இந்தியாவில் அல்கோராண்ட் (ஆல்கோ) வாங்குவது எப்படி (How to Buy Algorand (ALGO) in India)

By ஜனவரி 15, 2021மார்ச் 17th, 20225 minute read

நீங்கள் கிரிப்டோ செய்திகளை தவறாமல் பார்ப்பவராக இருந்தால், இந்த நாட்களில் ஆல்கோ (ஆல்கோராண்ட்) மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சிகளில் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆல்கோவிற்கு பின்னால் உள்ள திட்டம் பிட்காயின் மற்றும் எத்தீரியம் போன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றாலும், முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் இருக்கும் சில கிரிப்டோக்களில் இதுவும் ஒன்றாகும். உண்மையில், இந்த கிரிப்டோ தனது இணையதளத்தில், பாரம்பரிய நிதி மற்றும் பரவலாக்கப்பட்ட நிதியை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் தன்னை “நிதியின் எதிர்காலம்” என்று அழைத்துக் கொள்கிறது.

ஆல்கோராண்ட் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது? ஆல்கோ உண்மையில் முதலீடு செய்யத் தகுதியானதா? அதற்காக ஏன் இந்த பரபரப்பு? இந்தியாவில் ஆல்கோ வாங்குவது எப்படி? உங்கள் மனதில் இருக்கும் சில கேள்விகள் இவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

நாம் அதை கண்டுபிடிக்கலாம்.

ஆல்கோராண்ட் என்றால் என்ன?

இந்த பிளாக்செயின் கிரிப்டோகரன்சியானது, முடிந்தவரை அளவிடக்கூடியதாக இருப்பதை நோக்கமாகக் கொண்டது. ஆல்கோராண்ட் என்பது வேகம், அளவிடுதல் மற்றும் பாதுகாப்பு ஆகிய பிளாக்செயின் ட்ரைலெம்மாவைத் தீர்ப்பதன் மூலம் கிரிப்டோகரன்சியின் சாத்தியமான பயன்பாட்டு நிகழ்வுகளை விரிவாக்க முயற்சிக்கும் சமீபத்திய திட்டங்களில் ஒன்றாகும். ஆல்கோ என்பது ஆல்கோராண்ட் பிளாக்செயினின் சொந்த கிரிப்டோகரன்சி ஆகும். ஆல்கோராண்ட் பிளாக்செயினின் பொதுப் பதிப்பு, கணினி விஞ்ஞானியும், எம்ஐடி பேராசிரியருமான சில்வியோ மிகாலியால் 2017 இல் நிறுவப்பட்டு, 2019 இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இது முதன்மையாக மற்ற டெவலப்பர்களை புதிய வகையான கிரிப்டோகரன்சி-ஆற்றல் பெற்ற பயன்பாடுகளை உருவாக்க அனுமதிக்கும்.

Get WazirX News First

* indicates required

இந்த பிளாக்செயின் கிரிப்டோகரன்சியின் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, இது ‘பயூர்-ப்ரூஃப்-ஆஃப்-ஸ்டேக்’ (PPOs) ஒருமித்த பொறிமுறையைப் பயன்படுத்துகிறது, இது பரிவர்த்தனைகளை முடிக்க தங்கள் கணக்கீட்டு வளங்களை பங்களிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மைனர்களுக்கு வெகுமதி அளிக்கிறது. கார்டானோ மற்றும் சோலானா ஆகியவை தற்போது இதே பொறிமுறையைப் பயன்படுத்துகின்றன, அதே நேரத்தில் எத்தீரியம் அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஆல்கோராண்ட் நெட்வொர்க்கில் கிடைக்கும் மொத்த ஆல்கோ டோக்கன்களின் எண்ணிக்கையில் ஒரு வரம்புடன் கூடியது, இதனால் இது பணவாட்டம் உள்ளதும் கூட.. புரோட்டோகால் தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பில் உள்ள இதன் விநியோக அட்டவணை கீழே உள்ளது

 • ஆல்கோ டோக்கன்களின் மொத்த விநியோகம் 10 பில்லியனாக அமைக்கப்பட்டுள்ளது, முதல் ஐந்து ஆண்டுகளில் 3 பில்லியன் விநியோகிக்கப்படுகிறது.
 • 1.75 பில்லியன், மைனர்களுக்கு காலப்போக்கில் ஊக்கத்தொகையாக வழங்கப்படும், அதே நேரத்தில் 2.5 பில்லியன், ரிலே நோடுகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்..
 • நெட்வொர்க்கை நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் ஆல்கோராண்ட் ஃபவுண்டேஷன் மற்றும் ஆல்கோராண்ட் இன்க்., ஆகிய ஒவ்வொன்றிற்கும் 2.5 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 • மீதமுள்ள 0.25 பில்லியன் இறுதி பயனர்- மானியங்களுக்குச் செல்லும்.

ஆல்கோராண்டில் முதலீடு செய்வது மதிப்பு மிக்கதா?

ஆண்டின் தொடக்கத்தில் சுமார் $0.5 வர்த்தகம் செய்த ஆல்கோ, இப்போது $8,808,172,335 சந்தை மூலதனத்துடன், சிறந்த 25 கிரிப்டோவாக உள்ளது. கிரிப்டோகரன்சி ஆல்கோராண்டின் சந்தை மூலதனம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2021க்கு இடையில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது, ஆல்கோ $1.39க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் இந்தியாவில் ஆல்கோவின் விலை ₹117.00.

ஆல்கோ படிப்படியாக முக்கியத்துவத்தையும் மதிப்பையும் பெறுவதால், அதிகரித்து வரும் முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோக்களை பல்வகைப்படுத்த கிரிப்டோகரன்சிக்கு திரும்பியுள்ளனர். ஆல்கோவை ஒரு தகுதியான முதலீடாக மாற்றுவதற்கான சில நல்ல காரணங்கள் இங்கே உள்ளன.

 1. இயங்கக்கூடிய தன்மை

பல்வேறு பிளாக்செயின் நெட்வொர்க்குகளில் வேலை செய்யும் திறனை வழங்குவதன் மூலம் புரோட்டோகால் லேயர்-1 நெட்வொர்க்கில் பல பிளாக்செயின்களில் நன்றாக வேலை செய்யும் டிஜிட்டல் சொத்துகள் அல்லது ஸ்மார்ட் ஒப்பந்தங்களை உருவாக்க ஆல்கோராண்ட் டெவலப்பர்களை அனுமதிக்கிறது. பிளாக்செயின் நெட்வொர்க்குகள் எதை நோக்கி போகிறது என்பது எதிர்காலத்தில் வெளிப்புற ஒத்துழைப்பாக இருப்பதால், இத்தகைய இயங்கும் தன்மையின் நிலைகள் நிச்சயமாக ஆல்கோராண்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க போட்டி நன்மையை அளிக்கின்றன.

 1. ஸ்மார்ட் ஒப்பந்தங்கள்

ஸ்மார்ட் காண்ட்ராக்ட் என்பது கணினி புரொகிராம் அல்லது பரிவர்த்தனை புரோட்டோகால் ஆகும், இது பிளாக்செயினில் வைக்கப்பட்டு, ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில், தொடர்புடைய நிகழ்வுகள் மற்றும் செயல்கள் இருந்தால் அது தானாகவே இயங்கும். மையப்படுத்தப்பட்ட மூன்றாம் தரப்பினர் இல்லாமல் பரிவர்த்தனைகள் செயல்படுவதை உறுதிசெய்ய, ஆல்கோராண்ட் நெட்வொர்க் இரண்டு வகையான ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்துகிறது: ஸ்டேட்லெஸ் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் ஸ்டேட்ஃபுல் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள். குறிப்பிட்ட ஒப்புக்கொள்ளப்பட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால், ஸ்டேட்லெஸ் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் பல பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன. மறுபுறம், ஸ்டேட்ஃபுல் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் தகவலை காலவரையின்றி தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கின்றன மற்றும் ஸ்டேபில்காயின்கள், NFT கள், DeFi போன்ற பல பயன்பாட்டு நிகழ்வுகளை எளிதாக்குகின்றன. உண்மையில், ஆல்கோராண்ட் வழங்கும் ஸ்மார்ட் ஒப்பந்த செயல்பாடு மற்றும் அதன் அடிப்படையிலான பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகள் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு கவர்ச்சிகரமானவையாகும்.

 1. அபரிமிதமான வளர்ச்சி சாத்தியம்

ஆல்கோராண்ட் கடந்த சில மாதங்களில் ஒரு நேர்மறையான விலை தாக்கத்தைப் பதிவு செய்துள்ளது, இது கிரிப்டோவின் எதிர்காலம் குறித்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த தாக்கத்தை முக்கியமாக ஏற்படுத்தியதில் ஒன்று, ஆல்கோ முக்கிய எக்ஸ்சேன்ஜுகளில் பட்டியலிடப்பட்டதும் மற்றும் எக்ஸ்சேன்ஜ்-வர்த்தக தயாரிப்புகளின் அறிமுகமும் ஆகும். இது சந்தேகத்திற்கு இடமின்றி முதலீட்டாளர்களுக்கு அதிக பணப்புழக்கத்தை அளிக்கும் மற்றும் ஆல்கோராண்டுக்கு மூலதனங்களை உள்ளிட அனுமதிக்கும். ஆற்றலின் தன்மை மற்றும் பயனர் அனுபவத்தின் அடிப்படையில், ஆல்கோராண்ட் மிகவும் திறமையான நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இவை அனைத்தும் ஆல்கோவை ஒரு கவனிக்க வேண்டிய பிரபலமான கிரிப்டோக்களில் ஒன்றாக ஆக்குகின்றன.

இந்தியாவில் ஆல்கோவை வாங்குவது எப்படி?

பாலிகன், எத்தீரியம், பிட்காயின் அல்லது பிற கிரிப்டோகரன்சிகளை வாங்க விரும்பும் இந்திய முதலீட்டாளர்கள், முக்கிய கிரிப்டோகரன்சிகளில் இருந்து விலகி, ஆல்கோராண்ட் போன்ற கிரிப்டோ மூலம் உங்கள் போர்ட்ஃபோலியோக்களை விரிவுபடுத்துவதற்கான நேரம் இது. நிச்சயமாக, நீங்கள் ஒரு புதிய முதலீட்டாளராக இருந்தால், உங்கள் முதல் உள்ளுணர்வு இந்தியாவில் பிட்காயின் விலையைப் பார்ப்பது அல்லது “இந்தியாவில் BTC வாங்குவது எப்படி”, “இந்தியாவில் USDT வாங்குவது எப்படி” போன்றவற்றை கூகிள் செய்வதாகும். ஆனால் இந்த நாட்களில் கிரிப்டோ சந்தையின் பன்முகத்தன்மை மற்றும் பிற ஆல்ட்காயின்களின் வழங்கும் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, BTC மற்றும் ETH போன்ற முக்கியமான கிரிப்டோக்களில் மீது மட்டுமே கவனம் வைக்காமல் இருப்பது எப்போதும் நல்லது.

நீங்கள் இந்தியாவில் ஆல்கோவை வாங்க விரும்பினால், இந்தியாவின் மிசச்சிறந்த மற்றும் நம்பகமான எக்ஸ்சேன்ஜான WazirX ஐ விட சிறந்த எக்ஸ்சேன்ஜ் எதுவும் இல்லை. WazirX இல், ஆல்கோ உட்பட 100க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகளை நீங்கள் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

#1 WazirX இல் பதிவு செய்யுங்கள் 

ஒரு இலவச கணக்கை உருவாக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Sign Up on WazirX

#2 ஒரு கணக்கை உருவாக்குவதற்கு உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்யுங்கள்

உங்கள் தற்போதைய பயனர் மின்னஞ்சல் ஐடியை நிரப்புவதன் மூலம் தொடங்கவும், அதன்மூலம் நீங்கள் எந்த சரிபார்ப்பு படிகளையும் தவறவிட மாட்டீர்கள்.

ஆல்பா-நியுமரிக் எழுத்துக்களுடன் கூடிய ஒரு பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்குங்கள்

Fill Details to Start Creating Account

#3 மின்னஞ்சல் சரிபார்ப்பு மற்றும் கணக்கு பாதுகாப்பு அமைத்தல்

சேர்க்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்த பிறகு (மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம்) கணக்கு உருவாக்கத்தைத் தொடரவும். 

உங்கள் கணக்கின் பாதுகாப்பை நீங்கள் கட்டமைக்க வேண்டும். WazirX கணக்கு பாதுகாப்பிற்கு இரண்டு தேர்வுகளை வழங்குகிறது.

எந்த விருப்பத்தையும் தேர்ந்தெடுக்க உங்களுக்கு விருப்பம் உள்ளது. இருப்பினும், மொபைல் SMS ஐ விட அங்கீகார ஆப் மிகவும் பாதுகாப்பானது, ஏன்னென்றால் இது தாமதமான அணுகல் மற்றும் சிம் கார்டு ஹேக்கிங் ஆபத்திற்கு உட்பட்டது.

WazirX Email Verification

#4 ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்கவும்

இந்தியா (நாடு) வை தேர்வு செய்யவும் மற்றும் உங்கள் முதலீட்டு தேவைகளுக்கு ஏற்றவாறு “இப்போது தவிர்க்கவும்” அல்லது “KYC ஐ முடிக்கவும்” என்பதைத் தேர்வு செய்யவும். 

நீங்கள் KYC செயல்முறையை முடிக்கவில்லை என்றால், உங்கள் WazirX கணக்கு மூலம் மட்டுமே டெபாசிட் செய்து வர்த்தகம் செய்ய முடியும். இருப்பினும், P2P இல் திரும்பப் பெறவும் மற்றும் வர்த்தகம் செய்யவும், நீங்கள் முதலில் KYC ஐ முடிக்க வேண்டும்.

KYC ஐ முடிக்க சில விவரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் 

 1. KYC ஆவணங்களில் உள்ளவாறு உங்கள் முழுப்பெயர்
 2. பிறந்த தேதி
 3. KYC ஆவணங்களில் உள்ளவாறு முகவரி
 4. நடைமுறையை பூர்த்தி செய்ய உங்கள் KYC ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் மற்றும் ஒரு செல்ஃபீ

பிகு: 24 இலிருந்து 48 மணி நேரத்திற்குள் உங்கள் கணக்கு சரிபார்க்கப்படும்

WazirX Choose a Country

#5 உங்கள் WazirX கணக்கிற்கு நிதியை மாற்றவும்

WazirX வேலட் IMPS, UPI, RTGS மற்றும் NEFT ஐப் பயன்படுத்தி INR இல் டெபாசிட்களை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் குறைந்தபட்சம் ரூ.100 ஐ உங்கள் WazirX கணக்கில் டெபாசிட் செய்யலாம், அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

உங்கள் கணக்கில் INR ஐ டெபாசிட் செய்ய, உள்நுழைந்து “நிதி” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். “ரூபாய் INR” என்பதைத் தேர்ந்தெடுத்து, “டெபாசிட்” என்பதைக் கிளிக் செய்யவும். இதற்கு, உங்கள் வங்கிக் கணக்கை உங்கள் WazirX கணக்குடன் இணைக்க வேண்டும்.

#6 கடைசி படிநிலை – ஆல்கோ வாங்குதல்

உங்கள் WazirX கணக்கில் உள்நுழைந்து ஆல்கோவை வாங்குவதற்கு “எக்ஸ்சேன்ஜ்” விருப்பத்திலிருந்து INR ஐத் தேர்ந்தெடுக்கவும். இந்திய ரூபாய்க்கு நிகராக அனைத்து கிரிப்டோகரன்சிகளுக்கும் எக்ஸ்சேன்ஜ், ஒரு சந்தைக்கான இடமாகும். திரையின் வலது பக்கத்தில், அனைத்து விலை அட்டவணைகள், ஆர்டர் புத்தகத் தகவல் மற்றும் ஆர்டர் உள்ளீட்டு படிவத்தைக் காண்பீர்கள்.

Steps to Buy at WazirX

வாங்கும் ஆர்டர் படிவத்தை பூர்த்தி செய்து, “ஆல்கோ வாங்கு” என்பதைக் கிளிக் செய்யவும். ஆர்டர் நிறைவேற சிறிது காலம் எடுக்கும். ஆர்டர் பரிமாற்றம் செய்யப்பட்டவுடன், நீங்கள் ஆல்கோ நாணயங்களைப் பெறுவீர்கள்.

WazirX ஐ சிறந்ததாக்குவது என்னவென்றால், இது வேகமான KYC நடைமுறைகள், பெஸ்ட்-இன்-கிளாஸ் பாதுகாப்பு, மின்னல் வேக பரிவர்த்தனைகள் மற்றும் பிற எக்ஸ்சேன்ஜுகளுடன் ஒப்பிடும்போது ஐந்து தளங்களுக்கான அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது. அர்ப்பணிப்புள்ள வர்த்தகர்கள் மற்றும் பிளாக்செயின் ஆர்வலர்களின் குழுவால் உருவாக்கப்பட்ட WazirX ஆனது எளிமையான, திறமையான மற்றும் அணுகக்கூடிய இடைமுகத்தையும் கொண்டுள்ளது. இது தளத்தில் கிரிப்டோ வர்த்தகத்தை விரைவாக தொடங்குவதற்கு அனைவருக்கும் உதவுகிறது.

WazirX இல் வர்த்தகம் செய்ய பதிவு செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும். டெலிகிராம், டிவிட்டர், ஃபேஸ்புக், மற்றும் யூடியூப் இல் WazirX ஐப் பின்தொடர்வதன் மூலம் சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் சலுகைகளுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply