Skip to main content

இந்தியாவில் நீண்ட கால முதலீடுகளுக்கு கருத்தில் கொள்ளவேண்டிய பிரபலமான 4 கிரிப்டோகர்ரேன்சிகள் (Top 4 Cryptocurrencies To Consider In India For Long Term Investments)

By ஏப்ரல் 26, 2022மே 28th, 20224 minute read
Top Cryptocurrency To Consider For Long Term Investments - WazirX

குறிப்பு: இந்த வலைபதிவு ஒரு வெளிப்புற பதிவரால் எழுதப்பட்டது இந்த கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் மற்றும் கருத்துக்கள் ஆசிரியருக்கே சொந்தமானது.

கிரிப்டோகரன்சிகள் நிச்சயமாக இந்தியாவை புயலாலாக தாக்கியுள்ளன மற்றும் இதை யாரும் நிறுத்த முடியாது. எல்லோரும் கிரிப்டோவில் குறைந்த கால லாபம் மற்றும் நீண்ட கால பிடித்ததிற்கு முதலீடு செய்கிறார்கள் , இது அவர்களை கிரிப்டோவை ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கிறது. கூடுதலாக  கிரிப்டோகரன்சி சந்தையில் வரி சட்டங்கள் அறிமுகம் செய்ததிற்குப்பின்  கிரிப்டோவின் எதிர்காலத்தில் இருந்த சந்தேகங்கள் கொஞ்சம் தெளிவாகியுள்ளது. கிரிப்டோ இப்பொழுது முழுமையாக இங்கே இருக்க போகிறது மேலும் ஒரு நல்ல முதலீட்டு தேர்வாகும்.

குறைந்த கால கிரிப்டோ வர்த்தகர்கள் விரைவான லாபத்தை பெற்றிருந்தாலும், நீண்டக் கால கிரிப்டோ முதலீட்டு உத்திகள் மிக சிறந்ததாக கருதப்படுகிறது. இது ஏன் என்றால் கிரிப்டோ சொத்துகள் சுழற்சிகளை பின்பற்றி அதிகரிக்கும் இதனால் அதன் மதிப்பு அதிகரிக்கும். கிரிப்டோ சந்தையின் மிகுதியான நிலையற்ற தன்மையால் அதில் கிடைக்கும்  சாத்தியமான பெரும் லாபங்களினால் இந்த சந்தை முதலீட்டாளர்களை கவர்கிறது.

நீங்கள் நீண்ட காலத்திற்கு கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டும் என்று  எண்ணியிருந்தால் மேலும் உங்கள் சிறந்த நீண்டகால கிரிப்டோ போர்ட்ஃபோலியோவிற்கு எந்த சிறந்த கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வேண்டும் என்று  குழப்பமாக இருந்தால், அதைப்பற்றி உங்களுக்கு அனைத்தையும் விளக்கியுள்ளோம். நீண்ட கால முதலீட்டு உத்திக்காக இந்தியாவில் எந்த கிரிப்டோவை வாங்குவது என்று யோசிப்பவர்களுக்கு, இது தான் எங்கள் சிறந்த 4 தேர்வுகள்:

1.பிட்காயின்(BTC)

பிட்காயின் தான் முதல் மற்றும் மிக பிரபலமான கிரிப்டோகரன்சி, இது சந்தேகம் இல்லாமல் நீண்ட கால கிரிப்டோ முதலீடிற்கு முதல் தேர்வு. பிட்காயினின் பிரபலத்திற்கு முக்கிய காரணம்,  அதன் 21 மில்லியன் அளவான விநியோகம் காரணமாக,  காலப்போக்கில் பிட்காயினின் மதிப்பு அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். டாலர் அல்லது பவுண்டு போன்ற அசல் பணத்தின் விநியோகத்தில் வரம்பில்லை, இதனால் இது அவற்றில்  இருந்து மாறுபட்டது. அசல் பணம் மதிப்பு குறைந்துவிட்டாலும் பிட்காயினின் மதிப்பு தொர்ந்து அதிகரிக்கும் என முதலீடாளர்கள் நம்புகிறார்கள்.

2009இல் சடோஷி நாகமோடோ என்ற புனைபெயரில் தனி நபரோ அல்லது ஒரு குழுவோ பிட்காயினை(BTC)  உருவாக்கியது,  உலகின் முதல் கிரிப்டோகரேன்சி என்றும் டிஜிட்டல் தங்கம் எனறும் கூட இது அழைக்கப்படுகிறது. BTC ஆதிக்கம் செலுத்தும் கிரிப்டோவாகும், அதற்கு காரணம்: கிரிப்டோவின் முன்னோடியாகவும், மேலும் அதன் விலை, சந்தை மூலதனமாக்கல் மற்றும் அளவு  மற்ற கிரிப்டோக்களை விட அதிகமாகும். சந்தையில் ஆயிரத்துக்கும் மேல் கிரிப்டோகரன்சி இருந்தும், சந்தையின் மொத்த  மூலதனமாக்கலில் 40%க்கு மேல் பிட்காயின் தான் உள்ளது. இது பிட்காயினை 2022இல் நீண்ட கால கிரிப்டோ முதலீட்டிற்கு லாபகரமான பொருத்தமாக ஆக்குகிறது. 

Get WazirX News First

* indicates required

பத்து வருடங்களுக்கு முன் ஒரு பிட்காயினின் விலை சுமார் $0.0008 முதல் $0.08 வரை இருந்தது, நவம்பர் 2021இல் முன் எப்போதும் இல்லாத வகையில் கிட்டத்தட்ட $69,000ஐ தொட்டது. இதன் நிலையற்ற தன்மையே இதன் மிக பெரிய அபத்து ஆகும், அனால் இந்த ஆபத்தை தாண்டி கிடைக்கும் லாபங்களே பிட்காயினின் பிரபலத்திற்குக் காரணமாக உள்ளது. பல ஆய்வாளர்கள் BTCஇன் விலை 2022 முழுவதும் $80,000இலிருந்து  $100,000 வரை உயரும் என்றும், மேலும் 2025்க்குள் $250,000 ஆகவும் மற்றும் 2030க்குள் ஒரு பிட்காயின்  $5 மில்லியன் வரை உயரும் என மதிப்பிடுகின்றனர்.

எதீரியம்(ETH)

விலை மற்றும் சந்தை மூலதனமாக்கலில் பிட்காயினுக்கு இரண்டாவதாக இருக்கும், எதீரியம் பல முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான தேர்வாக உள்ளது. பிரபலமாக விநியோகிக்கப்படும் கிரிப்டோ சொத்தான எதீரியம், கூடுதலாக அதன் ERC-20 இணக்கத் தரநிலையின் மூலம் டெவலப்பர்கள் தங்கள் கிரிப்டோகரன்சியை உருவாக்க அனுமதிக்கும் அதன் புரட்சிகரமான நெட்வொர்க்கிற்கும் பிரபலமானது. பல்வேறு கிரிப்டோகரன்சிகளை உருவாக்குவதற்கான தளத்தை வழங்குவதோடு, பரவலாக்கப்பட்ட ஸ்மார்ட் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதையும் எதீரியம் செய்கிறது. கூடுதலாக DeFi (பரவலாக்கப்பட்ட நிதி) மற்றும் NFTகள் (நான்-ஃபன்ஜிபல் டோக்கன்கள்) ஆகிய இரண்டும்  எதீரியத்தின் மதிப்பை உயர்த்தியுள்ளன. 

2021இன்  கடைசி மாதங்களில் எதீரியம் அதன் மிக உயர்வான விலையான $4800ஐ எட்டியது மற்றும் 2022இல்  $3600 என்ற விலையில் ஆரம்பித்தது.  எதீரியம் கடந்த ஆண்டில் 160% வளர்ச்சியை கண்டது இந்த வருடம்  $6,500 அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சிறந்த நீண்ட கால கிரிப்டோ முதலீட்டுக்கு இது ஒரு கட்டாய சொத்தாக ஆக்குகிறது.

முன்னர் விவாதிக்கப்பட்டபடி, 2021இல் NFT ஏற்றத்தில் எதீரியம், பரிவர்த்தனையின் முக்கியமான அங்கமாக செயல்பட்டது. எனவே இது உலகமெங்கும் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு விரும்பப்பட்ட தேர்வாக உள்ளது. இதனுடன் எதீரியமும் அதனை சார்ந்தவைகளுக்கும் 2022 ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. எதீரியம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ETH-2 மேம்படுத்தலைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஆண்டு இதுவாகும். இது அதன் வேகம் மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் நெட்வொர்க் எதிர்கொள்ளும் அளவிடக்கூடிய  சவால்களை தீர்க்கும். வெற்றிகரமான மேம்படுத்தலுக்குப் பிறகு எதீரியம் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 

3. கார்டானோ (ADA)

எதீரியமின் இணை நிறுவனர் சார்லஸ் ஹோஸ்கின்சனால் 2015இல் உருவாக்கப்பட்டது, கார்டானோ ஒரு ஓபன் சோர்ஸ் மற்றும் பரவலாக்கப்பட்ட பொது பிளாக்செயின் தளமாகும் , இது ப்ரூஃப் ஆஃப் ஸ்டேக்கை முன்கூட்டியே ஏற்றுக்கொண்டது சமீப காலங்களில் அதன் கணிசமான சந்தை ஆதாயம் மற்றும் பிட்காயினை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகக் கருதப்படும் அதன் ஆற்றல்-திறனுள்ள செயல்முறைகளுக்கு நன்றி, கார்டானோ (ADA) பலவகையான முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.

ADA என்பது கார்டானோவின் உட்புற கிரிப்டோகரன்சி ஆகும், இது பியர்-டு-பியர் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. ADA ஆனது பிட்காயின் மற்றும் எதீரியம் உடன் போட்டியிட முடியாமல் போகலாம், 2021இல் ADA அபரிமிதமாக வளர்ந்தது. செப்டம்பர் 2021இல் ADA 14,000% வளர்ச்சியடைந்து, இது எல்லா நேரத்தையும் விட உயர்ந்த நிலையை எட்டியது. எனவே, 2022ஆம் ஆண்டில் நீண்ட காலத்திற்கு இந்தியாவில் எந்த கிரிப்டோவை வாங்குவது என்பது குறித்து உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், உங்கள் கேள்விக்கான பதில் ADA ஆகும். 

கார்டானோ NFTஇல் பிரபலமான கிரிப்டோக்களில் ஒன்றாகும், மேலும் 2022ஆம் ஆண்டில் தொழில்துறையில் அதன் வேர்களை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ADA நெட்வொர்க் கையெழுத்திட்ட முக்கிய கூட்டு வணிகத்தின் வளர்ச்சிக்கு இணையாக இது நடைபெறும்.  பொருளாதார  முன்னறிவிப்பு ஏஜென்சியின் படி, ADA 2022இல் $7.70 ஆகவும், 2023இல் $8.93 ஆகவும் மற்றும் 2025 இறுதியில் $15ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

4. பினான்ஸ் காயின் (BNB)

பினான்ஸ் நாணயம் என்பது மிகவும் பிரபலமான கிரிப்டோ பரிமாற்றங்களில் ஒன்றான பினான்ஸின் சொந்த கிரிப்டோ டோக்கன் ஆகும். BNB, தளத்தில் பினான்ஸ் வாடிக்கையாளர்களால் கட்டணம் செலுத்தவும் வர்த்தகம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு முதல், BNB சந்தை மூலதனம் மூலம் முதல் 5 கிரிப்டோகரன்சிகளின் வரிசையில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சந்தை மூலதனம் அடிப்படையில் மூன்றாவது/நான்காவது இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது 2022இன் சிறந்த நீண்ட கால கிரிப்டோ முதலீடுகளில் ஒன்றாக அமைகிறது. 

BNB 2017இல் நிறுவப்பட்டது மற்றும் தற்போது ERC20, எதீரியத்தில் இயங்குகிறது. நாணய கட்டமைப்பு திறமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த மற்றும் துல்லியமான வழிமுறைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையில் கட்டணம் செலுத்துவதுடன், பினான்ஸ் ஸ்மார்ட் செயின் (BSC), டிரஸ்ட் வாலெட், பினான்ஸ் ஆராய்ச்சி மற்றும் பினான்ஸ் அக்காடமி போன்ற பல்வேறு பிரபலமான சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பினான்ஸ் மூலம் அணுக BNBஐ பயன்படுத்தலாம். இந்தச் சேவைகளின் புகழ் வரவிருக்கும் ஆண்டுகளில் BNBக்கு பிரகாசமான எதிர்காலத்தை  காட்டுகிறது.

2021இல் BNB அதன் இதுவரை காணாத உயர்வான, கிட்டத்தட்ட $690 தொட்டது.  Capital.com படி, நாணயம் 2024இல் $820 ஆகவும், 2026இல் $2,300 ஆகவும், 2030இல் $11,000 ஆகவும் இருக்கும்.

WazirXஉடன் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யுங்கள்.

நீங்கள் புதிய முதலீடாளராக இருந்தாலும், அனுபவமுள்ள முதலீடாளராக இருந்தாலும் சிறந்த நீண்ட கால கிரிப்டோ முதலீடுகளுக்கு WazirX தான் உங்களுக்கு சரியான இடம். இந்தியாவின் சிறந்த மற்றும் நம்பகமான கிரிப்டோ பரிமாற்றங்களில் ஒன்றான WazirX, e BTCETHADAமற்றும்  BNB, போன்ற சிறந்த கிரிப்டோகரன்சிகள் உட்பட 250+ கிரிப்டோகரன்சிகளைக் கொண்டுள்ளது, மேலும் மிகவும் ஈர்க்கக்கூடிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் KYC நடைமுறைகளுடன் கூடிய வேகமான பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
WazirX உடன் வர்த்தகத்தைத் தொடங்க,  இங்கே. கிளிக் செய்வதன் மூலம் எக்ஸ்சேன்ஜை பார்வையிடவும்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.
Shashank

Shashank is an ETH maximalist who bought his first crypto in 2013. He's also a digital marketing entrepreneur, a cosmology enthusiast, and DJ.

Leave a Reply