
வணக்கம் சமூகத்தாரே!
நாங்கள் நீண்ட காலமாக WazirX மொபைல் பயன்பாடுகளில் டார்க் பயன்முறையை வைத்திருக்கிறோம், மேலும் அனைவரும் அதை விரும்புகிறார்கள். டார்க் பயன்முறையை நாம் எப்படி நேசிக்கிறோம் மற்றும் விரும்புகிறோம் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. எனவே, உங்கள் பக்கத்தில் இருந்து பல பரிந்துரைகளுக்குப் பிறகு, நாங்கள் இப்போது WazirX வெப்-இலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த டார்க் பயன்முறையை அறிமுகப்படுத்துகிறோம்!
பெரும்பாலான கணக்குகளில், இணையதளத்தில் இயல்பாகவே டார்க் பயன்முறை இயக்கப்படும்; ஆனால் அது இல்லையென்றால், உங்கள் கணக்கில் அதை இயக்க (அல்லது முடக்க) இந்தப் படிநிலைகளைப் பின்பற்றலாம்.
WazirX வெப்-இல் டார்க் பயன்முறையை எப்படி இயக்குவது?
- WazirX இணையதளத்தில் உங்கள் கணக்கில் உள்நுழையுங்கள்.
- லைட் இலிருந்து டார்க் பயன்முறைக்கு மாறுவதற்கான நிலைமாற்றம் (toggle) எக்ஸ்சேஞ்ச் பக்கத்தில் மேல் வலது மூலையில் உள்ளது.
- அந்த நிலைமாற்ற (toggle) பொத்தானை கிளிக் செய்யவும்.
- மீண்டும் லைட் பயன்முறைக்கு வர அதே பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சத்தின் அறிமுகம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தி உங்கள் கிரிப்டோ பயணத்தில் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.
இனிமையான வர்த்தகம் அமையட்டும்!!
