Skip to main content

2021 இல் இந்தியாவில் பிட்காயின் வாங்குவது எப்படி? (How to Buy Bitcoin in India in 2021)

By நவம்பர் 9, 2021நவம்பர் 12th, 20215 minute read

முற்றிலும் எதிர்பாராத கோவிட் -19 தொற்றுநோய் உலகை தாக்கியது மற்றும் உலகெங்கிலும் நிதிச் சந்தைகள் வீழ்ச்சியடைந்ததால், முதலீட்டாளர்களிடையே பிட்காயின் மிகவும் விரும்பப்படும் மாற்று முதலீட்டு பாதையாக உருவெடுத்தது.

தொடர்ச்சியான நல்ல வருமானம் காரணமாக, அதிகமான வர்த்தகர்கள் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் பிட்காயினில் முதலீடு செய்ய முயற்சிக்கின்றனர்.

பிட்காயினில் முதலீடு செய்வது காலப்போக்கில் கிட்டத்தட்ட சிரமமின்றி செய்யப்பட்டது -குறிப்பாக இந்தியாவில் வர்த்தகர்கள் பிட்காயின் வாங்கவும் விற்கவும் அனுமதிக்கும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள்;,இந்தியாவில் 2021 இல் பிட்காயின் வாங்க எளிதான வழியை நீங்கள் விரும்பினால் கிரிப்டோ சந்தைகளில் நுழைய இது ஒரு சிறந்த நேரம்.

இந்த போஸ்டில், இந்தியாவில் 2021 இல் நீங்கள் எப்படி பிட்காயினில் முதலீடு செய்யலாம் என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்!

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் என்பது ஒரு பன்முகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் நாணயம் ஆகும், இதனை வங்கி போன்ற இடைத்தரகரின் பயன்பாடு இல்லாமல் வாங்கலாம், விற்கலாம் மற்றும் பரிமாறிக்கொள்ளலாம்.

2009 ஆம் ஆண்டில் மர்ம மனிதரான சடோஷி நாகமோட்டோவால் தொடங்கப்பட்டது,, இருப்பதிலே முதல் கிரிப்டோகரன்சியாக பிட்காயின் பரவலாகக் கருதப்படுகிறது. பிட்காயின் என்பது ஒரு பரிமாற்ற முறை, அதாவது ஒரு கரன்சி, மற்றும் மதிப்பு மிக்க ஒரு சேமிப்பு அல்லது ஒரு மாற்று முதலீடு ஆகும்.

பெரும்பாலான கிரிப்டோகரன்ஸிகளைப் போலவே, பிட்காயினும் ஒரு பரவலாக்கப்பட்ட மெய்நிகர் கரன்சியாகும், மேலும் இதை ஒரு மைய அதிகாரம் அல்லது தனிநபர் அல்லது நிறுவனமோ சொந்தம் கொண்டாடவோ கட்டுப்படுத்தவோ முடியாது.

இந்தியாவில் பிட்காயினில் முதலீடு செய்வது எப்படி?

பிட்காயின் உலகம் முழுவதும் ஒரு புதிய சொத்து வகை முதலீட்டாளர்களை தந்திருக்கிறது. ஆனால் குறிப்பாக இந்தியாவில் பிட்காயினை ஏன் வாங்கி விற்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? முதலில் அது அதிக வருவாயை அளிக்கிறது மற்றும் இப்போது உலகம் முழுவதும் சிறந்த செயல்திறன் கொண்ட சொத்துக்களில் ஒன்றாக இருக்கிறது. 

பிட்காயினில் அடிக்கடி ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள், அபாயங்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டில் இருந்து விரைவாகவும் அதிக லாபம் ஈட்ட விரும்பும் வர்த்தகர்களுக்கும் ஒரு நல்ல முதலீடாக, அமைகிறது.

தற்போதைய தொற்றுநோய்க்கு மத்தியில், அதிக முதலீட்டாளர்களால் இது கவனிக்கப் பட்டு, இந்த சொத்து வகையின் மேல் தங்கள் நம்பிக்கையை வைத்ததால், பிட்காயினின் விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை 2020 இறுதிக்குள் மிக அதிகமாக $ 30,000 க்கு உயர்ந்தது.

ஏப்ரல் 2021 நிலவரப்படி, பிட்காயின் விலை $ 53,000 க்கு மேல் உள்ளது – இந்தியாவில் பிட்காயின் விலை கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய். மேலும் 2021 க்கான பிட்காயின் விலை, கணிப்புகளின் படி பிட்காயினின் விலை 2021 இறுதிக்குள் $ 400,000 ஐ எட்டும்!

அதைத் தவிர, பிட்காயின் பணவீக்கம் இல்லாத சொத்தாக உருவாக்கப்பட்டதால், அதன் விநியோகம் 21 மில்லியனாக மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் மற்றும் பிட்காயின் அளவை பாதியாகக் குறைத்தல் ஆகியவற்றுக்கு இடையில், பிட்காயின் அதன் முதலீட்டாளர்களுக்கு பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பை வழங்குகிறது 

Hஇந்தியாவில் பிட்காயின் வாங்குவது எப்படி?

இந்தியாவில் பிட்காயினில் முதலீடு செய்ய உங்களுக்கு பல வழிகள் உள்ளன. ஆரம்பத்தில், நீங்கள் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜ் மூலம் இந்தியாவில் பிட்காயினை வாங்கி விற்கலாம். அறிமுகமில்லாதவர்களுக்கு, கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜ் என்பது மெய்நிகர் தளமாகும், இது கிரிப்டோகரன்ஸிகளை வர்த்தகம் செய்ய உங்களை அனுமதிக்கிறது. ஒரு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ஜ் என்பது பங்குச் சந்தையிலிருந்து வேறுபட்டதல்ல, அது டிஜிட்டல், சுய-கட்டுப்பாடு மற்றும் ஆண்டு முழுவதும் 24/7 செயல்படுகிறது என்பதைத்தவிர.

நீங்கள் இந்தியாவில் பிட்காயினில் முதலீடு செய்ய எளிதான வழி கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜுகள், ஆனால் நிச்சயமாக வேறு சில வழிகளும் உள்ளன. உதாரணமாக, நீங்கள் வர்த்தகக் கட்டணம், கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் கட்டணத்தை செலுத்துவதைத் தவிர்க்க விரும்பினால் அல்லது ஒரு நபருடன் நேரடியாக வர்த்தகம் செய்ய விரும்பினால், . நீங்கள் ஒரு P2P அல்லது நபருக்கு நபர் நேரடி கிரிப்டோ பரிவர்த்தனைக்கு செல்லலாம்.

இந்த முறையிலும், ஒரு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ஜ் இருக்கக்கூடும், இருப்பினும், அது ஒரு வசதியாக மட்டுமே செயல்படும். உங்களுடன் வர்த்தகம் செய்யும் ஒரு விற்பனையாளர்/வாங்குபவரை கண்டுபிடிக்க இந்த தளம் பொதுவாக வேலை செய்கிறது. இருப்பினும், இந்த முறையானது கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் மூலம் இந்தியாவில் பிட்காயின் வாங்குவதை விட நிச்சயம் அதிக நேரம் எடுக்கும், ஏனெனில் உங்கள் ஒப்பந்தத்துக்கு பொருந்தக்கூடிய விற்பனையாளர் அல்லது வாங்குபவரை கண்டுபிடிப்பது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும். 

இறுதியாக, புதிதாக அச்சிடப்பட்ட நாணயங்களை வெகுமதிகளாகப் பெற நீங்கள் நேரடியாக பிட்காயின்களைமைன் செய்யலாம். இருப்பினும், பிட்காயின் மைனிங் என்பது மிகவும் சிக்கலான செயல்முறையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் இதற்கு சிறப்பு வன்பொருள் மற்றும் மென்பொருள் உள்ளிட்ட விலையுயர்ந்த மைனிங் உபகரணங்கள் தேவை. 

Get WazirX News First

* indicates required

இந்தியாவில் ஒரு நல்ல பிட்காயின் எக்ஸ்சேஞ்ஜை எவ்வாறு தேர்வு செய்வது?

நீங்கள் ஒரு பிட்காயின் எக்ஸ்சேஞ்ச் மூலம் முதலீடு செய்கிறீர்கள் என்றால், இந்தியாவில் பிட்காயினில் முதலீடு செய்ய ஒரு எக்ஸ்சேஞ்ஜை முடிவு செய்வதற்கு முன் அந்த தளம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள குழு பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிட்காயினில் முதலீடு செய்வதற்கு முன் அந்த தளம் பின்வருவனவற்றை வழங்குவதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்:

 1. முதலில், எக்ஸ்சேஞ்சின் இணையதளத்தில் ஒரு எளிய பயனர் இண்டர்ஃபேஸ் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், அது பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும்.
 2. இப்போழுது அந்த எக்ஸ்சேஞ்ஜ் பிட்காயின் வர்த்தக ஜோடிகளை ஆதரிக்கிறதா என்று சரிபாருங்கள்.
 3. இந்தியாவில் பிட்காயின் வாங்க மற்றும் விற்க ஒரு தளத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ஆய்வு செய்ய பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான காரணியாகும். KYC நெறிமுறை இல்லாத எக்ஸ்சேஞ்ஜுகளிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். 
 4. இறுதியாக, நியாயமான வர்த்தகக் கட்டணத்தில் பிட்காயின் வாங்க எந்த தளம் உங்களுக்கு உதவுகிறது என்பதை அறிய சில எக்ஸ்சேஞ்ஜுகளை ஒப்பிட்டுப் பாருங்கள்

கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளங்கள் மூலம் இந்தியாவில் பிட்காயினில் முதலீடு செய்வது

பிட்காயின் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் பல இந்திய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ஜுகள் உள்ளன. இந்தியாவில் 2021 இல் எளிதான வழியில் பிட்காயின் வாங்க , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களுக்கு விருப்பமான எக்ஸ்சேஞ்ஜுடன் ஒரு வர்த்தகக் கணக்கை உருவாக்கி, அவர்களின் KYC செயல்முறையின் படி செல்லுங்கள். நீங்கள் பதிவுசெய்தவுடன், உங்கள் தனிப்பட்ட அல்லது இயங்குதளம்-குறிப்பிட்ட வேலட்டில் (நீங்கள் தேர்ந்தெடுத்த எக்ஸ்சேஞ்ஜைப் பொறுத்து) பணத்தை டெபாசிட் செய்து, இந்தியாவில் பிட்காயின் விலைக்கு ஏற்ப பிட்காயினில் முதலீடு செய்யலாம். 

WazirX மூலம் இந்தியாவில் பிட்காயினில் முதலீடு செய்வது எப்படி?

WazirX மூலம், இந்தியாவில் பிட்காயின் வாங்குவதற்கு ஒரு எளிய வழியைக் காணலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்றுங்கள்:

1. ஒரு WazirX கணக்கை உருவாக்குங்கள்:

 •  WazirX இணையதளத்திற்குச் சென்று சைன் அப் பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.
 • உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து ஒரு வலிமையான கடவுச்சொல்லை உருவாக்குங்கள்.
 • WazirX இன் சேவை நிபந்தனைகளைப் படியுங்கள், பின்னர் நிபந்தனைகள் உங்களுக்கு ஒத்து வந்தால் செக்பாக்ஸை கிளிக் செய்யுங்கள்.
Signup to WazirX
 • முடிப்பதற்கு சைன் அப்பை கிளிக் செய்யுங்கள்.
 • சரிபார்ப்பு மின்னஞ்சலுக்காக இப்போது உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸைப் பார்க்கவும், அந்த மின்னஞ்சலில்,பதிவுசெய்தல்செயல்முறையை முடிக்க வெரிஃபை இமெயில் எனும் தேர்வை தட்டவும்.
Signup to WazirX
 • KYC சரிபார்ப்பு செயல்முறைக்கு, கொடுக்கப்பட்ட விருப்பங்களின் பட்டியலில் இருந்து உங்கள் நாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
 • நீங்கள் இப்போது KYC சரிபார்ப்புக்காக கேட்கப்படுவீர்கள்.
Signup to WazirX

உங்கள் கணக்கு உருவாக்கும் செயல்முறையை நீங்கள் இப்போது முடித்து விட்டீர்கள்!

2. நிதியை டெபாசிட் செய்யவும்:

நீங்கள் இரண்டு விருப்பங்கள் மூலம் WazirX இல் இந்திய ரூபாயை டெபாசிட் செய்யலாம்:

3. பிட்காயின் வாங்க:

Bitcoin Latest Price- WazirX
 • கீழே ஸ்க்ரால் செய்வதன் மூலம் உங்கள் டாஷ்போர்டில் வாங்க மற்றும் விற்க விருப்பங்களை நீங்கள் காணலாம்.
 • வாங்குவதைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் விரும்பும் விலை மற்றும் நீங்கள் வாங்க விரும்பும் பிட்காயின் அளவு ஆகியவற்றை உள்ளிடவும்.
Bitcoin Convertor - WazirX
 •  பிளேஸ் பை ஆர்டர், என்பதைத் தட்டி ஆர்டர் செயலாக்கம் பெரும்வரை காத்திருக்கவும்.

இப்போது எல்லாம் முடிந்தது! பரிவர்த்தனை செயல்படுத்தப்படும் போது, உங்கள் WazirX வேலட்டில் பிட்காயின்கள் சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்!

இந்தியாவில் பிட்காயின் வாங்குவது: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. இந்தியாவில் பிட்காயின்கள் வாங்க குறைந்தபட்சம் எவ்வளவு தொகை தேவைப்படும்?

மே 2021 நிலவரப்படி, இந்தியாவில் பிட்காயின் விலை ரூபாய் 40 லட்சம். ஒவ்வொரு வினாடிக்கும் விலை மாறுகிறது. நீங்கள் பிட்காயினின் ஒரு பகுதியை ரூ 100 க்கும் குறைவான விலையிலும் வாங்க முடியும். 

2. இந்தியாவில் பிட்காயின் வாங்குவது சட்டபூர்வமானதா?

இதுவரை, பிட்காயின் இந்தியாவில் எந்த மத்திய அதிகாரத்தாலும் அங்கீகரிக்கப்படவில்லை அல்லது கட்டுப்படுத்தப்படவில்லை. பிட்காயின் வர்த்தகம் தொடர்பாக எந்த வித விதிகளும், கட்டுப்பாடுகளும், வழிகாட்டுதல்களும் இல்லை. எனவே, இந்தியாவில் பிட்காயின் வாங்குவது சட்டவிரோதமானது என்று கூற முடியாது. 

3. எனது பிட்காயின் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளதை எப்படி உறுதி செய்வது?

நீங்கள் இந்தியாவில் பிட்காயினில் முதலீடு செய்த பிறகு, அவற்றை பிட்காயின் வேலட்களில் சேமிக்கலாம் – மென்பொருள் புரொகிராம்கள் பயனர்களின் பிட்காயின்களை சேமித்து வர்த்தகம் செய்ய அனுமதிக்கும். பிட்காயின் பணப்பைகள் பற்றி விரிவாக அறிய, இந்த பிட்காயின் வேலட் வழிகாட்டியைப் படியுங்கள்.

4. இந்தியாவில் பிட்காயின் வாங்க என்ன சட்ட நடைமுறைகள் உள்ளன?

முதலில், நீங்கள் KYC செயல்முறைக்கு உட்பட வேண்டும். அதற்கு, உங்கள் பான் கார்டு மற்றும் செல்லுபடியாகும் முகவரி சான்று தேவை. உங்கள் வங்கிக் கணக்கை எக்ஸ்சேஞ்ச் அக்கவுண்ட்டுடன் இணைத்து சரிபார்ப்பு செயல்முறை முடிந்தவுடன், நீங்கள் இந்தியாவில் பிட்காயினில் முதலீடு செய்ய தகுதியுடையவர் ஆவீர்கள்!

5. ஒரு பிட்காயின் வேலட்டை அமைப்பது எப்படி?

நீங்கள் பயன்படுத்தும் எக்ஸ்சேஞ்ச் தளம் பொதுவாக பிட்காயின்களை சேமித்து விற்க உதவும் பிட்காயின் வேலட்டை உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் சைன் இன் செய்து உங்கள் கணக்கை உருவாக்கும்போது, ஒரு வேலட் தானாக அமைக்கப்படும்.

6. பிட்காயினுக்கு மற்ற மாற்றுக்கள் எவை??

பிட்காயின் போன்ற பல மாற்று கிரிப்டோகரன்ஸிகள் உள்ளன நீங்கள்  எத்தீரியம், லைட்காயின் மற்றும் ரிப்பிள் போன்றவற்றிலும் முதலீடு செய்யலாம். 

இந்தியாவில் 2021 இல் பிட்காயினை எப்படி வாங்குவது என்பது குறித்த எங்கள் வழிகாட்டி உங்களுக்கு வேண்டிய தகவல்களுடன் இருந்தது என்று நம்புகிறோம்! இனிமையான வர்த்தகம் அமையட்டும்!

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply