உங்கள் முதல் NFT களை மிண்ட் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் (5 Things You Should Know before minting your first NFTs)

By நவம்பர் 1, 2021நவம்பர் 12th, 20215 minute read

சமீபத்திய பிளாக்செயின் மோகமாக உள்ள NFT க்கள் (நான்-ஃபஞ்ஜிபிள் டோக்கன்கள்) மீது, நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? கிரிப்டோகிட்டீஸ் முதல் தனது முதல் ட்வீட்டை கையொப்பமிட்டு விற்ற ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி வரை, NFT க்கள் பிளாக்செயினில் சொத்துக்கள் இருப்பதை பதிவு செய்வதில் நெடுந்தூரம் வந்துள்ளன. ஏதாவதொரு நேரத்தில், டிஜிட்டல் முறையில் கலைப்பொருள்களை விற்கும் விரைவான மற்றும் எளிதான வழியாக NFT ஆர்ட்டின் கவர்ச்சிகரமான உலகத்தைப் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருக்க வேண்டும். மேலும் NFTஎன்றால் என்ன என்றும் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்? அல்லது நீங்களே ஒன்றை மிண்ட் செய்ய விரும்பினீர்களா? அல்லது எப்படி NFT யை வாங்குவது ? 

நீங்கள் அவ்வாறு செய்வதற்கு முன், உங்கள் கலைப்பொருளை ஒரு ஃபஞ்ஜிபிள் டோக்கனாக மாற்றுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் இங்கே உள்ளன.

#1 NFT என்னென்ன உரிமைகளை வழங்குகிறது?

உங்கள் முதல் NFT ஐ நீங்கள் மிண்ட் செய்வதற்கு முன், NFT என்றால் என்ன, NFT வைத்திருப்பதன் மூலம் நீங்கள் உண்மையில் என்ன பெறுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வது புத்திசாலிதனமாக இருக்கும். ஒரு NFT யின் உரிமை அதன் பதிப்புரிமைகளை கொண்டு வருவதில்லை. எனவே NFT க்கள் உரிமை என்பது வெறும் தற்பெருமைதானா? இல்லை, ஆஸ்கார் கோன்சலஸ், எனும் ஒரு CNET நிருபர் கூறுகிறார், “டோக்கனின் உரிமையாளர் வைத்திருப்பது, ஒரு குறிப்பிட்ட டிஜிட்டல் சொத்துடன் தொடர்புடைய தனித்துவமான டோக்கனின் உரிமையைக் காட்டும் ஒரு பதிவு மற்றும் ஒரு ஹேஷ் குறியீடு மட்டுமேயாகும்.” எளிமையாகச் சொல்வதானால், இணையத்தில் உள்ள எவரும் பதிப்புரிமை மீறல் பிரச்சினை ஏதும் இன்றி அதை பதிவிறக்கம் செய்து தங்கள் சமூக ஊடகங்களில் பயன்படுத்தலாம், ஆனால் உரிமையாளர் மட்டுமே NFT ஐ விற்க முடியும். 

அண்மையில் $ 5,90,000 க்கு விற்கப்பட்ட அனிமேஷன் செய்யப்பட்ட GIF ஆன Nyan Cat ஐ உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள் Nyan Cat இன் உரிமையாளர் Nyan Cat NFT மீது மட்டுமே உரிமை வைத்திருக்கிறார், அறிவுசார் மற்றும் படைப்பு உரிமைகள் இன்னும் அதை உருவாக்கிய ஓவியரிடமே உள்ளது. 

Get WazirX News First

* indicates required

Nyan Cat ஒரு சரியான உதாரணம், ஓவியர் படைப்பின் உரிமையை (NFT அல்ல) தக்க வைத்துக் கொள்கிறார், அதே நேரத்தில் NFT சேகரிப்பாளர் அசலின்(டிஜிட்டல்) நகலை உரிமை கொள்கிறார். மிண்ட் செய்த ஒரு நபர்/ஓவியரால், NFT க்கள் ஒவ்வொன்றுக்கும் அதன் சொந்த நிபந்தனைகள் மற்றும் உரிமையாளர் விதிகள் எழுதப்பட்டிருக்கலாம். ஒரு பிளாக்செயினில் எழுதப்பட்டிருக்கும் ஒரு NFT, அதன் மறுவிற்பனை வரலாற்றின் முழுமையான பதிவுகளைக் கொண்டிருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுபோல, NFT ஐ மிண்ட் செய்த அசல் ஓவியர் ஒவ்வொரு முறையும் NFT மறுவிற்பனை செய்யப்படும் போது தானாக மறுவிற்பனை ராயல்டிகளைப் பெறுகிறார். 

#2 NFT க்களை எங்கு மிண்ட் செய்வது மற்றும் விற்பது?

மிண்ட்டிங் என்பது ஒரு கலைப்படைப்பு, gif, ட்வீட் அல்லது ஒரு ‘தனித்துவமான தருணம்’ எதுவாக இருந்தாலும், ஒரு டோக்கனை வழங்குவதன் மூலம் பிளாக்செயினில் (முக்கியமாக எத்தீரியத்தில்) அங்கீகரிக்கப்படும் செயல்முறையாகும். இந்த டோக்கன் நான் -ஃபஞ்ஜிபிள், அதாவது, நகலெடுக்க முடியாது, மற்றும் பொருளின் ஒரு டிஜிட்டல் பதிவைக் கொண்டுள்ளது. வெகு எளிதாகப் புரிகிறது அல்லவா. உங்கள் NFT க்களை எங்கு மிண்ட் செய்வது ? உங்கள் வேலையைத் மிண்டிங் செய்வதற்கு முன் நீங்கள் மூன்று முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்:

  • பிளாக்செயின்: உங்கள் NFT க்களை எந்த பிளாக்செயினில் மிண்ட் செய்ய விரும்புகிறீர்கள் எனும் தேர்வு, உங்கள் NFT களை மிண்ட் செய்வதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய செலவுக்கட்டணத்தை தீர்மானிக்கிறது. பெரும்பாலான தளங்கள் எத்தீரியம் நெட்வொர்க்கில் இயங்குகின்றன, அங்கு ‘செலவுக் கட்டணம்’ நெட்வொர்க்கின் தேவை மற்றும் ஒவ்வொரு பரிவர்த்தனையை சரிபார்க்க தேவையான ஆற்றலை அடிப்படையாகக்கொண்டு ஏற்ற இறக்கமாக இருக்கும். 
  • NFT மார்க்கெட்பிளேஸ்: இன்று பெரும்பாலான புகழ்பெற்ற NFT தளங்கள் NFT படைப்பாளர்களுக்கான ஒரு ஆய்வு செயல்முறையைக் கொண்டுள்ளன, அங்கு கலைஞர்கள் தங்கள் NFTகளைத் மிண்ட் செய்வதற்கு முன் ஒரு பயன்பாட்டு செயல்முறைக்கு உட்பட வேண்டும். ரேரிபிள் மற்றும் ஃபவுண்டேஷன் இந்த மாடலில் இயங்குகின்றன யாரை வேண்டுமானாலும் அனுமதிக்கும் சந்தைகளை விட விரிவான சோதனை நடைமுறைகள் கொண்ட தளங்கள் மிகவும் தீவிரமான சேகரிப்பாளர்களை ஈர்க்கின்றன என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அடையாளச் சரிபார்ப்பு செயல்முறையைக் கொண்ட NFT சந்தைகள் மிண்ட் செய்யப்பட்ட டோக்கனுக்கு அதிக அளவிலான நம்பகத்தன்மையைக் கொடுக்கின்றன. நிஃப்டி கேட்வே, நோஆரிஜின், சூப்பர்ரேர்,போன்ற மார்க்கெட்பிளேஸ்கள் க்யூரேட் செய்யப்பட்டவை மற்றும் ‘அழைப்புக்கு-மட்டும்’ உள்ளவையாகும் WazirX மே 31 அன்று இந்தியாவின் முதல் NFT சந்தையை அறிமுகப்படுத்தியது,  இது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்து கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கான ‘அழைப்பு மட்டும்’ கொள்கையில் இயங்குகிறது. WazirX இன் தாய் நிறுவனமான பினான்ஸ் பிளாக்செயினில் மிண்டிங் செயல்முறை நடைபெறுகிறது, இதை ஆய்வு செய்து பின்னர் எத்தீரியம் போன்ற பிற பிளாக்செயின்களுக்கு மாற்ற முடியும்  விற்பனைWRX டோக்கன்கள்- WazirX தளத்தின் சொந்த நாணயம் மூலமாக நடைபெறுகிறது 
  • செலவுகள்: உங்கள் தேவைகளைப் பொறுத்து, நீங்கள் ஒரு NFT தளத்தை தேர்வு செய்யலாம் அது உங்கள் NFT கலையை இலவசமாக மிண்ட் செய்ய உதவுகிறது, ஆனால் வாங்குபவர்களிடமிருந்து செலவுக் கட்டணத்தை ஒரு கட்டமைக்கப்பட்ட முறையில் வசூலிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான NFT களை மிண்ட் செய்ய விரும்பும் படைப்பாளருக்கு இந்த வகை தளம் பொருத்தமானதாக இருக்கலாம். படைப்பாளி ஒரு ‘ஒற்றை’ முதன்மை பிரதியை மட்டுமே மிண்ட் செய்ய ஆர்வமாக இருந்தால், அவர்கள் ஒரு முறை கட்டணம் மட்டும் வசூலிக்கும் தளத்தை விரும்பலாம். 

ஒரு குறிப்பிட்ட பிளாக்செயின் அல்லது மார்க்கெட்பிளேஸ் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படுவதையும்  படைப்பாளிகள் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் செலவுக் கட்டணம் அல்லது செலவுகளில் சில ரூபாய்களை சேமித்தாலும், தளம் பிரபலமாக இல்லாவிட்டால் உங்களுக்கு சரியான பார்வையாளர்கள் வரமாட்டார்கள். 

#3 உங்கள் NFT களை எங்கு பாதுகாப்பாக வைப்பது?

NFT க்கான இடம், ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், தகவல் இடைவெளிகள், கருத்துத் திருட்டு, மோசடி, அடையாள திருட்டு போன்ற சில சிக்கல்களால் இன்னும் பாதிக்கப்படுகிறது. சில நபர்களால் சிறிய கலைஞர்களின் படைப்புகளை தவறான முறையில் திருடி, அதன்மூலம் லாபம் பெறும் சில நிகழ்வுகள் உள்ளன. சரிபார்ப்பு செயல்முறைகள் இருந்தாலும், அச்சுறுத்தல் இன்னும் நீடிக்கிறது. இப்போது வரை, பட்டியலிடப்பட்ட NFT டோக்கன் நகலெடுக்கப்பட்டால், அவற்றை நீக்க எந்தவித பாரம்பரிய வழிமுறைகளும் இல்லை உங்கள் NFT யை மீட்பது கடினம் அல்லது முடியாத ஒன்றாகும். மேலும், ஏதேனும் ஒரு நகலைப் பின்தொடர்வது அல்லது அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையைத் தொடங்குவது மிகவும் கடினமானதாகவும் சிக்கனமற்றதாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என்ன மாற்றுவழி உள்ளது? 

பால்கன் ராப்பாபோர்ட் & பெர்க்மேன் PLLC இல், உள்ள அறிவுசார் சொத்து பயிற்சி குழுவின் தலைவர் மொயிஷ் ஈ. பெல்ட்ஸ், எஸ்க் இதற்கு பதிலளிக்கிறார், ” ஓரளவிற்கு உங்கள் படைப்பின் மீதான அத்துமீறலை சரிசெய்ய பாரம்பரிய ஐபி விதிகளைப் பயன்படுத்துவது இன்னும் சாத்தியமாக இருக்கலாம்.”உங்கள் படைப்பை யாராவது நகலெடுப்பதைக் கண்டால் உடனடியாக NFT கள் விற்கப்படும் தளத்தை தொடர்பு கொள்ளவும். 

இதர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் வன்பொருள் வேலட்டில் முதலீடு செய்வது அல்லது அதிக பாதுகாப்பான வெளிப்புற ஹார்ட் டிஸ்க்கில் செயலாற்றுவது அடங்கும் உங்கள் வேலட் முகவரி மற்றும் சீடு சொற்றொடரை பாதுகாப்பாக வைத்திருங்கள் மற்றும் கிரிப்டோகரன்ஸிகளில் வர்த்தகம் செய்யும் போதெல்லாம் VPN ஐப் பயன்படுத்தவும். 

#4 NFT ஏற்றத்தாழ்வை எப்படி எதிர்கொள்வது?

NFT க்கள் ஏற்ற இறக்கமுள்ள சொத்து வகையைச் சேர்ந்தவை மேலும் அவை இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளன. பிப்ரவரியில் NFT களின் விண்ணைத்தொடும் உயர்வில் சந்தை 170 மில்லியன் டாலர்களை தாண்டியதில் ஏற்ற இறக்கம் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.. NFT சந்தை ,மே முடிவடைந்தவுடன் மூன்று மாதங்களுக்குள் வெறும் $ 19.4 மில்லியனாக சரிந்தது. இதன் விளைவாக, NFT களை அதிக விலைக்கு வாங்கிய முதலீட்டாளர்கள் தங்கள் இருப்பில் ஓரளவே இருப்பதைக் கண்டனர் எனவே NFT களைத் மிண்ட் செய்வது என்பது உங்கள் கலை அல்லது படைப்பை டிஜிட்டல் மயமாக்குவது மட்டுமல்ல. இது படைப்பாளிகள் தரப்பில் நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும். சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து உங்கள் NFT களைப் பாதுகாப்பாக வைத்திருக்க மனதில் கொள்ள வேண்டியவை சில உள்ளன:

  • NFT களைத் மிண்ட் செய்வதன் மூலம் நீங்கள் பெறும் வருமானம்நீங்கள் மூதலீடு செய்த நேரம், முயற்சி மற்றும் பணத்திற்கு மதிப்பானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய ரிஸ்க்-டு-ரிவார்டு விகிதத்தைக் கருத்தில் கொள்ளவும் 
  • உங்கள் தனிப்பட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்த உங்கள் படைப்பை வாங்க ஆர்வமுள்ள பார்வையாளர்கள் அல்லது ரசிகர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்குங்கள். 
  • தொடர்ந்து முயலுங்கள் NFT க்களை மிண்ட் செய்வதால் குறுகிய காலத்தில் வெகுமதி மூலம் எதிர்பாராத லாபம் பெறலாம் என்ற கண்ணோட்டம் வேண்டாம் 

#5 NFT க்கள் எவ்வாறு வர்த்தகங்களை பாதிக்கிறது?

சொந்த உரிமைகளை மாற்றி, டிஜிட்டல் பொருட்கள் அல்லது கலைப்படைப்புகளை விற்பனை செய்வதற்கான எதிர்கால கருவியாக இருக்கும் திறன் NFT களுக்கு உள்ளது. உதாரணத்திற்கு, டாப் ஷாட்ஸ்NBA சேகரிப்புகள், NBA கேம்களிலிருந்து குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் ஆகும், இவை ரசிகர்களிடையே அதிக வரவேற்பைக் கொண்டிருக்கின்றன ஒரு லீப்ரான் ஜேம்ஸ் டாப் ஷாட் $ 200,000 க்கும் அதிகமாக விற்கப்பட்டதில்ஆச்சரியமில்லை! படங்கள், புகைப்படங்கள், சேகரிப்புகள், gif கள், பாடல்கள், நினைவுகள் மற்றும் உங்கள் சொந்த வாயு உமிழ்வுகள் உட்பட எதையும் நீங்கள் நடைமுறையில் NFT களாக மிண்ட் செய்யலாம் இதுதான் NFT யின் விளக்கமாகும்! 

NFT சந்தை எதிர்காலத்தில் அற்புதமான சாத்தியக்கூறுகளுடன் கூடிய ஒரு முற்றிலும் புதிய இடமாகும். புதிய உரிமையாளருக்கு உண்மையான சொத்தின் ஆஃப்-செயின் இடம்பெயர்வைக் கருத்தில் கொள்ளாமல், NFT கள் உண்மையான சொத்துடன் பிணைக்கப்படும் போது ஆன் -செயின் உரிமைக்களை மாற்ற ஒரு புதிய வழியை வழங்குகிறது. காயின் டெலிகிராப் சொல்வது போல் ‘அவற்றை பாதுகாப்பாக வைத்திருத்தல், இறுதி இழப்பீட்டில் புரட்சி ஏற்படுத்துவது, ஸ்டோரேஜ், சட்டபூர்வத்தன்மை மற்றும் சொத்தை பாதுகாத்தல்” ஆகியவற்றின் மூலம் NFT கள் ‘உரிமைக்கான டோக்கனைசேஷனை’ எளிதாக்குகின்றன 

NFT மிண்டிங் செயல்முறையின் போது பரிவர்த்தனைகளை சரிபார்ப்பதற்கு தேவையான கணக்கிடும் சக்தி அதிகளவில் தேவைப்படும் காரணத்தால் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், படைப்பாளர்கள் தங்கள் வேலையின் டிஜிட்டல்மயமாக்கல் விட்டுச் செல்லும் கார்பன் தடத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் மேலும் ஆராய்ந்து தேர்வுகளை செய்ய வேண்டும். ஒரு குறிக்கோள் இல்லாமல் அல்லது எந்த அடிப்படை மதிப்புமின்றி NFT களை தோராயமாகத் மிண்ட் செய்வது கணிசமான லாபங்கள் எதுவும் இல்லாமல் சுற்றுச்சூழல் செலவை மட்டுமே சேர்க்கும். 

மேலே உள்ள கருத்துக்களைப் படித்ததால் உங்கள் முடிவை ஓரளவு திடமாக்க உதவியிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு படைப்பாளி அவர்களின் முதல் NFT களைத் மிண்ட் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற விஷயங்களை கீழே கமெண்ட் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply