Skip to main content

கிரிப்டோகரன்சியில் இந்திய ரூபாயில் வணிகம் செய்வது எப்படி? (How to trade in cryptocurrency in INR?)

By நவம்பர் 15, 2021நவம்பர் 17th, 20213 minute read

கிரிப்டோ புரட்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது, மேலும் மார்ச் 2020 இல் கிரிப்டோகரன்சிகளுக்கான வங்கி ஆதரவின் மீதான இரண்டு வருட ரிசர்வ் வங்கி தடையை நீக்கியதன் மூலம், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பியர்-டு-பியர் எக்ஸ்சேஞ்ஜுகள் வேகமாக வெளிவந்துள்ளன. அதிகமான இந்தியர்கள் இந்தியாவில்  கிரிப்டோகரன்சியை விற்கவும் வாங்கவும் ஆர்வம் கொண்டு அதிக லாபம் ஈட்ட நினைப்பதால், உள்ளூர் கிரிப்டோ வர்த்தகம், குறிப்பாக இந்தியாவில் உள்ள P2P கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. 

தொழில்நுட்ப ஆர்வலர்கள் விரைவாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறையாக ஆரம்பத்தில் சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட கிரிப்டோகரன்சிகள், இப்போது பாதுகாப்பான பரிமாற்ற ஊடகமாகவும், டிஜிட்டல் நிதி உலகிற்கான பொருத்தமான பாதையாகவும் பார்க்கப்படுகின்றன. 

தற்சமயம் அனைத்து ஃபின்டெக் சூழ்நிலையிலும் கிரிப்டோ ஒரு சிறந்த தயாரிப்பு என்று சிலர் கூறுகின்றனர். நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை நல்ல லாபத்துடன் பயன்படுத்த கிரிப்டோகரன்சியில் வர்த்தகம் செய்யவேண்டும் என்று நினைத்தால்,WazirX மூலம் இந்தியாவில் கிரிப்டோகரன்சியை இந்திய ரூபாயில் எப்படி விற்கலாம் அல்லது வாங்கலாம்  என்பது குறித்து இங்கே பார்க்கலாம் !

1. WazirX இல் உங்கள் கணக்கை உருவாக்குங்கள்

  • WazirX க்கு சென்று,  சில எளிய படிநிலைகள் மூலம் பதிவு செய்து ஒரு இலவச WazirX கணக்கை உருவாக்குங்கள். அல்லது ஆண்டாராய்டு அல்லது iOS க்கான WazirX ஆப்பை பதிவிறக்கம் செய்யுங்கள். இந்தப் பக்கத்திற்கு நீங்கள் திருப்பியனுப்பப்பட்டதும், நீங்கள் விரும்பும் மின்னஞ்சலை வலுவான கடவுச்சொல்லுடன் நிரப்பவும். 
  • ‘சைன் அப்’ பட்டனைக் கிளிக் செய்வதற்கு முன், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, ‘WazirX இன் சேவை விதிமுறைகளுக்கு நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்று சொல்லும் கட்டத்தை டிக் செய்யவும்.
  • கணக்கு உருவாக்க செயல்முறையை பூர்த்தி செய்ய ‘சைன் அப்’ ஐ கிளிக் செய்யவும். 
  • உங்கள் இலவச WazirX கணக்கைத் தொடரவும் அணுகவும் உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்க வேண்டும். சரிபார்ப்பு மின்னஞ்சலுக்காக உங்கள் மின்னஞ்சலை பாருங்கள், செயல்முறையை முடிக்க ‘மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும். முதல் முயற்சியிலேயே நீங்கள் அதைப் பெறவில்லை என்றால், உங்கள் ‘ஸ்பேம்’ ஃபோல்டரை சரிபார்க்கலாம் அல்லது உங்கள் மின்னஞ்சலுக்கு மீண்டும் அனுப்ப, ‘இங்கே மீண்டும் அனுப்பு’ விருப்பத்தைக் கிளிக் செய்யலாம்.
  • உங்கள் மின்னஞ்சல் சரிபார்க்கப்பட்டவுடன், நீங்கள் இந்தச் செய்தியைப் பார்ப்பீர்கள். 

KYC சரிபார்ப்பு

Get WazirX News First

* indicates required
  • உங்கள் இலவச WazirX கணக்கை அணுகுவதற்கும் இயக்குவதற்கும் இதுவே கடைசிப் படிநிலையாகும்.
  • டிராப் டவுன் மெனுவிலிருந்து உங்கள் நாட்டைத் தேர்வு செய்யவும் இதன் பின்னர் நீங்கள் KYC சரிபார்க்கச் சொல்லி கேட்கப்படுவீர்கள் 

அவ்வளவுதான்! நீங்கள் KYC சரிபார்ப்பை முடித்ததும், WazirX இல் கிரிப்டோவை எளிதாக வர்த்தகம் செய்வதற்கான செயல்பாட்டுக் கணக்கு உங்களிடம் இருக்கும்.

2. உங்கள் WazirX கணக்கில் நிதியை டெபாசிட் செய்யுங்கள்

உங்கள் WazirX கணக்கிற்கான டெபாசிட் செயல்முறையை நீங்கள் இரண்டு வழிகளில் செய்யலாம்: 

  • WazirX இல் இந்திய ரூபாயை டெபாசிட் செய்வது

உங்கள் WazirX கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் KYC சரிபார்ப்பு முடிக்கப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

WazirX இல் டெபாசிட் செய்ய, நீங்கள் UPI/IMPS/NEFT/RTGS போன்ற வழிகளைப் பயன்படுத்தலாம். சரிபார்ப்பு நோக்கங்களுக்காக உங்கள் பரிவர்த்தனை விவரங்களை WazirX க்கு சமர்ப்பிக்க வேண்டும். 

  • WazirX இல் கிரிப்டோகரன்சியை டெபாசிட் செய்வது

WazirX இந்தியாவின் சிறந்த கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜ் , அதன் பயனர்கள் தங்கள் WazirX கணக்கில் கிரிப்டோகரன்சிகளை டெபாசிட் செய்ய உதவுகிறது இந்தச் செயல்முறை சிரமமின்றி செய்யப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் விரும்பும் கிரிப்டோவை இந்தியாவில் உள்ள பிற வேலட்கள் அல்லது கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜ்களில் இருந்து மட்டுமே உங்கள் WazirX கணக்கில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றலாம். இதிலும் மிகச் சிறந்தது? இந்தச் செயல்முறை முற்றிலும் இலவசம், எந்த டெபாசிட்டுக்கும் கட்டணம் இல்லை!

உங்களின் இலவச WazirX கணக்கிலிருந்து உங்கள் ‘டெபாசிட் முகவரியை’ பெறுவதன் மூலம் இதைத் தொடங்கலாம். நீங்கள் இதைச் செய்தவுடன், டெபாசிட் முகவரியை உங்கள் ஹோல்டிங் வேலட்டுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் விருப்பமான கிரிப்டோவை உங்கள் WazirX வேலட்டுக்கு எளிதாக மாற்றுங்கள்.

3. இந்தியாவில் கிரிப்டோகரன்சியை வாங்குவது

உங்கள் நிதியை INR ஆகவோ அல்லது நீங்கள் விரும்பும் கிரிப்டோவிலோ உங்கள் Wazir வேலட்டில் டெபாசிட் செய்தவுடன், எந்த தொந்தரவுமின்றி இந்தியாவில் கிரிப்டோகரன்சியை விற்கலாம் அல்லது வாங்கலாம். உதாரணமாக, WazirX மூலம் பிட்காயின் வாங்குவது எப்படி என்பதைப் பார்ப்போம். சமீபத்திய பிட்காயின் விலைகளை இந்திய ரூபாயில் பார்க்க WazirX எக்ஸ்சேஞ்ஜுக்கு செல்லுங்கள்.

கீழே ஸ்க்ரால் செய்வதன் மூலம் உங்கள் டாஷ்போர்டில் ’வாங்க’ மற்றும் ’விற்க’ ஆகிய விருப்பங்களை நீங்கள் காணலாம். வாங்குவதைத் தொடர, நீங்கள் விரும்பும் INR விலையையும், நீங்கள் வாங்க விரும்பும் பிட்காயின் அளவையும் உள்ளிடவும். 

‘வாங்கும் ஆர்டரை வைக்கவும்’ ( ‘Place Buy Order’ ) என்பதை கிளிக் செய்து பரிவர்த்தனை செயல்முறைக்காக காத்திருக்கவும் ஆர்டர் செயல்படுத்தப்பட்டதும், உங்கள் WazirX வேலட்டில் BTC ஐக் காணலாம்.

கிரிப்டோகரன்சியை INR இல் வர்த்தகம் செய்ய WazirXஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

WazirX என்பது இந்தியாவில் உள்ள ஒரு சிறந்த கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜாகும், ஏனெனில் இது அதன் பயனர்களுக்கு மின்னல் வேகத்தில் டெபாசிட் செய்வது மற்றும் INR இல் திரும்பப் பெறுவதை உறுதியளிக்கிறது. இந்தியாவில் கிரிப்டோகரன்சியை விற்க அல்லது வாங்க WazirXஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான சில முக்கிய காரணங்கள் இங்கே

  • உயர் பாதுகாப்பு

WazirX என்பது இந்தியாவில் உள்ள மிகவும் நம்பகமான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜுகளில் ஒன்றாகும், மேலும் அதன் பயனர்களுக்கான மிக உயர்ந்த தரமான பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கு வழக்கமான பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் செயலாக்கப்படுவதால் ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாப்பானது மற்றும் அது சரிபார்க்கப்படுவதையும் உறுதிசெய்கிறது.

  • சிறந்த அணுகல் 

WazirX என்பது இந்தியாவில் பிரபலமான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜாகும், குறிப்பாக நீங்கள் இந்தியாவில் கிரிப்டோகரன்சியை விற்க அல்லது வாங்க விரும்பும்போது பல்வேறு தளங்களுக்கும் அதன் அணுகல் சிறப்பாக உள்ளதால்,இது முக்கிய காரணமாகும். இது அதன் பயனர்களுக்கு இணையம், மொபைல் போன்ற பல்வேறு தளங்களில் தனித்துவமான வர்த்தக அனுபவத்தை வழங்குகிறது மற்றும் Android மற்றும் iOS இரண்டிற்கும் இணக்கமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

  • உடனடி பரிவர்த்தனைகள்

WazirX இன் மேம்பட்ட வர்த்தக இண்டர்ஃபேஸ், ஆரம்ப கிரிப்டோ முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முறை மற்றும் அனுபவம் வாய்ந்த வர்த்தகர்களுக்கு உடனடி பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது மற்றும் எளிதாக்குகிறது.

  • பரிந்துரை கமிஷன்கள்

WazirX பயனர்கள் கிரிப்டோ உலகில் உலாவுவதற்கும், உற்சாகமான பிளாக்செயின் புரட்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் ஏற்கனவே உள்ள பயனர்கள் தங்கள் நண்பர்கள், சகாக்கள் மற்றும் குடும்பங்களை ஊக்குவிப்பதற்காக, பயன்பாட்டில் செய்யப்படும் பரிந்துரைகளுக்கு 50% கமிஷனைப் பெறுகிறார்கள்.

  • நிமிடத்துக்கு நிமிடம் விலை கண்காணிப்பு

இறுதியாக, இந்தியாவில் #1 கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜாக WazirXஐத் தேர்வு செய்யும்போது, பலவிதமான கிரிப்டோகரன்சிகளுக்கு நிமிடத்திற்கு நிமிடம் விலைக் கண்காணிப்பை இயக்கும் பிரத்யேக விளக்கப்படங்களுக்கான அணுகலைப் பெறுவீர்கள். கூடுதலாக, எளிய மற்றும் தடையற்ற பயனர் இண்டர்ஃபேஸ், பயனர்களுக்கு தளத்தில் தொந்தரவில்லாத மற்றும் இலகுவான வர்த்தக அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply