Skip to main content

இந்தியாவின் சிறந்த Bitcoin வேலட் 2021: WazirX ஏன் சிறந்ததாக கருதப்படுகிறது (Best Bitcoin Wallet in India 2021: Why WazirX is Considered to be the Best)

By அக்டோபர் 2, 2021நவம்பர் 12th, 20216 minute read

பிட்காயின் வாலெட்கள், பிட்காயின்களை ‘சேமித்து வைக்கும்’ செயல்பாட்டை வழங்கும் மெய்நிகர், டிஜிட்டல் பயன்பாட்டு புரொகிராம்களாக கருதப்படுகின்றன. நிச்சயமாக, உண்மையான பிட்காயின்கள் எதுவும் எங்கள் குறிப்பிட்ட வேலட்டுக்கு ‘அனுப்பப்படவில்லை’. 

அதற்கு பதிலாக, இந்த வேலட்கள் பிட்காயின் பிளாக்செயினில் குறிப்பிட்ட முகவரிகளை அணுகுவதால், அவை அவற்றின் மதிப்புகளைப் படிக்க முடியும் மற்றும் அந்த முகவரியுடன் தொடர்புடைய பிட்காயின்களைக் கையாள (பெற, அனுப்ப, முதலியன) கட்டளைகளை அனுப்ப முடியும். 

இந்த வழிகாட்டியில், ஒரு பிட்காயின் வேலட்டை முடிவு செய்வதற்கு முன், எங்கள் சரிபார்ப்பு பட்டியலில் உள்ள மிக முக்கியமான விஷயங்களை நாங்கள் உங்களுக்கு சொல்வோம் அதை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும். நீங்கள் சிந்தித்து முடிவு எடுக்க உங்களுக்கு உதவும் பரிந்துரைகள் மட்டுமே இவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இறுதியாக, வேலட் மற்றும் பொருளாதாரத்தைப் பொறுத்து, விஷயங்கள் எப்போதும் மாறலாம். இருப்பினும், உங்கள் வீட்டுப்பாடத்தை முதலில் முடிக்குமாறு தீவிரமாக அறிவுறுத்தப்படுகிறது.

Get WazirX News First

* indicates required

பிட்காயின் வேலட்டை பயன்படுத்துவன் நன்மைகள்

1. விரைவான பரிவர்த்தனைகள்

விரைவான பரிவர்த்தனைகளை வழங்கும் உள்கட்டமைப்பை வைத்திருப்பது நன்மை பயக்கும், ஏனெனில் இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் முக்கியமான பரிவர்த்தனைகளின் போது டைம்-அவுட் நிகழ்வுகளை குறைக்கிறது.

2. எளிதில் கிடைக்கக்கூடியது

தனிப்பட்ட சாவிகளுக்கு உங்களுக்கு அணுகல் இல்லையென்றால்,  உங்கள் வேலட்டில் உள்ள பிட்காயின் மீது உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிட்காயின் வேலட்டைத் தேர்ந்தெடுக்கும்போது இது ஒரு முக்கியமான கருத்தாகும்.

உங்களிடம் தனிப்பட்ட சாவி இருந்தால் உங்கள் பிட்காயினின் மீது உங்களுக்கு இன்னும் அதிக உரிமை இருக்கும், மேலும் அவற்றை எந்த நேரத்திலும் உங்கள் வேலட்டுக்குள்ளும் வெளியேயும் மாற்ற முடியும்.

3. நிதி கணக்குகளுக்கு டெபிட்/கிரெடிட் கார்டுகள் அல்லது UPI பயன்படுத்துதல் 

உங்கள் மொபைல் வேலட்டைப் பயன்படுத்தி உங்கள் பிட்காயின் ப்ரீபெய்ட் விசா/மாஸ்டர்கார்டு டெபிட் கார்டு அல்லது UPIக்கு நிதியளிக்க முடியும் என்பது பலருக்குத் தெரியாது. அதன் பின்னர் நீங்கள் இந்த கார்டை விசா/மாஸ்டர் கார்டு ஏற்றுக்கொள்ளும் சில்லறை விற்பனையாளரிடம் ஸ்வைப் செய்யலாம்

4. அதி நவீன தொழில்நுட்பம்

மொத்த பிட்காயின் நெட்வொர்க்கையும் பாதுகாக்க, மேம்பட்ட வேலட் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இது பல சந்தை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, வணிகங்கள் லாபம் ஈட்டுவதற்காக வேலட்டை உருவாக்கும் அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன.

Get WazirX News First

* indicates required

இந்தியாவில் சிறந்த பிட்காயின் வேலட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

கிரிப்டோகரன்ஸிகளை வர்த்தகம் செய்யும் அல்லது வைத்திருக்கும் எவரும் நிச்சயமாக ஒரு பிட்காயின் வேலட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அது மிகவும் பாதுகாப்பானது மற்றும் அவரது தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானதாகும். சிறந்த பிட்காயின் வேலட்கள் தரும் சேவைகளும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

ஒரு பிட்காயின் வேலட்,பிட்காயின் கொடுக்கல் வாங்கலை பயனருக்கு எளிதாக்குகிறது மற்றும் பிட்காயின்களை அவரே வைத்திருக்கும் உணர்வை அளிக்கிறது. இந்த வேலட்களுக்கு பிட்காயின் முகவரிகளை அணுக ஒரு தனிப்பட்ட சாவி போன்ற முக்கியமான தகவல்கள் தேவை.பாதுகாப்பு, எளிமையாக வழிநடத்தக்கூடியது , விரைவான மற்றும் எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய இண்டர்ஃபேஸ், வெளிப்படைத்தன்மை மற்றும் பல- இது போன்ற பல அம்சங்கள் ஒரு குறிப்பிட்ட கிரிப்டோ வேலட் சிறந்த தளத்தை வழங்குவதை உறுதி செய்ய தேவைப்படுகின்றன.

பல்வேறு வகையான பிட்காயின் வேலட்டுகள்

ஹார்ட்வேர் வேலட்

பிட்காயினை சேமித்து வைத்தல் என்று வரும்போது, ஒரு ஹார்ட்வேர் வேலட் வேகம் மற்றும் தனியுரிமைக்கு இடையே சிறந்த சமநிலையைத் தருகிறது. ஹார்ட்வேர் வேலட்கள் உங்கள் தனிப்பட்ட சாவிகளை ஹேக்கர்கள் அணுகுவதைத் தடுத்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சாஃப்ட்வேர் வேலட்

சாஃப்ட்வேர் அடிப்படையிலான வேலட்கள் எளிதில் அணுகக்கூடியவை மற்றும் மிகவும் வசதியானவை, அதே சமயம் ஹார்ட்வேர் வேலட்கள் மிகவும் பாதுகாப்பானது. 

மொபைல் ஃபோன் வேலட்

ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து நிறுவக்கூடிய வேலட்கள் மொபைல் வேலட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வேலட்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி பிட்காயின்களை அணுகவும் தினசரி பணிகளை செய்யவும் உதவுகின்றன.

இந்த வேலட்கள் இணையத்தில் கட்டமைக்கப்பட்டிருப்பதால், பயனர்கள் அவை பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பயனர்கள் தங்கள் மொபைல் வேலட்கள் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பரிவர்த்தனைகள் செய்யலாம்.

வெப் வேலட்

இணைய வேலட்கள் என்று அழைக்கப்படும் ஆன்லைன் வேலட்கள் இணைய புரவுசர் மூலம் அணுகக்கூடிய வேலட்டுகளாகும். இந்த வேலட்களில் உங்கள் பிட்காயின்களை சேமித்து வைப்பது பரிந்துரைக்கப்படவில்லை.

இந்த வேலட்கள் சைபர் தாக்குதலுக்கு எளிதில் வழி கொடுக்கும் என்பதால் ஹேக்கர்கள் இதனை சார்ந்துள்ளனர். ஆன்லைன் வேலட்கள் பயனர்களுக்கு பிட்காயின்களை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் பரிவர்த்தனைகளை விரைவில் முடிக்கும் ஒரு வழியாகும்.

பேப்பர் வேலட்கள்

பேப்பர் வேலட்கள் அச்சிடப்பட்ட காகிதத் தாள்களில் வைக்கப்பட்டிருப்பதால், இருக்கும் சிறந்த தேர்வுகளில் இது ஒன்றாகும். காகிதத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது தனிப்பட்ட சாவியை செருகுவதன் மூலம் பிட்காயினை பரிமாற்றம் செய்ய முடியும்.

அவை சர்வர் அல்லது மொபைல் சாதனத்தில் வைக்கப்படாததால், அவற்றை ஆன்லைனில் இழக்கவோ திருடவோ முடியாது.

பிட்காயின் வேலட்டின் 6 அம்சங்கள்

  1. பயனர் இண்டர்ஃபேஸ் மற்றும் அணுகல்

எளிதில் வழி காட்டக்கூடிய இண்டர்ஃபேஸிற்கு ஒரு வெளிப்படையான தேவை உள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களுக்கு, பிட்காயின் வேலட் எந்த வகை பயனருக்கும், புதியவராக இருந்தாலும் அல்லது அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும், வயதைப் பொருட்படுத்தாமல் அணுகக்கூடியது.

  1. ஆப்பரேட்டிங் சிஸ்டம்

பிட்காயின் வேலட்கள் பொதுவாக iOS அல்லது ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இணக்கமாக இருக்கும். அவை செயல்பட மற்றும் வேலை செய்ய எளிமையாக இருக்க வேண்டும்.

  1. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

பிட்காயின் வேலட்கள்  பாதுகாப்பாக இருப்பதற்கும் பயனர்களின் தகவலைப் பாதுகாப்பதற்கும்  தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கின்றன.

  1. மல்டி கரன்சிக்கு எதிராக ஒற்றை கரன்சி

மல்டி கரன்சி வழங்கும் டிஜிட்டல் வேலட்கள் மற்றும் ஒற்றை கரன்சி வழங்கும் டிஜிட்டல் வேலட்கள் இரண்டும் உள்ளன. மல்டி கரன்சி பிட்காயின் வேலட்கள் வெவ்வேறு கிரிப்டோகரன்ஸிகளிடையே எளிதில் பரிவர்த்தனை செய்யக்கூடியவையாகும்.

  1. QR கோடு ஸ்கேனர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நீங்கள் திறமையாகவும் எளிமையாகவும் பணம் செலுத்தலாம். நீங்கள் விரைவாகவும் நிலையாகவும் பணம் பெற முடியும்.

  1. மல்டி சிக்னேச்சர் ஆதரவு

மல்டி சிக்னேச்சர் வேலட் என்பது பல பணம் செலுத்துபவர்கள் ஒன்றாக பயன்படுத்தும் வேலட்டாகும் பணப்பரிமாற்றத்தை உறுதிப்படுத்த தேவையான கையொப்பங்களின் எண்ணிக்கை வேலட்டின் வகையைப் பொறுத்து வேலட்டின் இணை பயனர்களின் எண்ணிக்கையை விட சிறியதாகவோ அல்லது சமமாகவோ இருக்கும்.

ஏன் WazirX இந்தியாவின் சிறந்த வேலட்டாகும்?

இந்தியாவில் உள்ள சிறந்த பிட்காயின் வேலட்டை ஒருவர் தேட வேண்டுமானால், நிச்சயமாக இரண்டாவது சிந்தனை இல்லாமல் அது WazirX ஆகவே இருக்கும். WazirX ஏற்கனவே நாட்டின் சிறந்த கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமாக இருக்கிறது.

 வர்த்தகம் செய்ய அல்லது வைப்பில் வைக்க, மாபெரும் பயனர்களை கொண்ட WazirX அதன் அதிகாரப்பூர்வ WRX டோக்கனை உள்ளடக்கிய அதிக வரம்பிலான கிரிப்டோகரன்ஸிகளை வழங்குகிறது. 

நீங்கள் கிரிப்டோகரன்சி உலகில் தொடக்கநிலையாளராக இருந்தாலும் சரி, தொழில்முறையாளராக இருந்தாலும் சரி, பிட்காயின்கள் மற்றும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஆர்வமாக இருந்தால் WazirX உங்கள் முதல் சிறந்த தேர்வாகஇருக்கும்.

2017 இல் நிறுவப்பட்ட WazirX என்பது நிஷ்சல் ஷெட்டி மற்றும் சித்தார்த் மேனன் ஆகியோரின் சிந்தனையில் உருவானது ஆகும். WazirX இந்தியாவின் மிகவும் நம்பகமான பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜ் என்று அறியப்படுகிறது WazirX ஆனது உலகின் முதல் ஆட்டோ-ஆர்டர் மேட்சிங் ஃபியட் P2P எக்ஸ்சேஞ்ஜையும் உருவாக்கியுள்ளது. 

இந்த தளம் ஒரு செயலியாக கிடைக்கிறது, மேலும் இந்த அனைத்து அம்சங்களும் இணைந்து அதை மிகவும் முக்கியமான பிட்காயின் வேலட் விருப்பமாக மாற்றுகிறது. கூடுதலாக, 2019 இல் பினான்ஸ் WazirX ஐ வாங்கி, அதை சர்வதேச சந்தையின் வரைபடத்தில் சேர்த்தது.

இப்போது WazirX ஐ நாம் முற்றிலும் ஒரு பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வ வர்த்தக தளமாகவும், பிட்காயின் வேலட் வர்த்தகம் செய்யவும் அல்லது பிட்காயின்களை ஹோஸ்ட் செய்யவும் உள்ள தளமாகவும் நம்பிக்கையுடன் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளலாம்

WazirX பிட்காயின் வேலட்டின் நன்மைகள்

  • சிறந்த பாதுகாப்பு

மிகவும் நம்பகமான மற்றும் மிகவும் பாதுகாப்பான தளத்தை வழங்குவதில் WazirX அனைத்தையும் மிஞ்சுகிறது! அடிக்கடி பாதுகாப்பு தணிக்கைகளில் முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் மிகவும் பாதுகாப்பான வர்த்தக தளமாக இருக்க WazirX எப்போதும் முயற்சி செய்கிறது.

உள்ளமைக்கப்பட்ட 2-காரணி அங்கீகாரம் உள்ளது, மேலும் இந்த தளம் பல பாதுகாப்பு அளவுகோல்களில் மிக அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  • பிட்காயினுக்கு அப்பால் உள்ள விரிவான கிரிப்டோகரன்சியின் வரம்பு

WazirX ஒரு சிறந்த பிட்காயின் வேலட், ஆனால் இது பிட்காயின் (BTC), எத்தீரியம் (ETH), ரிப்பிள் (XRP), லைட்காயின் (LTC), டோஜ்காயின் (DOGE), பினான்ஸ் காயின் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கிரிப்டோ சொத்துக்களை ஆதரிக்கிறது.

இதனால் பயனர்களுக்கு தேர்வு மற்றும் வர்த்தகம் செய்வதற்கான ஏராளமான விருப்பங்களை வழங்குகிறது! பல கிரிப்டோகரன்சிகள் USDT உடன் இணைக்கப்பட்டுள்ளன.

  • வேகமான பரிவர்த்தனைகள்

WazirX தினசரி மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை கையாளுகிறது, அதன் விரைவான ஆர்டர் பொருத்தம் செய்யும் என்ஜின் மற்றும் நம்பகமான மற்றும் வலுவான உள்கட்டமைப்புக்கு நன்றி . ஒரு பிட்காயின் வாலட் கண்ணோட்டத்தில், இருந்தாலும் உணர்வு அப்படியே உள்ளது. டெபாசிட்கள் மற்றும் பணம் எடுத்தல் ஆகியவை வேகமாகவும் சிரமமின்றியும் நடக்கிறது 

  • வர்த்தகம் தொடர்பான மேம்பட்ட கருவிகளுக்கான அணுகல்

WazirX இன் ஆர்வம் மிக்க மற்றும் விடாமுயற்சியுள்ள குழுவின் பெரும் முயற்சியால், அவர்களின் பயனர்களின் சரியான தேவைகளை வழங்குவதை உறுதிசெய்கிறது, இந்த தளம் டிரேடிங் வியூவின் சார்ட்டிங் கருவிகள் மற்றும் விலைகளை ஆய்வு செய்து சரிபார்க்கும் கருவிகள் போன்ற அனைத்து முக்கிய அம்சங்களையும் ஒரு எளிய ஆனால் அற்புதமான இன்போகிராஃபிக்ஸ் மூலம்கொண்டு வருகிறது. 

உண்மையில் நீங்கள் உங்கள் பிட்காயின் வாலட்டைத் தவிர ஒரு முழுமையான எக்ஸ்சேஞ்ஜ் தளத்தை பெறுவது போல் இருக்கிறது!

  • பல்வேறு தளங்களில் கிடைக்கும் தன்மை

ஒரு பயனர் ஏற்ற பிட்காயின் வேலட் உங்கள் தொலைபேசி, உங்கள் மடிக்கணினி மற்றும் உண்மையில் எல்லா தளங்களில் இருந்தும் அணுகக்கூடியதாய் இருக்கவேண்டும் வெப், iOS, ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் மேக் அப்ளிகேஷன்கள் போன்ற பல்வேறு தளங்களில் WazirX தனது சேவைகளை வழங்குகிறது, இதனால் தங்களின் மிகப்பெரிய பயனர் கட்டமைப்புக்கு சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்கிறது.

  • எளிய மற்றும் சுலபமான இண்டர்ஃபேஸ்

எந்தவொரு சிறந்த பிட்காயின் வேலட் அல்லது கிரிப்டோ வேலட்டின் சாதகத்தன்மையை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் இவ்வளவு பெரிய சந்தை இருப்பதால், எளிதில் இயக்ககூடிய ஒரு இண்டர்ஃபேஸ் தேவை. 

பிட்காயின் வேலட்டை எந்த வயது அல்லது பாலினமாக இருந்தாலும், தொடக்க அல்லது மேம்பட்ட எந்தவொரு பயனராலும் பயன்படுத்த முடிகிறது. WazirX இந்த அற்புதமான மற்றும் விரைவான இண்டர்ஃபேஸ் மூலம் அனைவரையும் ஈர்க்கிறது

  • விரைவான KYC செயல்முறை

சிறந்த KYC நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதன் மூலம், சைன்அப் செய்த குறுகிய காலத்திற்குள் உங்கள் KYC ஐ நிறைவு செய்வதை சிறந்த அடையாள அங்கீகார அமைப்புகள் உறுதி செய்கின்றன. சரிபார்ப்பு நேரங்களைக் குறைக்க வலுவான கட்டமைப்புடன் இருப்பதை WazirX நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • WRX டோக்கன்கள்

WazirX சுற்றுச்சூழல் அமைப்பு WazirX ஆல் வழங்கப்பட்ட ஒரு பயன்பாட்டு டோக்கனான WRX- ஐ அடிப்படையாகக் கொண்டது. WRX நாணயங்கள் ஒரு கிரிப்டோ சமூகத்தை வளர்க்கவும் புதிய வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டன. WRX நாணயம் குறைவான அளவான 1 பில்லியன் நாணயங்களின் விநியோகத்தைக் கொண்டுள்ளது.

இந்த அற்புதமான அம்சங்களுடன், WazirX இந்தியாவின் கிரிப்டோ மோகம் கொண்ட மக்களுக்கு சரியானதைச் செய்து வருகிறது. இந்த பிட்காயின் வேலட் வசதியானது மற்றும் மக்கள் அனைவரும் விரும்பத்தக்க சிறந்த அம்சங்களை அதனுள் கொண்டிருக்கிறது. 

 ஒரு போர்ட்ஃபோலியோவை பன்முகப்படுத்துவதற்கான சிறந்த தேர்வு WazirX ஆகும் WazirX சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் சிறந்த பிட்காயின் வேலட் ஆக இருப்பதற்கான சிறந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

WazirX உடன் ஒரு பிட்காயின் வேலட்டை அமைப்பது எப்படி?

  1. WazirX இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யவும்
Wazirx signup page

2. உங்களுக்கு ஒரு சரிபார்ப்பு மெயில் அனுப்பப்படும்

wazirx verification email page

3. சரிபார்ப்பு மெயில் மூலம் அனுப்பப்பட்ட இணைப்பு சில வினாடிகளுக்கு மட்டுமே கிடைக்கும், எனவே உங்களுக்கு அனுப்பப்பட்ட இணைப்பை விரைவில் கிளிக் செய்வதை உறுதி செய்யவும்.

verifying email address page

4.  இந்த இணைப்பு உங்கள் இமெயில் முகவரியை வெற்றிகரமாக சரிபார்க்கும்

verified successfully page

5.  அடுத்த படிநிலை பாதுகாப்பை அமைப்பது, எனவே உங்களுக்கு மிகவும் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

security authentication page wazirx

6.  பாதுகாப்பை அமைத்த பிறகு, KYC செயல்முறையை முடித்த பின்னர் அல்லது முடிக்காமலே தொடரும் ஒரு விருப்பத்தைப் பெறுவீர்கள்.

wazirx kyc page

7. அதன் பிறகு, நீங்கள் நிதி மற்றும் பரிமாற்றப் பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள், அங்கு நீங்கள் உங்கள் வேலட்டில் பிட்காயின்களை டெபாசிட் செய்ய ஆரம்பிக்கலாம்.

transfer fund wazirx page

8.  நீங்கள் இந்திய ரூபாயையும் டெபாசிட் செய்யலாம் பின்னர் அதை உங்கள் WazirX பிட்காயின் வாலெட்டுக்கு பிட்காயின் வாங்க பயன்படுத்தலாம்.

wazirx deposit page

9.  வாழ்த்துக்கள்! உங்கள் பிட்காயின் வேலட் WazirX உடன் அமைக்கப்பட்டது!

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply