Skip to main content

வெப்3 என்றால் என்ன – ஆரம்ப நிலையாளர்களுக்கு (What is Web3 – For Beginners)

By ஏப்ரல் 14, 2022ஏப்ரல் 30th, 20224 minute read

குறிப்பு: இந்த வலைப்பதிவு ஒரு வெளிப்புற பதிவரால் எழுதப்பட்டது. இந்த போஸ்ட்டில் வெளிப்படுத்தப்பட்ட கண்ணோட்டங்கள் மற்றும் கருத்துக்கள் ஆசிரியருக்கு மட்டுமே சொந்தமானது.

இணையத்தின் எழுச்சியானது வரலாற்றில் மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஒன்றாகும். எங்களின் சமூக தொடர்புகளிலிருந்து எங்களின் ஊபர் டிரைவரின் சரியான இருப்பிடத்தைக் கண்டறிந்து ஆன்லைனில் முன்பதிவு செய்வது அல்லது சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் புதிய மீம் ஒன்றை நண்பருக்கு அனுப்புவது போன்றவைகளிலிருந்து இது தெளிவாகிறது. கடந்த 16 ஆண்டுகளாக, மக்கள் இதை வெப் 2.0 என்று குறிப்பிடுகின்றனர். இன்று, இணையத்தின் முன்னோடிகள் எதிர்பார்த்தது போலவே, சமூக ஊடக பயன்பாடுகள் மூலம் உலகளாவிய பிரச்சினைகள் வெளிப்படையாக விவாதிக்கப்படும் மில்லியன் கணக்கான ஆன்லைன் குழுக்கள் உள்ளன.

மிக முக்கியமாக, வெப் 2.0, அந்த உள்கட்டமைப்பின் மேல் உருவாக்குவதற்கு டெவலப்பர்களுக்கு தம் கதவைத் திறந்ததன் மூலம், வெப் 3.0 என அழைக்கப்படும் புது வரவைக் குறிக்கிறது.

இணையத்தின் பல நிலைகள்

இணையம் அல்லது “வேர்ல்ட் வைட் வெப் (www)” என்று வரும்போது, அதன் தொடக்கத்திலிருந்து பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், இன்றைய தொழில்நுட்பங்கள், ஆரம்ப நாட்களின் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடும்போது மிகவும் வேறுபட்டவையாகும்.

பொதுவாக, இணைய வளர்ச்சியில் மூன்று முக்கிய நிலைகள் குறிப்பிடப்படுகின்றன: வெப் 1.0, வெப் 2.0, மற்றும் இறுதியாக, வெப் 3.0.

வெப் 1.0

இணையத்தின் முதல் மற்றும் மிக அடிப்படையான பதிப்பு வெப் 1.0 ஆகும். இது நிலையான ஒன்றாக இருந்ததால், இணையப் பயனர்கள் உள்ளடக்கத்தைத் தேடுதல் மற்றும் படிப்பது போன்ற பணிகளைச் செய்ய இணையப் பக்கங்களைப் பயன்படுத்தினார்கள். அவ்வளவுதான். இது இணையத்தில் “படிக்க மட்டும்” என்பதாக இருந்தது.

Get WazirX News First

* indicates required

தகவல் தளத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தகவல் வழங்குவதற்கு நிலையான கோப்பு முறைமைகள் பயன்படுத்தப்பட்டன. இணையதளங்களில் எந்த தொடர்பு கொள்ளுதலும் இல்லை. இதன் காரணமாக, வெப் 2.0 கட்டமைப்பிற்கு நம்மால் விரைவாக மாற முடிந்தது.

வெப் 2.0

டாட்-காம்-இன் எழுச்சி மற்றும் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் ஜாம்பவான்களின் எழுச்சியே வெப் 2.0க்கு வழிவகுத்தது. வெப் 1.0 உடன் ஒப்பிடுகையில், வெப் 2.0 ஆனது ஆன்லைனில் அவர்கள் கண்டறிந்த உள்ளடக்கத்துடன் தொடர்புகொள்வதற்கான கூடுதல் வழிகளை மக்களுக்கு வழங்கியது.

மக்கள் கருத்துகளை எழுதலாம், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவேற்றலாம் அல்லது இணையதளம் வழியாக குறுஞ்செய்திகளை அனுப்பலாம். இன்று நாம் பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இணையம் வெப் 2.0 ஆகும்.

வெப் 2.0இன் மற்றொரு வரையறுக்கும் அம்சம் என்னவென்றால், டெவலப்பர்கள் அல்லாதவர்கள் இணையதளங்களுடன் தொடர்பு கொள்ளவும், உள்ளடக்கத்தைச் சேர்க்கவும் முடியும். அதன் மூலமாக மக்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளிலிருந்து பணமும் சம்பாதிக்க முடிந்தது.

இதில் பல நன்மைகள் இருந்தபோதிலும், வெப் 2.0 தகவல் பாதுகாப்பு இல்லாததால் தடைபட்டது. இதன் விளைவாக, தகவல் பாதுகாப்பின் சிக்கல் விவாதத்தின் முக்கிய தலைப்பாக மாறியது.

தொடக்கத்தில், இணைய சேவைகளை இலவசமாகப் பயன்படுத்துவதற்கு ஈடாக, வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும், பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர் தகவல்களின் மாபெரும் தகவல் தளங்களைத் தொகுக்கத் தொடங்கியபோது சிக்கல்கள் ஏற்பட்டன, பின்னர் அந்தத் தகவலை தங்கள் சொந்த லாபத்திற்காக விற்கத் தொடங்கின. இது மாபெரும் ஃபேஸ்புக் தகவல் ஊழலை எனக்கு நினைவூட்டுகிறது.

இந்த மகத்தான தகவல் தளங்களில் தகவல் கசிவுகள் மற்றும் பிற தாக்குதல்கள் எந்த நேரத்திலும் நிகழலாம். இது போன்ற பிரச்சனைகள்தான் வெப் 3.0இன் வருகைக்கு வழி வகுத்தன.

வெப் 3.0

வெப் 2.0இல் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்க எதிர்கால இணையதளங்கள் வடிவமைக்கப்படும்.

பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோகரன்சிகள் இணையத்தின் அடுத்த தலைமுறைக்கான பரவலாக்கத்தை இயக்குகின்றன. வெப் 3.0இன் நோக்கம் பயனர்கள் தங்கள் சொந்த தகவலை அவர்களே வைத்திருப்பதும் கட்டுப்படுத்துவதும் ஆகும். இது பெரிய தொழில்நுட்ப வணிகங்கள் இடைத்தரகர்களாக இருப்பதை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் தனிநபர்கள் ஒருவருக்கொருவர் சேவைகளை வழங்கலாம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் இணைய ஆதாரங்களை நிர்வகிக்கலாம்.

வெப் 3இன் அடிப்படைக் கூறுகள் என்ன?

இன்றைய இணையம் சில புதிய அம்சங்களைத் தவிர, அடிப்படையில் 2010இல் நம்மிடம் இருந்ததைப் போலவே உள்ளது. இருப்பினும், வெப்3 இணையத்தைப் நாம் பயன்படுத்தும் மற்றும் தொடர்பு கொள்ளும் விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

வெப்3 என்பது பரவலாக்கப்பட்ட இணையத்தின் புதிய யுகம், அதாவது மூன்றாம் தரப்பு இணைய சேவை வழங்குநர்கள் நம் தனியுரிமையில் குறுக்கிடாமல் அல்லது இணையத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தாமல் நுகர்வோர் தாங்கள் விரும்பும் எந்த இணையச் சேவையையும் பெற முடியும் என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

வெப்3இன் அடிப்படை கூறுகளை இப்போது நாம் மதிப்பாய்வு செய்வோம் —

பிளாக்செயின் நெட்வொர்க்குகள்

வெப்3, பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மேல் நிலையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். பிளாக்செயின் நெட்வொர்க்கில் தகவல் பரவலாக்கப்படுகிறது, இதனால் மக்கள் தங்கள் தகவலைச் சொந்தமாக வைத்திருக்க முடியும் மற்றும் அதன் மீதான கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்ற அச்சமின்றி அதைப் பரிமாறிக்கொள்ள முடியும். மூன்றாம் தரப்பினர் யாரும் ஈடுபடாததால், தகவல் கசிவது சாத்தியமில்லை, பயனர்கள் பல சேவைகளில் பாதுகாப்பாக உள்நுழைய அனுமதிக்கிறது.

மேலும், கிரிப்டோகரன்சிகளுக்கு பிளாக்செயின் இன்றியமையாததாகும், இது மற்றுமொரு வெப்3 கூறு ஆகும். வெப்3 பரிவர்த்தனைகளுக்கு ஆற்றல் தரப்பயன்படும் NFT டோக்கன்களும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவையே.

 

செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ்)

வெப் 2.0 ஆனது செயற்கை நுண்ணறிவின் (AI) ஒரு பங்கைக் கொண்டிருந்தாலும், அது இன்னும் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் இயக்கப்படுகிறது. வெப் 3.0இல், செயற்கை நுண்ணறிவு (AI) பரவலாக்கத்திற்கு பயன்படுத்தப்படும்.

ஆகுமெண்டட் ரியாலிட்டி/வர்ச்சுவல் ரியாலிட்டி (AR/VR)

வெப்3இன் எதிர்காலத்திற்கு முக்கியமான மெட்டாவெர்ஸ், வெப்3இன் முக்கிய அங்கமான AR/VRஇல் கட்டமைக்கப்படும்.

வெப்3ஐ அதன் முன்னோடிகளில் இருந்து வேறுபடுத்துவது எது?

வெப்3 தன் சொந்த உள்ளமைக்கப்பட்ட பேமெண்ட்களைக் கொண்டுள்ளது மற்றும் சுய-ஆளுமை, நிலையானது மற்றும் வலுவானது. இது பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளது:

பரவலாக்கப்பட்டது

பிளாக்செயினைப் பயன்படுத்தி, வெப்3இல் உள்ள எல்லா தகவலையும் எந்த ஒரு அமைப்பாலும் அணுக முடியாது. இது பல்வேறு தளங்களுக்கு பரவலாக்கப்படுகிறது. இது தோல்விகளை கண்டரிவதுடன் பரவலாக்கப்பட்ட அணுகலையும் ஆதரிக்கிறது.

அனுமதியற்றது

வெப்3 உடன் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு பயனர்கள் அங்கீகாரம் பெற வேண்டிய அவசியமில்லை. பயனர்கள் தங்களை பற்றிய எந்தத் தனிப்பட்ட தகவலையும் வழங்கத் தேவையில்லாமல் சில சேவைகள் அவர்களுக்குக் கிடைக்கும். தனியுரிமையை விட்டுக்கொடுக்கவோ அல்லது வேறு எந்தத் தகவலையும் கொடுக்கவோ தேவையில்லை.

பாதுகாப்பானது

அதிகாரப் பரவலாக்கம், ஹேக்கர்கள் குறிப்பிட்ட தகவல் தளங்களை குறிவைப்பதை கடினமாக்குவதால், வெப் 2.0ஐ விட வெப் 3.0 மிகவும் பாதுகாப்பானது.

வெப்3 உடன் மெட்டாவெர்ஸ்: அங்கு என்ன இருக்கிறது?

மெட்டாவெர்ஸில் உள்ள 3D மெய்நிகர் சூழல்கள் பயனர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து கொள்ள, கேம்கள் விளையாட அல்லது நேரடி கற்றலில் ஈடுபட அனுமதிக்கிறது. அது இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும் கூட வெப்3இல் மெட்டாவெர்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெட்டாவெர்ஸ் தேவையில்லாத வெப்3 பயன்பாடுகள் இன்னும் இருக்கலாம். எவ்வாறாயினும், இந்தப் பயன்பாடுகள் நமது அன்றாட நடைமுறைகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதில் மெட்டாவர்ஸ் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்3: எதிர்காலத்தில் என்ன நடக்கலாம்?

வெப்3 ஆனது வெப் 2.0இன் பெரும்பாலான சிக்கல்களைத் தீர்க்கும் திறனைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், இந்தச் சிறந்த கண்ணோட்டங்கள் இன்னும் சரியாக உணரப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் நினைத்தபடி எல்லாம் சரியாக நடக்கும் என்று எதிர்பார்ப்பது சரியானதல்ல.

பெரும்பாலான முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே வெப்3 பயன்பாடுகளில் பணி புரிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஒருவித மையப்படுத்தலின் விளைவாக அவர்களின் ஈடுபாட்டை முன்கூட்டியே கணிக்க முடியாது. பல தகவல் தொழில்நுட்பத்தில் தொழில்முனைவோர் மற்றும் வணிக நிர்வாகிகள் வெப்3 நாம் எதிர்பார்ப்பது போல் பரவலாக்கப்பட்டதாக இருக்காது என்ற கருத்துக்களை எழுப்பியுள்ளனர்.

நிலைமை என்ன என்பது முக்கியமில்லை; வெப்3 செயலாக்கத்திற்கு சிறிது காலம் ஆகலாம். என்ன நடக்கப்போகிறது என்பதைக் கண்டறிய பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply