
This article is available in the following languages:
WazirX அதன் இயங்குதளத்தில் (இணையதளம்/மொபைல்) டிரேடிங்வியூவிலிருந்து விளக்கப்படங்களை ஆதரிக்கிறது. பல பயனர்கள் இதை அறிந்திருக்க மாட்டார்கள், ஆனால் டிரேடிங்வியூவைப் பயன்படுத்தி மிகவும் விரிவான தொழில்நுட்ப பகுப்பாய்வு நடத்த தளத்தைப் பயன்படுத்தலாம். இந்த வலைப்பதிவில், அதை எப்படிச் செய்வது என்பதை விளக்க முயற்சிப்பேன். நாம் அதைத் தொடங்குவோம்.
உங்கள் டெஸ்க்டாப்பில் இருந்து WazirX கணக்கில் உள்நுழையும்போது, திரையின் மையத்தில் டிரேடிங்வியூ விளக்கப்படத்தைக் காண்பீர்கள். முதலில் நாம் இந்தப் படத்தின் அம்சங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
P1: இங்கு நீங்கள் விளக்கப்படத்தின் பெயரையும், நீங்கள் பார்க்க விரும்பும் சந்தையையும் காணலாம். இந்தப் படத்தில், விளக்கப்படம் BTC/INR சந்தையாகும்.
P2: இங்குதான் நீங்கள் மெழுகுவர்த்தியின் கால அளவை மாற்றலாம். 1M என்றால் 1 நிமிடம், 5M என்றால் 5 நிமிடங்கள், 1H என்றால் 1 மணிநேரம், 1D என்றால் 1 நாள் மற்றும் 1W என்றால் 1 வாரம். இங்கே நாம் 1D ஐத் தேர்ந்தெடுத்துள்ளோம் – அதாவது – விளக்கப்படத்தில் உள்ள ஒவ்வொரு மெழுகுவர்த்தியும் 1 நாள் காலக்கெடுவைக் கொண்டது. நாம் 1H ஐத் தேர்ந்தெடுத்தால், நாம் ஆழமாகச் சென்று மேலும் நுண்ணிய விவரங்களைப் பார்க்கலாம். நாம் எவ்வளவு ஆழமாகச் செல்கிறோமோ, அந்த அளவிற்கு சந்தை ஏற்ற இறக்கத்துடன் தெரியும்.
P3: இங்கே, கர்சர் எங்கு செல்கிறதோ அந்தக் குறிப்பிட்ட மெழுகுவர்த்தியின் தகவலை நீங்கள் பார்க்கலாம். BTC/INR சந்தையிலும், WazirX இல் 1D மெழுகுவர்த்தியிலும் தகவல் காட்டப்படுவதை நாம் பார்க்கலாம். O (திறந்த) H (உயர்ந்த) L (குறைந்த) C (முடியும்) விலை, கடைசி மெழுகுவர்த்தி (+3951) மூடப்பட்டதிலிருந்து விலை மாற்றம் மற்றும் அதன் சதவீத மாற்றம் (0.09%) ஆகியவையும் தெரியும்.
P4: இங்கே, நீங்கள் வர்த்தகத்தின் அளவு மற்றும் தற்போதைய மெழுகுவர்த்தியின் உயர்வு-தாழ்வைக் காணலாம். WazirX இல் BTC வர்த்தகம் செய்யப்பட்ட கடைசி விலையும் தெரியும்.
P5: Fx என்பது செயல்பாடுகள் அல்லது குறிகாட்டிகளைக் குறிக்கிறது. இதைப்பற்றி கீழே மேலும் ஆராய்ந்து அறிவோம். அதற்கு அடுத்துள்ள பெட்டியைக் கிளிக் செய்தால், முழுத்திரை பயன்முறையில் நுழைவீர்கள்.
P6: இந்த இடத்தில் கிளிக் செய்வதன் மூலம் இந்த BTC/INR சந்தையை அமைப்புகளில் உங்களுக்கு பிடித்ததாக குறிக்கலாம்.
P7: இங்கே கிளிக் செய்வதன் மூலம், தொழில்நுட்ப பகுப்பாய்விற்கு பயன்படுத்தக்கூடிய டிரேடிங்வியூவின் கூடுதல் கருவிகள் காண்பிக்கப்படும். இதைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
P8: இங்கே, அதற்கு மேலே உள்ள மெழுகுவர்த்திக்கு நடந்த வர்த்தக அளவைக் காண்கிறோம். இது,அதற்கு மேலே உள்ள அந்த மெழுகுவர்த்தியின் குறைந்த மற்றும் அதிக விலைக்கு இடையே நடந்த வர்த்தக அளவாகும்.
P9: இந்த மெழுகுவர்த்திகளில் கிரிப்டோவின் விலை மாற்றத்தை நாம் காணலாம் .
P10: விளக்கப்படத்தின் X-அச்சு அதன் தேதியாகும்.
P11: விளக்கப்படத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான அமைப்புகள் பொத்தான் இது. இதை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.
P12: Y-அச்சு கிரிப்டோவின் விலையாகும்
இப்போது ஒவ்வொரு திரைக் கூறுகளையும் நாம் அறிவோம், மேல் வலது புறம் உள்ள Fx பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் MACD மற்றும் RSI குறிகாட்டி (அல்லது செயல்பாடுகள்) ஆகியவற்றை நாம் சேர்க்க முடியும்.
நீங்கள் Fx ஐக் கிளிக் செய்யும் போது, மேலே உள்ள படத்தில் உள்ளபடி ஒரு பாப்அப்பைக் காண்பீர்கள். நீங்கள் MACD மற்றும் RSI ஐ இங்கே தேடலாம். அவற்றை உங்கள் விளக்கப்படத்தில் சேர்க்கும்போது கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று உங்களுக்கு தெரியும்.
இது சற்று நெரிசலாக இருப்பது போல் இருக்கிறது. நாம் முழுத்திரை பயன்பாட்டிற்கு செல்லலாம்.
முழுத்திரை பொத்தானைக் கிளிக் செய்யும் போது மேலே உள்ள படத்தை நீங்கள் பார்ப்பீர்கள். இங்கே, நீங்கள் MACD மற்றும் RSI ஆகியவற்றை தெளிவாகக் காணலாம். இப்போது டிரேடிங்வியூவிலிருந்து கூடுதல் கருவிகளைக் காட்ட கீழ் இடதுபுறம் உள்ள நீல பொத்தானைக் கிளிக் செய்யலாம்.
திரையில் விளக்கப்படங்களை ஆய்வு செய்ய நாம் பயன்படுத்தக்கூடிய பல கருவிகளை இப்போது பார்க்கலாம். ஆனால் நாம் தொடர்வதற்கு முன், கீழ் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் விருப்பத்தை கிளிக் செய்து ’தீம்’ ஐ டார்க்-மோடுக்கு மாற்றலாம்.
பொத்தானைக் கிளிக் செய்த பிறகு, பட்டியலின் கீழே ‘அமைப்புகள்’ விருப்பத்தைப் பார்க்கலாம்.
இங்கே, இப்போது நாம் ‘தோற்றம்’ எனும் விருப்பத்தைக் காணலாம், மேலும் பின்னணியை கருப்பு நிறமாகத் தேர்ந்தெடுத்து, செங்குத்து மற்றும் கிடைமட்ட கிரிட் லைன்களை அதை விட ஒரு பங்கு வெளிர் நிறமாக மாற்றுவோம். டிஸ்பிளேவில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு இது இப்படித்தான் இருக்கும்.
இப்போது இது மிகவும் நன்றாக இருக்கிறது, என்பது என் கருத்து. எனவே இடது கீழ் மூலையில் கிளிக் செய்வதன் மூலம் அணுகக்கூடிய டிரேடிங்வியூஸ் கருவிகளில் நம் கவனத்தை செலுத்துவோம்.
இங்கே மேலே, நான் டிரெண்ட் லைன் கருவியைப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம், இதன் மூலம் கடந்த சில நாட்களாக (அல்லது கடந்த சில மெழுகுவர்த்திகளில்) BTC மேல்நோக்கு திசையில் மாறியிருப்பதைக் காண முடிகிறது. மேலும், BTC குறையும் போது வர்த்தக அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதை நான் கவனித்தேன்.
MACD இன்டிகேட்டர் மாற்றப்படுவதையும் நான் கவனித்தேன், மேலும் வேகத்தில் மாற்றம் இருப்பது போல் தெரிகிறது. கடந்த முறை இந்த மாற்றம் நடந்தபோது BTC இல் குறிப்பிடத்தக்க உயர்வு இருந்ததையும் நாம் காணலாம்.
RSI ஐ ஆய்வு செய்யும்போது BTC வளர அதிக சாத்தியம் இருப்பதையும் காட்டுகிறது.
விளக்கப்படத்தில் பயன்படுத்தக்கூடிய மேலும் பல கருவிகள் உள்ளன. டிரேடிங்வியூ என்பது ட்ரெண்டுகளை அடையாளம் காணவும் உங்கள் வர்த்தக நிலைகளை நிர்வகிக்கவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். WazirX விளக்கப்படங்களில் கிடைக்கும் கருவிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
எங்கள் டுடோரியலுக்கு சில கருவிகளை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்: டிரெண்ட் லைன் கருவி (வரைபடத்தில் வரிகளைக் குறிக்க) மற்றும் அனடேஷன் கருவி (திரையில் எழுதுவதற்கு). இன்று உங்களுடைய WazirX கணக்கில் இன்னும் சில கருவிகளை நீங்கள் ஏன் ஆராயக்கூடாது? உங்களுக்குப் புரியவில்லை என்று உணர்ந்தால், உங்கள் சந்தேகங்களை கீழே உள்ள கருத்துகள் பிரிவில் எழுதலாம், நான் உங்களுக்கு பதில் தருகிறேன்.
