Skip to main content

WazirX உடன் BUIDL செய்யுங்கள் – உங்கள் சொந்த கிரிப்டோ எக்ஸ்சேன்ஜை கட்டமைப்பது எப்படி?

By மார்ச் 7, 20222 minute read

அன்புள்ள சமூகத்தாரே!

சமூகம் செழிக்கவும் வளரவும் போட்டிக்கு அப்பாற்பட்டு, ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ‘குச்சிகளின் கட்டு’ என்ற கதை நினைவிருக்கிறதா? அல்லது ‘ஒன்றுபட்டால் நாம் நிற்கிறோம், பிளவுபட்டால் வீழ்கிறோம்’ என்ற சொற்றொடரை? இவையெல்லாம் நாம் சிறுவயதில் கேட்ட கட்டுக்கதைகள் என்றாலும், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் இன்றைக்கும் நன்கு பொருந்துகிறது.

Get WazirX News First

* indicates required

இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு, இதோ ஒரு புதிய விஷயத்துடன் நாங்கள் வருகிறோம்! நாம் ஒரு சமூகமாக ஒன்றாக வளர வேண்டும் என்ற நோக்கத்தில் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

புதியது என்ன?

வெப்3 இன் அலை வேகமாக நெருங்கி வருகிறது, மேலும் அடுத்த தலைமுறை தொழில்முனைவோர் அதற்கேற்ப தயாராக இருக்க வேண்டும் மற்றும் சரியான திசையில் பயணிக்க தேவையான வழிகாட்டுதலை பெற்றவர்களாகவும் இருப்பது இன்றியமையாதது. இதனால்தான் WazirX இல் நாங்கள் எங்கள் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் – ‘WazirX உடன் BUIDL செய்யுங்கள்’.

WazirX உடன் BUIDL செய்தல் – இது என்ன?

நீங்கள் ஒரு கிரிப்டோ எக்ஸ்சேன்ஜை கட்டமைப்பது கடினம் என்று கூறும்போது நாங்கள் அதற்கு உடன்படுகிறோம். நாங்கள் அதை கடினமான வழியில் கற்றுக்கொண்டாலும், உங்களுக்காக அதை எளிதாக்க விரும்புகிறோம். WazirX உடன் BUIDL செய்யுங்கள் புரொகிராம் மூலம், WazirX ஐ மேம்படுத்தும் வகையில் உங்கள் சொந்த கிரிப்டோ எக்ஸ்சேன்ஜுகளை நீங்கள் BUIDL (கட்டமைத்தல்) செய்யலாம். கருவிகள், ஆதரவு, வழிகாட்டுதல், முன்னணியில் உள்ள ஏஞ்சல்/ VC முதலீட்டாளர்களுக்கான அணுகல் மற்றும் பல இப்போது உங்கள் விரல் நுனியில் இருக்கின்றன.

WazirX உடன் எவ்வாறு கட்டமைப்பது?

இது 3 படிநிலைகள் கொண்ட ஒரு எளிய செயல்முறையாகும். ஒரு முன்மாதிரியான கிரிப்டோ எக்ஸ்சேன்ஜை உருவாக்க உங்களுக்கு ஒரு நல்ல யோசனையும் ஆர்வமும் இருந்தால், உங்கள் எண்ணங்களை முதலில் ஒன்றிணைக்கவும் அதன் பின்:

படிநிலை 1: விண்ணப்பிக்கவும்

புரொகிராமை அணுக உங்கள் விவரங்களுடன் ஒரு எளிய படிவத்தை நிரப்பவும்.

படிநிலை 2: HODL (மதிப்பாய்வு மற்றும் பகுப்பாய்வு)

எங்கள் குழுக்கள் உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து, அது அங்கீகரிக்கப்பட்டால் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

படிநிலை 3: BUIDL

உங்கள் சொந்த கிரிப்டோ எக்ஸ்சேன்ஜை நாம் இணைந்து உருவாக்குவோம்.

WazirX உடன் நீங்கள் BUIDL செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?

உங்கள் நிபுணத்துவத்தை நீங்கள் கொண்டு வரும்போது, எங்கள் அனுபவம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். அதாவது, உள் நுழைந்தவுடன், நீங்கள் அனுபவிக்கக்கூடிய நன்மைகள் இவை:

  • பணப்புழக்கம்: 300+ அதிக பணப்புழக்கமுள்ள சந்தைகளுக்கான அணுகலைப் பெறுங்கள்.
  • டெக் இன்ஃப்ரா: WazirX இன் நிறுவன API கள் மூலம் ஆர்டர்களை வாங்க/விற்க உங்கள் பயனர்களை செயல்படுத்தும்போது ஆர்டர் புத்தகத்திற்கான அணுகலைப் பெறுங்கள்.
  • பார்ட்னர் நெட்வொர்க்: KYC/AML பார்ட்னர்கள் மற்றும் பேங்கிங் பார்ட்னர்களுடன் ஃபியட் ஆன்/ஆஃப் ராம்ப்களுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • ஆழ்ந்த டொமெய்ன் அறிவு: WazirX இன்ஜினியரிங் மற்றும் செயல்பாட்டுக் குழுக்களிடமிருந்து தனிப்பட்ட ஆதரவைப் பெறுங்கள். ஒருங்கிணைக்கவும், சுமூகமான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் எங்களின் சிறந்த உதவி உங்களுக்கு உதவும்.
  • கஸ்டடி: கிரிப்டோவை திரும்பப் பெறுதல் மற்றும் டெபாசிட்டுகளுக்கான WazirX இன் தொழில்துறையின் முன்னணி கஸ்டடி மற்றும் எக்ஸ்சேன்ஜ் உள்கட்டமைப்பை மேம்படுத்துங்கள்.
  • இணக்கம்: எங்கள் வல்லுநர்கள் வரிவிதிப்பு மற்றும் ஒழுங்கு நெறிமுறைகளைக் கையாளுவதில் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
  • நிதி ஆதரவு: அதிக செயல்திறன் கொண்ட திட்டங்களுக்காக, உங்களுக்கு ஏஞ்சல்/ VC முதலீட்டாளர்களின் அணுகலும் கிடைக்கும்.

உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

பிரவுனீ பாயிண்ட்கள்

  • நீங்கள் உள் நுழைந்ததும் (விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது), இந்த கூடுதல் நன்மையை நீங்கள் கவனிக்கலாம்: உங்கள் நாள் 0 பணப்புழக்கத்தை நாங்கள் தருவோம்.
  • நீங்கள் ஒரு நிதி/முதலீட்டாளராக இருந்து மற்றும் இந்தப் பயணத்தில் பங்கேற்க விரும்பினால், DM மூலம் நேரடியாக இங்கு என்னைத் தொடர்பு கொள்ளலாம்

நாங்கள் ஏன் இதைச் செய்கிறோம்?

உலகில் முதன்மையாக இருக்க, வெப்3 க்காக இந்தியா இன்னும் அதிகமாக கட்டமைக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு அரிய வாய்ப்பு, அதனால்தான் WazirX இல் உங்களுக்கு ஆதரவு தருவதற்கு நாங்கள் இருக்கிறோம். மேலே கூறியபடி, இந்தியாவில் #BuildForCrypto க்கு போட்டியிடுவதை விட அதிக ஒத்துழைப்புடன் செயல்படுவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

எனவே, வாருங்கள் நண்பர்களே! உங்களின் பில்லியன் டாலர் எக்ஸ்சேன்ஜை ஒன்று சேர்ந்து உருவாக்குவோம்! விரைவில் மறுபக்கம் சந்திப்போம்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply