்.
  • பின்னர், சந்தையில் வாங்குபவர்கள் குறித்து தேடுங்கள். பெரும்பாலான பியர்-டூ-பியர் தளங்கள் எஸ்க்ரோ சேவையை வழங்குகின்றன. அதாவது, பணம் பெற்றுக்கொண்டதை உறுதிசெய்யும் வரை, உங்கள் கிரிப்டோகரன்சிகளை வாங்குபவரால் அணுக முடியாது.

பியர்-டூ-பியர் விற்பனை முறையைப் பயன்படுத்தும் போது மோசடி செய்பவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வாங்குபவருக்கு உங்கள் கிரிப்டோகரன்சியை வழங்குவதற்கு முன், அவரின் அடையாளத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டும். வாங்குபவர் பணம் செலுத்தும் வரை உங்கள் கிரிப்டோ சொத்துக்களை பூட்டி வைக்க அனுமதிக்கும் பியர்-டூ-பியர் தளத்தைப் பயன்படுத்துமாறு மிகவும் அறிவுறுத்தப்படுகிறது.

கிரிப்டோகரன்சி பேங்கிங் மூலம் அசல் பணத்தை போல உங்கள் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்துங்கள்

கிரிப்டோகரன்சி பேங்கிங் ஆனது மக்கள் தங்கள் டிஜிட்டல் சொத்துக்களை பாரம்பரிய பணத்தை செலவழிப்பதைப் போலவே செலவிட அனுமதிக்கிறது. கிரிப்டோ பேங்கிங் ஆனது மக்கள் தங்கள் டிஜிட்டல் காயின்களை டிஜிட்டல்  வாலட்களில்சேமித்து வைக்க அனுமதிக்கிறது. இந்த வகையான பேங்கிங் மூலம், கிரிப்டோகரன்சி டெபிட் கார்டுகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள். இந்தக் கார்டுகள் உங்கள் டிஜிட்டல் காயின் இருப்புநிலையைப் பயன்படுத்துவதற்கு உதவுகின்றன, ஏனெனில் நீங்கள் அன்றாடம் வாங்குவதற்கு வேறு எந்தக் கரன்சியையும் பயன்படுத்தலாம் அல்லது அதை முதலீடாக வைத்துக் கொள்வதற்குப் பதிலாக பணமாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

கிரிப்டோ டெபிட் கார்டுகளை கிரிப்டோகரன்சி சந்தை தளங்கள் வழங்கும். இந்த கார்டுகளில் கிரிப்டோகரன்சியை லோட் செய்துக் கொள்ளலாம், மேலும் இந்தக் கார்டுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சியை ஏற்காத வணிகர்களிடமிருந்து ஆன்லைனில் வாங்குவதற்கும் கடையில் வாங்குவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த டெபிட் கார்டுகள் கிடைப்பதற்கு முன், கிரிப்டோகரன்சிகளை கட்டண முறையாக ஏற்றுக்கொள்ளும் சில்லறை விற்பனையாளர்களிடம் மட்டுமே உங்கள் கிரிப்டோகரன்சியை செலவழிக்க முடியும் அல்லது கிரிப்டோவை பணமாக மாற்றுவதற்கான வழிகளைத் தேட வேண்டும். தற்போது, ஃபின்டெக் நிறுவனங்கள், உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் டெபிட் கார்டு வழங்குபவர்களுடன் கூட்டு சேர்ந்து இந்த கிரிப்டோ கார்டுகளை வழங்குகின்றன, தங்கள் கூட்டாளர்களின் தளவாட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பயன்படுத்தி உங்கள் கிரிப்டோகரன்சிகளை தானாக விற்கவும், அவற்றை பணமாக மாற்றி சில்லறை விற்பனையாளர்களை ஏற்றுக்கொள்ளவும் அனுமதிக்கின்றன. இதன் பொருள் கிரிப்டோ பேங்கிங் மூலம் பாரம்பரிய டெபிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் இடங்களில் உங்கள் டிஜிட்டல் நிதிகளைப் பயன்படுத்தலாம்.

கிரிப்டோ பேங்கிங் வளர்ந்து வருகின்ற கருத்தாக்கம் என்றாலும், பாரம்பரிய வங்கிகளைப் போல இது பிரபலமடைவதற்கு நாட்கள் ஆகும். எனவே, இந்தியாவில் பிட்காயினை பணமாக மாற்றுவது எப்படி என்பதற்கான தேடல் தொடரும். இந்தப் பதிவு கிரிப்டோ/பிட்காயினை பணமாக மாற்றுவது எப்படி என்பதை உங்களுக்கு வழிகாட்டுவதற்கே. இருப்பினும், கிரிப்டோகரன்சி சந்தை நிலையற்றது என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, கிரிப்டோ உலகத்தில் வர்த்தகம் செய்யும்போது நிகழும் அபாயத்தைத் தணிக்க நீங்கள் அத்தியாவசிய தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

குறிப்பு: நம்பகமான கிரிப்டோ தளங்களில் இருந்து மட்டும் உங்கள் கிரிப்டோவை பணமாக மாற்றவும்!

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply