Skip to main content

நிலவைத் தொடும் ADA (ADA to the Moon)

By நவம்பர் 1, 2021நவம்பர் 12th, 20214 minute read

குறிப்பு: இந்த வலைப்பதிவு ஒரு வெளிப்புற பதிவர் எழுதியது. இந்த இடுகையில் வெளிப்படுத்தப்பட்ட பார்வைகள் மற்றும் கருத்துக்கள் ஆசிரியருக்கு மட்டுமே சொந்தமானது.

கார்டானோவுக்குள் நுழைவது – ஏன் இந்த பரபரப்பு?

கிரிப்டோகரன்சித் துறையை சிறிது காலமாகப் பின்தொடரும் எவரும் இந்தத் தொழில் வெறும் பிட்காயின் மற்றும் எத்தேரியத்திற்கு மட்டும் உரியதல்ல என்பதை அறிவார்கள். பல ஆண்டுகளாக பல்வேறு கிரிப்டோ புராஜக்ட்டுகள் வெளி வந்துள்ளன, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக் காரணத்துடன், சில புராஜக்ட்டுகள் பிட்காயின் மற்றும் எத்தேரியம் வழங்குவதை அப்படியே பிரதிபலிப்பதாகவும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு திட்டம் கார்டானோ பிளாக்செயின் ஆகும், அது நெட்வொர்க் டெவலப்பர்களால் பரவலாக்கப்பட்ட நிதிகளின் உயர்வைப் பயன்படுத்திக் கொள்ள முற்படுவதால், இது உலகின் மூன்றாவது பெரிய மெய்நிகர் நாணயமாக மாறியுள்ளது.

முன்னோட்டம்

எத்தீரியத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான சார்லஸ் ஹோஸ்கின்சன், ஆரம்ப நாட்களில் மிகவும் தரப்படுத்தப்பட்ட மற்றும் அளவிடக்கூடிய பிளாக்செயினின் தேவையை அடையாளம் கண்டார். கணிதத்தில் தனது நிபுணத்துவத்துடன், ஹாஸ்கின்சன் ஒரு பிளாக்செயினை உருவாக்குவதற்கான அறிவியல் முறைகளைக் கருத்தில் கொள்ளத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததை விட, சிறந்த பிளாக்செயின் மற்றும் ஸ்மார்ட் கான்ட்ராக்ட் தளத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட எத்தீரியத்தின் முன்னாள் சக ஊழியரான ஜெர்மி வுட்டுடன் ஹாஸ்கின்சன் தொடர்பு கொண்டார். அவர்கள் இருவரும் கைகோர்த்து, கார்டானோவை, அதன் தற்போதைய வடிவத்தில் உருவாக்கத் தொடங்கினர்.


ஹாஸ்கின்சன் மற்றும் வுட் இருவரும் கார்டானோவின் முக்கிய அடிப்படைகள் மற்றும் ஸ்மார்ட் ஒப்பந்தத் தொழில்நுட்பத்தின் மூளையாக இருந்தாலும், அவர்கள் கார்டானோ பிளாக்செயினைக் கட்டுப்படுத்தவோ அல்லது இயக்கவோ இல்லை. 

கார்டானோ அறக்கட்டளை, சந்தைக்கு உதவுவதற்கும் பிளாக்செயினின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முழு திட்டமும் கொண்ட ஒரு இலாப நோக்கமற்ற காப்பக நிறுவனமாக செயல்படுகிறது. இதற்கிடையில், 2015-ல் ஹாஸ்கின்சன் மற்றும் வுட்-ஆல் IOHK – ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிறுவப்பட்டது, இது கார்டானோ பிளாக்செயின் வடிவமைப்பு மற்றும் பொறியியலுக்கு உதவியது. அடுத்து எம்பார்கோவும் உள்ளது, இது கார்டானோவை ஆதரிப்பதற்கும் நிதி ரீதியாக அதன் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் ஒரு பெரிய நிதி நிறுவனமாக செயல்படுகிறது. 

இப்போது நாம் அந்த புராஜக்ட்டுக்குள்ளே செல்வோம்.

கார்டானோ என்றால் என்ன, ஏன் அனைவரும் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்?

கார்டானோ அதன் ஒருமித்த செயல்பாடு மற்றும் ஒரு தனித்துவமான பல அடுக்கு வடிவமைப்பில் கணிதக் கருத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம் மற்ற போட்டியிடும் பிளாக்செயின்களிலிருந்து தனித்துவமாக நிற்கிறது எத்தீரியத்தை உருவாக்க உதவிய ஒரு குழுவுடன், கார்டானோ அடுத்த தலைமுறைக்கான கிரிப்டோகரன்சி தீர்வு என்று பலர் நம்புகிறார்கள்.

கார்டானோ (ADA), மற்ற கிரிப்டோகரன்ஸிகளைப் போலவே, டிஜிட்டல் டோக்கன் ஆகும், இது மதிப்பை வைத்திருக்கவும் பணம் செலுத்துவதற்கும் மற்றும் பணம் பெறுவதற்கும் பயன்படுகின்றது. கார்டானோவின் பிளாக்செயின் எத்தீரியம் போன்ற ஸ்மார்ட் ஒப்பந்தங்களை உருவாக்க பயன்படுகிறது, அதன் பின்னர், பரவலாக்கப்பட்ட பயன்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்க பயன்படுத்தப்படலாம். மேலும், விரைவாகவும் குறைந்த கட்டணத்திலும் பணப் பரிமாற்றம் மற்றும் பெறும் திறன் மூலம் வணிகம் மற்றும் நிதியியல் ஆகியவற்றில் தொலைநோக்கு விளைவுகளை இது கொண்டுள்ளது.

கார்டானோ தன்னை மூன்றாம் தலைமுறையின் பிளாக்செயின் என்று குறிப்பிடுகிறது எத்தீரியம் மற்றும் பிட்காயின்(BTC) செயல்படுத்தும் சில அளவிடுதல் மற்றும் இதர சிரமங்களை நிவர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தின், உயர் தீர்வுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, அது அடித்தளத்திலிருந்து தொடங்கி ஒரு புதிய பிளாக்செயினை உருவாக்குகிறது

இந்த நெட்வொர்க் ஓரோபோரோஸ் என்பதன் ஒருமித்த செயல்முறையை நம்பியுள்ளது, இது புரூஃப்-ஆஃப்-ஸ்டேக்-(பிஓஎஸ்) அடிப்படையிலான பிளாக்செயின் சுற்றுச்சூழல் அமைப்பில் கட்டமைக்கப்ட்டதாகும். இந்த ஒருமித்த முறை ADA-வை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றவும், பெறவும் எல்லா நேரங்களிலும் அனுமதிக்கிறது, அதே நேரத்தில் கார்டானோ பிளாக்செயினில் உள்ள ஸ்மார்ட் ஒப்பந்தங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மேலும், ஒரு PoS-இல் ஒருமித்த செயல்முறையாக, ஓரோபோரோஸ் நெட்வொர்க்கில் தங்கள் ADA-வை பங்களித்து, நெட்வொர்க் ஒருமித்தலுக்கு பங்களிப்பு வழங்கும் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு வெகுமதியும் அளிக்கிறது.

இருப்பினும், நெட்வொர்க் இன்னும் ஸ்மார்ட் ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால், செப்டம்பர் 12 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள “அலோன்சோ” புதுப்பிப்பை எதிர்பார்த்து, ADA முதலீட்டாளர்கள் கார்டானோவின் மதிப்பை இன்னும் அதிகமாக்குகின்றனர். கார்டானோ பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) சந்தையில் ஒரு உண்மையான பங்கேற்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும், ஏனெனில் அலோன்சோவின் புதுப்பிப்பு, இந்த பிளாக்செயினுக்கு ஸ்மார்ட்-ஒப்பந்த திறனை அறிமுகப்படுத்தும். ஆனால் உண்மையில் கண்ணில் தென்படுவதை விட இன்னும் அதிகமாக உள்ளது.

ஒரு பெரிய நோக்கத்துடன் உலகெங்கும் செல்லுதல்

நிதி தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, ஆப்பிரிக்க நாடுகள் பாரம்பரியமாக ஆரம்பகால ஏற்றுக் கொள்பவைகளாக இருந்தன. இந்தக் கண்டம் முழுவதும், வளர்ந்து வரும் தொழில்நுட்பமானது முக்கிய தீர்வுகளைக் காண முன்னணியில் இருக்கின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், உள்ளூர் பள்ளிகளில் மாணவர்களின் செயல்திறனை கண்காணிக்க ஒரு பிளாக்செயின் அடிப்படையிலான அமைப்பை உருவாக்க எத்தியோப்பிய அரசாங்கத்துடன் IOHK ஒப்பந்தத்தை அறிவித்தது, இது வரலாற்றில் மிகப்பெரிய பிளாக்செயின் ஒப்பந்தம் என்று கூறப்படுகின்றது.

Source: The New York Times.

அப்போதிலிருந்து, அந்த நிறுவனம் அந்நாட்டில் தன் நேரடி இருப்பை நிறுவி வருகின்றது, தலைநகரான அடிஸ் அபாபாவில் ஒரு அலுவலகத்தைத் திறந்து, பெரிய அளவிலான பிளாக்செயின் ஐடி திட்டத்தின் வேலைகளைத் தொடங்க இருக்கின்றது, இது ஜனவரி 2022ல் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எத்தியோப்பியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு டிஜிட்டல் அடையாளம் (DID) ஒதுக்கப்படும். இந்த மெட்டாடேட்டா அவர்களின் கல்வி காலத்தில், அவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பான அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும். இது கார்டானோ பிளாக்செயினுடன் இணைக்கப்பட்டுள்ள அடாலா ப்ரிசம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

ஒரு மாணவரின் கல்வி முன்னேற்றத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் பதிவு செய்வதால், இந்த அமைப்பு புதுமையானதாக இருக்கிறது உதாரணமாக, ஒரு மாணவர் தங்கள் கல்வி வாழ்க்கை முழுவதும் கணிதத்தில் சிறந்து விளங்குகிறார், ஆனால் அவர்களின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்கள் விரும்பும் பல்கலைக்கழகத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம். இத்தகைய சூழல் பெரும்பாலும் மாணவரின் எதிர்காலத்திற்கான நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

இந்த ஒன்-ஸ்ட்ரைக் முறை DID-உடன் அவர்களின் திறமைகளின் விரிவான மதிப்பீட்டாக மாற்றப்படுகிறது. இந்த முறை மோசடி அல்லது போலிக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கிறது. இதில், ஒரு பிளாக்செயின் அமைப்பு அதை மாற்றமுடியாததாகவும், அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது.

இதனுடன் முடிந்து விடவில்லை அவர்கள் தான்சானியா மற்றும் எத்தியோப்பியாவிற்கு முக்கியமான சேவைகளை வழங்க, உலக மொபைல் குழுவுடன் இணந்துள்ளனர் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி, தான்சானியாவுக்கு நிலையான இண்டர்நெட்டை வழங்க இந்த நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. கார்டனோ பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் குறைந்த விலை நெட்வொர்க் நோடுகளை வழங்க அவர்கள் இணைந்து செயல்படுவார்கள்.

இந்த நெட்வொர்க் நோடுகள் இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான உள்ளூர் ரிலேக்களாக செயல்படும். எத்தியோப்பியன் அடையாளத் முறையையும் சந்தாதாரர்கள் அணுக முடியும். பள்ளிக்கல்வியில் இந்தத் தீர்வுக்கு பதிலாக, அவர்கள் டிஜிட்டல் பேங்கிங் போன்ற சேவைகளை அணுக முடியும் (இந்த தளத்தில் கார்டானோ பயன்படுத்தப்படுவதால், இதர பயன்பாட்டு வழிமுறைகளும் கிடைக்கின்றன).

ஆப்பிரிக்காவில் இது வெற்றி பெற்றால் கார்டானோவின் திறன் வரம்பற்றதாக இருக்கும். எதிர்காலத்தில், பயனர்களின் சாத்தியமான எண்ணிக்கை மில்லியன் அளவில் அல்ல, ஆனால் பில்லியன் எண்ணிக்கையில் இருக்கும். கார்டானோவின் படைப்பாளிகள் கடந்த ஐந்து வருடங்களில் நைஜீரியா, ருவாண்டா, உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட ஆப்பிரிக்காவின் பல நாடுகளுக்குச் சென்றிருந்ததால், இந்தத் திட்டத்திற்கான தங்கள் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளனர்.

ஆப்பிரிக்க கண்டத்திற்கான ஹோஸ்கின்சனின் கண்ணோட்டத்தின் பெரும்பகுதி, நவீன தொழில்நுட்பத்தை அந்த நாடு ஏற்றுக்கொள்வதில் உள்ள நம்பிக்கையை, இது அடிப்படையாகக் கொண்டது. வளரும் நாடுகளில் ஆர்வம் அதிகமாக இருப்பதாக அவர் நம்புகிறார், எனவே இந்த வகையான முன்னேற்றங்களுக்கு இவை சிறந்த இடங்களாக இருக்கின்றன.

முடிவுரை

கார்டானோவைச் சுற்றியுள்ள சமீபத்திய பரபரப்பு நாம் அதன் விரிவான எல்லைகளைப் பார்ப்பதால் நியாயப்படுத்தப்படலாம். இத்திட்டம் நமக்கு நிறைய வழங்கக் காத்திருக்கின்றது, மேலும் பங்குதாரர்களுக்கு ஏற்கனவே கண்கூடாகத் தெரியும், நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புகள் இத்திட்டத்தின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கின்றன.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply