Skip to main content

தவிர்க்கப்பட வேண்டிய மோசமான கிரிப்டோ அறிவுரை (The Worst Crypto Advice to Avoid)

By ஏப்ரல் 16, 2022ஏப்ரல் 19th, 20223 minute read

நீங்கள் கிரிப்டோ உலகில் ஆரம்ப நிலையில் இருப்பவராய் இருந்தாலும் சரி அல்லது அனுபவமிக்கவராக இருந்தாலும் சரி, நீங்கள் அவ்வப்போது சில இழப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். இது கற்றல் செயல்முறையின் ஒரு பகுதியாகும், ஆனால் கணிசமான இழப்புகளைச் சந்திக்காமல் நீங்கள் கற்றுக்கொண்டால் என்ன? கிரிப்டோகரன்சி மற்றும் பிற பிளாக்செயின் சொத்துக்களை வர்த்தகம் செய்யும் போது என்ன செய்யக்கூடாது என்பதற்கான உதாரணமாக கிரிப்டோவில் உள்ள சில மோசமான ஆலோசனைகளைப் பார்ப்போம்.

பிரபலமானதையே வாங்குதல்

பிரபலமானவற்றை வாங்குவது அல்லது ATH (அதிகபட்ச விலை) இல் இருக்கும் நாணயத்தை வாங்குவது ஒரு மாபெரும் தவறு, நிச்சயமாக இழப்பு ஏற்படும். நீங்கள் விலைகள் உயரும்போது, FOMOவை (தவற விட்டு விடுவோம் என்ற பயம்) அனுபவித்தால் அல்லது வாங்குவதற்கு ஏற்கனவே நாணயத்தை வைத்திருக்கும் மற்றவர்களை நீங்கள் நம்பினால் இது நிகழலாம். விலை வீழ்ச்சியடையும் போது, உங்கள் இழப்புகள் 30 முதல் 40% வரை இருக்கலாம். பிரபலமானது என்னவென்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எந்தவொரு திறமையான முதலீட்டு ஆலோசனையும், பணம் சம்பாதிப்பதை விட உங்கள் பணத்தை இழக்காமல் இருப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்த தவறிலிருந்து மீண்டு எழ நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள்:

  • WazirX போன்ற எக்ஸ்சேன்ஜில் நாணயத்தின் நிதி விளக்கப்படங்களைத் திறக்கவும், 
  • தற்போதைய விலையேற்றம் நிலையானதா இல்லையா என்பதைக் கண்டறியவும். விலையின் வளைவு பரவளைய (parabolic) வடிவமாக இருந்தால், வளர்ச்சி இயற்கையாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு, மேலும் நாணயம் மீண்டும் ATHஐ அடைய வாய்ப்பில்லை.
  • விலையின் வளர்ச்சி நேரடியாக (linear) இருக்கும் பட்சத்தில், உங்கள் இழப்புகள் குறையக்கூடும் மற்றும் லாபத்தை ஈட்டலாம் என்ற நம்பிக்கை ஏற்படலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், விற்பனைக்கேற்ற விலையை அடையும்வரை, விளக்கப்படங்களைச் அடிக்கடி சரிபார்ப்பதுதான்.

நிச்சயமாக, இவை அனைத்தும் மிகவும் எளிமையானவைதான். விளக்கப்படங்களை சரியாகப் புரிந்து கொள்ள, நீங்கள் WazirX பிளாகிற்குச் சென்று கிரிப்டோவில் தொழில்நுட்ப பகுப்பாய்வு பற்றிய அதன் போஸ்ட்களைப் படிக்க வேண்டும்.

via WazirX

மைக்ரோ-கேப் நாணயங்களை வாங்குதல்

ஒரு ஆரம்ப கால தவறு என்ன என்றால் மிகவும் மலிவானது என்பதற்காகவும் அல்லது ஒரு தனிநபர் அல்லது குழுவால் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்காகவும் ஒரு நாணயத்தை வாங்குவதாகும். இந்த வகைக்குள் வரும் பெரும்பாலான நாணயங்களுக்கு பயனர் அனுபவக் குறிப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் அல்லது மிகக் குறைந்த பயனர் அனுபவக் குறிப்பு இருக்கலாம் அல்லது சிறந்த பயனர் அனுபவக்குறிப்பு- அவற்றின் திறனை இன்னும் நிரூபிக்காமல் இருக்கலாம். இந்தத் தவறைச் செய்யாமல் இருக்க நாணயத்தின் டோக்கன் விலைக்குப் பதிலாக அதன் சந்தை மூலதனத்தை சரிபார்க்கவும். ஏனென்றால், கிரிப்டோ அதன் விலையை எந்த அளவு ஏற்றம் செய்ய முடியும் என்பதை சந்தை மூலதனமே தீர்மானிக்கிறது.

Get WazirX News First

* indicates required

வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு கிரிப்டோவிற்கு எவ்வளவு சாத்தியக்கூறு உள்ளது என்பதை எப்படிச் சரிபார்ப்பது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதே நாணய வகையைச் சேர்ந்த பிற நாணயங்களைச் சரிபார்த்து, அவற்றின் தினசரி வர்த்தக அளவுகள், சந்தை மூலதனம் மற்றும் ஆன்லைன் ஈடுபாட்டை ஒப்பிட்டுப் பார்க்கவும்.

பிரபலங்களின் ஆதரவின் காரணமாக ஒரு நாணயத்தை வாங்குதல்

ஒரு பிரபல நபரால் விளம்பரப்படுத்தப்படுவதால், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக்கூடாது. சந்தை விநியோகத்தின் பெரும் பங்கை அவர்கள் வைத்திருப்பதற்கான சாத்தியம் உள்ளது. போதுமான அளவிலான மக்கள் தங்கள் நாணயத்தை வாங்கி விட்டால், அந்தப் பிரபல நபர் தம் நாணயங்களை விற்று நேர்த்தியான லாபம் ஈட்ட முடிவு செய்யலாம், இதனால் வழக்கமான முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைவார்கள். சிறந்த நாணயங்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு விளம்பரம் தேவையில்லை என்பதால், பிரபலமான நபர்களால் வெளியிடப்படும் அனைத்து நாணயங்களையும் தவிர்க்கவும். ஒரு நாணயத்தை வாங்குவதற்கு முன் அதன் வெள்ளை அறிக்கையைப் படிப்பது ஒரு நல்ல யோசனையாகும், மேலும் இதன் மூலம் மோசடிகளுக்கு இரையாவதைத் தடுக்க முடியும்.

சமூக ஊடகத்தின் காரணமாக ஒரு நாணயத்தை வாங்குதல்

ரெடிட், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் நீங்கள் கேள்விப்பட்டிராத நாணயங்கள் அல்லது சிறப்பான பயனர் அனுபவ நிகழ்வுகளைக் கொண்ட நாணயங்களுக்கான பக்கங்கள் நிறைந்துள்ளன. நீங்கள் நீண்ட சமையதிற்கு தக்க வைத்திருந்தால், ’மிக உயரத்திற்குச் செல்லும்’ விலைகளைப் பற்றி அவர்கள் அடிக்கடி பேசுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட நாணயத்திற்காக பாடுபடும் ஒவ்வொருவருக்கும் டெவலப்பர்களால் பணம் கிடைக்கும் அல்லது அந்த திட்டத்தில் அதிக நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்திருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் வரும் பரபரப்புகளால் கண்மூடித்தனமாக நம்புவதைத் தடுக்க, DYOR (Do Your Own Research) அல்லது உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்களே மேற்கொள்வது முக்கியம். உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் மேற்கொள்வது, நாணயத்திற்கு எதிர்காலத் திறன் உள்ளதா இல்லையா அல்லது ஆரம்பநிலையாளர்களை கவர்ந்திழுக்கப் பயன்படுத்தப்படும் மோசடியா என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு உறுதியான வழியாகும்.

சந்தை வீழ்ச்சியடையப்போகிறது என்பதால் விற்பது

அனுபவம் வாய்ந்த வர்த்தகர்கள் கூட இது போன்ற சந்தர்ப்பங்களுக்கு இரையாகக்கூடிய தவறு இது. பங்குச்சந்தை மற்றும் கிரிப்டோ சுற்றுச்சூழல் அமைப்பு இரண்டிலும் சந்தை வீழ்ச்சியின் அச்சம் என்பது நிலையானது. மக்கள் அடிக்கடி மறந்துவிடுவது என்னவென்றால், சந்தை வீழ்ச்சி நிரந்தரமாக இருக்காது என்பதே. ஒரு வீழ்ச்சியைத் தொடர்ந்து விரைவில் அல்லது சிறிது தாமதமாக நிச்சயமாக விலையேற்றம் இருக்கும். இந்த விஷயத்தில், சிறந்த தீர்வு என்ன என்றால் தக்க வைத்திருப்பது தான். அல்லது குறைந்தபட்சம், முழுவதையும் விற்காமல் இருப்பதுதான். சந்தை கணிக்க முடியாத ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். பிப்ரவரியில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் மாபெரும் வீழ்ச்சி ஏற்படும் என்ற அச்சம் இருந்தது. அடுத்த நாள், இந்த அச்சங்கள் தீர்ந்தது, ஏனெனில் சந்தைகள் உண்மையில் வீழ்ச்சியடைவதற்கு பதிலாக உயர்ந்தன.

ஒன்றிலேயே முதலீடு செய்தல்

ஒருவர் செய்யக்கூடிய மிக மோசமான தவறு, அவர்களின் முதலீட்டை பரவலாக்காமல், அனைத்து நிதிகளையும் ஒற்றை நாணயத்தில் முதலீடு செய்வது. இது எப்போதோ ஒரு முறை வேலை செய்யும் என்றாலும், பெரும்பாலும் வேலை செய்யாது, இது ஒரு மோசமான யோசனை. எந்த ஒரு ஒற்றை நாணயத்திலும் ஒரு பெரிய முதலீடு என்பது ஒரு பெரிய ஆபத்து, ஏனெனில் ஒரு சிறிய சரிவு கூட உங்கள் லாபத்தில் பெரும் சதவீதத்தை அழித்துவிடும். இதைத் தடுப்பதற்கான ஒரே வழி உங்கள் முதலீட்டை பல்வகைப்படுத்துவதுதான். உங்கள் கிரிப்டோ முதலீட்டை பல்வகைப்படுத்துவது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும், இதனால் ஏதாவதொரு கிரிப்டோ வீழ்ச்சியடைந்தாலும் உங்கள் இழப்புகளைக் கணிசமாகக் குறைக்க இது உதவும்.

முடிவுரை

“கிரிப்டோவில் முதலீடு செய்யும் போது செய்யக்கூடாத விஷயங்கள்” என்ற இந்தப் பட்டியலைப் பார்த்த பிறகு, ஒரு கிரிப்டோ வர்த்தகர் எவ்வளவு காலம் வர்த்தகம் செய்தாலும் அவர் செய்யக்கூடிய சில பொதுவான தவறுகளைப் பற்றி நீங்கள் ஓரளவு அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்தத் தகவல்களின் அடிப்படையில், அடுத்து எந்த நாணயத்தில் நீங்கள் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள்?

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply