Skip to main content

DeFi எதிராக CeFi: என்ன வேறுபாடு? (DeFi Vs CeFi: What’s The Difference)

By பிப்ரவரி 25, 2022மார்ச் 10th, 20224 minute read

கிரிப்டோகரன்சிகள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் பரவலாக்கப்பட்ட நிதி அமைப்பு மாதிரியை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. கிரிப்டோகரன்சிகள் ஒரு ஃபன்ஜிபிள் நாணயம் மற்றும் வர்த்தகம் செய்யக்கூடிய சொத்து ஆகிய இரண்டின் நோக்கத்திற்காகவும் சேவை செய்யும் அதே வேளையில், பிளாக்செயின்தான் அனைவரும் அணுகக்கூடியதாக இதை மாற்றியுள்ளது. பிளாக்செயினின் இந்த பன்முக-செயல்பாடு, தற்போதுள்ள நிதித் துறையை, தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நிதிச் சேவைகளின் உலகத்தை உருவாக்குவதற்குத் தூண்டியது

இப்போது, கிரிப்டோகரன்சிகள் மற்றும் பிளாக்செயின் நிதிச் சேவைகளின் இந்த உலகத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) மற்றும் மையப்படுத்தப்பட்ட நிதி (CeFi) ஆகும். இந்த இரண்டு பிரிவுகளும் ஒரே நோக்கத்தை அடைய உதவுகின்றன என்றாலும், அதை அடைவதற்கான பாதையில் அவை வேறுபடுகின்றன. அவற்றின் வரையறைகளுடன் நாம் ஆரம்பிக்கலாம்.

DeFi என்றால் என்ன?

பரவலாக்கப்பட்ட நிதி (Decentralized Finance), சுருக்கமாக DeFi என்பது, வர்த்தகம், கடன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் அதேபோன்ற சேவைகள் போன்ற நிதிச் சேவைகளைப் பெறுவதற்கு பரவலாக்கப்பட்ட நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. DeFi, ஒரு தனிநபர் அல்லது ஒரு அமைப்பின் வடிவத்தில் எந்த இடைத்தரகரையும் உள்ளடக்குவதில்லை. மாறாக, இந்த அமைப்பு, எந்த இடைத்தரகரின் ஈடுபாடும் இன்றி இரு தரப்பினரிடையே சேவைகளை பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் அது போன்ற புரோட்டோகால்களின் கீழ் செயல்படுகிறது.

விரைவுக் குறிப்பு:- ஸ்மார்ட் காண்ட்ராக்ட் என்பது ஒரு பிளாக்செயின் நெட்வொர்க்கில், முன்பே ஒப்புக் கொள்ளப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் அதை நிறைவு செய்யும் போது சுயமாகச் செயல்படும், புரொகிராம் செய்யக்கூடிய குறியீடாகும்.

சுவாரஸ்யமாக, DeFi இன் செயல்பாடு கிரிப்டோகரன்சிகள் மற்றும் பிளாக்செயினின் உள்ளார்ந்த பண்பிற்கு ஏற்ப உள்ளது, இது பரவலாக்கப்பட்ட அம்சமாகும். DeFi ஆனது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தேவையை நீக்குகிறது மற்றும் ஒரு தனிநபர் பிளாக்செயின் நெட்வொர்க்கை அணுகி, அவர்களின் நிதியைப் பயன்படுத்தி அவர்கள் விரும்பியதைச் செய்ய அனுமதிக்கிறது.

CeFi என்றால் என்ன?

CeFi என சுருக்கமாக அழைக்கப்படும் மையப்படுத்தப்பட்ட நிதியானது, தற்போதுள்ள நிதித் துறைக்கு ஒத்ததாகும், அங்கு ஒரு நிறுவனம் அல்லது ஒரு இடைத்தரகர், வர்த்தகம், கடன், இடமாற்று மற்றும் பிற நிதிச் சேவையை எளிதாக்குகிறார், இது பெரும்பாலும் செயல்பாட்டில் ஒரு மைய முடிவாகும்.

Get WazirX News First

* indicates required

இந்த நிறுவனம், இடைமுகம், ஆதரவு ஆகியவற்றைத் தருகிறது மற்றும் வாடிக்கையாளர் குறைகளை நிவர்த்தி செய்கிறது. கிரிப்டோ உலகில், கிரிப்டோகரன்சி எக்ஸ்சேன்ஜுகள் CeFi நிறுவனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும், அங்கு வாடிக்கையாளர் அதன் சேவைகளைப் பெற எக்ஸ்சேன்ஜில் பதிவு செய்கிறார். நிஜ உலக நிதிச் சேவை நிறுவனங்களைப் போலவே, ஒரு பயனர் தங்கள் நிதியைப் பயன்படுத்தி ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பை தாம் விரும்பிய சேவைகளைப் பெற அங்கீகரிக்கிறார்.

DeFi vs CeFi இன் புரிதல்

இந்த விவாதத்துடன் தொடர்புடைய நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழி, முதலில் DeFi மற்றும் CeFi இரண்டின் நன்மைகளைப் பற்றி விவாதிப்பதும், அதன்பின் அவற்றின் தீமைகளைப் பற்றி விவாதிப்பதும் ஆகும். இருப்பினும், இது குறிப்பிட்ட ஒரு புறமதிப்பின் வழியாக இரண்டு நிதி வகைகளையும் ஒரே நேரத்தில் மதிப்பிட இயலாது. பின்வரும் விவாதத்தில், DeFi மற்றும் CeFi ஆகிய இரு துறைகளிலும் வழங்கப்படும் டிரெண்டுகள் மற்றும் சேவைகளை நாங்கள் விரிவாக ஆய்வு செய்கிறோம். பட்டியலிடப்பட்ட அம்சங்களிலிருந்து இரு துறையையும் சேர்ந்த சில நிதி நிறுவனங்கள் வேறுபடலாம். இருப்பினும், விவாதத்தின் நோக்கத்திற்காக, இரு துறைகளிலும் இருக்கும் பிரபலமான டிரெண்டுகள் விவாதிக்கப்படுகின்றன.

எனவே முக்கியமான அளவீடுகளில் இரு சேவைகளின் மதிப்பீடு இங்கே

#1 நிதிக்கான அணுகல் 

ஒரு பயனர் தனது நிதியை CeFi நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் CeFi செயல்படுகிறது. பயனர் பின்னர் நிதியின் பயன்பாட்டை இயக்கலாம், ஆனால் அந்த நிதியை நிறுவனம்தான் கையாளும். இது வாங்கிய மற்றும் வர்த்தகம் செய்யப்படும் கிரிப்டோகரன்சிகளுக்கும் பொருந்தும். நிறுவனம் கிரிப்டோவை அதன் வேலட்டில் சேமிக்கிறது, மேலும் பயனரிடம் அதற்கான அணுகல் இல்லை.

DeFi அதற்கு பதிலாக ஒரு பயனருக்கு அவர்கள் விரும்பும் வழியில் தங்கள் நிதியைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கிறது. ஒரு பயனர் நேரடியாக DeFi நெட்வொர்க்கை அணுக வேண்டும், பின்னர் அது அடையாளத்திற்காக பயனருக்கு ஒரு வரிசை எண்ணை வழங்குகிறது. நெட்வொர்க்கில் நுழைந்தவுடன், நெட்வொர்க்கில் ஆதரிக்கப்படும் எதற்கும் பயனர் நிதியைப் பயன்படுத்தலாம்.

#2 அணுகல்

CeFi யில் KYC செயல்முறைக்குப் பிறகு ஒரு பயனர் தங்கள் தனிப்பட்ட தகவலைப் பகிர்வதன் மூலம் எக்ஸ்சேன்ஜில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் சேவையை வாடிக்கையாளருக்கு வழங்க மறுக்கலாம். DeFi ஒரு பயனரின் அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் அவர்கள் எங்கிருந்து வந்தாலும் (அடிப்படை நிபந்தனைகளுக்கு உட்பட்டு) அவரைப் பதிவு செய்கிறது.

#3 பயனர் இடைமுகம்

முக்கிய நிதி அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் CeFi துறையை உள்ளடக்கியிருப்பதால், வாடிக்கையாளரின் உகந்த ஆதரவிற்காகவும் மற்றும் எளிதாக வழிநடத்திச் செல்லவும் பயனர் நட்பு இடைமுகத்தை வழங்குகின்றன. பெரும்பாலான DeFi நெட்வொர்க்குகளில் இந்தப் பண்பு இல்லை, எனவே ஆரம்பத்தில் பயன்படுத்துவது சற்று சிக்கலானதாகத் தோன்றலாம்.

#4 வாடிக்கையாளர் சேவை

CeFi என்பது ஒவ்வொரு எக்ஸ்சேன்ஜ் மற்றும் நிறுவனம், வாடிக்கையாளரைக் கவர்வதற்கான ஒரு போட்டி இடமாகும். எனவே, இந்தத் துறையால் வழங்கப்படும் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை குறைபாடற்றது, வாடிக்கையாளர் தேவைகளைப் போக்குவதற்கு சிறப்புத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், DeFi நெட்வொர்க்குகள் சுயாதீனமான நெட்வொர்க்குகள் மற்றும் பொதுவாக வாடிக்கையாளர் ஆதரவு சேவைகளுடன் வருவதில்லை.

#5 வெளிப்படைத்தன்மை

DeFi பரவலாக்கத்தின் கொள்கையில் செயல்படுகிறது. எனவே கடந்த கால பரிவர்த்தனைகள் முதல் நெட்வொர்க் தகவல், ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்கள் லெட்ஜரில் பொதுவில் கிடைக்கும். CeFi நிறுவனங்கள், மறுபுறம், திரைகளுக்குப் பின்னால் வேலை செய்து வர்த்தகத்தை எளிதாக்கும்.

#6 ஃபியட்க்கு மாற்று

ஃபியட்க்கு மாற்றானது CeFi நிறுவனங்களின் முக்கிய அம்சமாகும். நிறுவனம் மூலம் ஒருவர் தங்கள் பணத்தை கிரிப்டோவுக்கு மாற்றலாம். DeFi நெட்வொர்க்குகள் தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த வகையான வசதியை வழங்குவதில்லை

#7 புதுமைக்கான வாய்ப்பு

CeFi சேவைகள் என்று வரும்போது புதுமைகள் அதிகம் இல்லை. ஆனால், DeFi நெட்வொர்க்குகளில் பிளாக்செயின் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், சிறந்த முன்னேற்றங்கள் அடிக்கடி நடைபெறுவதால், சிறப்பான வேகத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றன. இது பயனர்களுக்கு அதிக தானியங்கு நன்மைகளை தருகிறது.

#8 கிராஸ்-செயின் சேவைகள்

CeFi ஒரு கிரிப்டோகரன்சி அல்லது டோக்கனை மற்றொரு கிரிப்டோகரன்சி அல்லது டோக்கனுக்கு அதே தளத்தில் வர்த்தகம் செய்யக்கூடிய கிராஸ்-செயின் சேவைகளை எளிதாக்குகிறது. எடுத்துக்காட்டாக லைட்காயினுக்கு பிட்காயின் அல்லது அதற்கு நேர் எதிராக.

இருப்பினும், பெரும்பாலான DeFi நெட்வொர்க்குகள் அத்தகைய வர்த்தகத்தை ஆதரிக்க முடியாது. ஒரு சிலர் மட்டுமே ஒரு கிரிப்டோ சொத்தை மற்றொரு கிரிப்டோ சொத்தாக மாற்றக்கூடிய ‘அடாமிக் கிராஸ்-செயின் ஸ்வாப்கள்’ போன்ற புரோட்டோகால்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த மாற்றங்களுக்கு குறியீட்டு முறை தேவைப்படுவதால் சில நேரங்களில் சிக்கலானதாக இருக்கும்.

#9 சாத்தியமான அச்சுறுத்தல்கள்

CeFi உடன் தொடர்புடைய முக்கிய அச்சுறுத்தல், எக்ஸ்சேன்ஜுகள் அல்லது பிற நிறுவனங்கள் அபாயகரமாக ஹேக்கிங் செய்யப்படுவது ஆகும். எக்ஸ்சேன்ஜுகள் மற்றும் அது போன்ற வழங்குநர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அதிநவீன பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பட்டியலிட்டாலும், எக்ஸ்சேன்ஜ் திருட்டுகள் பற்றி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செய்திகள் வெளியாகின்றன.

மறுபுறம், DeFi அமைப்பின் மிகப்பெரிய விரோதி, நெட்வொர்க்கே ஆகும். குறியீட்டின் வரிசையில் ஏதேனும் குறைபாடு அல்லது பிழை இருப்பின் பயனர்களின் சொத்துக்களுக்கு பாதகம் ஏற்படலாம்.

எனவே எது சிறந்தது?

துரதிர்ஷ்டவசமாக, இதற்கு ஒரு எளிய பதில் இல்லை. இங்கே, வர்த்தகர் தனது தேவைகளை சுயமாக ஆராய்ந்து, எந்த அம்சங்களை அவர் அதிகமாக மதிப்பிடுகிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். உங்கள் நிதி மீதான கட்டுப்பாட்டை இழப்பது ஒரு முக்கிய கவலையாக இருந்தால், விவாதத்தின் முக்கிய தலைப்பாக DeFi வரும். எவ்வாறாயினும், இடைநிலை நிறுவனங்களுக்கு நிதியை மாற்றுவது என்பது பங்கு வர்த்தகத்தின் போது மில்லியன் கணக்கானவர்கள் தினசரி செய்யும் ஒரு செயலாகும். எனவே, இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை.அதேபோல், ஃபியட்க்கு மாற்று அல்லது கிராஸ்-செயின் பரிவர்த்தனைகள் உங்கள் கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் முக்கியமான பகுதியாக இருந்தால், சந்தையில் மிகவும் நம்பகமான விருப்பமாக CeFi இருக்கிறது. மீண்டும், மேலே விவாதிக்கப்பட்டபடி, அடாமிக் கிராஸ்-செயின் ஸ்வாப்கள் DeFi சுற்றுச்சூழல் அமைப்பில் இந்தச் சேவைகளை எளிதாக்கும். கிராஸ்-செயின் சேவைகளை தடையின்றி பெற சரியான ஒன்றாக DeFi நெட்வொர்க்கை நீங்கள் காணலாம்.

ஒருவேளை, போகப்போக, இந்த இரண்டு நிதிச் சேவை வகைகளின் நன்மைகளையும் இணைக்கும் ஒரு ஹைப்ரிட் பிளாக்செயின் நிதி அமைப்பு உருவாகலாம். இருப்பினும், இப்போதைக்கு, அது நிஜத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. எனவே ஒரு சேவைக்கு பதில் மற்றொரு சேவையைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் குழப்பத்தினால் நீங்கள் வர்த்தகத்தை நிறுத்த வேண்டாம். இரண்டையும் முயற்சி செய்து, உங்கள் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப எது அதிகம் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.


இதோ நீங்கள் WazirX இல் துவங்குவதற்கு ஒரு வழிகாட்டி .

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply