இந்தியாவில் ஷிபா இனு காயின் (SHIB) வாங்குவது எப்படி? (How To Buy Shiba Inu Coin (SHIB) In India?)

By நவம்பர் 14, 2021நவம்பர் 17th, 20213 minute read

ஒரு மீம் அடிப்படையிலான கிரிப்டோ-கரன்சி கடந்த வாரத்தில் அதிவேக வளர்ச்சியைக் கண்டது. ஆம், நீங்கள் கேட்டது சரிதான்! மீம் அடிப்படையிலானது இளைஞர்களின் யோசனைகள் உண்மையில் தொழில்துறையை ஆளுகின்றன என்று சொல்லலாம். இத்தகைய மாற்றத்தின் காரணமாக, இந்த கிரிப்டோகரன்சி மற்றும் அதன் எதிர்காலத் திறனைப் பற்றி விவாதிக்க இதுவே சரியான நேரம். 

நீங்கள் ஏற்கனவே யூகிக்கவில்லை என்றால் – நாங்கள் ஷிபா இனு காயினைப் பற்றி பேசுகிறோம். ஷிபா டோக்கன்கள் என்றும் அழைக்கப்படும், இந்த கிரிப்டோகரன்சியின் மதிப்பு 35% அதிகரித்துள்ளது. கிரிப்டோகரன்சிகளின் காயின்பேஸ் பட்டியலில் இது சேர்க்கப்பட்டவுடன் நடந்தது. 

இந்த டோக்கன் ஒரு டோஜ்காயின் கில்லர் என்று கூட பாராட்டப்படுகிறது மற்றும் சந்தை மூலதனத்திற்கான முதல் சிறந்த 100 நாணயங்களில் ஒன்றாகும். இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற இந்த நாணயத்தின் விவரங்கள், அதன் விலை மற்றும் அது ஏற்படுத்தப்போகும் தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

ஷிபா இனு காயின்கள் என்றால் என்ன?

முழுமையான அடிப்படைகளிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம் ஷிபா டோக்கன்கள் என்பது ரியோஷி எனும் பெயர் கொண்ட ஒரு அறியப்படாத நபரால் ஆகஸ்ட் 2020 இல் உருவாக்கப்பட்ட ஒரு பரவலாக்கப்பட்ட கிரிப்டோகரன்சி ஆகும்.

இந்த நாணயத்தின் பெயர் ஜப்பானிய நாய் இனமான “ஷிபா இனு” வை அடிப்படையாகக் கொண்டதாகும், இந்தப் படம் டோஜ்காயின் சின்னத்தில் இருந்தது. டோஜ்காயின் மற்றும் ஷிபா இனு நாணயம் இரண்டும் வெறும் நகைச்சுவைக்காகத் தொடங்கப்பட்டன, ஆனால் என்ன நடந்தது? இளைய தலைமுறையால் இதை வெகுதூரம் கொண்டு செல்ல முடிந்தது.

ஷிபா இனு என்பது எத்தீரியம் பிளாக் செயினில் உருவாக்கப்பட்ட ஒரு ERC-20 ஆல்ட்காயினாகும் வெவ்வேறு சப்ளைகளுடன் மூன்று டோக்கன்கள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கும் எண்ணம் இருப்பதாக டோக்கனின் ஒயிட் பேப்பரில் கூறப்பட்டுள்ளது. ஷிபாஸ்வாப்பில் பயன்பாட்டில் உள்ள இதர இரண்டு டோக்கன்கள் லீஷ் மற்றும் போன் ஆகும். ஷிபா இனு நாணயம் ஒரு குவாட்ரில்லியன் முழு சேகரிப்புடன் ஃபவுண்டேஷனின் நாணயமாக செயல்படுகிறது. டோக்கனுக்குப் பொறுப்பேற்றிருக்கும் குழு ஷிபாஸ்வாப் எனப்படும் பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ஜையும் உருவாக்கியுள்ளது, இது பயனர்களை ஆராய, விரைவாக செயல்பட மற்றும் கொணர அனுமதிக்கிறது. இந்தச் சொற்கள் முறையே பணப்புழக்கம், பங்குச்சந்தை நாணயங்கள் மற்றும் நாணயங்களை மீட்டெடுத்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

Get WazirX News First

* indicates required

இது தெளிவாகத் தெரியவில்லை என்றால், பெரும்பாலான ஷிபா சொற்கள் நாய்கள் தொடர்பான ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டவையாகும். எலோன் மஸ்க் மற்றும் பல மீம்-ஆர்வமுள்ள முதலீட்டாளர்களின் ட்விட்டர் போஸ்ட்டுக்கு நன்றி, கிரிப்டோ சந்தை பெரும்பாலும் நாய்க்குட்டிகளை அடைத்து வைக்கும் சிறிய கூண்டு போல் தெரிகிறது. இந்த கிரிப்டோகரன்சியின் கருத்து மற்றும் பெயர்களைப் போலவே, அதன் விலைகளும் விநோதமான காரணங்களைப் பொறுத்தே அமைகிறது உதாரணமாக, எலோன் மஸ்க் ஒரு ஷிபு நாய்க்குட்டியை வாங்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியபோது, நாணயத்தின் விலை 300% க்கு உயர்ந்தது. இதேபோல், 13 மே 2021 அன்று, ரஷ்ய-கனடிய புரோகிராமர் மற்றும் எழுத்தாளரான விட்டலிக் புட்டரின், இந்திய கோவிட்-கிரிப்டோ நிவாரண நிதிக்கு 50 டிரில்லியன் ஷிபா டோக்கன்களை வழங்கினார்.

ஏன் ஷிபா இனு காயின் மிகவும் பிரபலமாக இருக்கிறது?

ஷிபா டோக்கன்கள் டோஜ்காயினுக்குப் பிறகு பிரபலமடைந்த பல செல்ல நாணயங்களில் ஒன்றாகும். டோஜ்காயின்கள் என்பது ஒரு நையாண்டி நாணயமாகும், இது மக்கள் கிரிப்டோகரன்சியை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் எப்படி வாங்குகிறார்கள் என்பதைக் காட்டத் தொடங்கப்பட்டது.. பல பன்னாட்டு நிறுவனங்களைக் காட்டிலும் அதிக சந்தை மதிப்பு கொண்ட இந்த நாணயம் செயல்பாடின்றி இருப்பது என்பது முரண்பாடாக உள்ளது. சுருங்கச்சொன்னால், இளைஞர்களின் கருத்தான எங்கே தவற விட்டு விடுவோமோ(FOMO – Fear of missing out) என்கிற பயமே ஷிபா இனு காயின் சிறப்பாகச் செயப்படுவதற்கு காரணமாகும். டோஜ்காயின்களின் பரபரப்பைத் தவறவிட்ட முதலீட்டாளர்கள் இப்போது அடுத்த டோஜ்காயினைத் தேடுகிறார்கள். 

இதுவே கிரிப்டோகரன்சியின் பெரும் புகழுக்குவழிவகுத்தது. இருப்பினும், டோஜ்காயின் மற்றும் ஷிபா இனு காயினுக்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு ஷிபாஸ்வாப் இருப்பதாகும். பரவலாக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ஜின் இருப்பு SHIB ஐ எத்தீரியத்தின் பரவலாக்கப்பட்ட நிதி சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக  ஆக்குகிறது . மதிப்பீட்டுதல் மற்றும் டோக்கன்களை மாற்றுதல் போன்ற எக்ஸ்சேஞ்ஜின் சில அம்சங்களை அணுக பயனர்களை இது அனுமதிக்கிறது. இந்தச் செயல்பாடுகள் டோஜ்காயினால் அனுமதிக்கப்படவில்லை

இந்தியாவில் ஷிபா இனு காயினின் விலை என்ன?

SHIB இலிருந்து இந்திய ரூபாய்க்கு – 25 அக்டோபர் 2021 – அன்று இருந்த விலை ₹ 0.003090. ஷிபா இனு காயின் ஒரு கணிக்க முடியாத கிரிப்டோகரன்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் ஷிபா இனு காயின் வாங்குவதன் வழிமுறைகள் என்ன?

ஷிபா இனு காயின்களை பட்டியலில் சேர்க்கும் இந்திய எக்ஸ்சேஞ்ஜ் தளங்கள் அதிகம் இல்லை இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான கிரிப்டோகரன்சியை பட்டியலில் சேர்ப்பதில் WazirX முன்னோடியாக மாறியது. இது இந்தியாவின் முன்னணி வர்த்தக தளங்களில் ஒன்றாகும், மேலும் WazirX ஆப்பைப் பயன்படுத்தி SHIB ஐ எவ்வாறு வாங்கலாம் என்பது இங்கே::

  1. ஒரு செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்யவும்
wazirx signup
  1. ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு போன்ற செல்லுபடியாகும் ஆவணங்களைச் சமர்ப்பித்து KYC ஐ பூர்த்தி செய்யவும்.
Wazirx app verification signup
  1. உங்கள் வங்கிக் கணக்கை இணைக்கவும் அல்லது உங்கள் WazirX கணக்கில் நிதியைச் சேர்க்க வெவ்வேறு டெபாசிட் முறைகளைத் தேர்வு செய்யவும்.
wazirx app adding fund
  1. குவிக் பை அல்லது வாங்க/விற்க விருப்பத்தேர்வு மூலம் ஷிபா இனுவை வாங்கவும் 
buy shiba inu india wazirx app
  1. உங்கள் ஆர்டரை வைக்கவும் ஆர்டர் செயலாக்கப்பட்டதும், கிரிப்டோ உங்கள் WazirX வேலட்டில் தெரியும்!

இந்தியாவில் ஷிபா இனு காயினின் எதிர்காலம் 

தற்போதைய சூழ்நிலை மோசமாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஷிபா டோக்கனுக்கு சாதகமான செய்தி உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், ஷிபா இனு நாணயம் அதன் விலையில் 30% அதிகரிப்பைக் காண உள்ளது, சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, நீங்கள் இன்றே முதலீடு செய்தால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 90% வருமானத்தைப் பெறக்கூடிய வகையில் விலை இருக்கும்

வீழ்ந்திருக்கும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி, அதிக வேகம் பெறுவது அருகாமையில் இருப்பதை ஷிபா இனு காயின் காட்டுகிறது. சமீப காலமாக ஷிபா டோக்கன் திடமான விலைகளை காட்டியிருக்கிறது இந்த புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது, SHIB ஒரு நம்பிக்கையான எதிர்காலத்திற்கு உறுதியளிக்கிறது.

முடிவுரை

હાதற்சமயம், பார்ட்டியை தவற விட்ட அனைவருக்கும் ஷிபா இனு காயின் அள்ளி வழங்குகிறது ஒரு ஆய்வில் Fxstreet.com சுட்டிக்காட்டியுள்ளபடி, ஷிபா இனுவின் விலை அதிகமாக இருப்பதால், சிறிய குறுகிய கால திருத்தங்கள் இயல்பானவை. முதலீட்டாளர்கள் இந்தத் தற்போதைய விலை குறைவைப் பயன்படுத்தி பார்ட்டியில் சேரலாம் மற்றும் பின்னர் அதன் பலன்களைப் பெறலாம். ஷிபா இனு நாணயம் தரப்போகும் லாபம் அதிகமாக இருப்பது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply