Table of Contents
குறிப்பு: இந்த வலைப்பதிவு ஒரு வெளிப்புற பிளாகர் எழுதியது. இந்த போஸ்டில் வெளிப்படுத்தப்பட்ட பார்வைகள் மற்றும் கருத்துக்கள் ஆசிரியருக்கு மட்டுமே சொந்தமானது.
இந்தியாவில் கிரிப்டோவின் நிலை இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. இந்த விஷயத்தில் எவ்வாறு ஒழுங்குமுறையைக் கொண்டு வருவது என்று கொள்கை வகுப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், இந்தியக் குடிமக்கள் கிரிப்டோவில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அதன் பயனர்கள் எண்ணிக்கையில் இருந்தே தெரிகிறது
“இந்தியாவில் 10 மில்லியன் கிரிப்டோகரன்சி பயனர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அது உலகளவில் 100 மில்லியனாக இருக்கலாம்.”
பிசினஸ் லைன் (மார்ச் 2021)
எனவே, ஒழுங்குமுறை தரப்பில் இன்னும் சில தெளிவான முடிவுகள் எடுக்கும் வரை, கிரிப்டோவில் உள்ள பரிவர்த்தனைகளுக்கு எப்படி வரி விதிப்பது? வரிவிதிப்பு அம்சத்தில் நாம் ஆழமாக செல்வதற்கு முன், நம் நாட்டில் கிரிப்டோ எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
கிரிப்டோ பற்றிய உணர்தல்
இன்று, பலர் கிரிப்டோவை முதலீட்டிற்கான சாத்தியமான சொத்து வகுப்பாகக் கருதுகின்றனர். கிரிப்டோவை வைத்திருப்பவர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரின் பார்வை அதன் வரிவிதிப்பில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. திரு. அனுராக் சிங் தாக்கூர் (தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்) , “கிரிப்டோகரன்சிகள்/சொத்துக்களை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்கள், அவற்றை வைத்திருப்பதன் தன்மையைப் பொறுத்து, அது ஒரு வருமானம் என்று எடுத்துக்கொள்ளப்பட்டு வரி விதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
வரிச்சட்டங்கள் என்ன சொல்கின்றன?
வரிவிதிப்பு இரண்டு வடிவங்களில் இருக்கலாம்: நேரடி வரி மற்றும் மறைமுக வரி நேரடி வரி விதிப்புக்கான பொருத்தமான சட்டம் வருமான வரிச்சட்டம், 1961 ஆகும். மறைமுக வரிவிதிப்புக்கு, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) சட்டம், 2017 மற்றும் அதன் மாநில/யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் ஆகியவை நடைமுறையில் உள்ளன. இவற்றை நாம் விளக்கமாகப் பார்ப்போம்:
கிரிப்டோவுக்கு எதிராக வருமான வரி சட்டம்
சம்பளம், வீட்டுச் சொத்து, வணிகம் (அல்லது தொழில்), மூலதன ஆதாயங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் என வருமானத்திற்கான ஐந்து தலைப்புகள் உள்ளன என்று இந்திய வரிவிதிப்பைப் படித்த எவரும் உங்களுக்குச் சொல்வார்கள். எந்த வரிச் சட்டங்களிலும் ‘கிரிப்டோ’ அல்லது ‘கிரிப்டோகரன்சி’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். பெரும்பாலான மக்கள் கிரிப்டோவை முதலீட்டுக்கான ஒரு வழிமுறையாகக் கருதுவதால், முதலில் வருமான வரிச் சட்டத்தின் மூலதன ஆதாயம் எனும் அம்சத்தைப் ஆய்வு செய்வோம்.
மூலதன ஆதாயங்கள்:
மூலதன ஆதாயங்களின் கட்டணம் விதிக்கும் பிரிவு, வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 45, ‘மூலதனச் சொத்தை’ மாற்றுவதால் ஏற்படும் லாபம் அல்லது ஆதாயத்தின் மீது வரி விதிக்கிறது. “… மதிப்பீட்டாளர் வைத்திருக்கும் எந்த வகையான சொத்தும், அவரது வணிகம் அல்லது தொழிலுடன் தொடர்புடையதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்” பிரிவு 2(14), …‘மூலதனச் சொத்து’ என்ற வார்த்தையின் வரையறையில் அடங்கும் என்று கூறுகிறது.. இது கட்டணம் வசூலிக்கும் அளவுகோல்களை பூர்த்தி செய்வதாகத் தோன்றுவதால், நாம் வரியைக் கணக்கிடுவதைத் தொடரலாம்.
மூலதன ஆதாயங்களின் கணக்கீடு பொதுவாக பின்வரும் வழிகளில் இருக்கும்:
விற்பனை செலவு | |
(-) | விற்பனை தொடர்பாக ஏற்பட்டிருக்கும் மொத்தச் செலவு |
நிகர விற்பனை செலவு | |
(-) | (Indexed) கையகப்படுத்தல் செலவு |
(-) | (Indexed) மேம்பாட்டுச் செலவு |
மூலதன ஆதாயங்கள்: |
Sale Consideration | |
(-) | Expenditure wholly incurred in connection with the sale |
Net Sale Consideration | |
(-) | (Indexed) Cost of Acquisition |
(-) | (Indexed) Cost of Improvement |
Capital Gains |
விற்பனை தொடர்பான செலவினம் பொதுவாக கிரிப்டோ எக்ஸ்சேஞ்ஜ் மூலம் விதிக்கப்படும் தரகுக் கட்டணமாக இருக்கும். கிரிப்டோவைப் பொறுத்தவரையில் எந்தவித மேம்பாட்டு செலவும் இருக்காது. வைத்திருக்கும் காலம் 3 ஆண்டுகளுக்கு மேல் (நீண்ட கால) இருந்தால் மட்டுமே குறியீட்டு பலன் கிடைக்கும். குறுகிய கால மூலதன ஆதாய வரியானது அதன் பொருந்தக்கூடிய படிமுறை விகிதங்களில் வசூலிக்கப்படும், அதே நேரத்தில் நீண்ட கால மூலதன ஆதாய வரி 20% என்ற ஒற்றை விகிதத்தில் வசூலிக்கப்படும்.
கிரிப்டோவை வாங்குவதற்குப் பதிலாக அதை நீங்கள் மைனிங் செய்திருந்தால் என்ன செய்வது? கையகப்படுத்துதலில் தெளிவாகத் நிர்ணயம் செய்யக்கூடிய செலவு இருக்குமா? கிரிப்டோவை லாபகரமாக மைனிங் செய்வதற்கு குறிப்பிடத்தக்க ஹார்ட்வேர், மின்சாரம் மற்றும் இதர செலவுகள் தேவைப்படுகின்றன. இந்தச் செலவுகள் கையகப்படுத்துதல் செலவினமாக கொள்ளப்படுமா? இந்தச் செலவுகளை துல்லியமாகக் கணக்கிட முடியுமா? CIT க்கு எதிராக பி.சி.ஸ்ரீனிவாச ஷெட்டி (1981) வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் பயன்படுத்தினால், கையகப்படுத்துதலுக்கான செலவு சரியாகக் கண்டறியப்பட்டால் மட்டுமே பிரிவு 48ன் (மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவதற்கு) விதிகளைப் பயன்படுத்த முடியும் என்று முடிவு செய்யலாம். கிரிப்டோவை மைனிங் செய்யும் விஷயத்தில் கையகப்படுத்துதலின் விலையை துல்லியமாக கண்டறிய முடியாது என்பதால், அதற்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படக்கூடாது.
வணிகம்:
முன்னர் குறிப்பிட்டபடி, கிரிப்டோவை லாபகரமாக மைனிங் செய்வதற்கு, தேவையான உள்கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படுகிறது. நீங்கள் அத்தகைய முதலீட்டை மேற்கொண்டிருந்தால், நீங்கள் வைத்திருக்கும் க்ரிப்டோ ஒரு வகையான முதலீடு மட்டுமே என்று சொல்ல முடியுமா? இது இரண்டாவது கண்ணோட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது, அதாவது, வரி செலுத்துவோர் கிரிப்டோவை (மைனிங் உட்பட) வாங்குதல் மற்றும் விற்பதில் ஈடுபட்டுள்ளார். அத்தகைய வணிகத்தின் வருமானம் ‘வணிகம் அல்லது தொழிலில் இருந்து லாபம் மற்றும் ஆதாயங்கள்’ என்ற தலைப்பின் கீழ் வரி விதிக்கப்படும், மேலும் கணக்கீடு, ஒப்பீட்டளவில் நேரடியானது – கிரிப்டோவை உங்கள் சரக்கு இருப்பாகக் கருதி, சட்ட தொடர்புடைய விதிகளின்படி உங்கள் வணிகத்தின் நிகர லாபத்தைக் கணக்கிடுங்கள்.
இதர ஆதார மூலங்கள்:
உங்கள் கிரிப்டோ போர்ட்ஃபோலியோவை உங்கள் மூலதனச் சொத்தாகவோ அல்லது உங்கள் வணிகமாகவோ நீங்கள் பார்க்காவிட்டாலும், அதில் இருந்து நீங்கள் பெறும் வருமானம் எஞ்சியிருக்கும் வருமானத்தின் – ‘பிற ஆதார மூலங்களில் இருந்து வருமானம்’ எனும் தலைப்பில் வரி விதிக்கப்படும். இதற்கு பொருந்தக்கூடிய படிமுறை விகிதங்களின்படி வரி விதிக்கப்படும்.
கிரிப்டோவுக்கு எதிராக GST சட்டம்
CGST சட்டத்தின் கட்டணம் விதிக்கும் பிரிவின், பிரிவு 9, ‘பொருட்கள்’ அல்லது ‘சேவைகள்’ அல்லது இரண்டுக்குமான மாநிலங்களுக்கு இடையேயான அனைத்து ‘விநியோகங்கள்’ மீது மத்திய GST விதிக்கப்படும் என்று கூறுகிறது. எனவே கிரிப்டோ தொடர்பான பரிவர்த்தனைகள் GST இன் வரம்பிற்குள் இருக்க, அது ‘பொருட்கள்’ அல்லது ‘சேவைகள்’ ஆகிய இரண்டின் ‘விநியோகம்’ ஆக இருக்க வேண்டும். CGST சட்டம் பிரிவு 7 இன் கீழ் ‘விநியோகம்’ என்பதன் உள்ளடக்கிய வரையறையை வழங்குகிறது, இது பின்வரும் காரணிகளைச் சார்ந்துள்ளது:
- ஒரு ‘விநியோகம்’ இருக்க வேண்டும் (இதில் விற்பனை, பரிவர்த்தனை, உரிமம், பரிமாற்றம், வாடகை, குத்தகை போன்றவை அடங்கும்.)
- ஒரு ஒப்பந்தம் இருக்க வேண்டும் (வாய்வழி, எழுதப்பட்ட, சொல்லப்படாத, மறைமுகமாக, முதலியன)
- ஒரு பரிசீலனைக்காக
- ஒரு நபரால்
- வணிகத்தின் போக்கில் அல்லது முன்னேற்றத்தில்
கிரிப்டோவை வாங்குதல் மற்றும் விற்றல் என்பது மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறது. இனி பார்க்க வேண்டியது கிரிப்டோ ‘பொருட்களாக’ அல்லது ‘சேவைகளாக’ இருக்குமா என்பதுதான். சட்டத்தில் “பொருட்கள்” என்ற வார்த்தையின் வரையறை பின்வருவனவற்றை உள்ளடக்கியது: ”…பணம் மற்றும் பத்திரங்கள் தவிர அனைத்து வகை அசையும் சொத்துக்களும் …”மற்றும் ”சேவைகள்” என்ற வார்த்தையின் வரையறை பின்வருவனவற்றை உள்ளடக்கியது: “….பொருட்கள், பணம் மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றை தவிர மற்ற அனைத்தும்…”. எனவே, CGST சட்டம், 2017 இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ‘சேவைகள்’ வரையறையின் கீழ் கிரிப்டோ வருகிறது
மேற்கண்டவற்றின் அடிப்படையில் கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்கு GST வரிக்கு உட்பட்டது என்ற முடிவுக்கு வரலாம் இதற்கு பொருந்தக்கூடிய வரி விகிதம், சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் 18% ரெசிடூயல் வரி விகிதமாக இருக்கும். இருப்பினும், ஒரு நபர் பொதுவாக அவருடைய மொத்த வருவாய் ரூ. 20 லட்சத்திற்கு அதிகமானால் மட்டுமே GST சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
கிரிப்டோ மைனிங் எனும் கேள்வி இன்னமும் மீதமிருக்கிறது க்ரிப்டோ மைனிங் என்பது சிக்கலான கிரிப்டோகிராஃபிக் சமன்பாடுகளைத் தீர்க்கும் செயல்முறையாகும், இது பிளாக்செயின் நெட்வொர்க்கில் ஒரு கிரிப்டோ பரிவர்த்தனையை சரிபார்ப்பதற்கும் நுழைவதற்கும் வழிவகுக்கும். மைனிங் குறித்த அதிகமான தகவலை இங்கு பெறலாம்.எனவே இங்கே, நீங்கள் கிரிப்டோ மைனிங்கின் சேவையை வழங்குகிறீர்கள், மேலும் அதற்கான பரிசையும் பிளாக்செயின் நெட்வொர்க்கிடம் பெறுகிறீர்கள். GST வரி விதிப்புக்குட்பட்ட வெளிப்புற சேவையாக இதைப் பார்க்கலாம். அதற்கான பரிசு ‘இந்த வகையில்’ (கிரிப்டோ) இருக்கும், மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் விநியோக மதிப்பைக் கணக்கிடுவதற்கான நடைமுறைகளை சட்டம் வகுத்துள்ளது.
எதிர்நோக்குகிறோம்
#IndiaWantsCrypto என்பது இதன் மூலம் வெளிப்படையாகிறது வரி விதிப்பு தொடர்பாக சட்டத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்துவதே இதில் முன்னோக்கி செல்லும் வழியாகும். முதலீட்டுக்கான வழிமுறையாக கிரிப்டோ பற்றிய பொதுமக்கள் கருத்தைக் மனதில் கொண்டு, அதே பார்வை வருமான வரிச் சட்டங்களின் கீழ் எடுக்கப்பட்டால், அது அதற்கென்ற சொந்த சிறப்பு வரி விகிதத்துடன் மூலதனச் சொத்தாகக் கருதப்படலாம். இதேபோல், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், பங்குகள், கடன் பத்திரங்கள் போன்ற பிற பத்திரங்களுக்கு இணையாக கிரிப்டோவைக் கருதினால், அது கிரிப்டோவை வாங்குவது மற்றும் விற்பது போன்ற ஜிஎஸ்டியின் வரம்பிற்கு வெளியே வைக்கப்பட வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.