
This article is available in the following languages:
வணக்கம் மக்களே! இந்தியாவின் மிகவும் நம்பகமான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜாக மாறுவது ஒரு எளிதான சாதனையல்ல. WazirX இல், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிறுவனம் என்று எங்களை அழைத்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். புதிய அம்சங்களையும் முயற்சிகளையும் உருவாக்கி அனுப்பும் போது நாங்கள் எப்போதும் ’உங்கள்’ மீது – நம் சமூகத்தின் மீது கவனம் செலுத்துகிறோம். எங்கள் பயனர்களிடமிருந்து நாங்கள் பெறும் அற்புதமான 5-நட்சத்திர மதிப்புரைகளிலிருந்து இது தெரிகிறது. ?
உங்களில் பலர் எங்கள் இணையதளத்தில் ‘நேரலை சாட் ஆதரவு’ தேர்வை அறிமுகப்படுத்தச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் உங்களுக்கு செவி மடுத்தோம், 8 ஜூன் 2020 முதல் எங்கள் இணையதளத்தில் நேரடி சாட் ஆதரவை வழங்கத் தொடங்கினோம். இது 100% நிறைவடைந்துவிட்டது, இந்திய நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை எங்கள் உதவி மற்றும் ஆதரவு பக்கத்திலிருந்து எங்கள் அற்புதமான வாடிக்கையாளர் ஆதரவு குழுவைத் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். வார இறுதி நாட்களிலும் நாங்கள் விரைவில் நேரலை சாட் வசதியை கொண்டு வருவோம்.?
தயாரிப்பு, சந்தைப்படுத்தல் அல்லது வாடிக்கையாளர் சேவை அது எதுவாக இருந்தாலும், WazirX சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ? எங்கள் நேரலை சாட் குழுவின் முதல் மறுமொழி நேரம் 60 வினாடிகள்தான் என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்! ஜூன் 8 முதல், நாங்கள் 12,000 கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளோம், மேலும் 85%க்கும் அதிகமான திருப்தி மதிப்பெண் பெற்றுள்ளோம்!
முதல் அரட்டை பதிலுக்கான நேரம்: 60 வினாடிகள்
திருப்தி மதிப்பெண்: 85%
எங்கள் பயனர்களிடமிருந்து சில அற்புதமான அரட்டை மதிப்புரைகள் இங்கே:




हर समय हमारा समर्थन करने के लिए आपका धन्यवाद। अभी और भी कई अच्छी चीजें आने वाली है दोस्तों!
