Skip to main content

WazirX பரிந்துரை திட்டம் (WazirX Referral Program)

By நவம்பர் 2, 2021நவம்பர் 12th, 20214 minute read
WazirX

Table of Contents

அப்டேட்: 15 ஆகஸ்ட் 2021 முதல், எங்கள் கமிஷனை  நாங்கள் WRX இல் செலுத்துவோம்!

நீங்கள் பரிந்துரை திட்டத்தின் ஒருவராக இருக்க விரும்புவதற்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் WazirX பற்றி தெரிவிப்பதற்கும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், . திட்டத்தின் அனைத்து விவரங்களையும் புரிந்துகொள்ள பின்வரும் கட்டுரை உங்களுக்கு உதவும். நாங்கள் முடிந்தவரை வெளிப்படையாக இருக்க முயற்சித்திருக்கிறோம் மற்றும் திட்டத்தை எளிமையாக வைத்திருக்கிறோம், எனவே நீங்கள் எந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக அதிக வெகுமதிகளைப் பெறுவதில் கவனம் செலுத்தலாம்!

WazirX பரிந்துரை திட்டம் என்றால் என்ன?

WazirX இல் உங்கள் நண்பர்கள் செய்யும் ஒவ்வொரு வர்த்தகத்திலும் 50% கமிஷனைப் பெற WazirX பரிந்துரைத் திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். WazirX க்கு அதிகமான பயனர்களைக் கொண்டுவருவதற்காகவும், இந்தியாவில் கிரிப்டோ புரட்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்காகவும் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு நாங்கள் வெகுமதியளிப்பதற்கான வழி இது! அநேகமாக இது இந்தியாவில் தற்போது மிகவும் பலனளிக்கும் கிரிப்டோ ரெஃபரல் திட்டமாக இருக்கக்கூடும்.

இது எப்படி வேலை செய்கிறது?

  • உங்கள் இணைப்பை பகிருங்கள் – உங்கள் பரிந்துரை இணைப்பை உங்கள் நண்பர்களுடன் மின்னஞ்சல், சமூக ஊடகம் அல்லது வேறு எந்த வழியிலும் பகிரவும்
  • சைன்அப் செய்தல் – உங்கள் நண்பர்கள் WazirX இல் பதிவு செய்ய உங்கள் இணைப்பைப் பயன்படுத்துவார்கள் மற்றும் WazirX இல் தங்கள் முதல் வர்த்தகத்தை மேற்கொள்வார்கள்.
  • வெகுமதி பெறுங்கள் -ஒவ்வொரு நண்பரின் வர்த்தகக் கட்டணத்திலும் நீங்கள் 50% கமிஷன் பெறுவீர்கள்! நீங்கள் தூங்குபோது கூட! நீங்களும் உங்கள் நண்பர்களும் தலா 25 WRX நாணயங்கள் வெகுமதியாகப் பெறுவீர்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் எந்த கிரிப்டோவில் என் கமிஷனைப் பெறுவேன்?

உங்கள் நண்பர் எந்த மார்க்கெட்டில் வர்த்தகம் செய்தாரோ அதைப்பொறுத்து நீங்கள் கமிஷனை WRX இல் பெறுவீர்கள்.

Get WazirX News First

* indicates required

இந்த வர்த்தக கமிஷன் திட்டத்தில் நான் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?

நீங்கள் விரும்பும் அளவிற்கு. வருமானம் உண்மையில் வரம்பற்றது! உங்கள் நண்பர்களின் ஒவ்வொரு வர்த்தகத்திற்கும் நாங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் 50% நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் பரிந்துரை செய்த நண்பர் அதிமாக வர்த்தகம் செய்தால் நீங்களும் அதிமாக சம்பாதிப்பீர்கள் எனவே உங்கள் நண்பருக்கு ஒவ்வொரு நாளும் அதிக வர்த்தகம் செய்ய உதவுங்கள், மேலும் ஒவ்வொரு நாளும் நீங்கள் அதிக கமிஷன்களைப் பெறுவீர்கள்!

(எதிர்காலத்தில் பரிந்துரை திட்ட விதிகளை சரி செய்ய அல்லது மாற்ற எங்களுக்கு உரிமை உண்டு.)

எனது பரிந்துரைக் குறியீட்டைப் பயன்படுத்தி நான் எப்படி ஒரு நண்பரை WazirX க்குப் பரிந்துரைக்க முடியும்?

நீங்கள் சைன்அப் செய்தவுடன், உங்கள் தனித்துவமான பரிந்துரை/அழைப்பு இணைப்பை பரிந்துரை திரைக்குச் சென்று அணுகலாம். உங்கள் பரிந்துரை/அழைப்பு இணைப்பை உங்கள் நண்பர்களுடன் பகிரலாம் மற்றும் அதை காபி செய்து எல்லா இடங்களிலும் அல்லது டெலிகிராம், ட்விட்டர், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பகிர்வு விருப்பங்களில் ஒன்றைப் பயன்படுத்தி.பகிரலாம் .

உங்கள் நண்பர் இந்த இணைப்பைக் கிளிக் செய்து, ஒரு WazirX கணக்கை இணையதளம் மூலமாகவோ அல்லது செயலியிலோ சைன்அப் செய்யும் போது பரிந்துரை குறியீட்டை உள்ளிடுவதன் மூலம், பரிந்துரைக்கான வெகுமதியாக வர்த்தக கமிஷன் மற்றும் WRX நாணயங்களைப் பெற நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

என்னுடைய கணக்கில் கமிஷன் எப்போது வரவு வைக்கப்படும்?

ஒரு நாளில் சம்பாதிக்கும் அனைத்து கமிஷன்களும் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். வழக்கமாக விடியற்காலையில்.

சைன்அப் செய்த 30 நாட்களுக்குள் நீங்களும் உங்கள் நண்பரும் 100 USDT மதிப்புள்ள வர்த்தகத்தை முடித்தவுடன் WRX நாணயங்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

என்னுடைய கமிஷன்கள் மற்றும் நான் பரிந்துரை செய்த நண்பர்களை நான் எவ்வாறு டிராக் செய்ய முடியும்?

பரிந்துரைகள் திரைக்கு நீங்கள் செல்லும்போது, பின்வருவனவற்றைக் காணலாம் –

  • பரிந்துரைத்த மொத்த நண்பர்கள் – இது உங்கள் பரிந்துரை இணைப்பைக் கிளிக் செய்து WazirX இல் வெற்றிகரமாகப் சைன்அப் செய்த மொத்த நண்பர்களின் எண்ணிக்கை.
  • சம்பாதித்த மொத்த கமிஷன்கள் – உங்கள் அனைத்து நண்பர்களின் அனைத்து வர்த்தகங்களிலிருந்தும் நீங்கள் சம்பாதிக்கும் மொத்த கமிஷன் இது. நீங்கள் சம்பாதித்த கிரிப்டோ பரிந்துரைகளின் சமீபத்திய INR மதிப்பை கணக்கிடுவதன் மூலம் மதிப்பு INR இல் வெளிப்படுத்தப்படுகிறது.
  • உங்கள் கமிஷன் விகிதம் – இது நீங்கள் சம்பாதிக்கும் கமிஷனின் விகிதமாகும்.
  • கமிஷன் வரலாறு – இது சமீபத்தில் நீங்கள் சம்பாதித்த கமிஷன்களின் பட்டியலாகும்.
  • பரிந்துரைத்த நணபர்கள் – இது உங்கள் பரிந்துரை இணைப்பைப் பயன்படுத்தி வெற்றிகரமாகப் பதிவுசெய்த நண்பர்களின் பட்டியல்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, உங்கள் பரிந்துரை இணைப்பை எந்த நண்பர்கள் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய விவரங்களை நாங்கள் பகிர மாட்டோம்.

நான் அதிக வெகுமதிகளை சம்பாதிக்க உதவும் குறிப்புகள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?

  • अपने आमंत्रण लिंक को अधिक से अधिक दोस्तों के साथ शेयर करें। आप जितने अधिक दोस्तों के साथ इसे शेयर करेंगे, उनके साइन अप करने की
  • உங்களுடைய அழைப்பு இணைப்பை உங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுடன் பகிரவும். நீங்கள் எவ்வளவு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் சைன்அப் செய்ய வாய்ப்புள்ளது. உங்கள் அழைப்பு இணைப்பைப் பகிர சமூக ஊடகங்கள், சாட் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தவும்
  • கிரிப்டோவைப் பற்றி சொல்லி உங்கள் நண்பர்களை உற்சாகப்படுத்துங்கள் மற்றும் அவர்கள் ஏன் WazirX போன்ற ஒரு எக்ஸ்சேஞ்ஜில் சைன்அப் செய்ய வேண்டும் என்றும் கூறுங்கள்
  • நேரடியாக சைன் அப் செய்வதற்கு பதிலாக உங்கள் அழைப்பு இணைப்பில் சைன்அப் செய்வதன் நன்மைகளைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
  • உங்கள் நண்பர்கள் சைன்அப் செய்த பிறகு அவர்களின் சொந்த பரிந்துரை இணைப்புகளைப்பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்கவும். இது உங்களின் மீதான அவர்களின் நம்பிக்கையை வளர்க்கும்
  • WazirX இல் அதிக வர்த்தகம் செய்ய உங்கள் நண்பர்களை ஊக்கப்படுத்துங்கள், இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு வர்த்தகத்திலும் அதிகமாக சம்பாதிக்க முடியும்!

நான் ஒரு நண்பரைப் பரிந்துரைத்தேன் ஆனால் அவன்/அவள் இன்னும் வெகுமதிக்கு தகுதி பெறவில்லை.

நீங்கள் ஒரு நண்பரை வெற்றிகரமாகப் பரிந்துரைத்திருக்கலாம் என்று நீங்கள் நினைத்தாலும், அந்த பரிந்துரை கணக்கில் வராததற்கு சில காரணங்கள் உள்ளன –

  • உங்கள் நண்பர் உங்கள் பரிந்துரை இணைப்பைக் கிளிக் செய்தார் ஆனால் பரிந்துரை குறியீட்டை உள்ளிடாமல் செயலி மூலம் சைன்அப் செய்தார்.
  • உங்கள் நண்பர் உங்கள் பரிந்துரை இணைப்பைக் கிளிக் செய்யவில்லை, அதற்கு பதிலாக நேரடியாக WazirX இல் சைன்அப் செய்தார்
  • உங்கள் நண்பர் மற்றொரு பரிந்துரை இணைப்பைக் கிளிக் செய்து அந்த இணைப்பின் மூலம் சைன்அப் செய்தார்
  • உங்கள் நண்பரின் KYC இன்னும் சரிபார்ப்பில் உள்ளது அல்லது அங்கீகரிக்கப்படவில்லை
  • உங்கள் நண்பர் WazirX இல் முதல் வெற்றிகரமான பரிவர்த்தனையை இன்னும் முடிக்கவில்லை. ஒரு பரிவர்த்தனை வெற்றிகரமாக இருக்க, சைன்அப் செய்த 30 நாட்களுக்குள் வாங்குதலை அல்லது விற்பனையை முடிக்க வேண்டும்.
  • நீங்கள் அல்லது உங்கள் நண்பர் கீழ்க்கண்ட விதிகளுக்கு தகுதி பெறவில்லை

நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விதிகள்

நீங்கள் WazirX பரிந்துரை திட்டத்தில் பங்கேற்கும்போது கீழே உள்ள விதிகளை தயவுசெய்து மனதில் கொள்ளவும். இந்த எளிய ஆனால் முக்கியமான விதிகள் முழு சமூகத்திற்கும் திட்டத்தை நியாயமாக வைத்திருக்க உதவுகின்றன.

  • உங்கள் நண்பர்களுடன் பரிந்துரை இணைப்பைப் பகிரும்போது வெகுமதிகளை தவறாக சித்தரிக்காதீர்கள்
  • நாங்கள் தொடர்ந்து போலி கணக்குகளை கவனிக்கிறோம் ஏதாவது தவறாக இருப்பதைக் கண்டறிந்தால், அந்தக் கணக்குகள் பரிந்துரை திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதைத் தகுதி நீக்கம் செய்து, முன்னர் வரவு வைக்கப்பட்டுள்ள வெகுமதிகளைத் திரும்பப் பெறுவோம்.

குறிப்பு: இந்தத் திட்டத்தை நாங்கள் நல்லெண்ணத்துடன் நடத்துகிறோம் அதே சமயத்தில், முன் அறிவிப்பு இல்லாமல் பரிந்துரைத் திட்டத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை WazirX கொண்டுள்ளது. மாறி வரும் சந்தை நிலைமைகள், பாதுகாப்பு அல்லது மோசடி ஆபத்து அல்லது வேறு எந்த காரணத்தையும் கருத்தில் கொண்டு நாங்கள் இத்தகைய மாற்றங்களைச் செய்யலாம். வெகுமதிக்கான தகுதி குறித்த முடிவு WazirX ஆல் எடுக்கப்படும் மற்றும் இதுவே இறுதியானதும் மற்றும் கட்டுப்படுத்தக்கூடியதுமாக இருக்கும் பரிந்துரை திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் மேற்கூறியவற்றை ஒப்புக்கொள்கிறீர்கள்.

பரிந்துரை திட்டத்தை யாராவது தவறாகப் பயன்படுத்துவது உங்களுக்கு தெரிந்தால், எங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு எங்களுக்கு  தெரியப்படுத்தலாம். நாங்கள் அதை ஆராய்ந்து அதை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

எங்களை Twitter (@wazirxindia)வில் பின் தொடரலாம் மற்றும் WazirX டெலிகிராம் சேனலில் இணையலாம். WazirX குறித்த சமீபத்திய அப்டேட்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு: (https://t.me/wazirx) 

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply